செய்தி: நகர்மன்ற நடவடிக்கைகளில் தனிநபர் தலையீட்டை ஒழிக்க வேண்டும்! நகராட்சி நிகழ்வுகள் விளக்கப் பொதுக்கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் பேச்சு!! (அசைபடங்களுடன்!!!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted bySalai Sheikh Saleem (Dubai)[19 March 2013] IP: 176.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26360
தலைவி அவர்களின் தரமான, நீரோடை போல் தெளிவான நிகழ்சிகளின் கோர்வை, பேச்சில் ஒரு கம்பீரம், தொனியில் இருந்த தீர்மானம் எவ்வளவு நிர்தர்ஷமான உண்மைகளை போட்டு உடைத்திருக்கிறார்கள். இந்த பேச்சை கேட்ட எவருக்கும் என்னவோ இந்த ஒன்றரை ஆண்டுகளும் நாம் நகராட்சியிலேயே தொடர்பில் இருந்தது போல் தோன்றும் அப்படி ஒரு விளக்க உரை. அவர்கள் மீது கூறப்பட்ட அனைத்து குற்றசாட்டுகளுக்கும் அல்லது மக்கள் மத்தியில் உலவும் வதந்திகளுக்கும் மக்கள் மத்தியிலேயே திறந்த சவால்கள் !!!!
சாகும் வரை உண்ணாவிரதம் எனபது ஒரு அரசியல் மொழி, இதுவரை எவனும் உண்ணாவிரதம் இருந்து செத்தது நாம் நினைவறிந்து கிடையாது, அதே போல் யாரும் அப்படி இருந்தாலும் இந்த அரசே விடாது.
நாம் ஏன் இப்படி எடுக்கக்கூடாது? நான் எடுத்த காரியங்கள் நிறைவேறும் வரையில் உண்ணாவிரதம் என்று ?
அதை விட்டுவிட்டு, ஏன் சாவிர்க்கே சங்கு ஊதவேண்டும் ???
இங்கே சாகும் வரை எனபது உண்ணாவிரதத்தின் உறுதிக்கு வலு சேர்க்கும் ஒரு பதமாகவே தமிழ் வல்லுனர்கள் கருதுகிறார்கள்.
மார்க்க நெறிமுறைகளை தலைவி மீறும் போது கண்டிப்பது நமது கடமைதான், ஆனால் சில வார்த்தைகள் உபயோகத்தில் உள்ள வித்தியாசங்களை பெரிது படுத்த வேண்டாம் எனபதுதான் என்னுடைய வேண்டுகோள்
அப்படியானால் நகராட்சி கவுன்சிலர்கள் இவ்வளவு நாட்களும் அரங்கேற்றிய மேடை நாடகங்கள் எல்லாம் இஸ்லாத்தின் அறநெறிகளை ஒத்திருந்ததால்தான் எவரும் கண்டிக்கவில்லையோ?
அதே போல் இங்கே கவிமகனார் பதிவு செய்தது போல், நான் நான் என்று ஏக வசனம் வேண்டாம் என்று ஒரு குற்றசாட்டு: அவர்களே நகராட்சியில் தனிமை படுத்தப்பட்டிருக்கும்போது, அவர்கள் தன்னை எவ்வாறு கூற விரும்புகிறீர்கள்? நாம் என்று சொன்னால் அகங்காரி என்பர் இன்னும் சிலர்.
சிந்தியுங்கள் !!!!
என்னவோ ஒழு பெரிய முழக்கம் மக்கள் மத்தியில் இருந்த கேள்விகளுகெல்லாம் பதிலாக எல்லார் செவிகளுக்கும் சென்றடைந்திருக்கிறது. கண்டிப்பாக வாய்மையே வெல்லும்.
இன்னும் ஓன்று சொல்ல ஆசைப்படுகிறேன், தலைவி உட்பட எல்லோரும் தனி ஒரு ஆளையே குறி வைக்கிறார்களே,
நான் கேட்கிறேன்,
அவர்தான் இப்படி செய்கிறார் என்றால் உறுப்பினர்களே நீங்கள் ஏன் இடம் கொடுக்கிறீர்கள் (ஊசி நுழைய இடம் கொடுத்தால் தானே நூல் உள்ளே போக முடியும்) நீங்கள் உங்களின் மனதை அலைய விடுவதால்தானே ஆட்டி வைப்போருக்கு அது ஏதுவாகப்போய் விடுகிறது ?
எல்லா குற்றங்களுக்கும் அல்லாஹ்விடத்தில் தண்டனை கண்டிப்பாக இருக்கிறது, சிலவை அவன் கொடுத்து சோதிப்பது , உங்களிடம் எங்களின் அமானிதமான நாரராட்சி ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. நன்மைக்கும் தீமைக்கும் நீங்களே பொறுப்பாளிகள் !!!
என்று விடியும் இந்த விபரீத உலகம் என்ற ஏக்கத்துடன்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross