தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு உருளை பயன்படுத்தும் பயனாளிகளின் குறைகேட்புக் கூட்டம், இம்மாதம் 15ஆம் தேதியன்று, மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதுகுறித்த செய்திக்குறிப்பு:-
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எரிவாயு உருளைகள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்கள் குறைகளை - அதாவது மறுநிரப்புதல் பதிவு செய்வதில் எரிவாயு முகவர்களின் மெத்தனப் போக்கு / முறைகேடுகள் மற்றும் எரிவாயு உருளைகள் வழங்குவதில் அதிகப்படியான காலதாமதம் / நுகர்வோர் குறைகளைப் பதிவு செய்து நடவடிக்கையெடுப்பதில் எரிவாயு முகவர்களின் மெத்தனப் போக்கு ஆகிய குறைகள் குறித்து, குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், எதிர்வரும் 15.02.2014 காலை 11.00 மணியளவில், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், குழுக் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.
எரிவாயு உருளை நுகர்வோர் தமது குறைகளை வெள்ளைத் தாளில் தட்டச்சு செய்தோ அல்லது தெளிவாக எழுதியோ அக்கூட்டத்தில் - மாவட்ட வருவாய் அலுவலரிடம் அளித்திடலாம் என பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |