காயல்பட்டினத்தில், முக்கியமான சாலைகளின் சந்திப்பில், இரு புறங்களிலிருந்தும் வரும் வாகனங்கள் ஒன்றையொன்று அறியாமல் வருகையில் ஏற்படும் எதிர்பாரா போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க - அவ்வாறான இடங்களில் குவிவிழிக் கண்ணாடியை நிறுவுவதென, 2013ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற - அமைப்பின் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு, முதற்கட்டமாக காயல்பட்டினம் ஐசிஐசிஐ வங்கி முனையில், கடந்த நவம்பர் மாதம் 12ஆம் நாளன்று ஒரு குவிவிழிக் கண்ணாடி நிறுவப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் இரண்டு குவிவிழிக் கண்ணாடிகள் அண்மையில் நிறுவப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக, காயல்பட்டினம் பிரதான வீதி - கே.டி.எம். தெரு சந்திக்குமிடத்தில், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அருகில் புதிதாக குவிவிழிக் கண்ணாடி இம்மாதம் 03ஆம் தேதி (நேற்று) நிறுவப்பட்டுள்ளது.
தக்வா துணைச் செயலாளர் எம்.எச்.அபுல் மஆலீ தலைமையிலான குழுவினர் கண்ணாடியை நிறுவினர். |