சிங்கப்பூர் சென்ற - மலேஷிய காயல் நல மன்ற செயலாளர் ‘குடாக்’ எஸ்.எம்.எச்.முஹம்மத் புகாரீ, பொருளாளர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.ஏ.செய்யித் இப்றாஹீம் அல்புகாரீ ஆகியோருக்கு சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.
மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் தலைமையில், சிங்கப்பூர் ஜாமிஆ சூலியா பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ முன்னிலையில், 31.01.2014 வெள்ளிக்கிழமை 19.00 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில், புதிதாகத் துவங்கப்பட்டுள்ள மலேஷிய காயல் நல மன்றம் (க்வாமலாய்) அமைப்பிற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டதோடு, அமைப்பை இயக்கிட தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. க்வாமலாய் செயல்பாடுகள் அனைத்திற்கும், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் என அப்போது தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியைத் தொடர்ந்து, சிங்கப்பூர் காயல் நல மன்ற தலைவர் ஹாஜி எம்.அஹ்மத் ஃபுஆத், ஹாஜி வாவு ஷாஜஹான், சிங்கை மஸ்ஜித் அப்துல் கஃபூர் பள்ளியில் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் உமர் ரிழ்வானுல்லாஹ் உள்ளிட்ட காயலர்களையும் - மலேஷிய காயல் நல மன்ற நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனைகளைப் பெற்றுச் சென்றனர்.
தகவல் & படங்கள்:
‘குடாக்’ புகாரீ
செயலாளர் - மலேஷிய காயல் நல மன்றம் (KWAMALAY) |