வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் மாணவியர் பேரவை நிறைவு விழா, இம்மாதம் 23ஆம் நாள் திங்கட்கிழமையன்று காலை 10.00 மணிளவில், கல்லூரியின் நிறுவனர் தலைவர் வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.
இரண்டாமாண்டு கணிதவியல் மாணவி ஜெ.எஸ்.ஜுஹரா ஃபாயிகா கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைக்க, தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, மாணவியர் பேரவை செயலாளர் ஏ.சித்தி ஜாஃப்ரீன் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து, 2014-15ஆம் ஆண்டில் - கல்லூரியின் பல்வேறு மன்றங்கள் சார்ந்த செயல்பாடுகள் அறிக்கையாக வாசிக்கப்பட்டது. கல்லூரி செயலாளர் வாவு எம்.எம்.முஃதஸிம் - விழா அறிமுகவுரையாற்றினார்.
மன்றங்களின் தலைவரான – கல்லூரி முதல்வர் முனைவர் வே.சசிகலா - மாணவியரின் திறமைகளைப் பாராட்டியும், அவர்களது எதிர்கால வாழ்வு வளமாக அமைய வாழ்த்தியும் உரையாற்றினார். கல்லூரி இயக்குநர் முனைவர் மெர்ஸி ஹென்றி வாழ்த்துரை வழங்கினார்.
கல்லூரி பேராசிரியையரின் - The Research Pinnacel எனும் தலைப்பிலான ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பை - சிறப்பு கலந்துகொண்ட - திருநெல்வேலி Collegiate Education இணை இயக்குநர் முனைவர் சி.பத்மலதா வெளியிட, கல்லூரி நிறுவனர் அதைப் பெற்றுக்கொண்டார்.
ஆங்கிலத் துறை தலைவர் எஸ்.கிருஷ்ணவேணி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து உரையாற்ற, தொடர்ந்து சிறப்பு விருந்தினர் முனைவர் சி.பத்மலதா சிறப்புரையாற்றினார். தன்னம்பிக்கை, விடா முயற்சி, கடின உழைப்பு ஆகியவற்றை வலியுறுத்தியும், தனித்திறமை - மனவலிமை ஆகியவற்றைக் கண்டுபிடித்து வளர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் அவரது உரை அமைந்திருந்தது.
கல்லூரி துணைச் செயலாளர் மவ்லவீ ஹாஃபிழ் வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கி கண்ணியப்படுத்தினார்.
முன்னதாக நடைபெற்ற கலை - இலக்கியப் போட்டிகளில் வென்ற மாணவியருக்கு, கல்லூரி நிறுவனர், துணைச் செயலாளர், நிர்வாக உறுப்பினர்கள், முதல்வர், இயக்குநர் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
மாணவியர் பேரவை ஒருங்கிணைப்பாளர் ஏ.நேசா ஆக்னஸ் பெலிண்டா நன்றி கூற, முதலாமாண்டு கணிப்பொறியியல் மாணவி துஆவைத் தொடர்ந்து நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. இவ்விழாவில், கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியையர், மாணவியர் திரளாகக் கலந்துகொண்டனர்.
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |