இன்று (அக்டோபர் 10) மாலை 7 மணி அளவில் - வள்ளல் சீதக்காதி திடலில் நகர்மன்றத் தலைமை பொறுப்புக்கு போட்டியிடும் வேட்பாளர் L.S.M.முத்து மைமூனத்துல் மிஸ்ரிய்யாவை அறிமுகம் செய்யும் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் மார்க்க அறிஞர்கள், நகரப் பிரமுகர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பலர் கலந்துக்கொள்ளவுள்ளதாக காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை அறிவிப்பு தெரிவிக்கிறது.
1. Re:இன்று மாலை ஐக்கியப் பேரவை... posted byK.D.N.MOHAMED LEBBAI (JEDDAH)[10 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10151
அஸ்ஸலாமு அல்லைக்கும்
இது நல்ல தோர் ஏற்பாடு . உங்கள் எல்லா முயற்சியும் அல்லாஹ் வெற்றி யாக்கி அருள் வானாக ஆமீன். நீங்கள் இந்த ஏற்பாடை மூன் கூடியே வைத்து இருக்கலாமே .சரி ஹைர்.எல்லாம் நன்மை யாக அமையும் .
ஐகியா பேர் அவை நம் ஊரு காக செயல் படும் காரியகளுகாக வெளிநாட்டு காயல் வாசிகள் நெசசயம்மாக முழு சப்போடகத்தான் இருப்பார்கள் .உங்கள் எல்லா செயல் பாடு முழுமை அடைய வாழ்த்துகள் .
2. Re:இன்று மாலை ஐக்கியப் பேரவை... posted byS.A.Muhammad Ali (Dubai)[10 October 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10153
Dear Candidates,
Don’t let your victories go to your head, or your failures go to your heart.
The mind is like a parachute. It doesn’t work unless it’s open.
Please don't blame each other. Just let the candidates explain to the people what they will do if they win.
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ‘தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியாமல் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத்தர) நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் பொய் பேசுவதைக் கைவிட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை(ப் பெற்றுத்தர) நான் பொறுப்பேற்கின்றேன். தன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்) பொறுப்பேற்கின்றேன்.’
அறிவிப்பாளர் : அபூஉமாமா رَضِيَ اللَّهُ عَنْهُ
(அபூதாவூத்)
3. கண் கெட்ட பிறகு...... posted byசொளுக்கு M.A.C.முஹம்மது நூகு (சென்னை)[10 October 2011] IP: 113.*.*.* India | Comment Reference Number: 10166
அஸ்ஸலாமு அலைக்கும், காலம் தாழ்ந்து எது நடைபெற்றாலும் அது யாருக்கும் பயன் தராது. இந்த ஏற்பாட்டை நீங்கள் ஆரம்பத்திலேயே செய்து இருக்கலாம். ஒரே ஒரு பொது வேட்பாளர் தான் நிற்க வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது என்றே நினைக்கிறேன் ஆனால் ஐக்கிய பேரவையின் செயல்பாடுதான் யாருக்கும் பிடிக்காமல் போய் விட்டது.
அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே வெளிப்படையாக நடந்து இருக்ககலாம். ஐக்கிய சபை என்பது பொதுமக்களிம் சபையாக இருக்க வேண்டும் என்றால் அவர்கள் அந்த சபையில் பொது மக்களையும் இணைத்து செயல்பட வேண்டும். பொது மக்களின் கருத்துக்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஐக்கிய சபையை கலைத்து விட்டு அதற்கு முதலில் தேர்தல் நடத்தி (பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்) அதற்கு பிறகு பொது வேட்பாளரை நிறுத்தினால் அனைவரும் கட்டாயமாக ஐக்கிய சபைக்கு கட்டுப்படுவார்கள்.
ஐக்கிய சபையே வேண்டாம் என்று யாரும் சொல்ல வில்லை ஐக்கிய சபை சில தவறான முடிவு எடுப்பவர்களின் கோட்டையாக மாறிவிடக்கூடாதென்று தான் மக்கள் நினக்கிறார்கள். தவறை இனியாவது ஐக்கிய சபை திருத்திக்கொள்ளுமா? அல்லது அதிலும் கொளரவம் பார்க்குமா? பொது மக்கள் சிந்தித்து செயல்படுவார்கள்
இதில் ஐக்கிய சபை கவலைப்பட வேண்டாம், பயப்பட வேண்டாம். இன்னும் வெளிப்படையாக மக்களிடம் நெருங்கி வாருங்கள் உங்களிடம் உண்மை இருந்தால் அல்லாஹ் கட்டாயமாக மக்களின் இதயத்தில் உங்களுக்கும் உங்களின் வேட்பாளருக்கும் ஒரு இடம் தந்து உங்களை வெற்றியடைச் செய்வான்.
தயவு செய்து சகோதரி மிஸ்ரியா அவர்களின் மனதை காயப்படுத்தி்விடாதீர்கள் அவர்கள் உங்களை நம்பி தேர்தல் என்னும் ஆற்றில் இறங்கி உள்ளார்கள். ஊழலற்ற ஆட்சி வேண்டும் என்று ஆசைப்படுபவர்களே முதலில் நீங்கள் தூய்மையாக நடந்து கொள்ளுங்கள். பணத்தை கொள்ளையடிப்பது மட்டும் ஊழல் இல்லை பிறரின் உரிமையை பறிப்பதும் , பிறரின் வெற்றியை பறிப்பதும், சுய நலத்திற்காக பொது மக்களை பயன்படுத்துவதும் ஊழல் தான்.
ஐய்யகோ... பேரவையே...! கைப் புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?
“ஆபிதா எனும் ஆதவன் உதித்தபின் இம் மண்ணில் மலரப்போகும் பலன் பூக்கள் பல்லாயிரம்...!அச் சுடரொளியின் சூடேற்று கருகிக் காணாமல் போகும் சில புல்லுருவிகளின் புதர்க் கூட்டம். தாய் எனத் தட்டிக்கொடுப்பாள்! தீமையைத் தட்டிக் கேட்பாள்! அநீதியை வெட்டியெறிவாள்! மழலைக்கு மதி ஊட்டும் மாதல்லவா அவள்! இம் மாமன்றத்தின் அகழ் விளக்காய் ஒளி வீசுவாள்!நல் வழி காட்டுவாள்!”
5. Re:இன்று மாலை ஐக்கியப் பேரவை... posted byfathima (kayalpatnam)[10 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 10176
மிகவும் அருமை மிகவும் ஆவலாக இருக்கிறோம் எப்படி பேச போகிறார் என்று. திருமதி ஆபிதா அவர்கள் வந்து இருக்கும் நேரத்தில் இவைகளும் வந்து இருக்கலாம்... கூட்டாக சேர்ந்து இருப்பது பிடிக்காது போலும்... பாவம் கீ கொடுக்கும் பொம்மை போலா ஆகிவிட்டார்கள்..
6. Re:இன்று மாலை ஐக்கியப் பேரவை... posted byMeera Sahib (kayalpatnam)[10 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10178
தனியாக வேட்பாளர் அறிமுக கூட்டம்!
தவறு எங்கே இருக்கிறது என்பது புரிகிறதா?
மெகாவா - ஐக்கிய பேரவையா? இதுதான் இன்றைய போட்டி !
மிஸ்ரியவுக்கும் ஆபிதவுக்கும் இடையில் போட்டி இல்லை !
வெல்வது யாராக இருந்தாலும் வீழ்வது நாமும் நமது சமுதாயமும்தான்.
நம் ஊர் so called ஒற்றுமைக்கு நன்றி - நமது so called ஐக்கியத்துக்கு நன்றி
7. To Sister ஆபிதா & சிஸ்டர் Misiryaa posted byMohamed Nizam (INDIA)[10 October 2011] IP: 223.*.*.* India | Comment Reference Number: 10181
Sister ஆபிதா & சிஸ்டர் Misiryaa
Thanks for your campaign.
I want to bring to your attention one important issue which arise in every kayalite's mind. Neither you nor anyother candidate has clearly mentinoed this issue in the manifesto. It is nothing but environmental issue. I want your clear and detailed answers for the following questions on environmental issues. Also i would appreciate if you publish in kayal net.
1) DCW factory is exhausting toxic gases into atmosphere by which numerous cancer deaths are witnessed in kayalpatnam.
My question what is your strategy in detail to prevent this atrocity?
2) Due to selfishness of some local people, mobile towers are installed in inhabitant area which definitely causes radiation serves main reason for terminal diseases. What is your action to relocate these towers to remote area?
3) Palm trees along Tiruchendur road are systematically eliminated by Real estate mafia. Allah has created this nature as a protection against Tsunami and radiation.
What is your steps to prevent this destruction of nature?
9. Re:இன்று மாலை ஐக்கியப் பேரவை... posted byMakie Noohu Thamby. (Kayalpatnam.)[10 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10196
உள்ளாட்சி தேர்தல் களத்தில் ஐக்கியப் பேரவையின் பின்னடைவுகள்
ஐக்கியப் பேரவை உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கி ஊராட்சித் தலைவர் வார்டு உறுப்பினர்களைப் போட்டியின்றித் தேர்வு செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் செயல்பட ஆரம்பித்த போது ஊர் மக்கள் எல்லோரும் எல்லா இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் எல்லா ஜமாஅத்தார்களும் பொதுநல அமைப்புக்களும் மிக உற்சாகத்துடனும் உவகையுடனும் அவர்களை இருகரம் நீட்டி வரவேற்றார்கள்.
விநாசகாலே விபரீத புத்தி என்ற பழமொழி போல் யார் கண் பட்டதோ பேரவையின் இலக்கு திசைமாறிச் செல்ல ஆரம்பித்தது.
ஆலோசனைக்கூட்டம் என்று ஆரம்பித்து சில மணி நேரங்களில் ஒரு பெரிய தீர்மானம் என்ற பட்டியலே வெளியிடப்பட்டது.
ஒவ்வொரு ஜமாஅத்திலும் இருவர் பொது நல அமைப்பில் ஒருவர் கூடவே நாங்கள் தன்னிச்சையாகத் தேர்ந்தெடுக்கும் 25 பேர் ஆகியோர் வேட்பாளர்களை முடிவு செய்வார்கள் என்று அறிவித்தார்கள்.
இங்கே தான் ஆட்சேபனைகள் ஆரம்பமானது. இறுதியில் அரசு செய்த சதியோ – அது சரியோ தவறோ நமது ஊர்த்தலைவர் பதவிக்கு ஒரு பெண் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற அரசானை வெளியானபோது, 35 பேர் – 36 பேர் களத்தில் நிற்க மக்கள் அவரவர்கள் விருப்பப்படி ஆட்கள் பெயரை வெளியிட்ட அந்த ஆசையிலே மண்விழுந்தது.
இப்போது பெண்கள் யார் யார் களத்தில் இறங்குகிறார்கள் என்று தேடிய போது ஒரு சிலரே அந்தப் பொறுப்புக்குத் தகுதியானவர்களாக அடையாளம் காணப்பட்டார்கள்.
இந்த நிலையில் ஒருங்கிணைப்புக் கமிட்டி என்றும் மெகா என்றும் ஐஐம் என்றும் தகுதியான தலைவர், உறுப்பினர்களைக் கண்டறிய புதிதாக 3 இயக்கங்கள் களம் இறங்கின. போட்டி இப்போது திசை திரும்பியது. ஐக்கியப் பேரவை மீது என்ன காட்டமோ, முன்பின் தாக்கமோ ஐக்கியப் பேரவையின் தீர்மானமோ என்ன காரணத்தினாலோ தலைவர் தேர்வு மட்டுமே முக்கியம் என்ற நிலைக்கு வந்தது. வார்டு உறுப்பினர்கள் தேர்வு போட்டி மயமானது.
எல்லோரது கண்களும் தலைவர் தேர்தல் பக்கம் இப்போது திரும்பியது. வஹீதா என்ற சகோதரி முதன்முதலாக தனது விருப்பமனுவை எல்லா ஜமாஅத்களுக்கும் ஐக்கியப் பேரவைக்கும் சமர்ப்பித்தார்கள். பின்பு படிப்படியாக சகோதரிகள் களம் இறங்கினார்கள்.
இப்போது ஐக்கியப் பேரவையின் அழைப்பின் பேரில் ஒவ்வொரு ஜமாஅத்திலிருந்து 2 பேர், பொதுநல அமைப்பிலிருந்து ஒருவர் அழைக்கப்பட்டனர். இரவு 8:30 மணிக்கு கூடிய கூட்டம். அவர்கள் கையிலே 4 பேர் போட்டியிலிருப்பதாகச் சொல்லி அவரவர்கள் Profiles தன்னிலை விளக்க மனுக்கள் கொடுக்கப்பட்டன.
தேர்தல் நடந்தது. 40 பேர் மிஸ்ரியா அவர்களையும், 16 பேர் வஹீதா அவர்களையும் தேர்ந்தெடுத்திருப்பதால் 24 அதிகப்படி வாக்குகளினால் மிஸ்ரியா அவர்கள் ஐக்கியப் பேரவையின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிப்பு வெளிவந்தது.
இங்குதான் மக்களின் சந்தேக நிழல் ஐக்கியப் பேரவையின் மீது விழ ஆரம்பித்தது. வந்திருந்த ஜமாஅத்தின் பிரதிநிதிகளுக்கு இந்த 4 வேட்பாளர்களில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்று அவரவர்கள் ஜமாஅத்தைக் கூட்டிக் கேட்டு வரும்படி ஐக்கியப் பேரவை பணித்து அவகாசம் அளிக்கவுமில்லை. அங்கு சென்றிருந்த ஜமாஅத்தின் 2 நபர்கள் பொதுநல அமைப்பின் 1வர் இந்த 3 மூவர் நாங்கள் ஜமாஅத்தின் கருத்தை அறிந்து வருகிறோம் என்று வெளியே வந்த ஜமாஅத்களைக் கூட்டி அவசர ஆலோசனை செய்யவுமில்லை.
இது ஒரு புறமிருக்க, ஐக்கிய பேரவையின் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்ட சகோதரி மிஸ்ரிய்யா அவர்களின் தாயார் நஃபீஸதுத் தாஹிரா அவர்கள் மிஸ்ரியாவை எதிர்த்து தலைவர் தேர்வுக்கு வேட்பு மனுதாக்கல் செய்த அதிசயம் நடந்தது. ஒரே வீட்டில் தாயும் மகளும் அதுவும் ஐக்கியப் பேரவை தனது வேட்பாளரை அறிவித்த பிறகு விருப்ப மனு தாக்கல் செய்து ஐக்கியப் பேரவையின் செயல்பாட்டைக் கொச்சைபடுத்தினார்கள். சந்தேகங்கள் இன்னும் வலுவானது. “உங்களது ஒவ்வொரு தவறும் எதிரணியை உத்தமர்களாகக் காட்டி விடும்” என்ற பழமொழிக்கு ஐக்கியப் பேரவை ஆட்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு பள்ளிவாசலிலும் ஐக்கியப் பேரவை வேட்பாளரின் நோட்டீஸ்கள் தொங்கவிடப்பட்டன. ஜனநாயக முறையில் எதிர்த்து நிற்பவர்களின் நோட்டீஸ்கள் புறந்தள்ளப்பட்டன. இந்த நிகழ்வு இன்னும் ஐக்கியப் பேரவையின் நிலைப்பாட்டை பின் தள்ளியது.
இத்தனை பின்னடைவுகளையும் அசைபோட்டுப்பார்க்கும் வாக்காளப் பெருமக்கள் இப்போது யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் mega தன்னிலை விளக்கம் அளித்து. மனசாட்சிப்படி வாக்களிக்க அழைப்பு விடுத்து தன்னை கழற்றிக் கொண்டது. ஒருங்கிணைப்புக் கமிட்டி எங்கோ சங்கமமாகிவிட்டது. களத்தில் IIM மட்டும் மீதி உள்ளது. அவர்கள் நிலைப்பாடு இன்னும் வெளிவரவில்லை. இந்த சதுரங்க ஆட்டத்தில் அவர்கள் எந்த “ராணி”க்கு ”CHECK” வைக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நகர்மன்றத் தலைவியாக யார்வந்தாலும் அவர்கள் இனிமேல் எல்லாப் பேதங்களையும் மறந்து ஊரின் ஒட்டுமொத்த 45 ஆயிரம் மக்களுக்கும் உழைக்கும் தலைவியாக மாறிவிடவேண்டும். அப்படி நடுநிலை தவறி நீங்கள் செயல்பட ஆரம்பித்தால் 5 வருடத்திற்குள் உங்களைத் திரும்ப அழைத்துக் கொள்ள மக்கள் அணிதிரள்வார்கள்.
முந்தைய நகர் மன்றம் போல் இந்த நகர் மன்றம் இருக்காது. விழிப்புணர்வு அதிகமாகிவிட்டது. மக்கள் விழிப்புடன் உங்;களைக் கண்காணிப்பார்கள் என்பதை நினைத்து செயல்படுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக அல்லாஹ் என்னைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்ற அச்ச உணர்வு தலைவருக்கும், ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஏற்பட்டால் இன்ஷா அல்லாஹ் இந்த ஊருக்குத் தேவையான எல்லா வசதிகளையும் நலத்திட்டங்களையும் பெற்றுத்தந்திட அந்த அல்லாஹ்வே நமதுக்கு துணை நிற்பான்.
10. Re:இன்று மாலை ஐக்கியப் பேரவை... posted byjafarullah (soudi arbia(madinah))[10 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10214
இது தேவைஇல்லாத ஒரு ஏற்பாடு. இதுவரைக்கும் சகோதரி மிஸ்ரியா அவர்கள் தேர்தல் வாக்குறுதி அளிதுள்ளர்களா? சகோதரி ஆபிதா அவர்கள் தந்த வாக்குறுதிபோல் இவர்களும் தந்து இருக்கலாமே. இதுவரை அவர்கள் வாக்கு கேட்க கூட செல்லவில்லை. பொருது இருந்து பார்ப்போம். புத்தகமா? பஸ் ?
ஐக்கியபேரவை கனவு பலிக்கும? புளிக்குமா? என்று.அணைத்து சமுதாய மக்களும் நல்ல சிந்தனை உணர்வோடு வாக்களிக்கவும்..உங்கள் ஓட்டு புத்தகம் சின்னத்தில் மறக்காம போடுங்க.
மெகா பச்சை வந்தி போல அங்கயும் இங்கயும் மாறுகிறது
யாரு எப்படி போனாலும் , அபிதா லாத்தா உக்கு தான்
வெற்றி , பொருத்து இருந்து பார்க்கலாம்,
வெற்றி பெற்ற உடன் அரசியல் வாதி போல நடத்து விடாதீர்கள் , உங்களுடைய மனசாட்சிகு பயந்து செயல் படுங்கள் ,
ஊரில் உண்மையை நாடுங்கள் , பணபலத்தோடு வருபவர்களை அடியோடு ஒலித்து விடுங்கள் ,
வெற்றி உங்களுகே (அபிதா அவர்களுக்கு)
தோற்று போகிறவர்கள் வெறி கொண்டு வரு பார்கள்
பொறுமையாக செல் வது அவசியம் ,
பேரவைகு ,
தானாக முடிவு எடுக்க வேண்டும் , ஒருவர் சைவத்தை காபி பண்ணு வந்து அழகு அல்ல
13. Re:இன்று மாலை ஐக்கியப் பேரவை... posted bykudack buhari (doha-qatar)[10 October 2011] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 10221
நண்பர் Mohamed Cnash (Makkah )
copy & paste பண்ணுவதில் ரொம்பவே கில்லாடி தான்,
இப்பவும் சொல்கிறேன் இதை யார் செய்தாலும் தவறு தான்,இதில் எனக்கு மாற்று கருத்து இல்லை,ஆடு நனையுதுனு ஓநாய் அழுததாம்,பொருத்து இருந்து பார்போம்,
15. கடலில் கலக்கப்பட்ட கச்சா எண்ணெயை போல..... posted byzubair (riyadh)[10 October 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10235
அஸ்ஸலாமு அலைக்கும். என் இனிய காயல் சகோதரர்களே......
ஊர் ஒற்றுமையை கருத்தில் கொண்டு நம் ஐக்கிய பேரவையின் வழிகாட்டலுடன் இன்ஷா அல்லாஹ் நாம் இனி உள்ள காலம்களை தக்வாவுடனும், சகோதரத்துவத்துடனும், சபூருடனும், நிம்மதியாக கழிக்க நம் பெரியோர்கள் காட்டித்தந்த முன்,பின் மாறுபடாத விழியை பேணி ஈமான் சலாமத்துடன் மரணம் எய்திட இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.
இங்கு சில நண்பர்கள் ஒற்றுமையை குழி தோண்டி புதைக்கும் வன்னமும், தானும் நிம்மதி இல்லாமல், மொத்த காயல் வாசிகளையும் நிம்மதி இல்லாமல் ஆக்குவதுடன் ஒரு மாயையை (ஊரை திருப்பி போடப்போறோம் என்ற) உண்டாக்குகிறார்கள் இவைகள் எல்லாம் கடலில் கலக்கப்பட்ட கச்சா எண்ணெயை போலவே நாங்கள் (ஒற்றுமை விரும்பிகள்) கருதுகிறோம். கடலின் ஒரு சிறு ஆட்டத்திற்கு கச்சா எண்ணெய்கள் கரை கண்டுவிடும். வஸ்ஸலாம்.
16. Re:இன்று மாலை ஐக்கியப் பேரவை... posted byFuad (Singapore)[11 October 2011] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 10239
அஸ்ஸலாமு அலைக்கும். ஐக்கியப்பேரவையின் சார்பில் சகோதரி மிஸ்ரிய்யாவை வேட்பாளர் அறிமுகம் நடந்து முடிந்திருக்கும். கண்ணியத்திற்குரிய காயல் மாநகர வாகளர்களே உங்களின் வாக்குகளை ஐக்கியப்பேரவை, அனைத்து ஜமாஅத்துகள் மற்றும் பொதுநல அமைப்புகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க அன்போடு வேண்டுகிறேன்.
இதுவரையில் நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பது நல்லவையாக நடக்கட்டும். அன்பான சகோதரர்களே நம்மில் நிறைய பேர் ஐக்கியப்பேரவையின் செயல்பாடுகளை குறை கூறி கருத்து தெரிவித்திருந்தோம். தேர்தல் நேரத்தில் தான் நாமும் நம்மை ஐக்கியப்பேரவையும் நினைத்துப்பார்கிறோம். அதனால், தேர்தல் முடிந்தவுடன் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள் ஒன்றுகூடி ஒரு துடிப்பான, வெளிப்படையான ஐக்கியப்பேரவையை உருவாக்க முயற்சி செய்தால் நமது ஊரிலுள்ள நிறைய அனுபவசாலிகள் தங்களை ஐக்கியப்பேர்வையில் இணைத்துக்கொள்ள வாயிப்புள்ளது.
ஆகவே, இந்த விஷயத்தில் அனைத்து ஜமாஅத்துகள் மற்றும் பொதுநல அமைப்புகள் ஒன்றுகூடி ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டுகிறேன். வஸ்ஸலாம்.
18. Re:இன்று மாலை ஐக்கியப் பேரவை... posted byசொளுக்கு M.A.C.முஹம்மது நூகு (சென்னை)[11 October 2011] IP: 113.*.*.* India | Comment Reference Number: 10251
மெகா கூட்டம் நடத்திய பிறகு ஐக்கிய ஜமாத்தும் கூட்டம் நடத்த வேண்டிய ஒரு கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.அவர்களின் பிரச்சாரத்திற்கு கூட்டம் அதிகமா? அல்லது இவர்களின் பிரச்சாரத்திற்கு கூட்டம் அதிகமா? இன்னும் ஐக்கிய சபையின் பொது கூட்ட புகைப்படங்கள் வெளிவரவில்லையே அதிலும் சென்சார், செய்துதான் அவர்கள் வெளியிடுவார்களா. மெகா வின் திறந்த வெளி பொதுகூட்டதிற்கு ஜமாத்தை மீறி வந்தவர்கள் தான் அதிகம்.
இன்னும் எத்தனை பேர் ஜமாத்தார்கள் நம்மை பார்த்து விடுவார்கள்ளோ என்று பயந்து வராமலும் இருந்து இருக்கலாம்.ஆனால் ஐக்கிய பேரவையின் பொது கூட்டடத்திற்கு ஜமாத்திற்கு ஆதரவு அளிப்பவர்கள் அனைவரும் கட்டாயமாக வந்து இருப்பார்கள். எப்படியும் மெகா வின் கூட்டத்திற்கு வந்த மக்களை விட இந்த கூட்டதிற்கு அதிகமான மக்களை அழைத்து வர வேண்டிய கட்டாயத்திற்கு ஐக்கிய சபை தள்ளப்பட்டுள்ளது.
பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று. வெற்றி பொதுமக்களுக்கா அல்லது ஐக்கிய சபைக்கா என்று காயல் வெப் சைட் ஒரு எஸ்.எம்.எஸ் மூலமாக வாக்கெடுப்பு நடத்தலாமே.
19. Re:Stand united with Ikiyath Jamath posted byMoosa (Dubai)[11 October 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10284
As a well wishers and person who wants to see a united kayal, I wish to put-forth my views and request to all kayalites based of prevailing turmoil amongst us against Ikiyath Jamath.
We should extend our hands to Ikiya Jamath in taking measure to see unified kayal. This will pave the way for good deeds to the welfare of our hometown. It’s needless to say that Ikiyath Jamath was formed with two representatives of each Jamath in our hometown. As such, raising voice against them from outside (being belongs to member of one of the Jamath) will not give fruitful management of our hometown requirements.
Nevertheless, if anyone wants to oppose this democratically formed Forum, shall write to their respective Jamath to take congnizance of their suggestions and request to rectify pitfalls in the decision of Ikiya Jamath, if any. Failing which, they should come forward to join as one the representative of their respective Jamath for Ikiya Jamath and fight democratically within Ikiyath Jamath for yielding good measures.
Hope, every one will take my views & requests as in the interest of our united Kayal.
20. Re:இன்று மாலை ஐக்கியப் பேரவை... posted bySHOLUKKU.AJ (kayalpatnam)[12 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 10461
salaam 2 all.
dear mr. sholukku mac md.noohu ஐக்கிய பேரவையின் கண்ட்ரோல் இல் kayal .com இல்லை sensor செய்வதக்கு.pls avoid this wrong message. கூட்டம் சேர்த்து ஊரின் ஒற்றுமையை நிலைநாட்டுவது தான் ஐக்கிய பேரவையின் நோக்கமே . ஒன்றுபட்ட பள்ளிவாயிலின் கூட்டமைப்பு தான் ஐக்கிய பேரவை என்பதை நினைவு கூறுகின்றேன் .நன்றி vote for BUS
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross