செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளருக்கு ஆதரவு கோரி காக்கும் கரங்கள் நடத்திய கூட்டத்தில் அவமதிக்கப்பட்டதாக YUF செயலர் அறிக்கை! (Updated) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted bymackie noohuthambi (kaalpatnam)[16 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10922
மைத்துனர் முஹியதீன் அப்துல்காதர் அவர்கள் இவ்வளவு அவசரப்பட்டு இனைய தளத்தில் இந்த செய்தியை கொடுத்திருக்க தேவை இல்லை என்று நினைக்கிறேன்.
நானும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன். 10 மணிக்கெல்லாம் முடிவு அடைய வேண்டிய கூட்டம். முக்கியமான தலைவர்கள் பேசுவதற்கு காத்துக்கொண்டிருக்கும் கூட்டம். அந்த கூட்டதில் உங்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பு தந்ததே இளைஞர் ஐக்கிய முன்னணியின் கண்ணியத்தை உணர்ந்துதான் என்று நான் நினைத்து பெருமைப்பட்டேன். இளைஞர் ஐக்கிய முன்னணியின் முதல் செயலாளரே இந்த அடியேன்தான் எனபது முன்னணியின் குறிப்புகளில் காணப்படும். மிகவும் பெருமையாக இருந்தது.
ஆனால் துரதிஷ்டவசமாக உங்கள் பேச்சு திசைதிரும்பியிருந்தது. உங்கள் கவிதைகள் ரசிக்கப்படவேண்டிய நிலையில் நான் முதல் யாருமே இல்லை. என்ன கருத்துக்களை சொல்லப்போகிறார்கள், அதுவும் முஸ்லிம் லீக் மாநில பொது செயலாளர் அபூபக்கர், மாநில செயலாளர் மகபூப் டாக்டர் ஹபீப் முஹம்மது ஆகியோர் அன்றைய கூட்டத்தில் சொல்லும் கருத்துக்கள்தான் நாளைய தேர்தல் களத்தில் மக்கள் மனங்களில் ஊசாட்டங்களை ஏற்படுத்தக்கூடியவை என்று ஐக்கிய பேரவை மட்டுமல்ல எதிர் அணியினரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த மிகவும் பொறுமதியான நேரம்.
நீங்கள் நமது முன்னணியின் ஆதரவையும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மட்டும் பேசிவிட்டு கவிதையை படித்திருந்தால் கூட இவ்வளவு நேரம் எடுத்திருக்காது.
எவ்வளவு மதிப்புடன் நீங்கள் மேடை ஏறினீர்கள் நீங்கள் நீண்ட நேரம் எடுத்துக்கொண்டது என் போன்றவர்களுக்கே முகம் சுளிக்க வைத்தது என்றால் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களுக்கு எவ்வளவு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள். நீங்களும் இப்படி ஒரு கூட்டம்ஏற்பாடு செய்து அதில் என் போன்ற ஒருவன் மேடை ஏறி சம்பந்தம் இல்லாமல் பேசி நேரத்தை கடத்தினால் நீங்கள் எப்படி வருத்தப்படுவீர்களோ அப்படித்தானே இதுவும்.
நீங்கள் எவ்வளவு பொறுமையாளர், விளம்பர வெளிச்சத்திற்கு வராமல் பொது சேவை ஆற்றக்கூடியவர்,இப்படி அவசரப்பட்டு அறிக்கை வெளியிட்டிருக்க தேவை இல்லை.
கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களும் முன் கூட்டியே உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மணித்துளிகள் இவ்வளவுதான் என்று சொல்லவில்லையா என்ன? மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. வேறு ஒன்றும் யாரையும் குறை சொல்வதற்கில்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross