மக்களை மிரட்டும் ரசாயன தொழிற்சாலை? நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற தலைப்பில், உள்ளது உள்ளப்படி நிகழ்ச்சியில் இச்சிறப்பு செய்தியை காணலாம். இன்று (ஜனவரி 31) பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.
இதன் நேரடி ஒளிபரப்பை thanthitv.com இணையதளத்தில் காணலாம்.
இன்று தினத்தந்தி நாளிதழில் வெளியாகியுள்ள இந்நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு ...
தகவல்:
சென்னையில் இருந்து... ஹாஜி கே.ஏ.எம். முஹம்மத் அபூபக்கர்
2. மக்களால் சங்கு ஊதப்படுகிறது. posted bys.s.md meerasahib (TVM)[31 January 2014] IP: 106.*.*.* India | Comment Reference Number: 32891
தினத்தந்தி குழுமத்திற்கு நன்றிகள் பல. இப்படி உருப்படியான வேலைகளை வெளியில் கொண்டு வந்து மாசுக்களை கட்டுப்படுத்தி மனித இனத்தையும், அபூர்வ இயற்க்கை வளம்களையும் அழிக்ககூடிய இந்த ஆலையை இழுத்து பூட்ட வேண்டும். இதுக்கு உங்களின் துணை வேண்டும். துணை நிற்பீர்கள் என்ற நம்பிக்கையுடன். நன்றி.
"இவ்வளவு நாளா....... சங்கு DCW வில் ஊதப்படுகிறது மக்களுக்கு. இப்பொழுது மக்கள் DCW க்கு ஊதப்போரார்கள் சங்கு."
3. பதட்டமான சூழல் ஏற்ப்பட்டு பின்பு பேட்டி அளித்தார்கள்..! posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[31 January 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 32898
நேரடி பேட்டியின் போது நான் நேரில் இருந்தேன்... ஜனநாயகம் - கருத்து சுதந்திரம் செத்து விட்டது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது..
DCW குறித்த தந்தி தொலைகாட்சியில் நேரடி ஒளிபதிப்பு ஆயத்த வேலைக்கு முன் தந்தி தொலைகாட்சி வாகனத்தின் ஓட்டுனர், ஒளிபதிவாளர் மற்றும் பேட்டி எடுக்க வந்த பெண் செய்தியாளர் அடங்கிய தந்தி தொலைகாட்சி குழுக்களுக்கு பல நெருக்கடிகளை மிரட்டல்களை ஊரின் எல்லைக்குள் 1.30 மணியளவில் பைபாஸ் சாலையில் ஏவல் கூலிப்படை மூலம் அச்சறுத்த பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..
மிரட்டகளை தாண்டி தப்பித்தோம் பிழைத்தோம் என பதற்றப்பட்டு ஊரின் முகப்பு ICICI BANK CORNER அருகில் தந்தி தொலைகாட்சி குழு வந்தடைந்தது.. அப்போது அங்கு ஒரு பதட்டமான சூழல் ஏற்ப்பட்டு பின் நகர் பொது நல அமைப்பின் பிரதிநிதிகள் பேட்டி அளித்தார்கள்.. பல வகையில் இந்த செய்தி குழுமத்தை தடுக்க முயற்சிகள் நடந்து தோல்வியுற்றது.. நீதி வென்றது நகர் மக்கள் தனது கருத்தகளை ஆதங்கங்களை பதிவு செய்தார்கள்... வல்ல இறைவனுக்கே எல்லா புகழும்..!
நகர் மக்கள் அனைவர்களும் ஓன்று சேர்ந்து கூலிப்படைகளின் நோக்கத்தை முறியடித்தார்கள்... இந்த ஒற்றுமை நமக்குள் தொடர்ந்தாலே போதும் இந்த அரக்கனை ஓரளவு கட்டுபடுத்தலாம்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross