சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்றத்தின் 47ஆவது பொதுக்குழுக் கூட்டம், வரும் பிப்ரவரி மாதம் 07ஆம் நாள் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் கலந்துகொள்ள - மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்களுக்கு அழைப்பு விடுத்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
எமதன்பின் ரியாத்வாழ் காயலர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நமது ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் (RKWA) 47ஆவது பொதுக்குழுக் கூட்டம் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 07.02.2014 வெள்ளிக்கிழமையன்று மஃரிப் தொழுகைக்குப் பின், ஃபத்ஹா Shifa Al Jaseera Polyclinic Party Hall (3rd Floor) (Opposite to classic party hall)-லில் நடைபெறவுள்ளது.
எனவே, மன்ற உறுப்பினர்கள் மற்றும் காயலர்கள் அனைவரும், இச்செய்தியையே முறையான அழைப்பாகக் கருதி அவசியம் கலந்துகொள்ள வருமாறும், உங்களுக்கறிமுகமான அனைத்து காயலர்களையும் இதில் பங்கேற்கச் செய்யுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
N.M.செய்யது இஸ்மாயில்
ஊடகக் குழு
ரியாத் காயல் நல மன்றம்
ரியாத் - சஊதி அரபிய்யா. |