Re:இன்று மாலை ஐக்கியப் பேரவை... posted byMakie Noohu Thamby. (Kayalpatnam.)[10 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10196
உள்ளாட்சி தேர்தல் களத்தில் ஐக்கியப் பேரவையின் பின்னடைவுகள்
ஐக்கியப் பேரவை உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கி ஊராட்சித் தலைவர் வார்டு உறுப்பினர்களைப் போட்டியின்றித் தேர்வு செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் செயல்பட ஆரம்பித்த போது ஊர் மக்கள் எல்லோரும் எல்லா இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் எல்லா ஜமாஅத்தார்களும் பொதுநல அமைப்புக்களும் மிக உற்சாகத்துடனும் உவகையுடனும் அவர்களை இருகரம் நீட்டி வரவேற்றார்கள்.
விநாசகாலே விபரீத புத்தி என்ற பழமொழி போல் யார் கண் பட்டதோ பேரவையின் இலக்கு திசைமாறிச் செல்ல ஆரம்பித்தது.
ஆலோசனைக்கூட்டம் என்று ஆரம்பித்து சில மணி நேரங்களில் ஒரு பெரிய தீர்மானம் என்ற பட்டியலே வெளியிடப்பட்டது.
ஒவ்வொரு ஜமாஅத்திலும் இருவர் பொது நல அமைப்பில் ஒருவர் கூடவே நாங்கள் தன்னிச்சையாகத் தேர்ந்தெடுக்கும் 25 பேர் ஆகியோர் வேட்பாளர்களை முடிவு செய்வார்கள் என்று அறிவித்தார்கள்.
இங்கே தான் ஆட்சேபனைகள் ஆரம்பமானது. இறுதியில் அரசு செய்த சதியோ – அது சரியோ தவறோ நமது ஊர்த்தலைவர் பதவிக்கு ஒரு பெண் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற அரசானை வெளியானபோது, 35 பேர் – 36 பேர் களத்தில் நிற்க மக்கள் அவரவர்கள் விருப்பப்படி ஆட்கள் பெயரை வெளியிட்ட அந்த ஆசையிலே மண்விழுந்தது.
இப்போது பெண்கள் யார் யார் களத்தில் இறங்குகிறார்கள் என்று தேடிய போது ஒரு சிலரே அந்தப் பொறுப்புக்குத் தகுதியானவர்களாக அடையாளம் காணப்பட்டார்கள்.
இந்த நிலையில் ஒருங்கிணைப்புக் கமிட்டி என்றும் மெகா என்றும் ஐஐம் என்றும் தகுதியான தலைவர், உறுப்பினர்களைக் கண்டறிய புதிதாக 3 இயக்கங்கள் களம் இறங்கின. போட்டி இப்போது திசை திரும்பியது. ஐக்கியப் பேரவை மீது என்ன காட்டமோ, முன்பின் தாக்கமோ ஐக்கியப் பேரவையின் தீர்மானமோ என்ன காரணத்தினாலோ தலைவர் தேர்வு மட்டுமே முக்கியம் என்ற நிலைக்கு வந்தது. வார்டு உறுப்பினர்கள் தேர்வு போட்டி மயமானது.
எல்லோரது கண்களும் தலைவர் தேர்தல் பக்கம் இப்போது திரும்பியது. வஹீதா என்ற சகோதரி முதன்முதலாக தனது விருப்பமனுவை எல்லா ஜமாஅத்களுக்கும் ஐக்கியப் பேரவைக்கும் சமர்ப்பித்தார்கள். பின்பு படிப்படியாக சகோதரிகள் களம் இறங்கினார்கள்.
இப்போது ஐக்கியப் பேரவையின் அழைப்பின் பேரில் ஒவ்வொரு ஜமாஅத்திலிருந்து 2 பேர், பொதுநல அமைப்பிலிருந்து ஒருவர் அழைக்கப்பட்டனர். இரவு 8:30 மணிக்கு கூடிய கூட்டம். அவர்கள் கையிலே 4 பேர் போட்டியிலிருப்பதாகச் சொல்லி அவரவர்கள் Profiles தன்னிலை விளக்க மனுக்கள் கொடுக்கப்பட்டன.
தேர்தல் நடந்தது. 40 பேர் மிஸ்ரியா அவர்களையும், 16 பேர் வஹீதா அவர்களையும் தேர்ந்தெடுத்திருப்பதால் 24 அதிகப்படி வாக்குகளினால் மிஸ்ரியா அவர்கள் ஐக்கியப் பேரவையின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிப்பு வெளிவந்தது.
இங்குதான் மக்களின் சந்தேக நிழல் ஐக்கியப் பேரவையின் மீது விழ ஆரம்பித்தது. வந்திருந்த ஜமாஅத்தின் பிரதிநிதிகளுக்கு இந்த 4 வேட்பாளர்களில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்று அவரவர்கள் ஜமாஅத்தைக் கூட்டிக் கேட்டு வரும்படி ஐக்கியப் பேரவை பணித்து அவகாசம் அளிக்கவுமில்லை. அங்கு சென்றிருந்த ஜமாஅத்தின் 2 நபர்கள் பொதுநல அமைப்பின் 1வர் இந்த 3 மூவர் நாங்கள் ஜமாஅத்தின் கருத்தை அறிந்து வருகிறோம் என்று வெளியே வந்த ஜமாஅத்களைக் கூட்டி அவசர ஆலோசனை செய்யவுமில்லை.
இது ஒரு புறமிருக்க, ஐக்கிய பேரவையின் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்ட சகோதரி மிஸ்ரிய்யா அவர்களின் தாயார் நஃபீஸதுத் தாஹிரா அவர்கள் மிஸ்ரியாவை எதிர்த்து தலைவர் தேர்வுக்கு வேட்பு மனுதாக்கல் செய்த அதிசயம் நடந்தது. ஒரே வீட்டில் தாயும் மகளும் அதுவும் ஐக்கியப் பேரவை தனது வேட்பாளரை அறிவித்த பிறகு விருப்ப மனு தாக்கல் செய்து ஐக்கியப் பேரவையின் செயல்பாட்டைக் கொச்சைபடுத்தினார்கள். சந்தேகங்கள் இன்னும் வலுவானது. “உங்களது ஒவ்வொரு தவறும் எதிரணியை உத்தமர்களாகக் காட்டி விடும்” என்ற பழமொழிக்கு ஐக்கியப் பேரவை ஆட்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு பள்ளிவாசலிலும் ஐக்கியப் பேரவை வேட்பாளரின் நோட்டீஸ்கள் தொங்கவிடப்பட்டன. ஜனநாயக முறையில் எதிர்த்து நிற்பவர்களின் நோட்டீஸ்கள் புறந்தள்ளப்பட்டன. இந்த நிகழ்வு இன்னும் ஐக்கியப் பேரவையின் நிலைப்பாட்டை பின் தள்ளியது.
இத்தனை பின்னடைவுகளையும் அசைபோட்டுப்பார்க்கும் வாக்காளப் பெருமக்கள் இப்போது யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் mega தன்னிலை விளக்கம் அளித்து. மனசாட்சிப்படி வாக்களிக்க அழைப்பு விடுத்து தன்னை கழற்றிக் கொண்டது. ஒருங்கிணைப்புக் கமிட்டி எங்கோ சங்கமமாகிவிட்டது. களத்தில் IIM மட்டும் மீதி உள்ளது. அவர்கள் நிலைப்பாடு இன்னும் வெளிவரவில்லை. இந்த சதுரங்க ஆட்டத்தில் அவர்கள் எந்த “ராணி”க்கு ”CHECK” வைக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நகர்மன்றத் தலைவியாக யார்வந்தாலும் அவர்கள் இனிமேல் எல்லாப் பேதங்களையும் மறந்து ஊரின் ஒட்டுமொத்த 45 ஆயிரம் மக்களுக்கும் உழைக்கும் தலைவியாக மாறிவிடவேண்டும். அப்படி நடுநிலை தவறி நீங்கள் செயல்பட ஆரம்பித்தால் 5 வருடத்திற்குள் உங்களைத் திரும்ப அழைத்துக் கொள்ள மக்கள் அணிதிரள்வார்கள்.
முந்தைய நகர் மன்றம் போல் இந்த நகர் மன்றம் இருக்காது. விழிப்புணர்வு அதிகமாகிவிட்டது. மக்கள் விழிப்புடன் உங்;களைக் கண்காணிப்பார்கள் என்பதை நினைத்து செயல்படுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக அல்லாஹ் என்னைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்ற அச்ச உணர்வு தலைவருக்கும், ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஏற்பட்டால் இன்ஷா அல்லாஹ் இந்த ஊருக்குத் தேவையான எல்லா வசதிகளையும் நலத்திட்டங்களையும் பெற்றுத்தந்திட அந்த அல்லாஹ்வே நமதுக்கு துணை நிற்பான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross