காயல்பட்டினம் சமுதாயக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருநாள் சிறப்பு முகாம், குலசேகரன்பட்டினம் ஹஸனிய்யா நடுநிலைப்பள்ளியில் இம்மாதம் 01ஆம் நாள் சனிக்கிழமை நடைபெற்றது. அன்று காலையில், வீடுகள்தோறும் புள்ளிவிபரங்கள் சேகரிப்பு நடைபெற்றது.
14.00 மணி முதல் 16.30 மணி வரை மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில், காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையின் நிலைய மருத்துவர் டாக்டர் எஸ்.ஏ.ரஹ்மத்துல்லாஹ், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர் ஹமீத் ஹில்மீ ஆகியோர் பங்கேற்று, மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.
முகாம் நிறைவு விழா 16.30 மணிக்கு நடைபெற்றது. குலசேகரன்பட்டினம் ஹஸனிய்யா நடுநிலைப்பள்ளி செயலாளர் கிஷார் ஷாஹுல் ஹமீத் விழாவிற்குத் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் சமுதாயக் கல்லூரி பேராசிரியை எம்.ஆஷா தவ்லத் பேகம் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். மாணவி பி.ஏ.ஃபாத்திமா ஆஃப்ரின் அனைவரையும் வரவேற்றார். முன்னிலை வகித்த - கல்லூரியின் முதல்வர் எம்.ஏ.புகாரீ திட்ட விளக்கம் குறித்துப் பேசினார்.
ஹஸனிய்யா நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கே.மீரான் வாழ்த்திப் பேசினார். சமுதாயக் கல்லூரி மாணவி ஹில்மியா நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
தகவல் & படங்கள்:
D.ஷேக் அப்பாஸ் ஃபைஸல் மூலமாக,
ஆசிரியர் M.A.புகாரீ
முதல்வர் - காயல்பட்டினம் சமுதாயக் கல்லூரி
சொளுக்கார் தெரு - காயல்பட்டினம்
[செய்தி திருத்தப்பட்டது @ 14:18 / 08.02.2014] |