காயல்பட்டினம் நகராட்சியின் ஆணையர் ஜி.அஷோக் குமார் வாலாஜாபேட்டை நகராட்சியின் ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
விடைபெற்றுச் செல்லும் அவருக்கு, இன்று (பிப்ரவரி 06) வியாழக்கிழமை 17.00 மணியளவில், காயல்பட்டினம் நகராட்சியில் வழியனுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய - காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் வாழ்த்துரையாற்றினார்.
முன்னிலை வகித்த நகராட்சி மேலாளர் பிச்சை முகைதீன், வருவாய் அலுவலர் தமிழ்ச்செல்வன், திட்ட உதவி அலுவலர் செந்தில் குமார், அலுவலக உதவியாளர் அந்தோணி, வாகன ஓட்டுநர் ராதாகிருஷ்ணன், பணியாளர் பட்டாணி, நகர்மன்ற உறுப்பினர்களான எம்.ஜஹாங்கீர், ஏ.பாக்கியஷீலா, இ.எம்.சாமி, பொதுமக்கள் சார்பாக ஜெ.ஏ.லரீஃப் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
விடைபெற்றுச் செல்லும் காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ஜி.அஷோக் குமார் ஏற்புரையாற்றினார்.
தான் பணியாற்றிய இரண்டாண்டுகளில் தனக்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காக நகர்மன்றத் தலைவர் உறுப்பினர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் அவர் நன்றி கூறினார்.
அவருக்கு, காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் – “மாவட்ட நகராட்சிகள் சட்டம்” என்ற நூலை நகர்மன்றத் தலைவர் நினைவுப் பரிசாக வழங்கினார்.
நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி, வரவேற்புரையாற்றிய நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் நிறைவில் நன்றியுரையாற்றியதோடு, ஆணையரை வாழ்த்தி கவிதை வாசித்தார்.
நிகழ்ச்சியின் நிறைவில், நகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு நகர்மன்றத் தலைவர், நகராட்சி ஆணையர் ஆகியோர் சீருடைகளை வழங்கினர்.
நிகழ்ச்சிகள் அனைத்திலும், காயல்பட்டினம் நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், பொதுநல அமைப்பினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில், நகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் ஆணையருடன் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
[குழுப்படத்தைப் பெரிதாகக் காண அதன் மீது சொடுக்குக!]
வழியனுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்காத சில உறுப்பினர்கள், தாம் வெளியூரில் நடைபெறும் பயிற்சி முகாமில் கலந்துகொண்டுள்ளதால் நிகழ்ச்சியில் பங்கேற்க இயலவில்லை என்றும், தமது வாழ்த்துக்களை தொலைபேசி வழியே தெரிவித்துள்ளதாகவும் காயல்பட்டணம்.காம் இடம் தெரிவித்துள்ளனர்.
பெரியகுளம் நகராட்சியின் ஆணையராகப் பணியாற்றி, சில மாதங்கள் விடுமுறையிலிருந்த நிலையில், 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் நாளன்று ஜி.அஷோக் குமார் காயல்பட்டினம் நகராட்சியின் ஆணையராகப் பொறுப்பேற்றார். மொத்தம் 21 மாதங்கள் (1 வருடம் 9 மாதங்கள்) காயல்பட்டினம் நகராட்சி ஆணையராக இவர் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
படங்கள்:
அய்யப்பன் - வீனஸ் ஸ்டூடியோ
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 08:36 / 07.02.2014] |