Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:17:23 AM
புதன் | 9 அக்டோபர் 2024 | துல்ஹஜ் 1896, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:1215:2918:1219:22
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்11:15
மறைவு18:04மறைவு23:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:44
உச்சி
12:05
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2518:4919:14
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15639
#KOTW15639
Increase Font Size Decrease Font Size
திங்கள், மார்ச் 23, 2015
முஹம்மது இஸ்மத் - மதுரை மருத்துவ கல்லூரியில் MBBS பட்டம் பெற்றார்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 5957 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (17) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மதுரையில் நேற்று (மார்ச் 22) நடந்த பட்டமளிப்பு நிகழ்ச்சியில் - காயல்பட்டினம் அப்பாபள்ளி தெருவை சார்ந்த (மறைந்த) டாக்டர் அபு முஹம்மது சஃபீக் - டாக்டர் வஹீதா அபு தம்பதியினரின் மகன் முஹம்மது இஸ்மத், மருத்துவ (MBBS) பட்டம் பெற்றார்.



மதுரை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் மற்றும் மருத்துவ கல்வித்துறை இயக்குனர் டாக்டர் கீதா லக்ஷ்மி ஆகியோர் சிறப்பு விருந்தினராக - மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் நடந்த - இப்பட்டமளிப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.







டாக்டர் இஸ்மத்தின் நெருங்கிய உறவினர்கள் - பெரிய தந்தை ஹாஜி ஷாஜஹான், தாயாரின் சகோதரர் ஹாஜி ஹுமாயூன் உட்பட பலர் பெருந்திரளாக இந்நிகழ்வினை காண மதுரை சென்றிருந்தனர்.



டாக்டர் முஹம்மது இஸ்மத் - எல்.கே.மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்.

2009ம் ஆண்டு நடந்த அரசு பொது தேர்வில், 1164 மதிப்பெண்கள் பெற்று நகரின் முதல் மாணவராக திகழ்ந்தார். இவர் பெற்ற மதிப்பெண் - அப்போது நகரின் புதிய சாதனை மதிப்பெண்ணாகும்.

2009ம் ஆண்டு ரெட் ஸ்டார் சங்கத்தில் நடந்த சந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவர் நிகழ்ச்சியின் போது



2007ம் ஆண்டு நடந்த பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்விலும் இவர் நகரின் முதல் மதிப்பெண் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

2007ம் ஆண்டு நடந்த சந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவர் நிகழ்ச்சியின் போது





இவரின் குடும்பம் - ஏராளமான மருத்துவர்களை நகருக்கு தந்துள்ளது.

இவர் -

டாக்டர் செய்யது அஹமது, டாக்டர் அபுல் ஹசன் மற்றும் டாக்டர் ஜவஹர் ஆகியோரின் பேரனும்,

டாக்டர் கிஸார் முஹம்மது மற்றும் டாக்டர் கிஸார் இர்ஷாத் ஆகியோரின் மருமகனும்,

டாக்டர் கிஸார் புஹாரி மற்றும் டாக்டர் நாசிக் ஹசன் ஆகியோரின் சகோதரரும்

ஆவார்.

எல்.கே.மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் தாளாளரும், ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் முன்னாள் செயலாளருமான மறைந்த ஹாஜி இஸ்மத்தின் மகன் வழிப்பேரனான இவரின் பெரிய தந்தைகள் இலங்கை காயல் நல மன்றத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான ஷாஜஹான் மற்றும் அபூதபீ காயல் நல மன்றத்தின் கவுரவ தலைவர் ஐ.இம்தியாஸ் அஹ்மத் ஆகியோர் ஆவர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [23 March 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39784

அஸ்ஸலாமு அலைக்கும்

நம் அருமை செல்வத்துக்கு ....எங்களின் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் ''' வல்ல இறைவன் உன்னையும் தன குடும்பத்தையும் எப்போதும் சிறப்பாக்கி வைப்பானகவும் ஆமீன்...........

இணைய தளம் '' குறிப்பிட்டது போல ...மாஷா அல்லாஹ் இந்த குடும்பம் ...நமது ஊருக்கு பல டாக்டர்களை '' தந்து உள்ளது தனி ஒரு சிறப்பு தான் .....

இந்த பையனின் தாயார் ..கண்ணியத்துக்குரிய . டாக்டர் வஹீதா அபு அவர்கள் முன்பு ஒரு தடவை நான் என்னுடைய துணைவியார் அவர்கள் சுகம் இல்லாத போது.. சம்பந்தமே இல்லாத ஒரு நேரத்தில் டாக்டர் வஹீதா அபு அவர்களிடம் அழைத்து சென்றேன் ...எந்த ஒரு மன சங்கடமும் இல்லாது ...சிரித்த முகத்துடன் என் துணைவியார் அவர்களுக்கு வைத்தியம் பார்த்து ஒரு சில நல்ல யோசனைகளும் சொன்னார்கள் ....அந்த நினைவாற்றல் இப்போது என் கண்முன் வந்து விட்டது ......

இன்ஷா அல்லாஹ் இந்த பயனும் அவன் DR தாயார் அவர்கள் & நம் மரியாதைக்குரிய DR . அபுல் ஹசன் மாமா அவர்கள போன்றும் நமது ஊர் மக்களுக்கு நல்லதோர் வைத்தியம் தர வேணும் இது தான் நம் நம் யாவர்களின் எண்ணம் .......

தொடரட்டும் தன் நல்லதோர் சிறப்பான சேவை நம் ஊர் மக்கள் யாவர்களுக்கும் ..புண் சிரிப்புடன் ......

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மருத்துவ சேவை இனிதே ஆரம்பமாக வாழ்த்துக்கள்.
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam) [23 March 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 39786

இவரை மருத்துவ படிப்பு படிக்க ஆர்வத்தை வளர்த்து அதற்காக பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி (சந்தோசத்தை) அடைந்திருக்கும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை பாராட்டுகின்றேன் - வாழ்த்துகின்றேன்..

மருத்துவரே...! உங்கள் மருத்துவ பணி (சேவை) இனிதே ஆரம்பமாக வாழ்த்துக்கள்.

தாங்கள் பெற்ற MBBS மருத்துவ பட்டத்தால் நமது L K பள்ளியும் - நமது நகரும் பெருமை கொள்கிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...இஸ்மத்
posted by hylee (colombo) [23 March 2015]
IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 39790

பட்டம் பெற்ற அன்பு தம்பி டாக்டர் இஸ்மத் அவர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by mohamed salih (chennai) [23 March 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 39792

வாழ்த்துக்கள் ..

உங்கள் சேவை நம் ஊருக்கு இனி தேவை ..

என்றும் அன்புடன்,
குளம் முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்
சென்னை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...assalamu alaikum.
posted by S.H.SEYED IBRAHIM (RIYADH - K.S.A.) [23 March 2015]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39796

அஸ்ஸலாமு அலைக்கும்.

"அஸ்ஸலாமு அலைக்கும்."

மாஷா அல்லாஹ்!!! மப்ரூக்!!!!

என் பிள்ளையின் செய்தியை பார்த்தவுடன் அழுது ஆனந்த கண்ணீர் வடித்தேன். எல்லா புகளும் இறைவன் ஒருவனுக்கே!!!

அல்ஹம்துலில்லாஹ்!!!!

என் அருமை செல்வத்துக்கு ....சூப்பர் இப்ராகிம் மாமாவின் மனமார்ந்த கோடான கோடி நல் வாழ்த்துக்கள் ''' வல்ல இறைவன் உன்னையும் உன் குடும்பத்தையும் எப்போதும் சிறப்பாக்கி வைப்பானகவும் ஆமீன்........... ஆமீன்!! யா ரப்பல் ஆலமீன்!!! நான் தொடர்ந்து கேட்ட துஆ கபூல் ஆஹி விட்டது.

என் பிள்ளை பள்ளி பருவத்தில் எடுத்த மதிபென்ஹளைப் பார்த்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சி அடைந்தேன் சவுதியில் அன்று. இளம் டாக்டர். இஸ்மத், தாங்கள் மேலும், முது கலையில் நன்கு படித்து சாதனை புரிய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!!!! தாங்கள் பெரியவர் ஆஹியதும் பார்க்க வாய்ப்பு குறைந்து விட்டது கடந்த ஆண்டுஹளில், இருப்பினும் தொலை பேசியில் உரையாடியது மிக்க மகிழ்ச்சி.

ஒரு பணிவான வேண்டுகோள்: தாங்களின் தஹப்பனரும் + தாயாரும் சேவை செய்தது போன்று ..சிரித்த முகத்துடன் எப்போதும் சேவையை மட்டும் மனதில் வைத்து பணி புரியுங்கள். அல்லாஹ் உதவியால் ஊர் மக்களின் துஆ எப்பொழுதும் கிடைக்கும். இன்ஷாஅல்லாஹ்.

மிக்க மகிழ்ச்சியுடன்,
சூப்பர் இப்ராகிம் மாமா. எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by netcom buhari (chennai) [23 March 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 39797

உங்கள் மருத்துவ பணி இனிதே ஆரம்பமாக வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [23 March 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 39803

மாஷா அல்லாஹ்.

டாக்டர் முஹம்மது இஸ்மத் அவர்களுக்கு மில்லியன் பாராட்டுக்கள்.

ஏதோ நேற்று தான் முஹம்மது இஸ்மத் +2வில் முதல் மாணவனாக வந்ததற்க்கு பாராட்டி கருத்து பதிந்தது போல உள்ளது. அதற்குள் மருத்துவம் படித்து முடித்து விட்டார். காலம் எவ்வளவு ஸ்பீட்.

இந்த ஸ்பீட் ஆன காலத்தில் மேல் படிப்புக்கள் படித்து, துறை வல்லுனராக ஆகி, சேவையுடன் கூடிய தொழில் செய்ய வாழ்த்துகின்றேன்.

ஒரு வருத்தம், உன் தந்தையின் இழப்புதான்.

வாழ்த்துக்களுடன், சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன்,அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. வாழ்த்துக்கள்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான், (yanbu) [23 March 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 39805

அன்று சௌதி அல் ஜொ ஃபில் அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டிருத்த அன்பு இஸ்மத இன்று ஈன்றவள், இனத்தவர்கள் மனமகிழும் மருத்துவராகி விட்டார். மாஷா அல்லாஹ்!

தந்தையின் தற்பெருமையற்ற நேசத்தையும்,அவரின் தன்னிறைவு தவ்ஹீது பாதையில் சென்ற அடிசுவட்டையும் பின்பற்றும் பண்புள்ள பிள்ளையாகவும்,

உன்னிடம் மருத்துவம் நாடிவரும் ஏழை,எளிய மக்களுக்கு உன்னால் இயன்ற சலுகைமிகு நன்மைகள் செய்து இந்த நானிலம் சிறக்க வாழ்ந்துயர உன் அன்பு ஆதம் சுல்தான் மாமா அன்பொழுகும் இதயத்தால் வாழ்த்துகிறேன்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்,

அன்புடன்,,
முஹம்மது ஆதம் சுல்தான்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. வாழ்த்துக்கள் & பாராட்டுகள்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [23 March 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 39806

மாஷா அல்லாஹ்.

டாக்டர் முஹம்மது இஸ்மத் அவர்களுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள் .

மறைந்த மர்ஹூம் டாக்டர் அபு முஹம்மது சஃபீக் அவர்கள் எல்லோர்களிடமும் மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டவர்கள் . என்னிடமும் தனிப்பட்ட முறையில் மிகுந்த பாசமுடன் பழகியவர்கள் .

இந்த இளம் டாக்டர் , மேலும் மருத்துவத்தில் பல மாஸ்டர் பட்டம் பெற்று நமது ஊர் மக்களுக்கு பயன் பெரும் நல்ல சேவைகளை செய்ய வல்ல நாயன் அருள்புர்வானாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by BAZULHAMEED (DUBAI) [23 March 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39808

Dear Brother Mohamed Ismeth, You've taken on the most incredible, amazing journey becoming a Docto,r following your parents path. Continue to climb and aspire excellence. Feeling proud and happy . Congratulations! Cheers!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...வாழ்த்துக்கள்
posted by ahmed meera thamby (makkah) [23 March 2015]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39812

எல்லா புகழும் வல்ல அல்லாஹுக்கே சொந்தம்

புலிக்கு பிறந்தது பூனையாகாது,எண்ணப்படி வாழ்க்கை அமையும் தம்பி இஸ்மத்!அவர்கள் பெற்றோருடன் 2001 ஆம் வருடம் புனித உம்ராஹ் கடமையை நிறைவேற்ற அபகாவில் இருந்து மக்காஹ் வந்து இருந்தான். என்னுடன் சேர்ந்து தவாப் செய்து முடித்ததும் மாமா காபா கதவில் தூக்கி விடுங்கள் என்றான். அப்ப எனக்கு நல்ல படிப்பை தா என்று அவன் கேட்கும் துவாவை நான் கேட்டேன்(அப்ப நான்காம் வகுப்பு படிப்பதா நினைக்கிறேன்).

வல்லரஹ்மான் அவன் துவாவை கபூல் செய்துள்ளான். இது போல் அவன் எல்லா துவாக்களும் கபூல் ஆகி பெற்றோர்க்கு நல்ல பெயர் எடுக்கும் பிள்ளையாக நல்ல சேவைகள் செய்து காயல்நகருக்கு நல்ல பேர் கிடைக்க எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி செய்வானாக ஆமீன்

வஸ்ஸலாம்

அன்பின் அஹ்மத் மீரா தம்பி
புனித மக்காஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்...
posted by mackie noohuthambi (colombo) [23 March 2015]
IP: 103.*.*.* | Comment Reference Number: 39816

Moderator: கருத்தாளர் கேட்டுக்கொண்டதற்கிணங்க இக்கருத்து தவிர்க்கப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. பாரகல்லாஹ்...!!!
posted by SK Shameemul Islam (Chennai) [24 March 2015]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 39821

பாரகல்லாஹ். உன் உயர்வால் உள்ளம் பூரிக்கிறது. உன் தந்தையின் இழப்பை நினைக்கையில் நெஞ்சு கனக்கிறது. அவர் தொட்டதைத் தொடரும் சேயனாக எல்லாம் வல்ல அல்லாஹ் உன்னை ஆக்கி உன் மீது அருள்புரிவானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by Vilack sma (jeddah) [24 March 2015]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39828

வாழ்க்கையின் பெரும்பகுதியை எங்களின் மத்திய காயல் பகுதிக்கு அர்பணித்த டாக்டர் அபுல் ஹசன் அவர்களின் குடும்பத்தில் புதிதாக ஒரு மருத்துவர் . வாழ்த்துக்கள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by O.A.Nazeer Ahmed (chennai) [25 March 2015]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 39831

very much happy to note our beloved marhoom Dr.Abu mohameds son Mohamed Ismath has become a doctor.. I personally join the happiest enjoyment of the family..

we all know how late Dr.Abu has serviced the society thoughtfully.. Whatever bmay be the time he will visit the house of patient and attend.. We should thankfully remember it..

I congratulate the young chap every success in his profession..

Dear Dr.Ismath remember your beloved father in this great moment and service the mankind as possible as you can..

I am more happy that one more Doctor has emerged from my Jamath.. Thanks for his family members who have given him support to achive this..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by Abdul Hadhi (Al Ruwais jeddah) [25 March 2015]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39837

மாஷா அல்லாஹ்.

டாக்டர் முஹம்மது இஸ்மத் அவர்களுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள் .

அப்துல் ஹாதி . JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...mashaallah
posted by usama (Chennai) [25 March 2015]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 39845

அல்ஹம்துலில்லாஹ்..நமதூரச்சார்ந்த மக்கள் பலர்மருத்துவர்களாக இருக்கின்றனர்,.ஆனால் இலவச மருத்துவ முகாம் கள் நமதூர் மருத்துவர்களால் நடத்தபடுவதில்லை, இரவில் Emergencyக்கு கூட வர மறுக்கிறார்கள்.இதற்கு நீங்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும் இன்ஷாஅல்லாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved