காயல்பட்டினம் நகராட்சிள் உள்ள சுமார் 1500 தெரு விளக்குகளை தனியார் நிறுவனங்கள் மூலம் பராமரிக்க ஒப்பந்தப்புள்ளிகள் கோரி விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்த நகர்மன்ற ஒப்புதல் இறுதியாக டிசம்பர் 17, 2013 அன்று வழங்கப்பட்டது. நகராட்சி நிர்வாகத்துறையின் சென்னை தலைமையகத்தின் தொழில்நுட்ப ஒப்புதல் கிடைக்கபெற்றுள்ள நிலையில் தற்போது இந்த விளம்பரம் வெளிவந்துள்ளது.
அதில் - இந்தப் பணிகளை மேற்கொள்ள விரும்பும் ஒப்பந்ததாரார், முதல் தர ஒப்பந்ததாரராக இருக்க வேண்டும் என்றும், பாதுகாப்புத் தொகையாக 21,600 ரூபாய் செலுத்தவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணி குறித்த விபரங்களை, பிப்ரவரி 10, 2014 முதல் பிப்ரவரி 25, 2014 இணையதளங்களில் நேரடியாக பதிவிறக்கம் செய்யலாம் எனவும், ஒப்பந்தப்புள்ளிகளை சமர்ப்பிக்க பிப்ரவரி 26, 2014 அன்று மாலை 3 மணி இறுதி நேரம் என்றும், பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் அன்று மாலை 3:30 மணியளவில் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. |