எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைமைக்குப் போட்டியிடும் வேட்பாளரான எல்.எஸ்.எம்.முத்து மைமூனத்துல் மிஸ்ரிய்யாவை ஆதரிப்பதென மலபார் காயல் நல மன்ற (MKWA) செயற்குழு தீர்மானித்துள்ளது. இதுகுறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
கேரள மாநிலம், கோழிக்கோடு நகரில் செயல்பட்டு வரும் மலபார் காயல் நல மன்றத்தின் (MKWA) 28ஆவது செயற்குழுக் கூட்டம் 09.10.2011 அன்று காலை 11.00 மணிக்கு அவ்வமைப்பின் அலுவலகத்தில் கூடியது. மன்றத்தின் தலைவர் மஸ்ஊத் அவர்கள் தலைமையில், மன்றத்தின் செயலாளர் ஹைத்ரூஸ் ஆதில் முன்னிலையில் நடைபெற்றது.
வேட்பாளர் மிஸ்ரிய்யாவுக்கு ஆதரவு:
காயல்பட்டினத்தின் நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கு 7 பேரும், நகர்மன்ற உறுப்பினர்கள் பொறுப்புகளுக்கு ஏராளமானோரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் மன்றத்தின் நிலைப்பாடு குறித்து முடிவு எடுப்பதர்க்காக உறுப்பினர்கள் அனைவர்களும் நீண்ட நேரம் கலந்தாலோசித்து கூட்டத்தில் அனைவரின் ஒருமித்த கருத்தோடு காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையால் நியமனம் செய்யப்பட்ட நகர்மன்றத் தலைவர் தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது வேட்பாளராக போட்டியிடும் எல்.எஸ்.எம்.முத்து மைமூனத்துல் மிஸ்ரிய்யாவை ஆதரிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நமது சமுதாயத்தை சார்ந்த அணைத்து வேட்பாளர்களும் நம் நகர்நலப்பணிகளில் மிகுந்த அக்கறை உள்ளவர்கள் என்பதில் மலபார் காயல் நல மன்றத்தை பொறுத்தவரை மாற்றுக்கருத்துக்கு இடம் இல்லை. இருந்தாலும் போட்டியிடும் அனைவரும்யும் தேர்வு செய்ய முடியாது என்பதால் நகர்நலப்பணிகள் சிறப்பாக நடப்பதற்கு நம் அனைவர்களின் ஒற்றுமை மிக மிக அவசியம். எனவே இந்த முடிவை மலபார் காயல் நல மன்றம் MKWA எடுதுள்ளது.
செயற்குழு உறுப்பினர்கள் வருகை:
செயற்குழு கூட்டத்திற்கு வரமுடியாத சூழ்நிலையில் பொறுப்பை உணர்ந்து கூட்டர்திக்கு வரமுடியாத காரணத்தை செயற்குழு உறுப்பினர்கள் முன்னதாக தெரிவிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழுக் கூட்டம்:
மலபார் காயல் நல மன்றத்தின் (MKWA) பொதுக்குழுக் கூட்டம் வரவிருக்கும் 30-10-2011 அன்று நடத்துவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த கூட்டம் வழமைபோல் சகோதரர் நைனாகாக்க அவர்கள் வீட்டு மாடியில் வைத்து மாலை 5 மணிக்கு நடை பெரும். இன்ஷாஅல்லாஹ்.
அன்பான அழைப்பு:
கூடத்திற்கு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
காலை 11.00 மணிக்கு துடங்கிய கூட்டம் மதியம் 1.00 மணிக்கு நன்றியுரைக்குப் பின், அனைவரின் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.E.செய்யித் ஐதுரூஸ் (சீனா),
கோழிக்கோடு, கேரள மாநிலம்.
1. உளப்பூர்வமானதும், உணர்வூப்பூர்வமானது ஆகும். posted byசட்னி.எஸ்.எ.கே.செய்யது மீரான் (காயல்பட்டினம்.)[11 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10245
அஸ்ஸலாமு அலைக்கும்..
எங்கள் அன்பு மலையாள கரையோர மக்களின் தீர்மானம்
((அனைவரின் ஒருமித்த கருத்தோடு காயல்பட்டினம்
முஸ்லிம் ஐக்கியப் பேரவையால் நியமனம் செய்யப்பட்ட
நகர்மன்றத் தலைவர் தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட
பொது வேட்பாளராக போட்டியிடும்
எல்.எஸ்.எம்.முத்து மைமூனத்துல் மிஸ்ரிய்யாவை
ஆதரிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது))
முஸ்லிம் ஐக்கியப் பேரவையால் நியமனம் செய்யப்பட்ட
நகர்மன்றத் தலைவர் தேர்வுக் குழுவால் அல்ல
நகரில் உள்ள பள்ளிவாசல்கள்,பொது நல அமைப்புகள்
சார்ந்த தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்பட்டது.
உளப்பூர்வமானதும்,உணர்வூப்பூர்வமானது ஆகும்.
இதில் உங்களது மன்றத்திற்கு காயல்ர்களின்
நன் மதிப்பை பெற வாய்ப்பு.. வாழ்த்துக்கள்..
நீங்கள் மட்டும் அல்ல தாய்லாந்து மன்றமும் மட்டும் அல்ல
மரியாதைக்குரிய ஹசன் சார் மட்டும் அல்ல
நம் ஊரில் உள்ள அனைத்து கட்சிகளின் நகர,மாவட்ட,மாநில
தலைமை பீடமும்,தன்நிகரில்லா தலைவர்களும்
நம் காயல்பட்டினம்
முஸ்லிம் ஐக்கியப் பேரவை ஆதரித்து எந்த ஒரு
வேட்பாளரையும் களத்தில் இறக்காது பெருமை
சேர்த்துள்ளார்கள். அனைவருக்கும் மனப்பூர்வமான
நன்றிகள் கோடானு கோடிகள்.வாழ்க உங்கள் அமைப்புகள்,
வளர்க எங்கள் பேரவையின் சிறப்புகள்.
தீர்மானத்தோடு மட்டும் நில்லாது தீர்ப்பு வழங்கும்
நாளிலும் அணி அணியாய் தாயகம் வந்து
வாக்களிக்க வருமாறு வாஞ்சையுடன் வேண்டுகின்றோம்.
நமக்குள் எத்தனை பிரிவுகள்,பிளவுகள் இருந்தாலும்
அத்தனையும் மறந்து நம்மை நாம் எல்லா வகையிலும்
பாதுகாத்திட,பக்குவபடுத்திட நல்லதோர் சந்தர்ப்பம்.
வல்லோன் அல்லாஹ் உங்கள் அனைவர்களின் தொழில்களில்
அதிகமான அபிவிருத்திகளை தந்தும்,
அனைவரும் ஓன்று சேர்ந்து நகர் நலப்பணி செய்திட
உடல் நலத்தையும் தந்தருள்வானாக ஆமீன்.
வாழ்த்தும் அன்பு நெஞ்சம்
சட்னி.எஸ்.எ.கே.செய்யது மீரான்
ஸ்டார் ஹவுஸ்,மொஹ்தூம் தெரு
காயல்பட்டினம்.
2. அனைவரின் ஒருமித்த கருத்தோடா? posted byஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா)[11 October 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 10247
தேர்தல் பற்றிய செய்தியாக இருக்கட்டும், அதை போல MKWA வின் எந்த செய்திகலாவட்டும் கூட்டத்தில் என்ன தீருமானிக்க பட்டதோ அதை மட்டுமே செய்தியாக கொடுக்க அதை செய்பவர்கள் ரொம்பவும் கவனமாக இருக்கணும்.
ஆதலால்,
"உள்ளாட்சித் தேர்தலில் மன்றத்தின் நிலைப்பாடு குறித்து முடிவு எடுப்பதர்க்காக உறுப்பினர்கள் அனைவர்களும் நீண்ட நேரம் கலந்தாலோசித்து கூட்டத்தில் அனைவரின் ஒருமித்த கருத்தோடு காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையால் நியமனம் செய்யப்பட்ட நகர்மன்றத் தலைவர் தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது வேட்பாளராக போட்டியிடும் எல்.எஸ்.எம்.முத்து மைமூனத்துல் மிஸ்ரிய்யாவை ஆதரிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது."
இந்த செய்தியின் தவறை திருத்தி "உண்மையான நடப்பை" வெளியிடும்படி செய்தி தொடர்பாளரை கேட்டுக்கொள்கிறேன்.
5. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byKader Sulaiman (Kayalpatnam.)[11 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10253
காயல்பட்டினத்திற்கு வெளியில் இருந்து கொண்டு இங்கு நடப்பது என்ன என்பது கூட தெரியாமல் தங்கள் அமைப்பின் மூலம் கொடுமையான ஒரு முடிவை எடுத்துவிட்டீர்கள். ஒருமுடிவை எடுக்கும் முன் இங்குள்ள நபர்களிடம் பெரும்பாலானோரின் கருத்துக்களை கேட்டுவிட்டு அதன் பிறகு கூடி முடிவெடுக்க வேண்டும். இன்று எல்லா நலமன்றங்களும் பேரவையின் பக்கம் செவிசாய்ப்பது சரியல்ல. ஒரு நேர்மையான இயக்கமாக இருந்தால் பேரவையின் பக்கம் குற்றம் இருந்தால் அதை சுட்டிக்காட்டி திருத்த வேண்டும். எல்லோரும் செம்மறி ஆட்டுக்கூட்டமாக மாறக்கூடாது. தவறை திருத்த முயற்சி செய்யுங்கள்.
6. ஒரே குழப்பமா இருக்கே ..... posted byமுத்துவாப்பா... (அல்-கோபர்)[11 October 2011] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10256
அட போங்கப்பா ... கூட்டத்திற்கு முன்னிலை வகித்த மன்றத்தின் செயலாளர் சகோதரர் ஹைதுரூஸ் ஆதில் அவர்களே உண்மை நடப்பை வெளியிடுமாறு கேட்டு கொண்டுள்ளார் ... ஒரே குழப்பமா இருக்கே .....
முதலில் இந்த செய்தியை பார்க்கும் பொழுது சகோதரர் ஹைதுரூஸ் ஆதில் அவர்கள் மீது நான் கொண்டிருந்த நம்பகத்தன்மை குறைந்தது ஏனென்றால் அவர் பிற இணையதளங்களின் அவர் இந்த பேரவையை கடுமையாக சாடி இருந்தார் . அப்படி பட்டவர இதற்கு ஆதரவு கொடுத்தார் என்று என்னால் நம்ப முடியாமல் கருத்து பகுதியை படிக்கும் பொழுது தான் உண்மை நிலை புரிந்தது. சகோதரர் ஹைதுரூஸ் ஆதில் அவர்களே நீங்களே அந்த உண்மை நடப்பை வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
7. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byShahul Hameed (Hong Kong)[11 October 2011] IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 10258
காதர் சாமுனா அவர்களே! தாங்கள் எந்த உலகத்தில் இருக்குறிங்க. உங்க வீட்டு பக்கத்தில் என்ன நடந்தது
என்று உங்களுக்கு தெரியும் முன் வெளிநாட்டில் வசிக்கும்
நம்மவர்களுக்கு தகவல் கிடைத்துவிடும் இக்காலத்தில் ஊரில் நடக்கும் அணைத்து நடப்பும் எல்லோருக்கும் தெரியும்.
8. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byjamal (kayalpatnam)[11 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 10260
`ஹலோ! ஐதுரூஸ் ஆதில். அவர்கள்தான் உண்மையை சொல்ல மாட்டார்கள். நீங்களாவது உண்மையை சொல்லி பொய்யர்களின் முகத்திரையை கிழித்தெறியுங்கள்.
சகோ. சட்னி மீரான் அவர்களே! மிகுந்த சிரமப்பட்டு ஐக்கியப் பேரவையை ஆதரித்திருக்கிறீர்கள். ஊருக்குப் பொதுவானது ஐக்கியப் பேரவை என்று சொல்கிறீர்கள். உங்கள் கருத்து ஏற்புடையதுதானா? ஐக்கியப் பேரவை ஆதரிக்கப்பட்டப்படி இன்னும் நடக்கிறதா? அவர்களுக்கு தலைவரை தேர்ந்தெடுக்கும் தகுதி உள்ளதா? விளங்கித்தான் ஆதரிக்கிறீர்களா?
9. Congrats..!! Another good gesture towards saving AP's face.. posted byM Sajith (DUBAI)[11 October 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10266
தீர்மானத்தின் சாரம்சம், அதன் செயலர் ஜனாப் ஹைதுரூஸ் ஆதில் அவர்களின் கருத்து பதிவு - இரண்டையும் சேர்த்துப்பார்த்தால் இங்கேயும் ஓர் 'நடந்தது என்ன?' அறிக்கை வரும் போல தெரிகிறது..
இன்னும் ஒரு அறிக்கைதான் மீதமிருக்கிறது, ஐக்கியப் பேரவையித்தின் முகம் காக்கும் கடைசி முயற்சியின் அறிக்கை வரிசையில்.. அதுதான் சகோதரி வஹிதா ராத்தவின் அறிக்கை.,
தாயாரை மாற்று வேட்பாளராக நியமித்த கதைக்கு ஒரு விளக்கம் தரும் வகையில் "நான் மற்று வேட்பாளராக மனுச்செய்ய மறுத்தேன்" அதனால் தான் தாயார் மனுச்செய்தார் என்று - ஏற்கனவே இது விஷயமாக நடக்கும் NEGOTIATION தகவல் உண்மையா இல்லையா என்பது அப்போது தெரியவரும்...
அதோடு, மீதமுள்ள தோற்கடிக்கப்பட்ட வேட்பாளர்களின் அறிக்கைக்கும் ஏற்பாடு செய்தால், வஹிதா ராத்தா மறுத்தால் மூன்றாவது, நான்காவது வேட்பாளர் அல்லவா மாற்று வேட்பாளராக மனுச்செய்ய வேண்டும் என்ற கேள்விக்கும் பதில் தந்தது போல இருக்கும்.
பாத்து செய்யுங்கோ...
______________________________________________
ஒரு தவறுக்கு இன்னும் ஒரு தவறு பரிகாரம் ஆகாது. தவறை ஒப்புக்கொள்வதும், சரி செய்வதும் தான் ஒரே வழி - என்பது எப்போதுதான் புரியுமோ !!
10. சேட்டா..! இது பாடில்லாயிருந்ன்னு..? posted byM.N.L.முஹம்மது ரஃபீக், ராபியா மணாளன். (புனித மக்கா.)[11 October 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10271
“வருந்துகின்றோம்”...? -ராபியா மணாளன்,புனித மக்கா.
"உள்ளாட்சித் தேர்தலில் மன்றத்தின் நிலைப்பாடு குறித்து முடிவு எடுப்பதர்க்காக உறுப்பினர்கள் அனைவர்களும் நீண்ட நேரம் கலந்தாலோசித்து கூட்டத்தில் அனைவரின் ஒருமித்த கருத்தோடு காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையால் நியமனம் செய்யப்பட்ட நகர்மன்றத் தலைவர் தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது வேட்பாளராக போட்டியிடும் எல்.எஸ்.எம்.முத்து மைமூனத்துல் மிஸ்ரிய்யாவை ஆதரிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது."
11. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byZainul Abdeen (Dubai)[11 October 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10272
"சகோதரர் ஹைதுரூஸ் ஆதில் அவர்கள் மீது நான் கொண்டிருந்த நம்பகத்தன்மை குறைந்தது ஏனென்றால் அவர் பிற இணையதளங்களின் அவர் இந்த பேரவையை கடுமையாக சாடி இருந்தார்" ---- முத்துவாப்பா... (அல்-கோபர்) .
உங்களுடைய இந்த ஒரு வாக்கியமே போதும் மலபார் கா.ந மன்றத்தின் நம்பகத்தன்மையை அறிய .
இந்த அறிக்கை ஹைதுரூஸ் ஆதில் அவர்களுடைய சொந்த கருத்து கிடையாது. இது மலபார் கா.ந மன்றத்தின் அறிக்கை தகவல் கொடுத்தவரே அவர் ஆவர் .
இப்படித்தான் எதையாவது எதுக்காவது முடிச்சி போட்டு எழுதுவதுதான் இவர்களின் வழக்கமாக இருகின்றது. ஒன்று மட்டும் புரிகிறது யாரும் ஐக்கிய பேரவையை ஆதரிக்கும் விதமாக எந்த ஒரு அறிக்கையோ கருத்தோ தெரிவித்தால் இவர்களுடைய மூக்கு வேர்த்து பொய் கருத்தை எழுத கைகள் துற துருக்கும்.
உங்களுடைய சொந்த கருத்தே இப்படி உங்களுக்கு எதிர் சாட்சி சொல்லும் என்று ச்ற்றும்கூட எதிர்பார்த்து இருக்கமாடீர்கள்.
12. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byNoordeen Prabu (Jeddah-Saudi Arabia)[11 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10274
ஹைத்ரூஸ் ஆதில் அவர்கள் தீர்மானத்தை ஆதரிக்கிறார்கள். இதிலுள்ள வாசகத்தைதான் திருத்த சொல்கிறார்கள். சகோ. ஜமால் அவர்களே இது கூடவா உங்களுக்கு விளங்கவில்லை?
மன்ற செயலாளர் அவர்களே! நீங்களே வாசகத்தையும் கொடுத்திருக்கலாமே.
13. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byShahul Hameed (Hong Kong)[11 October 2011] IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 10275
ஒரு அமைப்பு என்றால் அங்கு பல கருத்து அபிப்பிராயம் உடையவர்கள் இருக்கதான் செய்வார்கள். அதில் பெரும்பான்மையான ஒத்த கருதுடையவர்கள் ஆதரவுடன்
தீர்மானம் நிறைவேற்றுவர்கள். அதே சமயம் எதிர் கருத்து உடையவர்களுக்கு அவர்கள் தக்க விளக்கத்தையும் கொடுப்பார்கள். இது தான் மரபு. இங்கும் அதுதான் நடந்து இருக்கும். கட்டுக்கோப்பான அமைப்பில் அங்கம் வகிக்கும்
சகோதரர் ஆதில் அவர்களை குறை சொல்வதில் நியாயம் இல்லை.
15. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted bysaha (Chennai)[11 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10279
அஸ்ஸலாமு அழைக்கும்...
எனதருமை சகோதர்களே....
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17ல் நடைபெறவுள்ளது. இதில் எத்தனை சண்டைகள் ஐக்கியப் பேரவையின் சில செயல்பாடுகள் அதிருப்தி தரும் பட்சத்தில், அதை களைந்திட வெளியே நின்று குரல் கொடுப்பதைவிட உடன் இருந்து சுட்டிக் காட்டுவது நல்ல வழியாகும்.அதை விட்டு
சண்டைபோடுவது நல்லது அல்ல
ஐக்கிய பேரவையின் முகத்தில் கரியை பூசனும் என்று நினைப்பவர்கள் அல்லாஹ் ஒருபோதும் ஷூம்ம விடமாட்டான் ஐக்கியம் என்பது ஒருவர் அல்ல ஒட்டு மொத்த ஜமாத்துகளை குரிக்கும் ''
தெருக்குல் சண்டை இட்டால் கூத்தாடி கொண்டாட்டம்'' என்று
கூறும்அலவுக்கு நாம் ஆளாககூடாது வல்ல அல்லாஹ் நம்மையும் நமதூரயும் பாதுகாப்பானாக ஆமீன்..
16. கிவன் அப் posted byThaika Ubaidullah (Macau)[11 October 2011] IP: 182.*.*.* Macau | Comment Reference Number: 10280
எழுதுவதா வேண்டாமா ........... கண்டிப்பா பிரயோஜன மில்லாத நேர போக்க்காகதான் தெரிகிரிது . யாருக்கும் USEFUL ஆக தெரிய வில்லை. பிரயோசனமா செலவழிக்க ஷைத்தான் என்னையும் விடமாடிக்கிறான். எல்லாம் வொரே குட்டை யில் வூறிய மட்டைகள் தானே.
அட்மின் பழையபடி comments ஐ DISABLE செய்தால் கருத்து பரிமாற்றம் கருத்து சிதைவை எற்படுதாமமல் இருக்கும் என்று நினைகின்றேன். ஏன்டா வெப்சைட் ஐ பார்க்கின்றோம் என்ற சலிப்பு வருகிறது. செய்திகளை மற்றும் தெரிந்து கொண்டால் போதுமாக தெரிகிறது.
அட்மினுக்கு வொரு சின்ன REQUEST : நான் விரும்பும் நகர மன்றம் என்ற தலைப்பில் படைப்புக்களை பெற்று வெளியிட்டீர்கள் - பேப்பரில் வந்தது , நாங்களும் படித்தோம் - மாற்றம் வந்த மாதிரி தெரிய வில்லை. மீன்றும் வொரு தலைப்பு கொடுங்கள் - "நான் விரும்பும் நான்" " வூர் நலனுக்கு நான் என்ன செய்வேன் , வூரின் தேவைகள் என்ன? என்னால் இது இது முடியும். கருத்துக்கள் அனைத்தையும் பெற்று வூர் நலனில் பாடு படும் அமைப்பு மற்றும் முன் வரும் அன்பர்கள் மூலம் வொன்று திரட்டி செயல் படுத்த முயலலாம்.
தற்பொழுது ஆயிர கணக்கான கருத்துக்கள் வரும் நிலையில் இந்த முயற்சிக்கு எத்தனை கருத்க்க்கள் வருகிறது என்று பாருங்கள்.நூற்று கணக்கில் வந்தாலும் அல்லது நூற்றுக்குள் வந்தாலும் சமுதாய பனி புரட்சிக்கு பிரயோஜனம் அல்லது சமுதாய பனி செய்யம் மக்களுக்கு பக்க பலமாக இருக்கும்.
முயற்சி பண்ணி பாருங்கள் - நம் மக்களின் வேகம், விவேகம் வெளியில் வரும் - மற்றவர்களை மாற்ற நினைக்கும் நாம் மாறினால் ? மாற்றம் தன்னால் வரும்.
முதல் அடியை நீங்கள் தான் வெப்சைட் மூலம் அறிவிப்பு தந்து எடுக்கலாம் அல்லது மற்ற அமைப்புகள் செய்யலாம்.
மக்கள் (குறிப்பாக எனக்கு) மனதிலும் செயலிலும் மாற்றம் வர இறைவன் அருள் புரிவானாக, ஆமீன் !
இதுவரை என்னை சகித்து கொண்ட அன்பர்களுக்கு ஜஜாகுமுல்லாஹ் . வஸ்ஸலாம்
18. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byNUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA)[11 October 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10287
அனைத்து ஜமாஅத் சார்பில் போட்டியடும் சகோதரரி மிஸ்ரியாவுக்கு பஸ் ( பேருந்து ) சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றிய மலபார் காயல் நல மன்றத்துக்கு நன்றி.
வஸ்ஸலாம்
19. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byசாளை S.I.ஜியாவுதீன் (காயல்பட்டினம்)[11 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 10289
அன்பு சகோதரர்களே,
நம்மிடம் இன்னும் ஒற்றுமை நிலைத்து இருப்பது உலகில் உள்ள அனைத்து காயல் நல மன்றத்திலும், இக்ரா கல்வி சங்கத்தில் மட்டும் தான். அதிலும் உங்களுடைய அரசியலை நுழைத்து விரிசலை உண்டு பண்ணாதீர்கள்.
தயவு செய்து நலமன்றங்கள் யாருக்கும் ஆதரவோ, எதிரோ தெரிவித்து தீர்மானம் போடாதீர்கள்.
உங்களின் மன்றத்தை அனைவர்களும் பிரமித்து வாழ்த்திக்கொண்டு இருக்கும் போது, இந்த மாதிரி தீர்மானம் தேவையா? ஒற்றுமையான உங்கள் மன்றத்தில் சிறு சலசலப்பை பார்த்தீர்களா. கொஞ்சம் கவனம்.
20. இனம் இனத்தோடு சேரும். இறைவனோடு இல்லை. posted byzubair (riyadh)[11 October 2011] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10290
அஸ்ஸலாமு அலைக்கும். என் பாசமிகு மலபார் கா.ந.மன்ற சகோதரர்களே....... தாங்களின் இந்த முடிவு இறைவனின் பொருத்தத்தை பெரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் நீண்ட ஆயுசையும், நிறைந்த செல்வத்தையும் தந்து ஒற்றுமையாய் நம்மை வாழ துணை நிர்ப்பானாக ஆமீன்.
என் தலைப்பின் குறிப்பு :- "சகோதரர் ஹைதுரூஸ் ஆதில் அவர்கள் மீது நான் கொண்டிருந்த நம்பகத்தன்மை குறைந்தது ஏனென்றால் அவர் பிற இணையதளங்களின் அவர் இந்த பேரவையை கடுமையாக சாடி இருந்தார்" ---- முத்துவாப்பா... (அல்-கோபர்) . சொன்னது உண்மையிலும் உண்மையே......
அல்லாஹ்வின் கயிறாக சொல்லப்படும் ஒற்றுமையை (அல்லாஹுக்கு அடிப்பனியும் நப்சு) பற்றிப்பிடிப்பவர்களுக்கு... இதில் இருந்து விளக்கம் பெறலாம். ஊர் ஒற்றுமையை, நம் பெரியவர்களை மதிக்காத்தவர்கள் யார்? யார் என்று. ஒற்றுமையை விரும்புவோர்கள் இவர்களின் மாய வலையில் விழுந்து அல்லாஹ்வின் கயிறை அறுத்து விடாதீர்கள். எங்களின் பெரியவர்கள் ஹலாலான, ஊர் நன்மையை நாடி..... செய்யும் அனைத்தையும் நாங்கள் பெருந்திக்கொள்வோம் ஒற்றுமையின் அடிப்படையில்.
நாங்கள் இந்திய பிரஜைகள் என்று சொல்லி இந்திய ராணுவத்தின் அதிகாரபூர்வமான ரகசிய அறிக்கையை பொது வலை தளத்தில் கேட்பதுக்கு ஒப்பாகும். பிரதமருக்கு கூட மறைக்கப்படும் என்பது படித்தவனுக்கு தெரியாத்தது தலை குனிவை எற்ப்படுத்துகிறது. விளக்கம் தேவைபாடுவோர் பேரவையை நேரில் அணுகவும். பேரவை..... ராணுவம் ஒன்றும் இல்லை. சுட்டு தள்ள. வஸ்ஸலாம்.
21. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byM Sajith (DUBAI)[11 October 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10292
சகோதரர் அப்துல் காதிர் மற்றும் சகோதரர் ஜுபைர் அவர்களுக்கு,
நீங்கள் எடுத்துக்கொண்ட சிரமத்தை பேரவையின் செய்தி தொடர்பாளர் (அப்படி ஒருவர் இருந்தால்) எடுத்துக்கொண்டு பதில் தந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். (என்னை போன்ற நேரில் அனுக வழி தெரியாமல் தினரும் மற்றவர்களுக்கும்.)
பேரவை போன்ற அமைப்பு நம் நகருக்கு இன்றியமையாதது என்பதில் இதுவரை நான் பதித்த மற்றும் படித்த கருத்துக்கள் எல்லாமே வலியுருத்தியுள்ளதை நீங்களும் உணராமல் இருக்க வாய்ப்பிலலை.
உங்களை போன்றவர்களும் தவறை நியாப்படுத்துவது இன்னமும் எனக்கு புரியவில்லை. தவறுகள் திருத்தப்படவேண்டும் என்றால் சுட்டிக்காட்டப்படவேண்டும். இதில் பேரவையின் உள்ளே வெளியே கதை எல்லாம் வேண்டாம். தூரத்தில் இருப்பதாலோ அருகில் இருப்பதாலோ சரியும் தவறும் அதன் தன்மையை மாற்றுவதில்லை.
நகரின் 'எல்லா' ஜமாத்துக்கள் மற்றும் 'எல்லா' தொண்டு நிறுவனங்களையும் உள்ளடக்கியது என்ற வர்ணனை - இது பொது அமைப்பு என்பதை ஒப்புக்கொள்வதானால், வெளியில் இருந்து வரும் விமர்சனங்களுக்கும், பிடித்தவர், பிடிக்காதவர் எல்லோரின் சந்தேகங்களை தீர்க்க வேண்டும். (கட்சி நடத்துவது போல எதிரிக்கு பதில் அளிக்க தேவையில்லை என இருக்க இயலாது - மற்றவர்களை எதிரிகளை பார்க்க துணியும்வரை)
சுனாமி குடியிருப்பு விசயத்தை கிழற வேண்டாம் என விடுகிறேன், நடந்தது எல்லோருக்கும் தெரியும் (தனியாக தளம் அமைத்து எழுதும் அளவுக்கு - தயவு செய்து நிர்பந்தம் ஏற்படுத்த வேண்டாம்.
இந்த முறை தேர்தல் விசயத்தில், நடந்தவை அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக தவறும் அதை மறைப்பது, மழுப்புவதுமாக நடந்து கொண்டது சரியில்லை. இது உண்மை , ஊர் வாயை மூட முயல்வது நீங்கள் சொல்லும் 'புத்திக்கூர்மை' இல்லை. ஒரு தவறை இன்னொரு தவறால் மறைக்க இயலாது என்ற பாடத்தை இந்த தேர்தல் நமக்கு சொல்லித்தந்து விட்டது.
நல்ல அமைப்புக்கு வெளிப்படை தேவை. பொது விஷயத்தில் கருத்து வேறுபாடு இருந்தது என தெளிவாக பேரவையின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இந்தச்சூழலில் பேரவை நடந்து கொண்ட விதம்தான் நீங்கள் குறிப்பிடும் "வெளிப்படை" என்றால் அகராதியைத்தான் மாற்றவேண்டும்.
வெளியில் இருக்கும் தங்களைப்போலவே பலரும் ஊர் நன்மைக்காக பலதும் செய்கிறார்கள். இதுவும் செய்யவில்லை என்றால் இந்த அமைப்பு தேவையில்லை என் வாதிட்டிருப்போம். ஆனால் இது உண்மையில் ஊரில் எல்லா மக்களையும் உள்ளடக்கிய பொதுவான அமைப்பாக நடந்து கொண்டதா? இறைவனுக்கு அஞ்சி உங்களையே கேட்டுப்பாருங்கள். (மறுத்தால் அதையும் பட்டியலிட முடியும்).
தேவை நல்ல, பொதுவான ஒரு அமைப்பு - அந்த தகுதியை சிலரின் தனி விருப்பம் ஈடேர இடம் கொடுத்ததால் பேரவை காயலிரின் நம்மிக்கையை இழந்துள்ள (இதையும் நீங்கள் சிலர்தான் என ஒதுக்கிவிட முனையலாம்)உண்மையை மறுப்பதும், மறைப்பதும் சுமூகமான சூழ்நிலையை தாராது.
இதை சரிசெய்ய, ஒரேவழிதான் உள்ளது. எல்லோராலும், முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட காலவறையரை நிர்னயம் செய்யப்பட்ட ஒரு நிர்வாகக்குழு வேண்டும் அதற்கு முன்வருவதுதான் வழி.
பொதுசேவை ஆர்வம் காயலரின் பொழுதுபோக்கு, இது இல்லாதவர்கள்தான் அதிசயம் நமதூரில். காலம் காலமாக இதில் போட்டி இருந்ததும், போட்டியால் ஒன்றுக்கு இரண்டாக தண்ணீர் தொட்டி துவங்கி கால்பந்து மைதானம் தொடர்ந்து, இன்று இரண்டு பைத்துல் மால் வரை போட்டி நல்லது நடக்க உதவிய கதை எல்லோரும் அறிவோம்...
அதே சூழ்நிலையை பேரவையின் பிடிவாதம் ஏற்படுத்துமானால் அதிலும் இறைவன் நல்லதையே நாடியிருப்பான் என்றே நம்புகிறேன்.
MEANS ARE AS IMPORTANT AS IT ENDS. நல்ல நோக்கங்களுக்காக தவறு செய்யலாம் என்பதில் எல்லோருக்கும் உடன்பாடவென்டிய அவசியமில்லை.
Ball is now in AP's court.. Let's believe they'll play a fair game.
_____________________________________________
கயிற்றை பிடிக்க பலரும் மேற்கோள் காட்டியுள்ள இறை வசனம்: இறைவனின் கயிற்றை ஒற்றுமையாக பிடிக்க சொல்வதை, எந்த கயிறானாலும் பரவாயில்லை, கயிறுதான் முக்கியம் இறைவன் இல்லை என்பது போல உபயோகிப்பது வேதனைக்குறியது.!!
22. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byM.N.L.முஹம்மது ரஃபீக். ராபியா மணாளன். (புனித மக்கா.)[11 October 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10293
இத் தளத்தில் வரும் செய்தியைப் படிப்பதை விட பிறர் பதிக்கும் கருத்துக்களை படிப்பவர் தாம் அதிகம்! இது,இத் தளத்திற்கு கிடைத்த வெற்றியும்,ஆதரவும் தான்.தமிழிலில் டைப் செய்யும் வசதி வந்த பின்னர் கருத்தாளரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது தான் உண்மை!
நீங்க மட்டும் கருத்து எழதுவீங்க! இன்னும் புது தலைப்பு போடச் சொல்லி அதுக்கும் கமெண்ட்ஸ் வேணும்ங்கிறீங்க என்ன சொல்ல வர்றீங்க என்பதைக் கொஞ்சம் தெளிவாச் சொன்னா நல்லாயிருக்கும். மத்தவங்களின் கருத்தையும் படிங்க,அல்லது அட்லீஸ்ட் மதிங்க ஓகே!
குறிப்பு:
காயல்பட்டணம் டாட் காம்லெ கமெண்ட்ஸ் எழுதுற நாங்க எல்லோருமா சேர்ந்து ஒரு சங்கம் வெக்கலாமான்னு யேசிச்சிட்டிருக்கோம்.இப்படியெல்லம் ஐடியாக் கொடுத்து எங்க பொளப்புலெ மண்ணள்ளிப் போட்டுறாதீங்க! தலைவா!
23. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byCNash (MAKKAH)[11 October 2011] IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10294
ரெம்ப அவசியமான தீர்மானாம்!!! யாரை திருப்திபடுத்த இவ்வளவு அவசர தீர்மானம்!!! ஊரில் இருக்கும்போது தான் குழப்பமும், சச்சரவும் ஊரை விட்டு வெளியே போய் நலமன்றங்கள் அமைப்பதன் நோக்கம் நம் மக்களுக்கு சேவை செய்ய...இருக்கிற குழப்பத்திற்கு எண்ணெய் ஊற்ற இல்லை!!
இந்த தீர்மானத்தால் முதலில் உங்களுக்குள் பிரிவினை!! ஆதில் போன்ற இன்னும் பலர் புதுப்பள்ளி ஜாமாத் கூட்டம் போல் உண்மையை ஒவ்வொருத்தராக போட்டு உடைப்பார்கள்!! அதில் எத்தனை பேருக்கு விருப்பமில்லா தீர்மானம் என்பது போக போக தெரியும்!!!
உங்கள் நலமன்ற கொள்கையில் உள்ள திட்டங்களை மட்டும் சிறப்பாக செய்யுங்கள் அதுபோதும் அல்லாஹ்வின் அருள் உங்கள் அனைவருக்கும் கிடைக்கும். இதுபோன்ற விளையாட்டுகளில் தயவுசெய்து எதோ உங்கள் மன்றத்தின் பேரை இன்று அனைவைரும் உச்சரிக்கணும் என்று அறிக்கை விடாதீர்கள்!! நீங்கள் ஒன்றும் காயலை கட்டுபடுத்தும் அமைப்போ, ஆலோசனை கூறும் அமைப்போ இல்லை உங்களை விட மக்களுக்கு தெளிவான அறிவு உள்ளது எது நல்லது என்று அவர்கள் சிந்தித்து முடிவு செய்வார்கள்!! வெறும் நலதிட்டங்களோடு....சிலர் மரணத்திற்கு வருந்துகிறோம் !! பல நல்ல செயல்களை வாழ்த்துகிறோம் என்ற அறிக்கையோடு நின்று கொள்ளுங்கள்!!!
சட்னி மீரான் காக்கா, நீங்களும் அந்த தேர்வு நடந்த அன்று சென்றீர்களே, அல்லாஹ்வை முன்னிறித்தி சொல்லுங்கள் அங்கே நடத்தப்பட்ட தேர்வு உங்களுக்கு உடன்பாடு தானா?
24. உதாரணம், ஓர் உதாரணமா இருக்கணும்..!!! posted byM.N.L.முஹம்மது ரஃபீக். ராபியா மணாளன். (புனித மக்கா.)[11 October 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10295
முன்னுக்குப் பின் முரண்பாடான கருத்துக்களை பதிப்பதில் கவனம் தேவை. ஹலோ! ஜுபைர் காக்கா உங்களைத்தான்! அது, என்ன? இரானுவ இரகசியத்தை ஓரு இந்தியப் பிரஜை கேட்ப்பது போலென்னு சொறீங்க அப்புறமா ஐக்கியப் பேரவை இரானுவமல்ல! உங்களை சுட்டுத்தள்ளன்னு,வேறெ சொல்றீங்க! உங்களுக்கு சகோதரன்,ஸாஜித் கொடுத்த பதிலின் கடைசி பாராவை ஒன்னுக்கு இரண்டு படிச்சுப் பாருங்க புரியும்!
25. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byMohamed Ali (Madina Al Munawwara.)[11 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10298
அஸ்ஸலாமு அழைக்கும்.
ஊரின் ஒற்றுமையை மனதில் கொண்டு முடிவெடுத்த MKWA வின் செயலுக்கு நன்றி. இது போல் அணைத்து KWA அமைப்புகளும் அறிவித்தால் ஊரில் வீணான குழப்பம் இல்லை. ( அல்லாஹு நம் ஊரின் மீது நன்மையை ஏவுவனாக ஆமின் )
Thaika Ubaithullah காக்கா கூறியதை போல் தயவு செய்து admin comment ஐ disable செய்தால் மிகவும் நல்லது. ஏனெனில் வெட்டியாக எதற்கெடுத்தாலும் வெறும் கமெண்ட் சொல்வைதை மட்டுமே தொழிலாக கொண்ட சில வெளிநாடுவாழ் நண்பர்களின் கடிதொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.மேலும் அப்பேர் பெற்ற நபர்களுக்கு ஐக்கியப் பேரவையில் முக்கிய பொறுப்பை கொடுத்து feildwork என்றல் என்ன என்று புரிய சந்தற்பம் பெற வாய்ப்பளிக்கலாம்.(Any one can be a commenter but cannot be a best commander).
நமக்குல் சண்டை இட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்'' என்று கூறும் அலவுக்கு நாம் ஆளாககூடாது வல்ல அல்லாஹ் நம்மையும் நமதூரயும் பாதுகாப்பானாக ஆமீன்
27. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byNUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA)[11 October 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10302
அன்புள்ள kayal .com அட்மின் . அவர்களுக்கு நான் ஒன்றும் பொத்தாம் பொதுவாக கருது தெரிவிக்க வில்லை. இன்னும் சொல்ல போனால் சகோ . வாஹித் அவர்கள் தான் தேர்தலுக்கு சம்பந்த மில்லாமல் தெரிவுத்துள்ள கருத்தை மட்டும் ஏன் வெளிஇட்டீர்கள். இது நியாயம் தானா பக்கம் பக்கமாக சம்பந்தம் இல்லாமல் பழிசுமத்தி எழுதும் நபர்களுடைய கருத்தை முழுமையாக பிரசுரிதுள்ளதை பார்த்தால் நீங்கள் செய்வது தர்மம் அல்ல. என் கருத்தில் ஒரு சிறு தவறேனும் யாருடைய மனம் கோனும்படி எழுதி இருந்தால் நீங்கள் எடிட் செய்வது நியாயம் ..தயவு செய்து இதையும் எடிட் செய்யாமல் அந்த கருத்தை பிரசுரிக்குமாறு பொது நல தொண்டன் என்ற முறையில் அன்புடன் கேட்டுகொள்கிறேன் . என் கவலை எல்லாம் ஊர் ஒட்ட்ருமையை கருதி நான் எழுதி இருந்த கருத்துக்கள் தான் இருக்கும் அல்லாஹ் மிக அறிந்தவன்.
என்றும் ஊர் நலனில்
M .E .L .நுஸ்கி
ரியாத்
சவுதி அரேபியா
Administrator: Comment you had referred to by Mr.Abdul Wahid Saifudeen had been removed already. Hence reference to that comment was edited from your comment - to avoid a debating point
28. அனைவரும் நம் அனைவரின் செல்வாக்கு பெற்ற நன்றிக்குரிய நல்லோர்கள். posted byசட்னி.எஸ்.எ.கே.செய்யது மீரான் (காயல்பட்டினம்.)[11 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10303
அஸ்ஸலாமு அலைக்கும்.
மலபார் மற்றும் திருவனந்தபுரம் நற்பணி மன்றங்களை
சார்ந்த நம் மக்கள்கள் காயலில் இருந்து
நேரடி பேருந்து வேண்டும் என்று நீண்ட நெடுங்காலமாக
பேராவல் கொண்டு முயற்சித்து வந்தாலும்
அண்டை மாநிலம் என்பதால் ஆளும் அரசுகள்,
அதிகாரிகள் இது விசயத்தில் தயக்கம் கொள்வது நியாயமே.
எல்லாவற்றையும் நேர் செய்து இப்பொழுது பேருந்தில்
பேர்உவகையுடன் பயணித்து வருகிறார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
இதற்காக அவர்கள் சார்பாகவும் முயற்சித்து இருந்தாலும்
நமதூர் பேரவையின் வழிகாட்டும்,ஒத்துழைப்பும்
கொஞ்சமாக கூட இருக்கலாம்.
சக மனிதனுக்கு நன்றி செலுத்தாதவன்
ஏக இறைவனுக்கு நன்றி செலுத்தாதவன் ஆவான்
எனும் நபிமொழியை உணர்ந்த நபி வழி நடக்கும்
நல்லவர்கள் நிறைந்த நற்பணி மன்றம்
இதனால் நன்றி பெறுக்கோடு நிறைவேற்றிய நல்லதோர் தீர்மானம்.
பேருந்துக்கு வாக்களிக்க பேருந்தில் வரும்
பெரு மக்களே வருக வருக.
அன்பு சாஜித் அவர்களே நீங்கள் எனக்கு
அண்ணனோ தம்பியோ தெரியவில்லை
இருந்தாலும் காக்கா என்ற மரியாதையோடும்
மனம் திறந்து வேண்டுகின்றேன்.
நீங்கள் பதிவு செய்யும் அனைத்து கருத்துகளிலும்
மரியாதைக்குரிய வஹிதா லாத்தா அவர்கள்
ஏதோ உங்களுக்கு மட்டும் தான் உரியவர் என்று
மார்தட்டி முன் நிறுத்துகிறிர்கள்..
அவர்கள் அன்று நம் நகர் மன்றத்திற்கு மட்டும் தான்
தலைவராக இருந்தார்கள்.
இன்றோ அவர்கள் பேரவை வழி நடக்கும் ஆயிரம் ஆயிரம்
மக்களின்(உங்கள் மொழியில் அடிவருடிகள்,அடிமைகள்)
நெஞ்சங்களில் அசைக்க முடியாத நம்பிக்கைக்குரிய
ஒப்பற்ற ஒரு பெண்மணியாக அதுவும் நன்மணியாக,
பொன்மணியாக இடம் பிடித்துள்ளார்கள்.அல்லாஹ் அவர்களுக்கு
சரிர சுகத்தை கொடுத்து சந்தோசமாய் வாழ நல் அருள்புரிவானாக ஆமீன்.
சகோதரி மிஸ்ரியா அவர்களின் உம்மா வேட்புமனு தாக்கல் பண்ணியதற்கு
நெஞ்சில் சந்தேக நோய் கொண்டு குழாய்யடி சண்டை பிடித்த நம்மவர்களுக்கு
இதோ விளக்கம்.
தேர்தல் அன்று பூத்துக்கு மற்றும்
வாக்கு எண்ணும் இடத்தில்
வேட்பாளரின் ஏஜண்டாக மேலும் ஒரு பலம்,பயன்
கிடைக்கும் என்று அரசியல்வாதிகளின்
சமயோசித புத்தியும்,சாணக்கியமும் தான்.புரிந்து இருக்கும்.
உடனே பற்றும் கற்பூரமாக இல்லை என்றாலும்
வாழை மட்டைகளாக இல்லாது இருப்போமாக.
ஊரில் உள்ள பொதுநலவாதிகள் ஒண்ணும்
தூக்கத்தில் இல்லை உங்களை விட பலமடங்கு விழிப்போடு உள்ளார்கள்.
எல்லாம் அறிந்தவனான என் அன்பு நண்பன் ஜமாலுக்கு நான் ஒன்றும்
சிரமப்பட்டோ,கைக்கூலி பெற்றோ பேரவை ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை .
நான் சார்ந்த முஹியதீன் பள்ளி சார்பாக அடியேன் வாக்களிக்கும் சமயம்
எங்களோடு வாக்களித்த
நீ சார்ந்த அல் அமீன் நற்பணி மன்றம் மூலம் வாக்களித்த
எம்.எம்.ஷாகுல் ஹமீது தம்பி இடம் வாக்களித்த விபரம் கேட்கவும்.
அல்லது உனக்கு உடன்பாடான அஹ்மத் நைனார் பள்ளி மற்றும் ஆறாம்பள்ளி
மக்களிடம் கேட்டு தெளிவு பெறவும்.அல்லது உன் மச்சானும்
என் அன்பு தம்பியுமான பிரபு.நூருதீன் இடம் கேட்டு பார்க்கவும்.
27 ஆண்டுகால சிறப்புக்குரிய நாங்கள் சார்ந்த ரஹமத்துன்-லில் ஆலமீன்
மீலாது பேரியம் மற்றும் சமூக நல பேரவைக்கு இன்று வரை
எந்தவித அங்கிகாரமும் தாராது,கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்
உதயமான எண்ணில் அடங்கா உறுப்பினர்களை கொண்டுள்ள
பதிவு பெற்ற உலக காயல் நல மன்றங்களின்
கல்வி கூட்டு அமைப்பான இக்ராஹ் கல்வி அமைப்புக்கும் இன்று வரை
எந்தவித அங்கிகாரமும் தாராது,
இந்த ஒரு ஆண்டுக்குள் ஆரம்பிக்க பட்ட
இரண்டு அமைப்புகளுக்கு அங்கீகாரமும்,அழைப்பும்
வாக்கு அளிக்கும் உரிமையும் வழங்கிய காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை
இன்னும் எங்களுக்கு வியப்புக்கு உரியதாக விந்தை நிறைந்ததாக உள்ளது.
வல்லோன் அல்லாஹ்,அவனது நபிகள் கோமான் அவர்களின்
அங்கிகாரம் ஒன்றே போதும்.
இப்பொழுது தமிழகத்தை ஆளும் தமிழக முதல்வர் புரட்சி தலைவி அவர்கள்,
இதற்க்கு முன்னால் ஆண்ட தமிழின தலைவர் கலைஞர் அவர்கள்,
இன்றைய இந்தியாவை நல் ஆட்சி செய்யும் காங்கிரஸ் பேரியக்க தலைவர்கள்,
தமிழக எதிர்க்கட்சி தலைவர் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள்,
மற்றும் அனைத்து கட்சிகளின் மரியாதைக்குரிய நிர்வாகிகள் எல்லோரும்
இந்த காயல்பட்டினத்தின் மீது அளவு கடந்த மதிப்பால் வேட்பாளரை
அறிவிக்காது,போட்டி இட செய்யாது சொல்வாக்கு காப்பாற்றிய அவர்கள்
அனைவரும் நம் அனைவரின் செல்வாக்கு பெற்ற நன்றிக்குரிய நல்லோர்கள்.
வாழ்த்தும் அன்பு நெஞ்சம்
சட்னி.எஸ்.எ.கே.செய்யது மீரான்
ஸ்டார் ஹவுஸ்,மொஹ்தூம் தெரு
காயல்பட்டினம்.8508570955
32. இந்த பேரவை புறநகரில் உள்ள பொதுநல சங்கங்களை மதித்து பொது வேட்பாளர் தேர்வில் பங்கெடுக்க அழைப்பு விடுத்தார்களா ? posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[11 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10311
காயல்பட்டணத்தில் பேரவையின் பிரபுக்களின், சுல்தான்களின், பாதுஷாக்களின், நவாபுக்களின், மன்னர்களின், ஆட்சி ஒழிந்து மக்களால் தேர்வு செய்யப்பட்ட நகரமன்ற தலைவர் (மக்களாட்சி) மலர வேண்டும்.. காயல்பட்டின ஊர் மக்களே... புறநகர் மக்களே சிந்திப்பீர் செயல் படுவீர்...!
இந்த பேரவை புறநகரில் உள்ள பொதுநல சங்கங்களை மதித்து பொது வேட்பாளர் தேர்வில் பங்கெடுக்க அழைப்பு விடுத்தார்களா ?
நம் இளைய தலைமுறையை தலை நிமிர செய்யுங்கள்..! மக்கள் பிரதிநிதியாக... மக்கள் வேட்பாளர் பொதுநல சேவகி படித்த பட்டதாரி திருமதி. ஆபிதா அவர்களை வெற்றி பெற செய்யுங்கள்... உங்கள் ஒட்டு புத்தகம் சின்னத்திற்கே...
தமிழன் - முத்து இஸ்மாயில் (விடுதலை சிறுத்தைகள் கட்சி)
33. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byK S MUHAMED SHUAIB (KAYALPATNAM)[11 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10312
இங்கு நண்பர் சட்னி. செய்து மீரான் அவர்கள்"பேருந்துக்கு ஒட்டு போட பேருந்தில் வாருங்கள் "என கோழிக்கோடு காயலர்களை அழைத்திருந்தார். ஏன் இடைத்தேர்தலில் பணம் வாங்கிக்கொண்டு சூரியனுக்கு ஓட்டுபோட இதே கோழிக்கோட்டில் இருந்தும் சென்னையில் இருந்தும் சாரி சாரியாக பஸ்சில் வந்து இறங்கிய "கேவலம்"போதாதா..?இதற்குமா வரவேண்டும் ?
ஏதேனும் பச்சை நோட்டு பரிமாறும் நோக்கம் இருக்கிறதா? அப்படி ஏதாவது எண்ணம் இருந்தால் அப்புறம் இங்கு தேர்தல் நடக்காது.வேறு எதாவதுதான் நடக்கும்.
சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்களில் மாமா மச்சான் என்று கூட பார்க்கமாட்டீர்கள் தி. மு .க விற்கு எதிராக வேலை செய்பவர்களை ஏதோ ஜென்ம விரோதிகளைப்போல நடத்துவீர்கள். அதிலும் அ.தி.மு.க காரன் என்றால் அவன் இந்த ஊரிலேயே வாழ்வதற்கு தகுதி அற்றவன் எனபது போல்தான் உங்கள் எண்ணம் எல்லாம் இருக்கும். (உங்கள் என்றால் நீங்கள் அல்ல. உங்களைப்போல் கருத்து கொண்ட மற்ற எல்லோரும் என பொருள் கொள்க...)
ஆனால் இப்போது மட்டும் ரசம் சொட்ட சொட்ட "ஒற்றுமை"பற்றி நீங்கள் அனைவரும் எங்களுக்கு பாலபாடம் நடத்துகிறீர்கள். என்ன ஒரு வினோத முரண்பாடு ? இதே ஒற்றுமை குறித்து எதிர் வரும் நாடாளு மன்ற தேர்தலிலும் உங்களால் பேச முடியுமா?
கோழிக்கோடு காயல் நல மன்றத்தில் ஏதாவது டிராமா போட முடியுமா என்று யோசியுங்கள். அது இப்போது நீங்கள் எடுத்த முடிவை விட ஆரோக்கியமானதாகும்.
34. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byNUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA)[11 October 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10329
DEAR ADMIN ., சுஹைப் காகா அவர்களின் கருத்து மட்டும் என்னவாம் . சம்பந்த மில்லாமல் சட்ட மன்றம், நாடாளுமன்றம் என்றுஎல்லாம் தெரிவித்து இருக்கும் கருத்தை மட்டும் பதிவு செய்வது எந்த வகையில் நியாயம் . என்னுடைய கருத்தில் மட்டும் என்ன தப்பு தவறு கண்டீர்கள். தயவு செய்து பதில் சொல்லுங்கள். வள வள என்று,கிண்டல் கேலி இது போன்ற கண்மூடித்தனமான கருத்துகள் மட்டும் ( சிலருடைய ) அப்படி பதிவு செய்வது எந்த வகையில் நியாயம் . தயவு செய்து மேலான பதில்.நன்றி
என்றும் ஊர் நலனில்
M .E .L .நுஸ்கி
ரியாத்
சவுதி அரேபியா
Administrator: உங்கள் கருத்தில் அப்துல் வாஹித் அவர்களின் பதிவு குறித்த கருத்து மட்டும் நீக்கப்பட்டது. அப்துல் வாஹித் அவர்களின் கருத்து நீக்கப்பட்டப்பின், உங்கள் கருத்தில் - (அப்துல் வாஹித்) நீக்கப்பட்ட கருத்தினை மேற்கோள் காட்டினால், பதிவு தெளிவாக இருக்காது என்ற காரணத்திற்கே - அப்பகுதி மட்டும் நீக்கப்பட்டது.
35. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted bysulaiman (abudhabi)[11 October 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10332
அஸ்ஸலாமு அழைக்கும்,சகோதரி மிஸ்ரிய அவர்கள் நகர்மன்ற தலைவி ஆகுவதால் ஐக்கிய ஜாமத் & அனைத்துஜாமத் நிர்வாகிகளுக்கு என்ன லாபம்? அனைத்து ஜாமத் &ஐக்கியஜாமத் ஒன்று கூடி ஒரு பொது வேட்பாள்ரை தேர்ந்து எடுத்தால்,அந்த நபரை அரசிடம் இருந்து ஊருக்கு நல்ல திட்டங்களை பெற்று தருவதுக்கு .உரிமையோடு அறிவுறுத்தலாம்,வழிநடதலாம் என்ற நல்ல சிந்தனையால்தான் ஐக்கிய ஜாமத் பொது வேட்பாளரை தேர்ந்து எடுக்கும் நல்ல காரியத்தில் இறங்கியது.
இதை புரிந்து கொள்ளமுடியாதகுறைமதியர்கள்.அடக்குமுறை ,நாட்டமை,அடாவடி,அநீதி என்றல்லாம் கூப்பாடு போட்டுகொண்டு ஊரின் ஒற்றுமையை,கண்ணியத்தை குலைக்க வெறி பிடித்து அலைகிறார்கள்.காயல்பட்டினம் முஸ்லிம்களின் கோட்டை என்ற பெருமையை எப்படியாவது சிதைக்கவேண்டும் என்று அறிந்தோ,அறியாமலோ துடிகிறார்கள்.குறைமதி உடையவர்களின் இந்த சதியை அல்லாஹுடைய உதவி கொண்டு நம்முடைய காயல் மக்கள் முறியடிப்பார்கள்.இன்ஷாஅல்லாஹ்.
36. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byomar abdullatheef (Riyadh)[11 October 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10333
Hello malabarians , so it no use of declaring your onside support to the particular candidate as aregistered organisation in other state . Pls vote for sister Abidha( the right candidate ) in case if any Malabarian lands to Kayal
37. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byNUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA)[11 October 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10334
Dear admin ., என் கருத்து என்ன வென்றால் சொஹைப் காகா வின் கருத்து மட்டும் இந்த செய்திஉடன் தொடர்பு வுடையது தானா? அப்படியானால் நானும் சட்டமன்ற பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் என்ன நடந்தது பற்றி விலாவாரியாக எழுதினால் அப்படியே பதிவு செய்வீர்களாஎன்பது தான் என்னுடைய கேள்வி. மேலான பதில் குழப்பமான கருத்துகளை பிரசுரித்து மேலும் குழப்பத்திற்கு கால்கோள வேண்டும் என தாழ்மையோடு கேட்டு கொள்கிறேன் .
38. ஆகா.. வடை போச்சே... posted byM Sajith (DUBAI)[11 October 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10335
தாயாரின் வேட்புமனு தாக்கலுக்கு சூப்பராக, பேரவைக்கு கூட தோன்றாத ஒரு விளக்கத்தை தந்து எம்போன்ற வாழைமட்டைகளுக்கு புரிய வைத்த கற்பூர மீரான் காக்காவுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
ஒரு முகவர் அதிகமாக கிடைக்கும் என்ற உன்னதமான ஐடியா, மனுவை வாபஸ் வாங்கிய பின்னரும் கிடைக்கும் என்பது நீங்கள் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன்.
என்ற இந்த அரசு வெளியீட்டில், இறுதி பட்டியலில் இடம் பெற்ற வேட்பாளர்களுக்கு மட்டும் தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளதே.. மாத்திட்டாங்களோ? சொல்லவே இல்ல..!! (பக்கம்10, பகுதி 7)
கஷ்டப்பட்டு கண்டுபிடித்த காரணம் போச்சே!! வேற ஏதாவது கண்டுபிடிங்க.
நானும் பேரவை வேட்பாளரை, ஆதரிக்க வேண்டும் என்றுதான் வலியுருத்தி எழுதி வந்தேன். ஆனால் பேரவையை காப்பறும் முயற்சியில் வரும் அறிக்கைகளும் விளக்கங்களும், வாழை மட்டைகளையும் பற்றி எரியவைத்து இத்துனை கமென்டுகள் எழுத வைத்துள்ளது..
அதோட சகோதரர் ஷேக் சதகத்துல்லா காக்கா, எங்ககிட்ட உங்ககிட்ட தருவதற்கு பேரவை தனி நபரின் சொத்தா?
நிர்வாக தேர்தல் நடத்தினால் எல்லோரும் பங்கெடுப்பங்க ஒற்றுமை வரும்ன்னு சொன்னேன் அவ்வள்வுதான்.
குளிச்சா குத்தாலமுன்னு சொல்றமாதிரி, இருந்தா இப்ப்டிதான் இருப்போம் இல்லேனா யார் தலையிலாவது கட்டுவோமா?
என்ன சார் புரியலயா? - மீரான் காக்கா சொன்ன வாழை மட்டைக்கெல்லாம் புரியுது..!!
39. போலி ஒற்றுமை posted byAbdul Wahid Saifudeen (Kayalpatnam)[11 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 10338
முழுமதியாளர்களே! மார்க்க விசயத்தில் ஒற்றுமை என்ற சொல் உங்கள் நினைவில் வரவில்லையே !!. தேர்தல் நேரத்தில்தான் (உலக விசயத்தில்) உங்களுக்கு ஒற்றுமை நினைவிற்கு வருகிறதா?
இந்த அநீதிக்கு எதிர் குரல் கொடுக்காதவர்களுக்கு ஒற்றுமையை பற்றி பேச அருகதை இல்லை. அவர்கள் யாராக இருந்தாலும் சரி. முதலை கண்ணீர் விட்டதை நான் கதையில்தான் கேட்டிருக்கிறேன்.
Moderator: Comment edited!
40. ஒரு நல்ல தீர்மானத்திலும் குழப்பமா??? posted byAbdulKader (Abu Dhabi)[11 October 2011] IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10341
அஸ்ஸலாமு அழைக்கும்....
உஹூம்..... ஒரு நல்ல தீர்மானத்திலும் குழப்பமா??? ஏன்தான் நம்முடைய்ய ஊர் மக்களுக்கு இப்படி ஒரு சோதனையோ???
குழப்பவாதிகள் ஒரு அமைப்பில் இருக்கும்வரை குழப்பங்கள் இருந்துகொண்டேதான் இருக்கும்.
42. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byCNash (Makkah)[11 October 2011] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10345
ஏண்டா சாஜித்!! இப்போ தான் ஒரு மாசத்துக்கு பிறகு எல்லோரும் ரகசியம் காத்த NASA ரகசியத்தை எங்கள் அன்பு மீரான் காக்கா அரசியல் சாணக்கியம், அர்த்தசாஸ்திரம் என்றல்லாம் சொன்னார்... அதுக்கிடைலே இப்டியா போட்டு உடைப்பா? இப்படியெல்லாம் எதாவது பேசி வாங்கி கட்ட வேண்டிவரும் என்றுதானே எல்லா சாணக்கியர்களும் அமைதியா இருந்தனர்!!! நீங்க ஏன் வாழை மட்டை தென்ன மட்டை என்றுலாம் சொல்லி பெரியோர்களில் சாணக்கியத்தனத்தை சந்திக்கு எழுத்து விட்டுடியோ?
சரி ஒரு பேச்சுக்கு நல்ல முகவர் கிடைக்கும் (உம்மா வாபஸ் வாங்காமல் இருந்து இருந்தால்) என்ற சாணக்கிய தனத்தால்தான் அப்படி செய்தார்கள் என்று வைத்து கொண்டாலும். நல்ல ஒரு முகவராக (Agent ) 65 வயசு கம்மா தானா கிடைத்தது!!! ஏன் Mrs . வஹீதா எல்லாம் நல்ல முகவராக தெரியவில்லையா!! இல்லை அவர்கள் ஏதும் உள்குத்து வைத்து கவுழ்த்தி விடுவார் என்ற பயமா? சரி அவர்கள் இல்லை என்றால் 3 , 4 ம் இடத்துக்கு வந்த சஹோதரிகள் எல்லாம் 30 -40 வயதுக்கு இடைபட்ட பெண்கள் தானே அவர்கள் இந்த காரியங்களை அக்டிவ்வா கண்ணும் கருத்துமாய் பார்க்க மாட்டார்களா இல்லை யாரையுமே நம்பவில்லையா !!
சரி சரி வேற எதாவது காரணம் சொல்ல முடியுமா என்று ரூம் போட்டு யோசிங்கோ
43. அவர்கள் ஏதோ பிறர் கொடுக்கும் பச்சை நோட்டுக்கு பஸ் ஏறி வரும் நபர்கள் அல்ல. posted byசட்னி.எஸ்.எ.கே.செய்யது மீரான் (காயல்பட்டினம்..)[11 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10349
அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்புள்ள அட்மின் அவர்களே இந்த செய்திக்கு சம்பந்தமில்லாத
கருத்துகளை பதிவு செய்துள்ள முத்து இஸ்மாயில் காக்கா,
என் இனிய சகோதரன் M.N.L.முஹம்மது ரஃபீக் மாமனாரும்,
என் மரியாதைக்குரிய மர்ஹூம் குளம்.ஷாமு மாமாவின் மகனுமான குளம்.சுகைபு காக்கா கருத்துக்களை எந்த கோணத்தில்
பரிசிலித்து வெளியிட்டிர்கள்.. எல்லாம் அறிந்தவன் அல்லாஹ்.
குளம்.சுகைபு காக்கா. நீங்கள் மட்டும் அல்ல
உங்கள் குடும்பமே அந்த கட்சியின் என்பது மற்றவர்களுக்கு புதிதாக இருக்கும் ஆனால் எனக்கோ,நண்பர் நுஸ்கீ அவருக்கோ
எங்கள் சிறு பிராயத்தில் அதாவது 38 ஆண்டுகளுக்கு முன்னரே
தெரிந்தவர்கள் நாங்கள். உங்களோடு நேரடியாய் களம் கண்டவர்கள்.
ஏன் இடைத்தேர்தலில் பணம் வாங்கிக்கொண்டு சூரியனுக்கு ஓட்டுபோட இதே கோழிக்கோட்டில் இருந்தும் சென்னையில் இருந்தும் சாரி சாரியாக பஸ்சில் வந்து இறங்கிய "கேவலம்" போதாதா..?இதற்குமா வரவேண்டும் ?
ஏதேனும் பச்சை நோட்டு பரிமாறும் நோக்கம் இருக்கிறதா? அப்படி ஏதாவது எண்ணம் இருந்தால் அப்புறம் இங்கு தேர்தல் நடக்காது. வேறு எதாவதுதான் நடக்கும்.
கோழிக்கோடு காயல் நல மன்றத்தில் ஏதாவது டிராமா போட முடியுமா என்று யோசியுங்கள். அது இப்போது நீங்கள் எடுத்த முடிவை விட ஆரோக்கியமானதாகும்.
நமதூர் மற்ற ஒரு வலை தளத்தில் எழுத்தாளர்
என்று புகழப்பட கூடிய பொறுப்புள்ள ஒருவரின்
இந்த கருத்தை எந்த ஒரு மனிதனாலும் ஜீரணிக்க முடியுமா???
சற்று சிந்தியுங்கள் ........
நல்ல மனம் இருந்தால் அவர்களை வாழ்த்துங்கள்.
அப்படியான மனதை அல்லாஹ் நமக்கு தர மறந்து விட்டான்
என்றாள் வசைபாடாது இருப்பது நல்லது.
அவர்கள் மன்றத்தில் ஓன்று கூடி அவர்கள் தீர்மானம் போட்டுள்ளார்கள். அதை விமர்சிக்கும் தகுதி, உரிமை அவர்களுக்கு மட்டும் தான் உண்டு.
அதனை சேராத வேறு யாருக்கும் அந்த தகுதி, உரிமை இல்லை என்பதை அனைவரும் அறிந்த ஓன்று.
அல்லாஹ் அவர்களையும்,அனைத்து காயலர்களையும்
பிறர் பொருள் உதவிகள் நாடாத நல்லதோர் கூட்டத்தில்
சேர்த்து வைத்து சிறப்பாக்கி வைப்பானாக ஆமீன்.
சாஜித் காக்கா உம்மா வேட்பாளர் அவர்கள் எப்பொழுதோ வாபஸ் வாங்கி விட்டார்கள். உங்களது விரட்டல், மிரட்டலை பார்த்து.
சந்தோசம் தானே .சபாஷ் போடுங்கோ...
அன்புடன்
சட்னி.எஸ்.எ.கே.செய்யது மீரான்
ஸ்டார் ஹவுஸ்,மொஹ்தூம் தெரு
காயல்பட்டினம்..
44. நீண்ட ஆலோசனை posted byshahulhameed sak (malaysia)[11 October 2011] IP: 60.*.*.* Malaysia | Comment Reference Number: 10354
நீ நீ நீ நீ நீ ண்ட ஆலோசனை ஒருமித்த கருத்து வாசகத்திலேயே தெரிகிறது குழப்பம், நலப்பணிகள் செய்து நல்ல பெயர் பெற்றிருக்கும் கயல் நல மன்றங்கள் இது போன்ற சச்சரவுகளில் ஈடுபட்டு நலமன்றங்களை நாறும் மன்றங்களாக ஐக்ய பேரவை (ஐநா சபை) போல் ஆக்கிவிட வேண்டாம் என்று பணிவோடு வேண்டிக்கொள்கிறேன்
45. அருமையோ அருமை posted byshahul hameed sak (malaysia)[11 October 2011] IP: 60.*.*.* Malaysia | Comment Reference Number: 10356
சாஜித் அவர்கள் ஒவ்வொருவருடைய ஒவ்வொரு கருத்துக்களையும் அவர் ஒருவரே ஒருங்கிணைத்து தந்து கொண்டிருக்கிறார் மிக அருமை இதுவல்லவோ மனஒற்றுமை அவரது எழுத்துப்பணி சிறந்தோங்க இறைவனிடம் வேண்டுகிறேன்.
46. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byMohideen (Jeddah)[11 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10357
மீரான் காக்கா காமெடி கீமடி ஒன்னும் பண்ணலையே,
நல்ல ஒரு முகவருக்காக ஏன் தாயாரை நிறுத்த வேண்டும். பேரவையில் விருப்ப மனு கொடுத்த மற்ற வேட்பாளரை முகவராக நிறுத்த வேண்டியதுதானே?
ஒரு வேலை நாங்கள் வாட்கெடுப்பில் தோற்றால் வெற்றி பெற்றவர்களுக்கு ஆதரவாக செயல் படுவோம் என்று அவர்கள் முச்ச்சரிக்கையில் கையெழுத்து போட்டு தானே இருந்தார்கள்.
so this has been already preplaned that she is the candidate.
47. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted bysholukku.aj (kayalpatnam)[11 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 10358
SALAAM 2 ALL.THANKS 2 MKWA
நம் ஊரின் ஒற்றுமையை வழு படுத்த நினைத்த அத்தனை அமைப்புகளுக்கும் நன்றி!
ஐக்கிய ஜமாத்தின் ஐக்கியத்தை சீர் குலைக்க நினைப்பவர்களின் மனதில் மாற்றம் விரைவில் வரும். தலைமை பதவிக்கு சரியான வேட்பாளரை வழங்கிய ஐக்கிய பேரவைக்கும் பாராட்டுக்கள்.
48. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byNoordeen Prabu (Jeddah - Saudi Arabia)[11 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10359
AWS காக்கா!
மார்க்க விஷயத்தில் ஒற்றுமை என்பது வரவே வராது. அது இறைவனின் விதி மற்றும் அண்ணலாரின் தீர்க்கதரிசன முன்னறிவிப்பு. 73 கூட்டங்கள் வரும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே.
அவன் இவனை முஷ்ரிக் என்பான்! இவன் அவனை காபிர் என்பான்! ஆனால் தேர்தல் வந்தவுடன் ஒற்றுமை பற்றி பேசுவோம். விந்தையிலும் விந்தை.
கொள்கை சகோதரர்கள் ஒற்றுமையாக சகோதரி ஆபிதாவை (வேறு வழியில்லாமல்) ஆதரிப்போம்.
49. மகிழ்ச்சி. posted byAnsari YentY (K S A)[11 October 2011] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10363
வரவேற்கத்தக்க தீர்மானம்...வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம்..வாழ்த்துக்கள்..இது போல் அனைத்து காயல் நல மன்றங்களும் ஓரணியில் திரளுங்கள்..சகோதரி மிஸ்ரியாவின் வெற்றியை எந்த தீய சக்தியாலும் தடுத்து விட முடியாது..வல்லோனின் துணையோடு வஞ்சகர் சூழ்ச்சியை முறியடிப்போம்.
50. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byPirabu Mubarak (Hong Kong)[12 October 2011] IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 10367
Dear Admin,
Comment # 10311 By நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் , Have written that காயல்பட்டணத்தில் பேரவையின் பிரபுக்களின், சுல்தான்களின், பாதுஷாக்களின், நவாபுக்களின், மன்னர்களின், ஆட்சி ஒழிந்து மக்களால் தேர்வு செய்யப்பட்ட நகரமன்ற தலைவர் (மக்களாட்சி) மலர வேண்டும்.. காயல்பட்டின ஊர் மக்களே... புறநகர் மக்களே சிந்திப்பீர் செயல் படுவீர்...!
We want to know, what this person have mentioned in this comment # 10311 and what he want to convey to the public, He is writing beyond his limit. I dont know how Admin had allowed to publish this comment # 10311 as it is pointing Out Particular person, this is not coming under the criteria which you have given at the time of Publishing.
I request you to delete this Comment with out any delay. we hope will take necessary steps to do this.
52. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byRayyan's Dad!! (USA)[12 October 2011] IP: 68.*.*.* United States | Comment Reference Number: 10371
ஒரு நண்பர் எழதி இருக்கிறார் "வரலாற்று சிறப்புமிக்க தீர்மான" என்ன ஒரு புகழ்ச்சி. அவர் கிண்டல் எதுவும் பண்ணுகிறாரோ என்று நினைக்க தோனுகிறது. வஞ்சி புகழ்ச்சியோ?? பேரவைக்கு சாதகம்னா "வரலாற்று சிறப்புமிக்க தீர்மான" அப்படி இல்லேனா...????????
இத்தனை காலம் இவர்கள் எல்லாம் எங்கே இருந்தார்கள். அது மக்வா வாக இருக்கட்டும் அல்லது தக்வா வாக இருக்கட்டும். ஐக்கிய பேரவை பொது வேட்பாளர் தேர்தலில் நடந்த சூட்சுமன்களா இருக்கட்டும் அல்லது அதனை தொடர்ந்து தாயே மகளுக்கு போட்டி வேட்பாளர் என்ற கூத்துகளாக இருக்கட்டும். அல்லது இதை எல்லாம் தவறு என்று அதை தட்டி கேட்க்க வேண்டும் அட்லீஸ்ட் அந்த குறைகளை/தவறுகளை இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும் என்று தீர்மானம் ஏற்ற வழி இல்லாதா நாம் இது மாதிரி அறிக்கை விட்டால் தான் என்ன விட வில்லை என்றால் தான் என்ன.
மக்கள் உசாராக ..தெளிவாக இருக்கிறார்கள். என்ன நடந்தது நடக்கின்றது என்றும் கூர்ந்து கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள். தக்வா/மக்வா வை சார்ந்த மக்கள் மக்கள் மட்டும் இதுக்கு விதி விளக்கா என்ன நீங்கள் சொன்ன உடன் நடப்பதற்க்கு.
53. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted bysathick (KSA)[12 October 2011] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10375
ஒற்றுமை என்னும் கைரை பற்றி பிடிப்போம். வெற்றி பெறுவோம். ஐக்கிய பேரவையை குறை சொல்பவர்கள், எந்த ஒரு அரசியல் கட்சியும் ஏன் வார்டு மெம்பெர் கூட நிற்கவேண்டாம் என்று சொல்லி, எல்லோரையும் சமாதான படுத்தி, இருக்கிறார்களே, அதை பாராட்ட கூட சிலருக்கு மனம் வரவில்லையே?
ஒருவர் குறையை துருவி துறவி ஆராய நமக்கு அனுமதி இல்லை.
ஏன் தாயார் மனு தாக்கல் செய்த்தார் என்பதன் விளக்கம் நியாயமாக தெரிகிறது. பொது வேற்பாளர் மனு எந்த காரணத்தால் நிராகரிக்க இருந்ததோ, அதே காரணம் தாயாருக்கும் உண்டு.
இதுவே முகவர் என்ற காரணத்துக்கு தான் செய்த்தார்கள் என்று நியாயமா தெரிகறது. ஏன் வகிதா அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால், தேவையல்லாத குழப்பம் தான் மிஞ்சும். தாயார் வாபஸ் வாங்கியது, பலரும் பித்னா செய்ய முயசித்தது தான்.
54. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byNUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA)[12 October 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10389
சகோதரர் வாஹித் அவர்களே நீங்கள் ஒற்றுமையாக அனைவரும் இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் வேட்பாளர் தெரிவு (அனைத்து ஜமாஅத் ) கூட்டத்தில் கலந்து வாக்கும் அளித்து இருக்கின்றீகள். போட்டோவும் பிரசுரமாகி இருந்தது. அபொழுதே இந்த முறை சரி இல்லை நான் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து வெளி நடப்பு செய்து வெளியில் வந்து பேட்டி அளித்து இருந்தால் நீங்கள் குற்றம் சாடுவது நியாயம்.ஒட்டுருமையை நிலை நாட்ட ஒருங்கிணைந்து செல்வது தான் ஒரே வழி. ஆயிரம் குறைபாடுகள் இருந்தாலும் நமக்குள் பேசி தீர்த்து கொள்ளலாம். ஏன் என்றால் அனைவர்களும் நமதூர் மக்களே. உங்கள் கருத்துபடி ஒற்றுமையை கடைபிடிப்போம். நமதூரின் பீடையான ஒற்றுமை இன்மையை எல்லாம் வல்ல அல்லாஹ் நீக்கி நல்ல ஒற்றுமையை தருவானாக . ஆமீன்
என்றும் ஊர் நலனில்
M .E .L .நுஸ்கி
மற்றும் கயல் நலம் நாடும் அன்பர்கள்
55. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byAbdul Majeed (Mumbai)[12 October 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 10394
Re: 50
பிரபுகள் என்று செல்வாக்கு மிகுந்தவரை, பணக்காரர்களை தான் நண்பர் குறிபிட்டுள்ளார் என்பது எட்டாம் வகுப்பு படிக்கும் தமிழ் வாசிக்கும் மாணவனுக்கு கூட தெரியும் . தயவு செய்து சுல்தான் , நவாப் என்று பெயரோ , ஆடை மொழியோ வைதிருபவர்கள் கம்ப்ளைன்ட் செய்ய வேண்டாம்.
56. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byShahul Hameed (Hong Kong)[12 October 2011] IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 10395
சகோதரர் அப்துல் மஜீத் அவர்களே! எல்லாம் அல்லாஹ் அறிந்தவனாக இருக்கிறான். எழுதியவர் யாரையும் குறிக்காமல் பொதுவாகவோ அல்லது யாரையோ மறைமுகமாக குறித்தோ எழுதி இருந்தால் அதை அல்லாஹ் நன்கு அறிவான்.
58. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byMohideen - PS (Hong Kong)[12 October 2011] IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 10400
மஜீத் அவர்களே
எட்டாம் வகுப்பு படித்தாலே தெரியுமோ..... நீங்கள் எல்லாம்
ரொம்ப வெவரம் கூடுன ஆளுங்க.... அதனால எழுதுற இடத்தில
எழுதுங்க ...எல்லா இடத்துக்கும் , எல்லாம் பொருந்தாது..
முதல்ல இந்த செய்திக்கும் , கமெண்ட் க்கும் சம்மந்தமே
இல்லை. ...இதில வேற நியாய படுத்துறீங்க.. ..
எப்படி தான் அட்மின் , இந்த கமெண்ட்ஸ் எல்லாம் .....Reject பண்ணாம போடறிங்களோ தெரியவில்லை...
59. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted bysulaiman (abudhabi)[12 October 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10465
அஸ்ஸலாமு அழைக்கும்,ஐக்கிய பேரவை இல்லையென்றல் தேர்தல் களத்தில் 50 போட்டியாளர்கள் நின்று நமது வாக்குகள் சிதைந்து நமது ஊரின் நகர்மன்ற தலைமைபதவி நம்மைவிட்டு நலுவிபோயவிடும்.இதைத்தான் இந்த குறைமதியாளர்கள் விரும்புகிறார்கள். மார்க்கம் அல்லாஹ்விற்கு சொந்தமானது.அல்லாஹ்,அவனது தூதர் தவிர வேறுயாருக்கும் மார்க்க விசியத்தில் கட்டுப்படவேண்டிய அவசியம் இல்லை.ஆனால் உலக நிர்வாக விசியங்களை அல்லாஹ் நம்மிடம் ஒப்படைதுவிட்டான் இதில் நம்மக்குள் இருக்கிற தலைமைக்கு கட்டுபடவண்டும்.நமது ஊரின்கன்னியம்,கட்டுகோப்பு,ஓற்றுமை பாதுகாக்க சகோதரி மிஸ்ரிய அவர்களுக்கு ஆதரவு தெருவித்துள்ள மலபார் காயல்சங்க சகோதரர்களுக்கு எனது நன்றி.இதுபோல் அணைத்து உலக காயல் நல அமைப்புகளும் ஆதரவு தெருவிக்கவேண்டும் என்று அன்புடன் கேட்டுகொள்கிறேன்.
60. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byK S MUHAMED SHUAIB (KAYALPATINAM)[13 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10539
நகராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட காலம் தொட்டு இங்கு "ஒற்றுமை" கோஷம் செவிப்பறையை கிழிக்கிறது, அதேசமயம் அதில் சந்தர்ப்பவாத சாயலும் கலந்திருக்கிறது. அதை வெளிப்படுத்தும் போக்கிலேயே எனது பதிவு (எண் 10312 )அமைந்து இருந்தது.
ஒற்றுமை எனபது ஒருவழிப்பாதை அல்ல. அது இரண்டு பக்கமிருந்தும் வர வேண்டும். அதே சமயம் நாம் ஒற்றுமைக்கு எதிரிகளோ விரோதிகளோ அல்லர். ஒற்றுமை எனபது மனத்தூய்மையுடன் எல்லா நிலையிலும் எல்லா வகையிலும் எக்காலத்தும் பின் பற்றப்பட வேண்டியதாகும்.
ஏதோ ஒரு நகராட்சி மன்ற தேர்தலில் நமது சார்பான வேட்பாளர் வெற்றி பெற மட்டும் ஒற்றுமை எனபது சரியானதல்ல. கடந்த காலங்களில் நமதூரில் அரசியல் மோதல்கள் எவ்வாறெல்லாம் நடைபெற்றன மாமா மச்சான் உறவுகள் எல்லாம் வாக்குசாவடிகளில் எவ்வாறு சிதைந்து போயின என்பதெல்லாம் சகோதரர்கள் செய்யதுமீரானுக்கும் நுஸ்கிக்கும் நான் சொல்லி தெரியவேண்டிய சமாச்சாரம் அல்ல......(தொடரும்)
61. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byK S MUHAMED SHUAIB (KAYALPATINAM)[13 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10543
இந்த ஊர் ஆதரிக்கும் பெரும்பான்மை கட்சிக்கு மாறான இன்னொரு கட்சி சார்ந்து இருந்தோம் என்பதற்காக நாங்கள் எவ்வாறெல்லாம் அவமானப்படுத்தப்பட்டோம் கல் மாறியும் சொல்மாரியும் எங்கள் மீது பொழியப்பட்டது எவ்வாறு என்பதை சுட்டிக்காட்டும் நோக்கிலேயே அந்த பத்தி எழுதப்பட்டது. மற்றபடி யார் மனதையும் புண் படுத்தும் நோக்கம் நமக்கில்லை.
சகோ.நுஸ்கி தாராளமாக தனது தரப்பை முன்வைக்கலாம். தனது கடந்த கால கட்சி வண்டவாளங்கள் வெளிப்பட்டுவிடும் என்பதால் அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ?என்கிறார் நுஸ்கி .எல்லா சம்பந்தமும் உண்டு. ஒற்றுமை எனபது இவர்களுக்கு தேவைப்படும் போது வெளியே எடுத்து வியாபாரம் செய்யும் "கச்சாப்பொருள்" அல்ல. அடை உணர்ந்து கொண்டால் போதும்.
சகோதரர் மீரான் அவர்களே....கோழிக்கோடு காயல் நல மன்ற தீர்மானம் பற்றி குறிப்பிட்டு இருந்தீர்கள். ஒரு விஷயம் பொதுதளத்திற்கு வந்துவிட்டால் அதை விமர்சிக்க யாருக்கும் உரிமை உண்டு. எனது விமர்சனத்திற்கு வேண்டுமானால் அவர்கள் பதில் கொடுக்கலாம். அது அவர்கள் உரிமை. ஆனால் நான் எப்படி விமர்சிக்கலாம் என்று கேட்க்கும் உரிமை யாருக்கும் கிடையாது.
விஷயம் முச்சந்திக்கு வந்து விட்டால் அது பொதுவானது. "பொம்பிளை சிரிச்சால் போச்சு.. புகை இலைவிரிச்சால் போச்சு.."எனபது பழமொழி. தெரிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross