| 
 டி.சி.டபிள்யூ நிறுவன 57வது கால்கோள் தினவிழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. 
  
விழாவிற்கு டி.சி.டபிள்யூ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் முடித் ஜெயின் தலைமை வகித்தார். நிர்வாக தலைவர் மால்டி ஜெயின், நிர்வாக 
உதவித் தலைவர்கள் ஜெயக்குமார் மற்றும் சுபாஷ்டாண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
  
நிர்வாக உதவித் தலைவர் மேகநாதன் அனைவரையும் வரவேற்றார். விளையாட்டுக்குழு தலைவர் மீனாட்சி சுந்தரம் விளையாட்டு அறிக்கை 
சமர்பித்தார். 
  
விழாவில் தமிழக அரசின் சமூக நலத்துறை இயக்குனர் சேவியர் கிரீஷோ நாயகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 
  
மூத்த பொது மேலாளர் சுரேஷ் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். நிறுவனத்தின் ஆண்டு மலரான சங்கமம்  இதழை சிறப்பு 
விருந்தினர் சேவியர் கிரீஷோ நாயகம் வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
  
 
  
விழாவில் ஆறுமுகநேரி வியாபாரிகள் ஐக்கிய சங்கத் தலைவர் தாமோதரன், நகர் நலமன்றத் தலைவர் பி.பூபால்ராஜன், நகர காங்கிரஸ் தலைவர் 
எல்.ராஜாமணி, த.மா.கா. பிரமுகர்கள் இரா.தங்கமணி, இந்து முன்னணி ஒன்றிய தலைவர் ஜி.ராமசாமி, ஆத்தூர் பேரூராட்சி மன்றத் தலைவர் 
எம்.பி.முருகானந்தம், துணைத் தலைவர் கண்ணன், வெற்றிலை விவசாயிகள் சங்க தலைவர் சதீஷ்குமார்,  ஊராட்சி மன்ற தலைவர்களான 
சேர்ந்தபூமங்கலம் துரைராஜ், வரண்டியவேல் ஜனகர், வீரபாண்டியன்பட்டணம் ரூரல் சந்திரசேகர் மற்றும் மூலக்கரை குமரேசன்,  ஒப்பந்தகாரர்கள் 
நல்லூர் வி.முத்துபாண்டியன், எஸ்.ஆர்.எஸ். சுரேஷ், ஆர். தங்கபாண்டியன், டி.ராஜா, ஏ.கே.ஜெயராஜ், கான்டிராக்டர் சங்க தலைவர் பொன்ராஜ், 
செயலாளர் எஸ்.தியாகராஜன், ஆர்.தவமணி, ஆர்.தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
  
இறுதியில் விழாக்குழு துணை தலைவர் திருநாவுக்கரசு நன்றி கூறினார். 
  
காயல்பட்டினம் நகர்மன்றத்தின்  10வது வார்டு உறுப்பினர் பதுருல் ஹக் (நாளிதழ் பதுருதீன்? என குறிப்பிட்டிருந்தது),  12வது வார்டு உறுப்பினர் சுகு, 14வது வார்டு உறுப்பினர் பாக்கிய ஷீலா (இவரின் கணவர் இங்கு பணிப்புரிகிறார்), 15வது வார்டு உறுப்பினர் கே.ஜமால்,  17வது வார்டு உறுப்பினர் அஜ்வாது ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.
  
10வது வார்டு உறுப்பினரை தவிர்த்து, கலந்துக்கொண்டதாக ஊடகங்கள் குறிப்பிட்டிருந்த  உறுப்பினர்களை  காயல்பட்டணம்.காம்  தொடர்பு கொண்டதில், அவர்களும் நிகழ்ச்சியில் தங்கள்  பங்கேற்பை  ஊர்ஜிதம் செய்தனர்.
  
7வது வார்டு உறுப்பினர் அந்தோணி கலந்துக்கொண்டதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. தான் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என அவர் 
காயல்பட்டணம்.காம் இணையதளத்திடம் மறுப்பு தெரிவித்தார்.
  
DCW நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரைவேல் - 7வது வார்டு உறுப்பினரின்  பெயர் தவறுதலாக நாளிதழில் வெளிவந்துள்ளதாக 
காயல்பட்டணம்.காம் இணையதளத்திடம் விளக்கம் அளித்தார். 
  
தகவலில் உதவி: 
தினமணி, தினத்தந்தி
  |