சவுதி அரேபியா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 31 வது பொதுக்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப சங்கம விழாவிற்கான அழைப்புவிடுத்து ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் சார்பில், மன்றத்தின் தலைவர் சகோதரர் குளம் அகமது முஹ்யத்தீன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்
அன்புடையீர், அஸ்ஸலாமுஅலைக்கும்.
நமது ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 31-வது பொதுக்குழு நிகழ்வுகளுடன் காயலர் குடும்ப சங்கம நிகழ்ச்சியாக இம்மாதம் ஏழாம் தேதி (07.02.2014) வெள்ளி, காலை 08:00 மணி முதல் இரவு 06:00 மணி வரை இஸ்திராஹா காலித் - ஜித்தா (Next to Hajj Terminal Bridge) எனும் இடத்தில் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் இனிதே நடைபெற உள்ளது, இன்ஷாஅல்லாஹ்!
இனியதோர் இந்நிகழ்வில் முத்தாய்ப்பு நிகழ்வாக நம் காயலின் பாரம்பரிய, கலாச்சார உள்ளரங்க மற்றும் வெளியரங்க விளையாட்டுகள், ஆண்கள்,பெண்கள்,சிறுவர்கள், குழந்தைகள் என தனித்தனியே பல போட்டிகள் நடந்தேற இருப்பதால் மனமகிழ இந்நிகழ்வில் மன்ற உறுப்பினர்கள் மற்றும் நம் சகோதரர்கள் யாவரும் குடும்ப சகிதம் கலந்து சிறப்பித்து தருவதுடன் உயரிய ஆலோசனைகளையும்,நல் ஆதரவினை வழங்கிட அன்புடன் அழைக்கிறோம்.
குறிப்பு: ஆண்கள்,பெண்களுக்கு தனித்தனியாக விசாலமான உள்ளரங்கம், விளையாட்டு மைதானத்துடன் வெளியரங்கம், காலைச்சிற்றுண்டி, மதிய உணவும், கண்கவர் பரிசுகளும் ஏற்பாடு செய்துள்ளது என்பதை உளமகிழ்வுடன் அறிய தருகிறோம்.
ஜித்தா, ஆர்யாஸ் உணவகம் அருகில் காலை 07:30 மணிக்கு வாகனம் புறப்படும்.
இத்துடன் விழா அழைப்பிதழ் மற்றும் நடைபெறும் இடத்தின் வரைபடமும் இணைத்துள்ளோம்.


தகவல்:
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
01.02.2014.
|