Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:25:40 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12895
#KOTW12895
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஐனவரி 27, 2014
07ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் மீது 05ஆவது வார்டு உறுப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3519 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியின் 7வது வார்டு உறுப்பினர் ஜெ. அந்தோணி மீது, 5வது வார்டு உறுப்பினர் எம். ஜஹாங்கிர் - மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு வழங்கியுள்ளார். இன்று (ஜனவரி 27) காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின் போது இம்மனுவினை, எம்.ஜஹாங்கிர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளார்.

அப்புகார் மனுவில், நகராட்சி அனுமதி பெறப்படாத கட்டிடத்திற்கு - நகராட்சியினால், அரசு சட்டத்திற்கு புறம்பாக வீட்டு வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கட்டிடத்தின் உரிமைதாரர் ஏ.ராணி, 7வது வார்டு உறுப்பினரின் மனைவி என்றும், இந்த வரி விதிப்பு பெற நகராட்சி உறுப்பினர் ஜெ. அந்தோணி, தனது பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்றும், 5வது வார்டு உறுப்பினர் ஜஹாங்கிர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனுவின் நகல்:



தகவல்:
M.ஜஹாங்கீர்


[செய்தி திருத்தப்பட்டது @ 11:00 pm / 27.01.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [27 January 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32810

இனிதான் எல்லா வண்டவலங்கலும் வெளிக்கு வரும். இவ்வளவு கண்காணித்தே லபக் என்றால் ? ஆட்சியாளரின் நடவடிக்கையை பார்க்கலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இப்பதான் தெரிகிறது அதற்க்கு காரணம் என்னவென்று..! 238 RTI கேள்வி ஏன்..?
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [28 January 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 32813

முறைகேடாக தீர்வையை பெற்றவரும் அவருக்கு முறைகேடாக தீர்வையை நகராட்சி மூலம் வழங்கிய அதிகாரி இருவருமே விசாரணைக்கு உட்படுத்த பட வேண்டும்..

நகராட்சி அனுமதி (BUILDING PLAN APPROVAL) பெறப்படாத கட்டிடத்திற்கு (PROPERTY TAX) வீட்டு தீர்வை முறைகேடாக பெற்று இருக்கிறார் என்று மனுதாரர் மனுவில் புகாராக 7 வார்டு உறுப்பினரை மட்டுமே சுட்டி காட்டி இருப்பது நல்ல தீர்வுக்கு உதவாது..! நகராட்சியினால் வழங்கப்பட்ட தீர்வை ரசீது வழங்கியது யார்...? அந்த அதிகாரி / ஊழியர் பெயரையும் மனுவில் சுட்டி காட்டி இருக்க வேண்டும்..!

வெளியில் இன்னும் வெளிச்சத்திற்கு வராமல் இன்னும் எத்தனை எத்தனை முறைகேடுகள் / மோசடிகள் / எத்துவாளி தனங்கள் எப்பப்பா.. நகராட்சியின் அதிகாரிகளை கையில் போட்டு கொண்டு கள்ள தீர்வை போட்டு கொடுக்கப்பட்டுள்ளதோ...! இப்பதான் விளங்குகிறது நகராட்சியில் சுமாராக 238 RTI கேள்வி எல்லாம் ஏன் கேட்கிறார்கள் மக்கள் உரிமை நிலைநாட்டல் அமைப்பு. இப்பதான் தெரிகிறது அதற்க்கு காரணம் என்னவென்று..!

ஆகையால் மாவட்ட ஆட்சியரிடத்தில் புகார் மனு அளித்த மனுதாரர் இந்த முறைகேட்டை முன்னின்று (மோசடி) அனைத்தையும் செய்து கொடுத்த நகராட்சி அதிகாரியையும் மனுவுவில் சேர்க்கபட்டு இருக்கவேண்டும் என்பதே எனது கருத்து.

இந்த முறைகேடான வீட்டு தீர்வைக்கு உடந்தையாக இருந்து செய்து கொடுத்த அதிகாரி தண்டிக்கப்பட வேண்டும்.. நகரமக்களுக்கு அடையாளம் காட்ட படவேண்டும்.. எனது மற்றும் அனைவரின் ஆவல்..!

இதுக்கு தான்யா.. RTI தகவல் பெறும் உரிமை சட்டத்தை கையில் எடுக்க வேண்டி உள்ளது...! எந்த பொந்தில் எந்த பாம்பு இருக்குனே தெரிய மாட்டுன்கிது..!

மேலும் தம்பி ஜகாங்கீர் அவர்கள் தனக்கு தெரிந்த அளவிற்கு மாவட்ட ஆட்சியர் வரை இந்த புகாரை கொண்டு போய் சேர்த்த தம்பி ஜகாங்கீர் அவர்களுக்கு பாராட்டுக்கள்.. தற்போது இவரிடம் நிறைய மாற்றங்கள் தெரிகிறது..!

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...இரா,சுறா,வாவல்,நண்டு,சீலா,சாலா...!
posted by OMER ANAS (kayal patnam.) [28 January 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 32815

அஸ்ஸலாமு அழைக்கும். நகர பொது மக்களே!!!

இந்த ஊழல், லஞ்சம், முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம், விதிமீறல் ஆகியவை அணிவகுக்கும் இக்குற்றம் இன்று நேற்றல்ல,முன்னாள் உறுப்பினர்கள் சிலர் ஏற்கனவே ஆரம்பித்து வைத்த மகா கொள்ளைதான் தற்ப்போதும்,நகராட்ச்சி பணியாளர்களின் உதவியுடன் தொடர்ந்து நடந்து வந்துள்ளது.

துரதிஸ்ட வசமாக இப்ப கையும் களவுமாக அந்தோனியார் சிக்கி உள்ளார். இதில் லஞ்சபிணம் தின்னி கழுகுகளின் சட்டைபை நிரப்பப் பட்டுள்ளது.

இந்த கேசில் தலைவர் முறையாக தலையிட்டு நடவடிக்கை எடுத்தால் ஊரில் புறம் போக்கு நிலத்தினை கொள்ளை அடித்து வந்த பக்கா பாக்தாத் திருட்டு கூட்டமே சிக்கும்.

நமது கடர்க்கரையில் கட்டப்பட்டுள்ள பாதி வீடுகள் இப்படி கொள்ளை அடிக்கப் பட்ட நிலங்கள்தான். இதற்க்கு நகராட்சி ஊழியர்கள் சிலரும் உடந்தை.

இதை நிரூபிக்க அனைத்து ஆவணங்களின் நகலையும் கையகப் படுத்தி உறுதி செய்யப்பட்ட பிறகே சகோதரர்,ஜகாங்கீர் முறையாக வழக்கு பதிவு செய்திருக்கிறார்.

லஞ்ச ஊழலுக்கு ஒரு போதும் இடம் கொடுக்காத இந்த உறுப்பினரின் நேர்மைதனை நாம் பாராட்டியே ஆக வேண்டும் வாழ்க உமது தொண்டு. வளர்க உமது சேவை!

இரா ,சுறா,வாவல்,நண்டு, சீலா, சாலா மீனுக்கு ஆசை பட்டு,இவங்களுக்கு சாலா ஆகிப்போனபொறம்போக்கு(நில) ஊழல் ஊழியர்களே,கலவாணி உறுப்பினர்களே,,சிங்கம் ஒன்னு புறப்பட்டாச்சு..! பஞ்சாயத்தின் உள்ளே குடியரசு பட்டாசு வெடிக்கத் தொடங்கியாச்சு!.இனி உங்களுக்கு ஆப்புதான்! மீறினால்,வலை காப்புத்தான்.!.

ஜாக்கிரதை ஜாக்கிரதை.ஜாக்கிரதை.!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by முத்துவாப்பா (அல்-கோபர்) [28 January 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32817

நன்றி ஜகாங்கீர் காக்கா .... இதை தான் நாங்கள் உங்களிடம் இருந்து எதிர் பார்க்கின்றோம் . சேவை தொடர வாழ்த்துக்கள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. இதுலாம் பெரிய விஷயமாப்பா......?
posted by s.s.md meerasahib (TVM) [28 January 2014]
IP: 110.*.*.* India | Comment Reference Number: 32822

இதுலாம் இவர்களுக்கு சில்லி, மில்லி...... விஷயம்கள்.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [28 January 2014]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32833

அன்று ஒருநாள்..

நகராட்சி தேர்தல் களம் சூடு பிடித்து இருந்தது. நாங்கள் பேசிக்கொண்டோம்..!

ஆபிதா அம்மையார் வெற்றி நிச்சயம். அவர்களுக்கு உறுதுணையாக, நகராட்சியில் லஞ்சம், அநியாயங்களை தட்டிக்கேட்க 3 சிங்கங்கள் செல்லப்போகின்றன.

1. தம்பி S.K.சாலிஹ்
2. ஜனாப் லுக்மான் காக்கா
3. தம்பி ஜகாங்கீர்

இறைவனின் நாட்டம், SKS தெரிவு செய்யப்படவில்லை. அப்போவே மனது சங்கடப்பட்டது.

அடுத்து, லுக்மான் காக்காவும், தம்பி ஜஹாங்கீரும் ஏதோ காரணத்தால் ஒத்துழையாமை இயக்கத்தில் இருந்ததால், சங்கடப்பட்ட மனது, மீண்டும் நொந்து போனது. 2 1/2 வருடம் வீணாக போனதே என்று வருத்தம் கூட.

பின்பு சிறு ஆறுதல், நன்முத்து சம்சு காக்காவின் ஒத்துழைப்பு.

தற்போது மீண்டும் ஒரு ஆறுதல், இளம் சிங்கம் ஜகாங்கீர் தலையை சிலிர்த்து வேட்டைக்கு புறப்பட்டு விட்டது. அநியாயங்களுக்கு எதிராக உன்னுடைய பயணத்தில் வல்ல ரஹ்மானின் துணையும், எங்களின் ஒத்துழைப்பு கண்டிப்பாக உண்டு.

இன்ஷா அல்லாஹ், நடப்பவைகள் நன்மையாக அமையட்டும்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM) [30 January 2014]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 32866

அஸ்ஸலாமு அலைக்கும்

நம் அன்பு சகோதரர் உறுப்பினர் .M .ஜகாங்கீர் அவர்களின் இந்த உன்னதமான & துணிச்சலான .... ஒரு செயல் பாட்டை அவரை சார்ந்த தொகுதி மக்களும் சரி ....நமது ஊர் அனைத்து பொது மக்களும் பாராட்டாமல் இருக்கவே மாட்டார்கள் ....

நான் தற்போது நமது நகர் மன்றதில் நடந்த ஒரு கூட்டத்தில் நானும் பார்வையாளர்களில் ஒருவனாகவே இருந்தேன்...அப்போது அருமை தம்பி உறுப்பினர் ஜகாங்கீர் அவர்களின் பேச்சை கண்ணுற்று கண்டேன் ...அப்போது .உறுப்பினர் அன்பு . தம்பி .ஜகாங்கீர் அவர்கள் ....ஒரு பிரச்சனையில் தற்போது குற்றம் சாட்ட பட்ட உறுப்பினருடன் வாக்கு வாதத்தில் மிகவும் திறமையாக பேசினார் .....பொதுவாகவே அன்பு தம்பி.ஜகாங்கீர் அவர்களின் திறமையான பேச்சு நகர் மன்றதில் பாராட்டகுடிய விதமாக இருக்கிறது ...மெருகுட்ட பட்ட பக்குவமான ஒரு உறுப்பினர் என்பதையும் யாம் கண்டோம் .....

தம்பி உறுப்பினர் ஜகாங்கீர் அவர்களே இத்தோடு தாங்கள் நின்று விடாமல் ..... மேலும் இது போன்ற பல நல்ல காரியங்களை தொடர்ந்து செய்யுங்கள் ..... வேட்டை .... தொடரட்டும் .....வாழ்த்துக்கள் .....

தங்களின் நற் செயல்பாட்டால் நம் ஊருக்கு நல்லது நடந்தால் நல்லதே .... வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved