Re:... posted byE.M.Samy (Kayalpattinam)[03 April 2015] IP: 1.*.*.* India | Comment Reference Number: 39978
எங்கள் தந்தை R.இசக்கி ஆச்சாரி அவர்களின் இழப்புக்கு அனுதாபத்தையும் எங்களுக்கு ஆறுதலையும் நேரில் வந்தும் தொலைபேசி வாயிலாகவும் ஊடகங்கள் மூலமாகவும் தெரிவித்த காயல் நகர பெரியோர்களுக்கும், உள்ளூர் மற்றும் வெளியூரில் வசித்து வரும் அன்பு உள்ளங்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டு, எங்கள் தந்தை காட்டிய வழியில் இறைவன் நாட்டத்தால் நடப்போம் என கூறிக்கொள்கிறோம்.
இப்படிக்கு
இசக்கி ஆச்சாரி சன்ஸ் மற்றும் குடும்பத்தார்கள்,
காயல்பட்டணம்.
காயல்பட்டணம் நகர்மன்ற 18-வது வார்டு உறுப்பினரின் விளக்கம். posted byE.M.Samy, 18th ward (Kayalpattinam)[25 March 2015] IP: 1.*.*.* India | Comment Reference Number: 39833
DCW ஆலையின் 57வது கால்கோள் விழாவில், உறுப்பினர்களில் நான்குபேர் மட்டும் கலந்து கொண்டதை உறுதி செய்து கொண்டதாக இச்செய்தி கூறுகிறது. இதில் கருத்து பதிந்திருக்கும் சகோதரர் சாளை ஜியாவுதீன் அவர்கள் நான் இவ்விழாவில் கலந்து கொள்ளவில்லையாயின் பாரட்டுக்கள் என சொல்லியுள்ளார். என்னை புரிந்து கொண்டமைக்கு அவருக்கு பாரட்டுக்கள்.
நமது நகர்மன்ற ஏரியாவில் அந்த ஆலை இருப்பதால், இவ்விழாவில் பங்கேற்கும்படி நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டதாக அறிகிறேன். நகர்மன்ற தலைவருக்கும் அனுப்பியிருக்கலாம். எனக்கும் வந்தது. ஆனால் எனக்கு அவ்விழாவில் கலந்து கொள்ள மனசாட்சி இடம் தரவில்லை. எனவே நான் அவ்விழாவில் கலந்து கொள்ளவில்லை.
கலந்து கொண்டவர்களின் நிலைப்பற்றி அவர்களிடம்தான் விளக்கம் கேட்க வேண்டும். அவர்கள்தான் அதற்கு விளக்கம் சொல்ல வேண்டும். மற்ற உறுப்பினர்கள் அதற்கு பொறுப்பல்ல.
தலைவருக்கும் உறுப்பினர்களுக்கும் இடையில் வரும் கருத்து வேறுபாடுகளில் பல விசயங்களில், நாங்கள் அனைவருமே ஒத்துப்போகக்கூடிய நிலையிருப்பதால், நாங்கள் அனைவரும் எல்லா விசயங்களிலும் ஒரே மாதிரியான நிலைபாடுதான் எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அந்த வகையில்தான் DCW விழாவில் பங்கேற்கும் விசயமும் அமையும்.
இருப்பினும் இதை பயன்படுத்திக்கொண்டு இச்செய்திக்கு கருத்து தெரிவித்திருப்பவர்கள் சில தவறான குற்றச்சாட்டுக்களை உறுப்பினர்களின் மீது சுமத்தியுள்ளார்கள்.
இந்த ஆலைக்கு சட்டவிரோதமாக, தன்னிச்சையாக விரிவாக்க பணிக்கு முந்தைய ஆணையர் அனுமதி கொடுத்ததை ரத்து செய்யும் தீர்மானம் நகர்மன்றத்தில் கொண்டு வந்த சமயம், சகோதரர்கள் ஜஹாங்கீர், சம்சுதீன் மாமா ஆகியோரை தவிர்த்து அனைவர்களும் DCW விற்கு ஆதரவாகவும், மக்களுக்கு எதிராகவும் இருந்து, தீர்மானத்தை எதிர்த்தீர்கள் -சாளை ஜியாவுதீன் (C&P)
இதன் மூலம் ஒட்டுமொத்த உறுப்பினர்களையும் DCW விற்கு ஆதரவாளர்கள் என்ற தோற்றத்தினை உருவாக்க முயற்ச்சிக்கிறார்கள்.
ஓராண்டுக்கு முன்னாலேயே, விரிவாக்கப்பணிக்கு அரசின் ஒப்புதலை பெற்று, அதற்குரிய கட்டிடத்தை கட்ட சம்பிரதாய சட்டப்படி நகராட்சி ஆணையருக்கு DCW நிர்வாகத்தினர் விண்ணப்பித்திருக்கிறார்கள்.
தலைவர் உட்பட உறுப்பினர்கள் எவருக்கும் தெரியாமல் அந்நேரத்தில் ஆணையர் அனுமதி வழங்குகியிருக்கிறார். ஓராண்டு கழித்துதான் தெரிய வருகிறது. அந்நேரத்தில் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, உற்பத்தியும் நடந்து கொண்டிருக்கும்போது, ரத்து செய்யும் தீர்மானம் நிறைவேறிவிடுவதாலயே உற்பத்தியை நிறுத்திவிட முடியாது. இதுவும் தலைவர் உட்பட்ட அனவருக்கும் தெரியும்.
ஆனால் இத்தீர்மானத்தினை தலைவர் கொண்டு வந்ததின் நோக்கம், முழுக்க முழுக்க சுயவிளம்பரம் தேடுவதற்கு மட்டுமே தவிர வேறு ஒன்றும் இல்லை.
இருப்பினும் உறுப்பினர்கள் அத்தீர்மானத்திற்கு ஆதரவளிக்கவில்லை என்பதை வைத்து, ஏதோ விரிவாக்க திட்டத்தின் உற்பத்திக்கு நாங்கள் துணைபோவது போல சித்தரிக்கிறார்கள். இது முற்றிலும் தவறு.
நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறது KEPA. நகர்மன்றத்தில் தீர்மானத்தினை உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்காததை வைத்து, DCW ஆலைக்கு சாதகமாக நீதிபதி தீர்பளிக்க வாய்ப்புள்ளது என்பது போன்று எழுதுகிறார்கள்.
KEPA வழக்கறிஞருக்கு விபரம் தெரியாதா? வழக்காடுவதற்கு வேறு ஆதரங்களே இல்லையா? ஆகவே இதன் மூலம் ஒட்டு மொத்த உறுப்பினர் மீதும் களங்கம் கற்பிப்பதே சிலரின் நோக்கம்.
இந்நிலையில் ஒரு கேள்வி எழுகிறது. அத்தீர்மானத்திற்கு ஒரு ஒப்புக்காகவாவது தார்மீக ஆதரவாக உறுப்பினர்கள் ஏன் அன்று நிற்கவில்லை என்ற கேட்கக்கூடும்.
கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த அமைப்பு பல்வேறு வழிகளில் உறுப்பினர்களாகிய எங்களை அவமானப்படுத்தி, எங்கள் மீது அவதூறுகளை கூறி வந்ததோ, அதே KEPA அமைப்பு இத்தீர்மானத்திற்கு ஆதரவளிக்க எங்களைக் கேட்டுக் கொண்டதாலும், அவர்களின் தூண்டுலின் பேரிலேயே இத்தீர்மானம் வந்ததாலும் நாங்கள் அதற்கு ஒத்துழைக்கவில்லை. இதுதான் உண்மை.
இருப்பினும் அக்கூட்டத்தில், நாங்கள் நேரடியாக DCW சென்று பார்த்து, தனியாக தீர்மானம் கொண்டு வருவோம் என்று அறிவித்ததையும் நினைவு படுத்துகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross