காயல்பட்டினம் நகர்மன்ற பிரதான கட்டிடம் சுமார் 50 ஆண்டுகள் பழமையானது. பஞ்சாயத் தகுதியில் இருந்தப்போது கட்டப்பட்ட இந்த கட்டிடம், தற்போது பழுதடைந்த நிலையில் உள்ளது. இக்கட்டிடத்தை புதுப்பிக்க தமிழக அரசு நடப்பு பட்ஜெட்டில் (2013-14), காயல்பட்டினம் உட்பட சில நகராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ததது. இது குறித்த அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டிருந்தார்.
இவ்வகைக்காக உள்கட்டமைப்பு மற்றும் இயக்குதல் & வெற்றிடம் நிரப்புதல் (INFRASTRUCTURE GAP FILLING FUND) நிதியில் இருந்து, காயல்பட்டினம் நகராட்சிக்கு 1.5 கோடி ரூபாய் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் இத்திட்டத்திற்கான நிர்வாக அனுமதியும் (ADMINISTRATIVE SANCTION) - சென்னை நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் (CMA) அலுவலகத்தில் இருந்து வழங்கபட்டுள்ளது.
இப்பணிக்கு விரிவான திட்ட மதிப்பீடு (DETAILED ESTIMATE) மற்றும் வடிவமைப்பு (DESIGN) போன்றவற்றை தயார் செய்ய தகுதியான கலந்தரிதற்குரியர் (CONSULTANT) நிறுவனத்திடம் ஒப்பந்தப்புள்ளி கோரி ஆகஸ்ட் 30 தேதிய தினத்தந்தி நாளிதழில் - காயல்பட்டினம் நகராட்சி சார்பாக - விளம்பரம் வெளியிடப்பட்டது.
பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் - செப்டம்பர் 20, 2013 அன்று மாலை நகராட்சியில் திறக்கப்பட்டது. அதில் சென்னையை சார்ந்த RAYAN IBRAHIM ARCHITECTS PVT. LTD என்ற நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன.
இத்திட்டத்திற்கான தொழில்நுட்ப ஒப்புதல் (TECHNICAL SANCTION) கிடைக்கப்பெற்ற நிலையில் - இன்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழலில் - 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான, புதிய கட்டிடம் கட்டுவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரி, விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் - இந்த பணிகளை மேற்கொள்ள விரும்பும் ஒப்பந்ததாரார், முதல் தர ஒப்பந்ததாரராக இருக்கே வேண்டும் என்றும், பாதுகாப்பு தொகையாக 1.5 லட்ச ரூபாய் செலுத்தவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணி குறித்த விபரங்களை, பிப்ரவரி 10, 2014 முதல் மார்ச் 6, 2014 இணையதளங்களில் நேரடியாக பதிவிறக்கம் செய்யலாம் எனவும், ஒப்பந்தப்புள்ளிகளை சமர்ப்பிக்க மார்ச் 7, 2014 அன்று மாலை 3 மணி இறுதி நேரம் என்றும், அன்று மாலை 3:30 மணியளவில் - பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு - முதல் கட்டமாக தமிழக அரசினால் ஒதுக்கப்பட்ட 1 கோடி ரூபாயில் இருந்து, முதல் பாதியான 50 லட்ச ரூபாய் நிதியினை - நகராட்சி நிர்வாகத்துறை, காயல்பட்டினம் நகராட்சிக்கு சமீபத்தில் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. |