கைபேசி எண்ணை மின் வாரியத்தில் பதிவு செய்தால், மின் கட்டண விபரங்களை மதிப்புக் கூட்டு சேவை (value added) அடிப்படையில் குறுஞ்செய்தியாகப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்திக்குறிப்பு:-
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் தமது கைபேசி எண்ணைப் (Mobile phone numbers) பதிவு செய்யும் மின் நுகர்வோருக்கு மதிப்புக் கூட்டு சேவையாக குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் - அவர்களது மின் கட்டணம், கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் போன்ற விபரங்கள் தெரிவிக்கப்படும் என மின்சார வாரிய கண்காணிப்புப் பொறியாளர் தெரிவித்துள்ளார்.
ஆகையால், மின் நுகர்வோர் இவ்வசதியைப் பெற்றிட உடனடியாக தமது கைபேசி எண்ணை தங்களுக்குரிய பிரிவு அலுவலகத்தில் பதிவு செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. Re:... posted byFasi Ismail (Kayalpatnam)[08 February 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 33055
நல்ல திட்டம், வாழ்த்துக்கள்.
ஆனால் என்னதான் இந்திய வளர்ந்த நாடக இருதாளும் உலகஅளவில் பின்தங்கி இருக்கிறதே இது காட்டுகிறது, இதில் மட்டுமில்லை எல்லா துறைகளிலுமே பின் தங்கிதான் உள்ளது, மொத்தத்தில் இந்திய வளர்ந்த நாடு அல்ல வளர்ந்து கொண்டிருக்கிற நாடு என்று சொல்லலாம். Too late.
2. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM)[09 February 2014] IP: 61.*.*.* India | Comment Reference Number: 33076
அஸ்ஸலாமு அலைக்கும்
நமது மின்சார துறையின் இந்த ''திட்டம் '' அனைத்து பொது மக்களாலும் வெகுவாகவே பாராட்ட கூடியது தான் ....நமது ஊர் அனைத்து பொது மக்களும் இந்த இந்த திட்டத்தை மிகவும் துரிதமாக பயன் பெறுவது தான் சிறப்பு .....
இந்த திட்டம் மூலம் நமது மின்சார துறை நல்ல முன்னேற்றதின் பதையில் செல்லுவதை தான் காட்டுகிறது....
நமது ஊர் பொது மக்களின் ஒரு மன குமுறல் என்ன வென்றால் ....நமது மின்சார துறை நம் ஜும்மா நேரத்தில் தான் பவர் கட் பண்ணுகிறது ....எங்களின் இந்த சிறப்பான நேரத்தில் தயவு செய்து தாங்கள் பவர் கட் பண்ணாமல் பாது காத்து தரும்படி கேட்டு கொள்கிறோம் .... வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross