வட்டியில்லா நிதித் திட்டத்தின் கீழ் கடன் வழங்குவதை அடிப்படை செயல்திட்டமாகக் கொண்டு, இந்தியாவின் 12 மாநிலங்களில் 18 கிளைகளுடன் செயல்பட்டு வரும் அமைப்பு ‘ஜன்சேவா கூட்டுறவு சங்கம்’ ஆகும். வட்டியில்லா வங்கி அமைப்பதை நோக்கி அது தன் பயணத்தைத் தொடர்கிறது.
இதுகுறித்த கலந்தாலோசனைக் கூட்டம், 19.01.2014 ஞாயிற்றுக்கிழமை 17.00 மணியளவில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில், ஹாஜி வாவு எஸ்.காதிர் ஸாஹிப் தலைமையில் நடைபெற்றது.
பி.அஹ்மத் ரியாத் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். எஸ்.இப்னு ஸஊத் அனைவரையும்வரவேற்றுப் பேசியதுடன், கூட்ட அறிமுகவுரையாற்றினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் வாழ்த்துரை வழங்க, காயிதேமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளரும் - இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.அப்துல் ரஹ்மான் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் கலந்துகொண்டோர் கருத்துப் பரிமாற்றத்தைத் தொடர்ந்து, காயல்பட்டினத்தில் ஜன்சேவா கிளை அமைப்பதற்காக உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது.
செய்யித் முஹம்மத் நன்றி கூற, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், நகரின் பொதுநல ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
தகவல் & படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்
ஜன்சேவா குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |