இந்தியாவின் 65ஆவது குடியரசு நாள் இம்மாதம் 26ஆம் தேதி நாடெங்கும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் சார்பில், வழமை போல இவ்வாண்டும் பட்டம் பறக்க விடும் போட்டி – இம்மாதம் 26ஆம் நாளன்று 08.00 மணி முதல் 16.30 மணி வரை 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது. 3 பிரிவுகளிம் மொத்தமாக 104 பேர் போட்டியாளர்களாகக் கலந்துகொண்டு, பட்டங்களைப் பறக்க விட்டனர்.
பட்டத்தின் அழகு (Beauty), வடிவமைப்பு (Shape), பறக்கும் உயரம் (Height), இழுவை பலம் (Tension), நிலைத்தன்மை (Stability) ஆகிய அடிப்படைகளில் மதிப்பெண்கள் வகைப்படுத்தப்பட்டு, காயல்பட்டினம் சமுதாயக் கல்லூரியின் நிறுவனர் ஆசிரியர் எம்.ஏ.புகாரீ தலைமையிலான நடுவர் குழுவினரால் மதிப்பெண் வழங்கப்பட்டது.
போட்டிகளைத் தொடர்ந்து, அன்றிரவு 07.00 மணிக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை விழாவிற்குத் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஹாஜி பீர் முஹம்மத், செயலாளர் ஹாஜி பி.எஸ்.எம்.இல்யாஸ், டாக்டர் செய்யித் அஹ்மத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்லாக் அப்துல் காதிர் நெய்னா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
கிராஅத்துடன் துவங்கிய பரிசளிப்பு நிகழ்ச்சியில், போட்டிகளின் நடுவர்களுக்கும், 3 பிரிவு போட்டிகளிலும் முதல் மூன்றிடங்களைப் பெற்ற போட்டியாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசு பெற்ற போட்டியாளர்கள் விபரம் வருமாறு:-
2 அடிக்குட்பட்ட பட்டம்:
முதலிடம் (பரிசு ரூ.1,000):
கே.எஸ்.அபூபக்கர் ஸித்தீக்
சீதக்காதி நகர்
இரண்டாமிடம் (பரிசு ரூ.500):
ஷாஜஹான் அஃப்ஹாக்
கே.டி.எம். தெரு
மூன்றாமிடம் (பரிசு ரூ.250):
உமர் அப்துல் காதிர்
புதுக்கடைத் தெரு
இப்பரிசுகளை ஐக்கிய விளையாட்டு சங்க துணைத்தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர் வழங்கினார்.
4 அடிக்குட்பட்ட பட்டம்:
முதலிடம் (பரிசு ரூ.2,000):
எம்.எச்.ஷாஜஹான்
கே.டி.எம். தெரு
இரண்டாமிடம் (பரிசு ரூ.1,000):
முகைதீன்
விசாலாட்சியம்மன் கோயில் தெரு
மூன்றாமிடம் (1) (பரிசு ரூ.500):
முத்து கணேஷ்
வடக்கு முத்தாரம்மன் கோயில் தெரு
மூன்றாமிடம் (2) (பரிசு ரூ.500):
ஃபஹீம்
இப்பரிசுகளை, ஐக்கிய விளையாட்டு சங்க செயலாளர் ஹாஜி பி.எஸ்.எம்.இல்யாஸ் வழங்கினார்.
4 அடிக்கு மேற்பட்ட பட்டம்:
முதலிடம் (பரிசு ரூ.3,000):
ராஜா
லெட்சுமிபுரம்
இரண்டாமிடம் (பரிசு ரூ.2,000):
முத்துராஜா கண்ணன்
பூந்தோட்டம்
மூன்றாமிடம் (1) (பரிசு ரூ.1,000):
ரிஷி பிரபு
இரத்தினபுரி
மூன்றாமிடம் (2) (பரிசு ரூ.1,000):
எஸ்.சக்தி வில்சன்
பூந்தோட்டம்
இப்பரிசுகளை, ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை வழங்கினார்.
நிகழ்வுகள் அனைத்திலும், இளைஞர்கள் - சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். போட்டி ஏற்பாடுகளை, ஐக்கிய விளையாட்டு சங்க நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினர் செய்திருந்தனர்.
தகவல் உதவி:
அப்துல் காதிர் நெய்னா
M.L.ஹாரூன் ரஷீத்
‘கலாமீ’ யாஸர் அரஃபாத்
படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்
M.ஜஹாங்கீர்
ஷேக் முஹம்மத்
A.K.இம்ரான்
மற்றும்
ஹிஜாஸ் மைந்தன்
(செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்)
ஐக்கிய விளையாட்டு சங்கம் சார்பில் கடந்தாண்டு நடத்தப்பட்ட பட்டம் பறக்க விடும் போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |