சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்றத்தின் செயற்குழு கூட்டம், ஜனவரி 24 அன்று நடைபெற்றது. இது குறித்து அவ்வமைப்பு சார்பாக
வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் ரியாத் காயல் நற்பணி
மன்றத்தின் (RKWA) 39ஆவது செயற்குழுக் கூட்டம், 24.01.2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின்,மன்றத் துணைச் செயலாளர் N.M.
செய்யது இஸ்மாயில் அவர்கள் இல்லத்தில் செயற்குழு உறுப்பினர் V.S.H.செய்யது முஹம்மது அலி தலைமையில் நடைப்பெற்றது.
துணைப் பொருளாளர் S.A.வெள்ளி சித்தீக் அவர்கள் நிகழ்ச்சி நிரலை வாசிக்க ரஸ்தனூராவில் இருந்து வந்த சிறப்பு அழைப்பாளர் ஹாஃபிழ்.ஜைனுல்
ஆபிதீன் அவர்கள் இறைமறை ஓதி இக்கூட்டத்தை துவக்கி வைத்தார். பின்னர், செயற்குழு உறுப்பினர் K.S.முஹம்மது நியாஸ் அவர்கள்
வரவேற்புரையாற்றினார்.
மன்றச் செயல்பாடு மற்றும் நிதிநிலை அறிக்கை:
மன்றத்தின் கடந்த மூன்றாண்டு செயல்திறன் பற்றிய கண்ணோட்டத்தை செயலாளர் A.T. சூஃபி இபுறாஹீம் மற்றும் துணைச் செயலாளர் முஹ்ஸின்
ஆகியோர் விளக்க, பொருளாளர் M.N.முஹம்மது ஹஸன் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தார்.
கடந்த ஆண்டின் (2013) உதவித்
தொகை:
(ரமழான் உணவுத் திட்டம்,இமாம்,முஅத்தின் திட்டம்,மாணவர்களுக்கான நோட்டு விநியோகம் மற்றும் பல…)
நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு:
ஷிஃபா மூலமாக நமதூர் வறிய மக்களிடம் இருந்து வந்த கடிதங்களை துணைச் செயலாளர் N.M. செய்யது இஸ்மாயில் உறுப்பினர்கள்
முன்னிலையில் வாசித்தப்பின் பதினைந்து நபர்களின் மருத்துவ சிகிச்சைக்காக ரூ.2,30,750-யும், ஒரு நபரின் சிறு தொழிலுக்காக ரூ.6,500-ரும்
ஒதுக்கீடு செய்யப்பட்டது. எல்லா புகழும் இறைவனுக்கே.
தனிக் குழு:
எம் மன்றத்தில் இது வரை இணையாத காயல் சகோதரர்களையும், நீண்ட நாள் தொடர்பில் இல்லாத உறுப்பினர்களையும் தொடர்பு கொண்டு
மன்றத்தில் இணைய வேண்டி தனித் தனி குழு அமைக்கப்பட்டது.
அடுத்த பொதுக்குழுக் கூட்டம்:
எம் மன்றத்தின் இந்த ஆண்டிற்கான முதல் பொதுக் குழுக் கூட்டம், இன்ஷா அல்லாஹ், பிப்ரவரி 07,2014 வெள்ளிக் கிழமை Shifa Al Jazeera
Polyclinic (3rd Floor)-ல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மன்றத்தின் சட்டத்திட்டங்கள் (By-Law):
இம்மன்றத்தின் சட்ட திட்டங்களில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு, மற்றும் புதிய செயற்குழு உறுப்பினர்கள் அறியும் வண்ணம் செயலாளர் A.T. சூஃபி
இபுறாஹீம் வாசிக்க, மன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடலுக்குப் பின் ஒருமனதாக ஒப்புதல் வழங்கப்பட்டது.
’ஷிஃபா’ மற்றும் ”இக்ரா” பற்றிய கலந்துரையாடல்:
’ஷிஃபா’ மற்றும் ”இக்ரா” பற்றிய செயல்பாடுகளை துணைத் தலைவர், A.H. முஹம்மது நூஹ் அவர்கள் விளக்க, பின் வருமாறு தீர்மானங்கள்
எடுக்கப்பட்டது.
1. ”சந்தியுங்கள் மாநிலத்தில் முதல் மாணவரை” என்ற நிகழ்ச்சி அமைப்பினை மாற்றி ஏனைய பயனுள்ள நிகழ்ச்சி நடத்தினால் மிக்க நன்று என்றும்,
அத்துடன் மாணவ செல்வங்களின் மன வலிமையை உற்சாக படுத்தும் பயிற்சி வகுப்புகள் (Workshop) அமைத்தால் மாணவர்களுக்கு மிக்க உதவியாக
இருக்கும்.
2. இக்ராவுக்கான (RKWA)-வின் பிரதிநிதியான செயற்குழு உறுப்பினர் V.M.A.மொஹ்தூம் அமீன் அவர்கள் பணி நிமித்தம் ஜித்தா மாறியமையால்,
துணைச் செயலாளர் N.M. செய்யது இஸ்மாயில் அவர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தகுதி மதிப்பெண் (கட்-ஆஃப்):
தகுதி மதிப்பெண் (கட்-ஆஃப்) பற்றிய விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்த “ஒரு புதிய பார்வை” என்ற தலைப்பில் ரியாத் காயல் நல மன்றம்
சார்பில் வழிகாட்டுப் பிரசுரம் அனைத்துப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டதை செயலாளர் A.T. சூஃபி இபுறாஹீம் மன்ற உறுப்பினர்களுக்கு
தெரிவித்தார்.
பார்வையாளர்கள் மற்றும் புதிய நிர்வாகிகள் கருத்து:
சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற சகோதரர் A.S.L. சுலைமான் லெப்பை மற்றும் தம்மாமில் இருந்து வந்து பங்கேற்ற சகோதரர்கள் பைசல்
ரஹ்மான் மற்றும் ஹாபிழ் ஜைனுல் ஆபிதீன் தங்களின் மேலான கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கினர், மேலும் எம் மன்றத்தின் புதிய
செயற்குழு உறுப்பினர்களான சகோதரர்கள் இப்ராஹிம் பைசல் மற்றும் ஹைதர் அலி அவர்கள் கருத்து பரிமாற்றமும், ஆலோசனைகளையும்
வழங்கினார்கள்.
இரங்கல் செய்தி:
மஹ்ழரா அரபிக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியரும், காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியின் முன்னாள் இமாமும், இம்மன்றத்தின் மூத்த
உறுப்பினர் சகோதரர்.பாரூக் அவர்களின் மாமனாருமான, குத்துக்கல் தெருவைச் சார்ந்த மவ்லவீ ஊண்டி எம்.எம்.செய்யித் முஹம்மத் பாக்கவீ
அவர்கள் மரணமடைந்த செய்தியறிந்து மிகவும் கவலையடைந்தோம். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அவர்களை பிரிந்து
தவிக்கும் குடும்பத்தார்கள் யாவருக்கும் அல்லாஹ் மேலான பொறுமையை கொடுப்பானாக. அவர்களின் மறு உலக வாழ்க்கையை வெற்றியாக்கி
வைப்பானாக என பிரார்த்திக்கிறோம்.
நன்றி உரை:
இச்செயற்குழு கூட்ட ஒருங்கிணைப்பாளர்களான சகோதரர்கள் ஹைதர் அலி, N.M. இஸ்மாயில், வெள்ளி சித்தீக், முஹம்மது நியாஸ், செய்து
முஹம்மது அலி, உமர் பாஸி மற்றும் S.S. முஹம்மது அவர்களின் அனுசரணையோடு நடாத்தப்பட்டது.
இக்கூட்டம் நடைபெற இட வசதி செய்து தந்த சகோதரர் N.M. இஸ்மாயில் அவர்களுக்கும், அருமையான காயல் பிரியாணி தயார் படுத்தி தந்த
சகோதரர் உவைஸ் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்க பட்டது.
ஆலோசனைக் குழு உறுப்பினர் M.E.L.நுஸ்கி அவர்களால் நன்றி உரை நிகழ்த்தப்பட்டு, இறுதியாக செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ். P.S.J.ஜைனுல்
ஆபிதீன் அவர்கள் துஆ ஓதி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் ஓத, கூட்டம் நிறைவுபெற்றது.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
N.M.செய்யது இஸ்மாயில்,
ஹாபிழ் S.A.C. அஹ்மது ஸாலிஹ்,
ஊடகக் குழு, ரியாத் காயல் நல மன்றம். |