உத்திரபிரதேச மாநிலம் முஸஃப்பர் நகரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் ரூபாய் 21 ஆயிரம் நிவாரணத் தொகை முதற்கட்டமாக சேகரித்து வழங்கப்பட்டுள்ளது.
மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் செய்யித் ஹைதுரூஸ், மாவட்ட துணைச் செயலாளர் ‘முர்ஷித்’ முஹ்ஸின் ஆகியோரிணைந்து மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கினர்.
நகர நிர்வாகிகளான முஜீபுர்ரஹ்மான், இப்றாஹீம், முஸ்தஃபா, ஹஸன், ஜெய்லானீ உள்ளிட்டோர் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர்.
தகவல் & படங்கள்:
செய்யித் ஐதுரூஸ் |