காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் மையவாடி அமைக்க சதுர அடிக்கு ரூபாய் 200 என நன்கொடைத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அனைவரும் இத்திட்டத்தில் பங்கேற்குமாறும் அந்நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து, அப்பள்ளியின் தலைவர் ‘ஜுவெல் ஜங்ஷன்’ கே.அப்துர்ரஹ்மான், ‘டேக் அன் வாக்’ என்.டீ.இஸ்ஹாக் லெப்பை ஜுமானீ ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை:-
அன்பார்ந்த சகோதர-சகோதரியருக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) இறையருளால் இம்மடல் தங்களைப் பூரண உடல் நலமுடனும், தூய இஸ்லாமிய உணர்வுகளுடனும் சந்திக்கட்டுமாக.
நமது கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியின் அறப்பணிகள் அனைத்தும், தங்கள் யாவரின் மேலான ஒத்துழைப்புகளுடன் இறையருளால் இனிதே நடைபெற்று வருகின்றன, அல்ஹம்துலில்லாஹ்.
நமது இப்பள்ளியைச் சுற்றி சுமார் 80 மீனவ ஏழை முஸ்லிம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அனைவரும் பொருளாதாரத்தில் மட்டுமின்றி, மார்க்க - உலகக் கல்வியறிவிலும் பின்தங்கியே உள்ளனர். நம் பள்ளிக்கென நிரந்தர வருமானமும் எதுவும் இல்லாததால், அதன் அறப்பணிகளுக்கான பொருளாதாரத் தேவைகளை தங்களைப் போன்ற மேன்மக்களின் ஒத்துழைப்புகளுடனேயே செய்து வருகிறோம்.
இப்பள்ளியின் இமாம் - முஅத்தின் மற்றும் பள்ளியைச் சுற்றியுள்ள சிறுவர் சிறுமியருக்கு மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொடுக்கும் பணிகளைச் செய்வதற்காக, மேலப்பாளையத்தைச் சேர்ந்த ஒரு சகோதரர் நியமிக்கப்பட்டுள்ளார். இமாம் சம்பள வகைக்காக மட்டுமே மாதம் பல ஆயிரங்கள் தொகை செலவாகிறது.
இவை ஒருபுறமிருக்க, நம் பள்ளிக்குச் சொந்தமாக மையவாடி இல்லை. இப்பகுதியில் மரணிப்போரை, இதுகாலம் வரை, குருவித்துறைப் பள்ளி நிர்வாகிகளின் உதவியுடன், அப்பள்ளி மையவாடியிலேயே அடக்கம் செய்து வருகிறோம். மய்யித்தைக் கொண்டு செல்வதும் - அடக்குவதும் எல்லாக் காலங்களிலும் - குறிப்பாக கடும் வெயில் - மழைக் காலங்களில் மிகுந்த சிரமத்தைத் தருவதாய் உள்ளன. இக்குறையைக் களைய நம் பள்ளியையொட்டியே மையவாடி அமைந்தால், அது இப்பகுதி மக்களுக்கு மரணச் சிந்தனை மற்றும் இறையச்சம் ஏற்பட முக்கிய காரணியாக அமையும்.
இந்நிலையில், பள்ளியையொட்டி வடபுறத்தில் காலி நிலம் ஒன்று விலைக்கு வருகிறது. அதை முறைப்படி வாங்கி, மையவாடி அமைக்கவும், பள்ளிக்கு நிரந்தர வருமானம் தரத்தக்க செயல்திட்டங்களையும், அல்லாஹ் மீது பொறுப்பு சாட்டியவர்களாக திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வகைக்காக நன்கொடையளிக்க சிலர் வாக்களித்துள்ளனர் என்றபோதிலும், முழுத் தேவையைப் பூர்த்தி செய்ய இன்னும் பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என பள்ளி நிர்வாகம் உணர்கிறது.
ஏழை எளிய மக்களைக் கொண்ட இப்பள்ளியை தங்கள் மஹல்லா பள்ளியாகக் கருதி, இவ்வகைக்காக தங்களது மேலான பங்களிப்பை தாராளமாகத் தந்துதவி, ஸதக்கத்துன் ஜாரியா எனும் நிலையான நற்கூலியைப் பெற்றிடுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நிறைவான நன்மைகளை அள்ளித் தரும் இத்திட்டத்தில் நமதூர் மக்கள் அனைவரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற நோக்கில் கலந்தாலோசிக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக - மையவாடிக்கான நிலம் கொள்முதல், சுற்றுச்சுவர் அமைத்தல் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளுக்காகவும் ஆகும் மொத்த செலவினத்தைக் கணக்கிட்டு, சதுர அடிக்கு 200 ரூபாய் மட்டும் நன்கொடைத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே, தனவந்தர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று இருந்துவிடாமல், இச்செய்தியைப் படிக்கும் ஒவ்வொருவரும் உங்களால் இயன்ற அளவுக்கு இத்திட்டத்தில் பங்கேற்றும், உங்களுக்கு அறிமுகமானோருக்கு இதுகுறித்து எடுத்துக்கூறி, அவர்களையும் பங்கேற்கச் செய்தும், எல்லாம்வல்ல அல்லாஹ்வின் நிலையான நற்கூலிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுகிறோம்.
எல்லாம்வல்ல அல்லாஹ் நம் யாவரின் ஹலாலான நாட்ட தேட்டங்களை நிறைவேற்றி, ஈருலக வெற்றிகளை நிறைவாகத் தந்தருள்வானாக, ஆமீன்.
மேலதிக விபரங்களுக்கும், தொடர்புகளுக்கும்:
(1) ‘ஜுவெல் ஜங்ஷன்’ K.அப்துர்ரஹ்மான் (தலைவர்) - கைபேசி எண்: +91 97901 35272
(2) ‘டேக் & வாக்’ சப்பல்ஸ் N.T.இஸ்ஹாக் லெப்பை - கைபேசி எண்: +91 99653 34687
வங்கிக் கணக்கு விபரம்:
ICICI A/c. No.: 61530 150 2714
Kayalpatnam Branch
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |