பொதுமக்கள், வாக்காளர் பட்டியலிலுள்ள தமது பெயருடன் ஆதார் எண், கைபேசி எண், மின்னஞ்சல் முகவரியை ஆன்லைன் முறையிலும், பொதுச் சேவை மையங்கள் மூலமும் இணைத்துக்கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
காயல்பட்டினத்தில் வாக்காளர்களிடம் கூடுதல் விபரங்களைப் பெற்று பதிவு செய்வதற்காக, அரசால் நியமிக்கப்பட்டுள்ள நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் செல்கின்றனர்.
அவ்வாறு செல்கையில் - ஆதார் அட்டையின் நகல், வாக்காளர் அடையாள அட்டையின் நகல் ஆகியவற்றை வாக்காளர்கள் ஆயத்தமாக வைத்திருக்க வேண்டும் என கேட்கப்படுகிறது.
நிலை அலுவலர்கள் வீடுகளுக்குச் செல்லும்போது பொதுமக்கள் இந்த ஆவணங்களின் நகல்களை ஆயத்தமாக வைத்திருந்தால் மட்டுமே நேர விரயமின்றி, விபரங்களைச் சேகரிக்க இயலும் என்றும், பொதுமக்கள் தகுந்த ஆவன நகல்களுடன் முழு ஒத்துழைப்பளிக்குமாறும் நிலை அலுவலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஆதார் அட்டைக்குப் பதிவு செய்தும் இதுவரை பெறாதவர்கள், பதிவு செய்யும்போது பெற்ற ஒப்புகைச் சீட்டின் நகலையும் வழங்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். |