17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்ளுக்கான - தமிழ்நாடு மாநில அளவிலான சீனியர் பிரிவு கால்பந்து சுற்றுப்போட்டியில் காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி இறுதிப்போட்டியில் வெற்றி வாய்ப்பை இழந்தது. இரண்டாமிடம் பெற்றமைக்காக, அவ்வணிக்கு பள்ளியின் சார்பில் பாராட்டு விழா இன்று 09.15 மணிக்கு, பள்ளி மாணவர் ஒன்றுகூடல் நிகழ்ச்சியுடன் நடைபெற்றது.
நிகழ்ச்சிகளை, பள்ளியின் அரபி மொழி ஆசிரியர் மவ்லவீ ஜுபைர் அலீ பாக்கவீ நெறிப்படுத்தினார். மாணவர் ஒன்றுகூடல் மரபு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் அறிமுகவுரையாற்றினார். மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றமைக்காக, பள்ளி அணியைப் பாராட்டி, அதன் ஆட்சிக்குழு உறுப்பினரும், திருச்சி மாநகராட்சியின் முன்னாள் உறுப்பினருமான டி.ஏ.எஸ்.முஹம்மத் உவைஸ் வாழ்த்துரை வழங்கினார்.
பின்னர், மாநில அளவில் இரண்டாமிடம் பெற்ற பள்ளி அணிக்கு, வழங்கப்பட்ட பரிசுக் கோப்பையை, விழாவிற்குத் தலைமை தாங்கிய - பள்ளியின் ஆட்சிக்குழு துணைத்தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர் - மாணவர்கள் அனைவருக்கும் காட்சிப்படுத்தி, அணி வீரர்களிடம் வழங்கினார்.
[குழுப்படத்தைப் பெரிதாகக் காண அதன் மீது சொடுக்குக!]
அணி வீரர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள், பணப்பரிசுகள், நினைவுப் பரிசுகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. அவற்றை விழா தலைவர், தலைமையாசிரியர், முன்னிலை வகித்தோர், பள்ளியின் உதவி தலைமையாசிரியர் டேவிட் செல்லப்பா, உடற்கல்வி ஆசிரியர் வேலாயுதம் ஆகியோர் வழங்கினர்.
நன்றியுரைக்குப் பின், நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல்:
ஆசிரியர் மீராத்தம்பி
கள உதவி:
ஆசிரியர் அஹ்மத் முஸ்தஃபா |