பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள – காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர்களுக்கு இணையதளம் மூலம் நிதி திரட்டி வழங்கும் சேவையைச் செய்து வரும் ‘மைக்ரோ காயல் அறக்கட்டளை’ 02ஆம் ஆண்டை நிறைவு செய்து, 03ஆம் ஆண்டில் நுழைந்துள்ளது.
இதனையொட்டி, அவ்வமைப்பின் செயலாளர் சாளை முஹம்மத் முஹ்யித்தீன் வெளியிட்டுள்ள அறிக்கை:-
மக்கள் நல சேவையில் 'மைக்ரோகாயல் அறக்கட்டளை' மூன்றாம் ஆண்டில்!!
பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள மக்களின் அவசர மற்றும் அத்தியாவசிய மருத்துவத் தேவைகளை 'இணையதளம்' மூலம் நிதி சேகரித்து வழங்கிடுவதற்காக 2012ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 29ஆம் திகதி தொடங்கப்பட்ட மைக்ரோகாயல் அமைப்பு, இறையருளால் இன்று இரண்டு வருடங்களை பூர்த்தி செய்துள்ளது.
நல்ல பல உதவித் திட்டங்களுடனும், மேம்படுத்தப்பட்ட இணையதள வடிவமைப்புடன் மூன்றாம் வருடத்தில் அடியெடுத்து வைக்கின்ற இவ்வேளையில், நம் கடந்த வருட செயல்பாடுகளை உறுப்பினர்களுக்கும், பொதுமக்களுக்கும் விவரிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
••• உறுப்பினர்கள் சார்ந்த நாடுகள் எண்ணிக்கை: 30
••• உலகாளாவிய மொத்த உறுப்பினர்கள்: 260 பேர்
••• மைக்ரோகாயல் மூலம் உதவி பெற்றவர்கள்: 62 பேர்
••• 'ஷிஃபா' வின் வாயிலாக மைக்ரோகாயலின் நிதியுதவி பெற்றவர்கள்: 23 பேர்
••• மைக்ரோகாயல் இதுவரை வழங்கிய நிதியுதவி: ரூ.14,01,200
••• மைக்ரோகாயல், 'ஷிஃபா' வின் வாயிலாக வழங்கிய நிதியுதவி: ரூ.3,73,550
••• எமர்ஜென்சி மற்றும் குழந்தை நல நிதிகள் (fund) மூலம் வழங்கிய உதவித் தொகை: ரூ. 1,71,900
••• கடந்த ரமலானில் ஜகாத் மற்றும் சதக்கா மூலம் திரட்டப்பட்ட தொகை: ரூ.4,93,870
••• கடந்த வருடத்தில் திரட்டப்பட்ட நிதி: ரூ.12,72,000
••• இதுவரை திரட்டப்பட்ட மொத்த நிதி: ரூ.17,56,000
••• 50 குடும்பங்களுக்கு காயல் மெடிக்கல் கார்ட் (KMC) வழங்கப்பட்டுள்ளது.
••• மாற்றுமுறை மருத்துவம் தொடர்பான இணையதளம் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு
••• நூற்றுக்கும் மேற்பட்டோர் பயன்பெற்ற இலவச அக்யூபங்சர் மருத்துவ முகாம்
••• அவசர சிகிச்சைக்கு பணம் தேவையுடயவர்களுக்கு முன்பணம் வழங்கல்
••• பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களுக்கும் குறைந்த அவகாசத்திற்குள் நிதி திரட்டி உதவி
••• குழந்தை பள்ளி மாணாக்கர்களுக்கென்று தனி நிதிகள் (Funds) மூலம் அவசர உதவி
••• பிறரிடம் உதவி கேட்க கூச்சப்படும் காயல் பூர்வீக மற்றும் நடுத்தர வர்க்கத்தினர்களுக்கும் நிதியுதவி
மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வேளையில், நம் இவ்வருட செயல் திட்டங்களில் சில உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்கு:
••• வழமை போல் 'ஷிஃபா' மூலம் பெறப்படும் விண்ணப்பங்களுக்கு அதிகளவில் பங்களிப்பு செய்தல்
••• 200 பேருக்கு (ஒரு குடும்பத்துக்கு ரூபாய் பத்தாயிரம் வரையிலான மருந்து மற்றும் மருத்துவ காப்பிடு) 'காயல் மெடிக்கல் கார்ட் (KMC)' 'ஷிஃபா' வுடன் இணைந்து வழங்குதல்
••• நாட்பட்ட நோயினால் அவதிப்படும் (அதாவது "Chronic Disease Detection and Treatment - CDDT" என்ற பெயரில் ஒரு புது முயற்சியாக) ஆரம்ப நிலைக்கும் முற்றிய நிலைக்கும் நடுவில் உள்ள வசதியற்ற நோயாளிகளின் நோயரிந்து (மருத்துவ குழு மற்றும் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் உதவியுடன்) அவர்களுக்கு தேவையான இலவச மருந்து / மருத்துவ உதவியை வழங்கல்
••• பொதுமக்களிடையே மருத்துவம் மற்றும் உடல் ஆரோக்கியம் சம்பந்த பட்ட விழிப்புணர்வு பிரசுரங்கள் மற்றும் மருத்துவ முகாம்களை 'ஷிஃபா' வுடன் இணைந்து நடத்துதல்
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |