காயல்பட்டினம் புறவழிச் சாலையில் (பைபாஸ் ரோடு) புதிய சாலை இன்று அமைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய விளையாட்டு சங்க முனையில் துவங்கி, உச்சினிமாகாளியம்மன் கோயில் பகுதி வரை சுமார் 1 கிலோ மீட்டர் நீளத்தில், ரூபாய் 30 லட்சம் செலவில், தமிழக நெடுஞ்சாலைத் துறையால் இப்புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது.
புதிய சாலை அமைப்புப் பணிகளை, நெடுஞ்சாலைத் துறை திருச்செந்தூர் மண்டல இளநிலை பொறியாளர் வானமாமலை தலைமையில், துணை ஆய்வாளர்களான வசந்தி, விவேகானந்தன் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.
ஐக்கிய விளையாட்டு சங்க முனையில் 4 சாலை சந்திப்பில், முன்பிருந்தது போல மீண்டும் வேகத்தடையும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தகவல்:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்
கள உதவி:
K.R.ஷாஹுல் ஹமீத் |