இந்திய அரசின் தொலைதொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிட்டெட் - பி.எஸ்.என்.எல். சார்பில், காயல்பட்டினம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியருகில் - இன்றும், நாளையும் (மார்ச் 24, 25) மெகா மேளா நடைபெறுகிறது.
இந்த மேளாவில், இந்நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘நேசம் கோல்ட்’ திட்டத்தின் கீழான சிம் கார்டு ரூபாய் 20 மதிப்பில் வழங்கப்படுகிறது.
ரூபாய் 750 பொருத்துக் கட்டணம் கொண்ட லேண்ட்லைன் புதிய விண்ணப்பங்கள், ரூபாய் 500 சலுகைக் கட்டணத்தில் பெறப்படுகிறது.
ரூபாய் 250 கட்டணத்தில் வழங்கப்படும் ப்ராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்புகள் எவ்வித கட்டணமுமின்றி இலவசமாக வழங்கப்படவுள்ளன.
மொபைல் நம்பர் போர்ட்டபிளிட்டி திட்டம் மூலம், பிற நிறுவனங்களிலிருந்து பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு மாறும் வசதியும் செய்துகொடுக்கப்படுகிறது.
இத்தகவலை, காயல்பட்டினம் தொலைபேசி நிலைய இணைப் பொறியாளர் நம்பிராஜன் தெரிவித்துள்ளதோடு, பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
பி.எஸ்.என்.எல். மெகா மேளா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |