காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் 36ஆவது விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா நிகழ்ச்சிகள், கடந்த பிப்ரவரி மாதம் 27, 28 (வெள்ளி, சனி) ஆகிய நாட்களில் நடைபெற்றன.
மாணவியர் பிரிவு நிகழ்ச்சிகள்:
மாணவியர் பிரிவு விழா, 27.02.2015 வெள்ளிக்கிழமையன்று 09.30 மணியளவில், எம்.எம்.மைமூன் மர்யம் தலைமையில் நடைபெற்றது. வாவு எம்.எஸ்.மும்தாஜ், எம்.கே.எஸ்.கிதுரு ஃபாத்திமா, ஏ.எல்.பத்தூல், எம்.எஸ்.கிதுரு ஃபாத்திமா, எம்.ஏ.கே.கிதுரு ஃபாத்திமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். துவக்கமாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் மரியா செஸிலி இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்துரையாற்றியதோடு, சாதனை மாணவ-மாணவியருக்கு பரிசுகளையும் வழங்கினார்.
முன்னதாக, 05ஆம் வகுப்பு மாணவர் செய்யித் முஹம்மத் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். ஆசிரியை ஃபாத்திமா ஷாஹின் வரவேற்றுப் பேசினார். தலைமையாசிரியை எம்.ஒய்.செய்யித் ஹஸீனா பள்ளியின் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.
அன்று 17.00 மணியளவில், மாணவ-மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில், 2013-2014 கல்வியாண்டில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் பள்ளியளவில் முதலிடம் பெற்ற மாணவி எம்.ஏ.கே.ஷீபா ஷீரீனுக்கு, 1 கிராம் தங்க நாணயமும், இரண்டாமிடம் பெற்ற எம்.ஏ.இப்றாஹீமா ஸில்மியாவுக்கு ரூபாய் ஆயிரத்து 500 பணப்பரிசும், மூன்றாமிடம் பெற்ற மாணவி வி.எஸ்.எம்.மஷ்கூராவுக்கு ரூபாய் ஆயிரம் பணப்பரிசும் வழங்கப்பட்டது.
அதுபோல, பாடவாரியாக முதலிடங்களைப் பெற்ற மாணவ-மாணவியருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. 2013-2014 கல்வியாண்டின் பள்ளி வேலை நாட்களில் விடுப்பே எடுக்காமல் வருகை தந்து பணியாற்றிய ஆசிரியை செய்யித் அலீ ஃபாத்திமாவுக்கு 1 கிராம் தங்க நாணயம் பரிசு வழங்கப்பட்டது. பள்ளி நிறுவனர் முனைவர் ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப் பரிசுகளை வழங்கினார்.
ஆசிரியை மைமூன் ஆஸியா நன்றி கூற, துஆ - ஸலவாத் - நாட்டுப்பண்ணுடன் விழா நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
மாணவர் பிரிவு நிகழ்ச்சிகள்:
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் 36ஆவது விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா மாணவர் பிரிவு நிகழ்ச்சிகள் 28.02.2015 சனிக்கிழமையன்று 16.30 மணியளவில், பள்ளி நிர்வாகி ஆர்.எஸ்.அப்துல் காதிர் தலைமையில் நடைபெற்றது.
முனைவர் ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப், வி.எஸ்.எஸ்.முஹ்யித்தீன் தம்பி, எம்.எம்.சுல்தான், ஜெஸ்மின் ஏ.கே.கலீல், எம்.ஏ.எஸ்.அபூதல்ஹா, டீ.எம்.ஆர்.மர்ஸூக், எம்.கே.முஹ்யித்தீன் தம்பி துரை, செய்யித் முஹம்மத் ஸாஹிப் ஆகிய பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலாளர் முனைவர் பி.ராமசேகரன் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியதோடு, சாதனை மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.
முன்னதாக, 10ஆம் வகுப்பு மாணவர் ஹாஃபிழ் ஃபரீதுத்தீன் இறைமறை வசனங்களையோதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். ஆசிரியர் பஷீருல்லாஹ் வரவேற்புரையாற்றினார். பள்ளி முதல்வர் டி.ஸ்டீஃபன் பள்ளியின் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். 19.00 மணியளவில் மாணவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
2013-2015 கல்வியாண்டில் பள்ளியளவில் முதல் இரண்டிடங்களைப் பெற்ற மாணவர்களுக்கும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் சிறப்பு விருந்தினரும், மேடையில் அங்கம் வகித்தோரும் பரிசுகளை வழங்கினர்.
ஆசிரியை கோமதி நன்றி கூற, துஆ - ஸலவாத் - நாட்டுப்பண்ணுடன் விழா நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
இரு பிரிவு விழா நிகழ்ச்சிகளிலும், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ-மாணவியர், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
அனைத்து விழா நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளையும் பள்ளி துணைச் செயலாளர் கே.எம்.டீ.சுலைமான் ஒருங்கிணைப்பில் நிர்வாகிகள் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
K.M.T.சுலைமான்
(துணைச் செயலாளர் - முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி)
முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியின் கடந்தாண்டு (2014) விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |