செய்தி: தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் ‘மெகா’ அங்கத்தினர் நகராட்சி நிர்வாகத்திடம் கேள்விகள் அளிப்பு! 238 கேள்விகள் முழு விபரம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தகவல் உரிமை சட்டம் posted bybalasubramanian (chennai)[22 January 2014] IP: 122.*.*.* India | Comment Reference Number: 32642
தோழர்களுக்கு இனிய வணக்கம்
உங்களது முயற்சிக்கு இந்தியன் குரல் அமைப்பின் பாராட்டையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்
தகவல் உரிமை சட்டம் 2012 ஆம் திருத்தம் மற்றும் அதற்க்கு முந்திய சில திருத்தங்களின் அடிப்படியிலும் உச்ச நீதிமன்ற ஆணைகளின் அடிப்படையிலும் சில தகவல்களை உங்களுக்கு தெரிவிக்க கடமைப் பட்டுள்ளேன்
1 தகவல் உரிமை சட்டத்தில் தகவல் மட்டுமே கேட்கலாம் . கேள்வி, கோரிக்கை, புகார், ஆலோசனையாக மனுக்களில் இருக்க கூடாது
2 500 வார்த்தைகள் மிகாமல் விண்ணப்பம் இருத்தல் வேண்டும்
இவைகளை மீறி விண்ணப்பம் இருந்தால் தகவல் தரலாம் தராமலும் இருக்கலாம் அவ்வாறு தகவல் தராத பட்சத்தில் நீங்கள் எடுக்கும் மேல் நடவடிக்கைகள் தோற்கும்
ஆகவே தோழர்களே தகவல் மனுக்களுக்கு பதில் வரவில்லையெனில் நீங்கள் மீண்டும் புதிதாக மேலே குறிப்பிட்டவாறு சரியாக மனுக்களை தயார் செய்து அனுப்பி தகவல் வரவில்லை எனில் அதன் பின் மேல்முறையீடு செய்வதே சிறப்பு
உங்கள் பகுதியில் தகவல் சட்டத்தை முறையாக பயன்படுத்திட உறுப்பினர்களுக்கு உரிய பயிற்சி அளிப்பதுடன் இந்த சட்டத்தை எப்படி பயன்படுத்துவது
தகவல் சட்டத்தைப் பயன்படுத்தி தனி மனிதன் இலஞ்சம் கொடுக்காமல் அரசுப் பயன்களைப் பெறுவது எப்படி போன்ற பயிற்சிகளை தகவல் உரிமை சட்டம் நன்கு அறிந்தவர்கள் மூலம் பயிற்சி அளித்தீர்கள் என்றால் அதைவிட மிகச் சிறப்பான பனி என்று வேறு ஒன்றும் இருக்காது
உதவிக்கும் சந்தேகங்களுக்கும் இந்தியன் குரல் இலவச உதவி மையங்களை தொடர்பு கொள்ளலாம்
மகிழ்வுடன்
பாலசுப்ரமணியன்
9444305581
இந்தியன் குரல்
தகவல் சட்டத்தைப் பரப்புரை செய்வதும் பயிற்சி அளிப்பதும் சட்டத்தைப் பாதுகாப்பதும் - இந்தியன் குரல் நோக்கம்
நன்கொடை பெறுவதில்லை, அமைப்பில் உறுப்பினர் சந்தா வசூலிப்பதும் இல்லை பயிற்சி மற்றும் எந்த உதவிக்கும் சேவைக்கும் கட்டணம் வாங்குவதில்லை - இது இந்தியன் குரல் கொள்கை
சாதனை ;
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 10000 க்கும் மேற்ப்பட்ட மாணவர்களுக்கு கல்விக்கடன் பெற வழி காட்டியுள்ளோம். கல்விக்கடன் குறித்து முக்கிய தினசரி பத்திரிகைகள் வார இதழ்களில் இந்தியன் குரல் கல்விக்கடன் உதவி குறித்த செய்திகளை வெளியிட்டுள்ளன
1.5 இலட்சத்திற்கும் மேற்ப்பட்ட பல்வேறு வகையான பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் புகார்கள் மீது தீர்வு செய்யாத, காலதாமதம் செய்யப்பட்ட மனுக்கள் தீர்வு காண உதவி செய்துள்ளோம்
கடமையை செய்ய லஞ்சம் கேட்ட, போலி ஆவணங்கள் மூலம் பதவி மற்றும் பதவி உயர்வு பெற்ற அலுவலர்கள் கைது செய்ய நடவடிக்கை உதவி
உயர் அலுவலர்களால் நேர்மையாக செயல்பட்ட அலுவலர்களின் தண்டனை, பணப்பயன் நிவாரணம் பெற உதவி செய்துள்ளோம்
10000 இக்கும் மேற்ப்பட்ட முதியோர் மற்றும் திருமண உதவி கிடைத்திட உதவி
கல்விக்கடன், அநியாயமாக இழந்த சொத்துக்கள், பட்டா, சிட்டா, பட்டா பெயர் மாற்றம், குடும அட்டை, மின் இணைப்பு, ஓய்வுகாலப் பணப்பயன்கள், உயர் அலுவலர்கள் பழிவாங்கல், தேவையற்ற இடமாறுதல், ஊழல் கனிமத் திருட்டு போன்ற எல்லாவற்றுக்கும்
சுய மரியாதையை இழக்காமல் அலைந்து திரியாமல் இடைத் தரகர்களை நம்பி ஏமாறாமல் யாருக்கும் இலஞ்சம் தராமல் இருந்த இடத்தில் இருந்தே ஒரு மனு மூலம் தீர்வு பெற தகவல் உரிமைச் சட்டம் 2005 இருக்கு
எப்படி யாருக்கு எழுதுவது தெரியவில்லையா கவலை வேண்டாம் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள இந்தியன் குரல் இலவச உதவி மையம் வரலாம் மனுக்களை எழுதவும் பயிற்சி பெறவும் இலவசமாக உதவி பெறலாம்
இதுபோன்று இன்னும் பல உங்கள் தேவைக்கும் உதவிக்கும் தொடர்புகொள்ளுங்கள்
இந்த சமுதாயம் என்னை வளர்த்தது கல்வி கொடுத்தது வாய்ப்பும் வசதியும் வாழ்வும் கொடுத்தது. இந்த சமுதாயத்தில் இருந்து நான் பெற்ற கடனை திரும்ப செலுத்த துவங்கி விட்டேன் நான் இறப்பதற்கு முன் முழு கடனையும் திரும்ப அடைத்திடல் வேண்டும் என்பதே எனது நோக்கம் ஆகும் - பாலசுப்ரமணியன்
நல்லவிசயம் நாலு பேருக்கும் தெரியட்டுமே இணைப்பை சொடுக்கி ஒரே ஒரு லைக் கொடுங்கள் நன்மக்களே!
www.facebook.com/myvoiceofindianorg
www.voiceofindian.org
www.vitrustu.blogspot.com
VOICE OF INDIAN
(0) 91 9443489976(M.Sivaraj)
(0) 91 9444305581(E.Balasubramanian)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross