இம்மாதம் 08ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை, மைக்ரோகாயல் அமைப்பின் புதிய உறுப்பினர் சேர்க்கை வாரமாக அவ்வமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அதன் ஒருங்கிணைப்பாளர் சாளை முஹம்மத் முஹ்யித்தீன் வெளியிட்டுள்ள அறிக்கை:-
மாறிவரும் காலச்சூழலில் வாழ்க்கை மற்றும் உணவு முறை மாற்றங்களினால் புதிது புதிதாக நோய்கள் என ஒரு புறம். விழிப்புனர்வின்மையால் விழி பிதுங்க வைக்கும் மருத்துவ செலவுகளினால், முறையான மருத்துவ உதவி உதவிகள் ஆரம்ப நிலையிலேயே (தக்க சமயத்தில்) தங்களுக்கு கிட்டாததினால் முற்றிவிட்ட பிணியுடன் குடும்பம் நடத்துபவர்கள் மறுபுறம்.
இந்த அவல நிலையை துடைப்பதற்காக பொது மக்களிடையே உடல் ஆரோக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, உலகெங்கும் பறந்து விரிந்து வாழும் காயலர்களை இணைய தளம் மூலம் ஒன்றிணைத்து நிதி திரட்டி எளியவர்களுக்கு உதவிடும் நோக்கில் ஒரு சில தன்னார்வ சகோதரர்களால் தொடங்கப்பட்ட இவ்வமைப்பு, இறையருளால் இன்று இருநூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களையும், சமூக பணிகளுக்கென தனி அலுவலகம், அலுவலக அதிகாரி, நிர்வாகஅங்கத்தினர்களை உள்ளடக்கிய முறையான ஒரு அறக்கட்டளையாக பரிணாமம் பெற்று மிக சிறப்பாக பணியாற்றி வருகின்றது.
புதிய உறுப்பினர்களை சேர்க்கும் முயற்சியாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி எட்டு முதல் பதினைந்து வரை (Feb 8th - 15th) புதிய உறுப்பினர்கள் சேர்க்கை வாரமாக கடைபிடிக்க படுகின்றது. இவ்வுன்னத சேவையில் நீங்களும் உறுப்பினராகி (அதாவது இந்த இணையதள லிங்கை http://microkayal.com/UserLogin.aspx சொடுக்கி அல்லது மைக்ரோ காயல் அலுவலகத்தை தொடர்பு கொண்டு உறுப்பினர் பாரத்தை - அப்ளிக்கேஷன் பூர்த்தி செய்து) பிறருக்கு உதவலாம்.
புதிய அல்லது ஏற்கனவே இணைந்த உறுப்பினர்கள், தங்களால் முடிந்த மாத சந்தாக்களை (Monthly Subscription), ஜகாத் மற்றும் சதாக்காவை மைக்ரோகாயல் அறக்கட்டளைக்கு கொடுக்கலாம். இதன் மூலம் பெறப்படும் நிதிகள் அனைத்தும் அந்நிதியை பெறத் தகுதியானவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றது. பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை பார்வையிட்டு தங்களால் இயன்ற உதவியை குறிப்பிட்ட பயனாளிகளுக்கு (http://microkayal.com/needy.aspx) வழங்கலாம்.
ஓபன் ஹார்ட் சர்ஜரிக்காக வேண்டிய நான்கு வயது பையனும், கழுத்தில் புற்று நோய் சிகிச்சைக்காக வேண்டி அடிப்படை வருமானமில்லாத சகோதரியும், எமர்ஜென்சி சிகிச்சை பெற்று வரும் மூன்று குறைமாத பிள்ளைகளும் உங்களின் உதவியை நாடி காத்திருக்கின்றார்கள். அவர்களின் விண்ணப்பங்கள் நம் மைக்ரோ காயல் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய பட்டுள்ளது. அந்த விண்ணப்பங்களுக்கு உங்களால் முடிந்த உதவியை வழங்கிடுங்கள்.தேவையுள்ளவர்களுக்கு உதவிட மைக்ரோகாயல் அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது.
மேலதிக விபரம் வேண்டுபவர்கள் மைக்ரோகாயல் அறக்கட்டளையை ஈமெயில் மூலமாகவோ அல்லது கடைப்பள்ளிக்கு எதிரே இருக்கும் எங்கள் அலுவலகத்தையோ அல்லது உங்கள் பகுதியில் வசிக்கும் எங்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களை நேரடியாகவோ அணுகலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |