எதிர்வரும் திங்கள் அன்று (அக்டோபர் 17) காயல்பட்டின நகர்மன்றத்திற்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தல்களில் பெரும் அளவில் கள்ள ஒட்டு போட திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இது குறித்த தகவல்கள் தமிழ் நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
காயல்பட்டினத்தில் 28,000 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கு என்று 29 வாக்கு சாவடிகள் நகரில் அமைக்கப்பட உள்ளன. தலைமை பொறுப்புக்கு போட்டியிடும் ஆறு வேட்பாளர்களில் சில வேட்பாளர்களின் வாக்குச் சாவடி பிரதிநிதிகள் (Polling Booth Agents) உதவிக்கொண்டும், 18 வார்டுகளிலும் போட்டியிடும் பல சுயேச்சை வேட்பாளர்களின் வாக்குச்சாவடி பிரதிநிதிகள் உதவிக்கொண்டும் கள்ளவோட்டுகள் போட திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
இத்துறை வல்லுனர்கள் சென்னையில் இருந்து இதற்கென்று காயல்பட்டினம் வருவதாகவும், மேலும் வாக்காளர்களுக்கு பணம், சாராயம் போன்றவை விநியோகிக்க திட்டம் தீட்டப்பட்டிருப்பதாகவும் மேலும் புகார்கள் எழுந்துள்ளன. வழிப்பாட்டு தலங்களையும் பிரசாரத்திற்கு பயன்படுத்த திட்டம் தீட்டப்பட்டிருப்பதாகவும் புகார்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன.
தேர்தல் விதிமுறைகள் மீறல்கள் குறித்து தேர்தலுக்கு முன்போ/தேர்தல் தின அன்றோ தகவல்கள்/புகார்கள் தெரிவிக்க விரும்புவோர் கீழ்க்காணும் எண்களை தொடர்பு கொள்ளலாம்:
தமிழ் நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் Toll Free எண்கள்
- 1800 42570 72
- 1800 42570 73
- 1800 42570 74
சென்னையில் உள்ள தமிழ் நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் தலைமையக எண்கள்
(+91 44) 2475 3001
(+91 44) 2475 3002
== Fax எண்கள்
==== (+91 44) 2475 3300
==== (+91 44) 2475 1870
மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர் (மாவட்ட ஆட்சியர்)
(+91 461) 234 0600
Fax (+91 461) 234 0606 Mobile: (+91) 9444 186 000
தூத்துக்குடி மாவட்ட தேர்தல் பார்வையாளர்
திரு மதிவாணன் IAS - (+91) 94440 21488
Police - IG (Elections)
(+91) 94980 30108
Police - SP (Elections)
(+91) 94980 30109
Principal Election Officer (Municipalities)
(+91) 94980 30073
Deputy Principal Election Officer (Municipalities)
1. புறநகரில் தனது செல்வாக்கை இழந்தவர்களின் மாற்று யோசனை...இந்த கள்ள ஒட்டு திட்டம்.. posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[12 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10407
இந்த செய்தி என்னமோ உண்மையாகத்தான் இருக்கும் சந்தேகமில்லை... புறநகரில் தனது செல்வாக்கை இழந்தவர்களின் மாற்று யோசனை தான் இந்த கள்ள ஒட்டு திட்டம்.. ஜனநாயக முறையில் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க முடியாதவர்களின் கோழைத்தனம்...
நகர்மன்ற தேர்தலில் பெரும் அளவில் கள்ள ஒட்டு போட இருக்கும் திட்டத்தை முறியடித்து ஜனநாயகத்தை வெற்றி பெற செய்வது தேர்தல் அதிகாரியின் பொறுப்புள்ள கடமை...
2. Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்... posted byCNash (Makkah )[12 October 2011] IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10414
இது முற்றிலும் உண்மைக்கு புறமான செய்தி!! பணத்திற்கும் சாராயத்திற்கும் கள்ள ஒட்டு போடுற அளவுக்கு எந்த ஒரு காயலின் மக்களும் தரம் தாழ்ந்து விடவில்லை!!! இனியும் தாழ மாட்டார்கள்!! அல்லாஹ் பாதுகாப்பான்!! எந்த ஒரு அணியின் அவர்கள் இருந்தாலும் எல்லோரிடம் ஈமானும் இஹ்லாசும் உள்ளது!!
3. Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்... posted byA.R.Refaye (Abudahbi)[12 October 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10418
இதற்க்கு என்ன comments எழுதுவது,
தயவு செய்து அமைதியாக செயல் பட்டு ஊரின் ஒற்றுமையை மட்டும் கவனத்தில் கொண்டு செயல் பட்டு நல்ல நராச்சி அமைய நாம் காட்டிய சிரத்தையை எல்லாம் முறைப்படி விஊகம் அமைத்து விவேகத்துடன் செயல் படும் பட்சத்தில் கள்ள ஓட்டு கலாச்சாரத்திற்கு இக்காயல் மண்ணில் இருந்து சாவு மணி அடிப்போம்.
கடமையை முறையாக செலுத்த கண்மணிகளே,மண்ணின் மைந்தர்களே,தாய்மார்களே தயார் ,தயார் ..........
முதல் பஸ்ஸை பிடித்து தேர்தல் களத்திற்கு சென்று உரிமையை அளித்து மையை விரலில் ஏற்று கள்ள ஓட்டை தவிர்ப்போம்.நன்றி
4. Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்... posted byShalai Basheer (Chennai)[12 October 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 10425
சகோதரர் சீனாஷ் எழுதிய கருத்திற்கு முற்றிலும் மாறுபடுகிறேன்.
நமக்கு ஏன் இவ்வளவு நினைவு மறதி?????
கடந்த காலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தலில் 500 தொடங்கி 2000 வரை காசாகவும்,
போர்வை முதல் புடவை வரை நாமும் நம் சொந்தங்களும் தானே கை நீட்டி வாங்கினோம்.
எனவே இத்தருணத்தில் உண்மையான வாக்காளர்களையும் கள்ள வாக்காளர்களையும் குறித்து நாம் எச்சரிக்கையாக இருப்பதோடு பண பலத்தையும் அராஜக வாதத்தையும் முறியடிப்போம்.
5. Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்... posted byCNash (MAKKAH )[12 October 2011] IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10429
சின்ன திருத்தம் Mr . பஷீர், கள்ள வோட்டு போட மாட்டோம் என்று சொல்ல வில்லை....பணத்திற்கும் சாராயத்திற்கும் போடமாட்டோம் என்று சொன்னேன்!!! காலா காலமா கழகத்தில் மேல் உள்ள அன்பிலும் பாசத்திலும் பக்தியிலும் தன் சொந்த பணம் செலவழித்து வந்துதானே வோட்டு போட்டு பழக்கம்
(சென்ற தேர்தல் விதிவிலக்கு) நிதி பெற்ற கிரி வலம் வந்ததால் நிதி பெறும் கதி மதிஉள்ள நம் காயல் பதியிலும் நடந்தது என்பது மறுக்க முடியாத உண்மை தான்!!
அதற்காக ரிபாய் காக்கா பஸ் ஏறி எல்லாம் வாக்கு சாவடிக்கு போக சொல்லாதீங்க!! தேர்தல் கமிஷன் நடைமுறைக்கு மாற்றம்!!! எனவே ஒழுங்கா புத்தகத்தை பார்த்து விதிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்!!!
6. Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்... posted byAbdulKader (Abu Dhabi)[12 October 2011] IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10432
அஸ்ஸலாமு அழைக்கும்....
சப்பாஷ்..... CNaash நீங்கள் ஊர் மக்கிளின் மீது வைத்துள்ள நம்பிக்கை கண்டு நான் சந்தோஷமடைந்தேன்.
இதுபோல்.. உங்களுடைய ஒத்தாசை, ஆதரவு ஊரின் ஒற்றுமை விஷயத்தில் தாருங்கள் என்று இத்தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன்.
9. Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்... posted bySolukku M.I. Seyed Mohamed Sahib (SMI) (Jeddah, KSA.)[12 October 2011] IP: 168.*.*.* United States | Comment Reference Number: 10441
அதென்ன கயல்பட்டினத்தை குறித்து இப்படி ஒரு செய்தி வந்திருக்கின்றது?, அதுவும் அரசியல் கட்சிகள் களத்தில் இல்லாத போது. நம் கூட்டத்திலும் சில கறுப்பாடுகள் உள்ளதா?, அல்லது அம்மையாரின் விசேஷ கண்காணிப்பா?. நல்லபடியா முறையான வழியில் அவரவரின் ஓட்டுகளை பதிவு செய்யுங்கள், ஊரின் கண்ணியத்தை பேணி கவனமாக செயல்படுங்கள்.
10. Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்... posted byA.R.Refaye (Abudhabi)[12 October 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10446
சகோதரர் CNash(Makkah). அவர்களே
காயல் நகர பெருமக்களில் பலபேர் நமது நகர சுற்றுப்புற, நகரங்களிலும்,அடுத்து அண்டைமானிலம் குறிப்பாக கேரளம் போன்ற பகுதிகளில் தொழில் ஈட்டும் முகமாக முகவரிகளை தனதாக்கி கொண்ட அன்பு காயளர்கள் முதல் பஸ்ஸை பிடித்தால்தான் தம் ஓட்டு கள்ள ஓட்டாக மாறுமுன் தேர்தல் பலன் அடைய முடியும்,எல்லோராலும் ஒருகிணைக்க பட்ட வேட்பாளர் வெற்றி பெற்று சிறந்த தலைமைத்துவத்தை தந்தார் என்ற வரலாற்று வரிகளை நம் காயல் புத்தகத்தில் பதிய வைப்போம் எனவே pls dont miss the bus on 17th oct 2011
11. Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்... posted byAbdul Wahid S. (Kayalpatnam)[12 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 10448
போகின்ற போக்கை பார்த்தல் ஊர் நலனில் அக்கறையுள்ளவர்கள், ஊருக்காக, சமுக சேவையில் ஈடுபடக்கூடியவர்கள், இங்கு கருத்து தெரிவிக்கும் நபர்களிடம் இவர் ஊர் நலனில் அக்கரையுள்ளவர்தான் என்று "சான்றிதழ்" பெறவேண்டும் போல தெரிகிறது.
13. Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்... posted bySHOLUKKU.AJ (kayalpatnam)[12 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 10458
salaam 2 all.
புகார் அனுப்பிய நண்பர் தோல்வி பயத்தில் செய்யும் செயல்.ஊரின் ஒற்றுமையை மட்டும் கெடுக்கவில்லை நட்பெயரையும் கூட. பயத்தில் இன்னும் புலப்பங்கள் வரவேண்டி உள்ளது. BUS இன் வெற்றிப்பயணம் தொடரட்டும் .நன்ற்.!
14. Re:அநியாயம் அக்கிரமம்.. posted byOMER ANAS (DOHA QATAR.)[12 October 2011] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 10459
எதை ஒன்றையும் தகவல் தரும் முன்பு பல முறை நம் கலாச்சாரத்தை சிந்தித்து செய்தியை வெளியிட வேண்டும். சாராயத்திற்கு ஒட்டு போடும் கூட்டமா நாம்.
சினாஸ் தம்பி சொல்வது போல், நமக்குள் கருத்து மட்டும்தான், வித்தியாசமே தவிர இஹ்லாஸ் எப்பவும் அப்படித்தான் உள்ளது. பஞ்ச பரதேசிகள் பட்டணம் இல்லை காயல் பட்டணம். அநியாயமும் அக்கிரமமும்,ஒரு சிலரால் பரப்பப் படும் போது, அதை தட்டிக்கேட்க்கும் உரிமை நமக்குண்டு. இது தம்பி சிநாசிர்க்கு வந்தது போல் S பசீருக்கும் வரவேண்டும்.
அநியாயம் எங்கு நடந்தாலும், குரல் கொடுக்கணும்!!! விஷயம் கள்ள சாராயத்தை பற்றியது. பணம் வாங்குவது, அவனவன் குணத்தை பொருத்தது இதற்கும், அதற்க்கும் முடிச்சு போடாதீர்கள். சிநாசின் மற்ற கருத்துக்கள், எனக்கு பிடிக்காமல் இருக்கலாம். அதே நேரம் இந்த கருத்து அவரின், அக்கறைக்கு எடுத்துக் காட்டு.!
15. Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்... posted byMohideen (Jeddah)[12 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10460
சகோதரர் பஷீர் அவர்களே,
பணம் வாங்கிட்டமே என்று DMK காரர்கள் ADMK உக்கோ அல்லது ADMK காரர்கள் DMK உக்கோ vote அளிக்க மாட்டார்கள். கொடுத்ததை வாங்கி வைத்து விட்டு அவரவர் தமது கட்சிக்கே வாக்களிப்பார்கள் ( பணம் வாங்கியதை சரி காணவில்லை)
ஆனால் கேவலம் சாராயத்திற்காக கள்ள ஒட்டு போடுற அளவுக்கு எந்த ஒரு காயலின் மக்களும் தரம் தாழ்ந்து விடவில்லை!
இது ஊரு ஒற்றுமையை கெடுக்க சில விசமிகளின் தந்திரமே.
16. Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்... posted byசாளை S.I.ஜியாவுதீன் (காயல்பட்டினம்)[12 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 10462
அனைவர்களுடைய கருத்துக்கும், நம் ஊரின் மேல் இருக்கும் பாசத்திற்கும் நன்றிகள்.
இந்த செய்தி, அதாவது கள்ள ஓட்டு போடுவது பற்றி. நம் ஐக்கிய பேரவை நடத்திய வேட்பாளர் அறிமுக கூட்டத்தில்,அனைத்து கட்சி பிரமுகர்களும் உரை நிகழ்த்தினார்கள்.
அதில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த சகோதரர் ஷாஜகான் அவர்கள், சகோதரி மிஸ்ரியா அவர்களுக்கு வாக்கு கேட்டுவிட்டு, மத்திய காயலைப்பற்றி தெரியுமா? அவர்கள் ஓட்டு போட்ட மாதிரி இருக்காது, ஆனால் 95 சதவீதம் ஓட்டு பதிவாகி இருக்கும்.
ஆகவே போட்டி வேட்பாளர்களே வாபஸ் வாங்கிக்கொள்ளுங்கள் என்று எச்சரிக்கை விடுத்தார். அவர் எதை மனதில் வைத்துக்கொண்டு சொன்னார் என்று தெரியவில்லை. உளவுத்துறை எப்படி ரிப்போர்ட் அனுப்பினார்களோ.
மேடையில் இருந்த பெரியவர்கள் இதற்க்கு எந்த மறுப்பும் கூறவில்லை என்பது தான் ஆச்சரியம்.
17. Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்... posted byISMAIL(KTM) (Hong Kong)[12 October 2011] IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 10466
who say there is no politician, u can c Ap meeting all the parties r together so they will do all kind of malpractice during the election (giving cash etc ) according to there experience and capactiy.
Let Amman kaka can explain why AP need more ppl in the booth . AP only achievment is bringing all these Party Member together.(behind the stage they will fight each other that nobody should question them hahhhha bz they r Unitly Thilagam's)
So pls brothers and sister
Pls vote for Sister Abitha
Symbol : The book (Knowledge)
Vote for Abitha Vote for AbithaVote for Abitha Vote for Abitha Vote for Abitha Vote for Abitha Vote for Abitha Vote for Abitha Vote for Abitha
ஒர் செய்தியை வாக்கியத்தில் எழுதும் போது வார்த்தைகளைச் சேர்ப்பதில் சற்று கவனம் தேவை,உதாரணமாக கீழே உள்ள தங்களின் வாசகங்களை வாசித்துப் பார்க்கவும்,
“இத்துறை வல்லுனர்கள் சென்னையில் இருந்து இதற்கென்று காயல்பட்டினம் வருவதாகவும், மேலும் வாக்காளர்களுக்கு பணம், சாராயம் போன்றவை விநியோகிக்க திட்டம் தீட்டப்பட்டிருப்பதாகவும் மேலும் புகார்கள் எழுந்துள்ளன.”-இதை இப்படி எழுதுவதை விட கீழே உள்ளது போல் எழுதினால் அர்த்தம் சரியாகவரும்,
“ மேலும் வாக்காளர்களுக்கு சிலர், பணம், சாராயம் போன்றவை விநியோகிக்க திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக எழுந்துள்ள புகார்களைத் தொடர்ந்து, இவைகளைக் கண்காணித்து தடுப்பதற்காக இத்துறை வல்லுனர்கள் சென்னையில் இருந்து இதற்கென்றே காயல்பட்டினம் வருவதாகவும்,-என்றுதான் இருக்க வேண்டும்,இல்லாவிட்டால் அர்த்தமே மாறிவிடும்!
-ராபியா மணாளன்.
குறும்பு:
கமெண்ட் வீராதி வீரர்களே! இதையே ஒரு இஷ்யூவாக்கிறாதீங்க! பாவம்!... அட்மின்!!!
Administrator: Bro.Rafeeq, sentence has been framed correctly as per complaint. The complaint is experts in arranging bogus voting are coming from Chennai. With regard to liquor, the complaint is to provide them in outer Kayal
19. காயலானாக பிறந்த அனைவரும் வெட்கி தலை குனிய வேண்டிய செய்தி. அனைவரும் தங்கள் கணடனத்தை தவறாது பதிவு செய்யவும் posted byசட்னி.எஸ்.எ.கே.செய்யது மீரான் (காயல்பட்டினம் )[12 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10472
அஸ்ஸலாமு அலைக்கும்...
எங்கள் மரியாதைக்குரிய இந்த வலை தளம் நடத்தும் நல்லோர்களே
உங்களது வலைத்தளம் மற்றும் அறக்கட்டளை மூலமாக
நம் காயல் பதிக்கு எத்தனையோ பல நன்மைகள்,விழிப்புணர்வுகள்
செய்துள்ளிர்கள்.மனமார பாராட்டுகின்றோம்.
இதுநாள் வரை இத்துடன் 7369 செய்திகளை எங்களுக்கு தந்துள்ளிர்கள்.
அத்தனை செய்திகளிலும் தரம் தாழ்ந்த,
ஆதாரம் இல்லாத செய்தி இது ஒன்றே என்று அறிகின்றோம்.. மிகவும் மோசமான செய்தியும் கூட.
மிகுந்த வேதனை அடைகின்றோம்.வெட்க படுகின்றோம்.
சாதாரணமாக நாங்கள் கருத்து பதிவு செய்யும் பொழுது பலவிதமான ஆராய்ச்சிகள் செய்து நோண்டி நுங்கு எடுக்கும்
நீங்கள் இதனை எப்படி வெளியிட்டீர்கள்...
நீங்களும் இந்த ஊரை சார்ந்த எங்களில் ஒருவர் தானே..
இதன் மூலம் நம் அனைவருக்கும் தலை குனிவு தான்.
அடுத்து ஒருவர் தருவார் இதை வீட மிக மிக சாதாரண செய்தி
காயல் பட்டணத்தில் கள்ள சாராயம் காய்ச்சுவதாக,
கள்ள துப்பாக்கி செய்வதாக ,கள்ள நோட்டு அடிப்பதாக,
இதனையும் வெளியிட்டு இதற்காக
புகார் தெரிவிக்க யாரை தொடர்பு கொள்ள வேண்டும்
அது சார்ந்த துறை அதிகாரிகளின் விபரமும் இது போன்று விபரமாக தந்தாள் என் தாய் திருநாட்டுக்கு உதவியாக இருக்கும்.
மிச்சம் மீதி உள்ள எங்கள் காயலின் மானத்தை குழி தோண்டி புதைத்துவிட்டால் நல்லது.
நம்மை கருவறுக்க நினைக்கும் பல கூட்டங்களுக்கு இது இனிப்பான செய்தி.
கொள்கைகள்,கட்சிகள்,பகுதிகள்,மதம்,ஜாதி,இனம் பல என்று
பிரிந்து இருந்தாலும் சொந்த பூமி காயல் என்றும்
வந்து விட்டால் இதனுடைய கண்ணியத்தையும்,கலாச்சரதையூம்
சிரழிக்க,காட்டி கொடுக்கும் தீயோரை ஒரு மொத்த குரலில்
எதிர்ப்பவர்கள்
இந்த புகார் கொடுத்த புண்ணியவான்கள் யார்??? இதற்கான ஆதாரம் என்ன??
இத்துறை வல்லுனர்கள் சென்னையில் இருந்து இதற்கென்று காயல்பட்டினம் வருகின்றர்களா ????
நீங்கள் தான் இந்த காயலுக்கு கல்வித்துறை,
மருத்துவத்துறை மற்றும்
பல்வேறு வல்லுனர்களை கொண்டு வந்தவர்கள் இது போன்று
இத்துறை வல்லுனர்கள் உங்களுக்கு தெரிந்து இருக்கலாம்..
அமெரிக்கா,அண்டார்டிகா எந்த இடத்தில் இருந்து வந்தாலும்
உலகமே புகழும் எங்கள் ஜனநாயக இந்தியாவின்
தேர்தல் கமிசன் அதிகாரிகள்,சட்டம்,கண்காணிப்பு
மற்றும் ஆட்சியாளர்கள்,அதிகாரிகள்,சட்டம் ஒழுங்குகளை
பேணி பாதுகாத்து வரும் காவல்துறை அதிகாரிகள்,
எல்லா வித முன்னேற்பாடுகள் செய்து காயல் மட்டும் அல்ல
ஒட்டு மொத்த தமிழகத்திலும் அமைதியான,நேர்மையான வகையில் நாடே போற்ற நல்ல படி நடத்தி காட்டுவார்கள்.
அனைத்து மக்களும்
தங்களது ஜனநாயக கடமைதனை சரியாக நிறைவேற்றுவார்கள்.இன்ஷாஅல்லாஹ்.
இந்த தேர்தலில் வெற்றி,தோல்வி யாருக்கும் இருக்கட்டும்
ஆனால் நாங்கள் பிறந்த இந்த மண்ணின் மானம்,மரியாதைகளுக்கு
பங்கம் ஏற்படுத்தும் எந்த சதிகார தீய சக்திக்கு நல்ல பாடம் புகட்டுவோம்.
சாராயம் கூடவா கொடுகின்றர்கள் இதனை வெளியிட உங்களுக்கு எப்படித்தான் மனம் வந்ததோ???
பெண்கள் இந்த செய்தியை
பார்த்து விட்டு இப்படியுமா என முகம் சுழித்துவிட்டு
சாராயம் ஊரில் உள்ள முஸ்லிமான அனைத்து ஆண்கள்,பெண்களுக்குமா ??
என்று வேதனை பட்டதோடு சாபமும் இடுகின்றார்கள்.அல்லாஹ் பாதுகாப்பானாக.
சாளை பஷீர் கடந்த காலங்களில் ருபாய். 500 ,5000என வாங்கினாரோ
இல்லை கொடுத்தாரோ??????
காயலானாக பிறந்த அனைவரும் வெட்கி தலை குனிய வேண்டிய செய்தி.
அனைவரும் தங்கள் கணடனத்தை தவறாது பதிவு செய்யவும்.
தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடி
முழுமையாக நம்பி இருந்த இந்த வலைதளம்
எவனோ சொன்னதாக கூட தகவல் இல்லை?
தன் மனதில் தோன்றியதை தோல்வி பயத்திலோ
அல்லது பேரவை மீது உள்ள காழ்புணர்ச்சி எண்ணத்திலோ இந்த ஊரை துண்டாட செய்த சதியோ.இதற்கான பலனை அடைவீர்கள்.
என் பாசத்திற்குரிய அன்பு தம்பி சீனா.மொஹ்தூம் முஹம்மது,
நெஞ்சம் எல்லாம் நிறைந்துள்ள அன்பு நண்பர்கள் ரிபாயி,வங்காளம் உமர் மற்றும்
யாவர்களும் காயல் மேல் கொண்ட பாசத்தால் கண்டனம் செய்ததுக்கு நன்றி.
யாருக்கும் பல்லாக்கு தூக்கவோ,கொடி பிடிக்கவோ
இதனை நான் பதிவு செய்யவில்லை.
காயலானாக பிறந்த காரணத்தாலும்,இதனை அளவு கடந்து
நேசிப்பதாலும் எழுதவேண்டிய கட்டாயம்.
குறிப்பு.இந்த செய்தியை எந்த வித துண்டாடல் இல்லாது
அப்படியே வெளியிடவூம்...........
கவலை கொண்ட கனத்த நெஞ்சத்துடன் .....
சட்னி.எஸ்.எ.கே.செய்யது மீரான்
ஸ்டார் ஹவுஸ்,மொஹ்தூம் தெரு
காயல்பட்டினம்.8508570955
Administrator:
சகோதரர் மீரான் அவர்களுக்கு, இந்த செய்தி உட்பட எந்த செய்தியையும் ஆதாரம் இல்லாமல் காயல்பட்டணம்.காம் வெளியிட்டதில்லை.
ஊடகங்களின் பொறுப்பு எல்லோர் மனதையும் குளிர வைக்கும் செய்தியை மட்டும் வெளியிடுவது அல்ல. சட்டத்திற்கு விரோதமான செயல்கள் நகரில் அரங்கேற்ற திட்டம் தீட்டப்படுவதாக புகார்கள் எழும்போது, அதனை மக்களுக்கு எடுத்து செல்வதும் ஊடகங்களின் கடமை.
ஊடங்கள் என்பது ஜனநாயகத்தின் ஒரு அங்கம். ஜனநாயகத்தின் மற்றொரு அங்கமான மக்களாட்சியை / தேர்தலை சீர்குலைக்க திட்டம் தீட்டப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் எழும் போது, அதனை மக்களுக்கு எடுத்து செல்வது ஊடகங்களின் தலையாய கடமை.
இது போன்ற தருணங்களின் - இது போன்ற குற்றச்சாட்டுகளை விசாரித்து, வெளியிட்டு மக்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்தாமல் இருப்பது - ஊடகங்கள் தங்கள் கடமையில் இருந்து தவறும் செயலாகும்.
காயல்பட்டினத்தில் இஸ்லாமியர்கள் மட்டும் வாழவில்லை. சாராயப் புழக்கம் நகரின் இஸ்லாமிய சமுதாயத்தினரிடம் இல்லாவிட்டாலும், பிற சமுதாயத்தினரால் அப்பழக்கம் தவறாக காணப்படுவதில்லை என்பதை - இச்செய்தியை படிக்கும் போது - மனதில் வைத்துக்கொள்ளவும்.
20. Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்... posted byMOHAMED ADAM SULTAN (KAYAL PATNAM)[12 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 10476
ஆயிரம் தான் நமக்குள் கருத்துவேறுபாடு கொள்கைவேறுபாடு இருந்தாலும் அதை ஒரு வீட்டுக்குள் நடக்கும் பிரச்சனையாகதான் எல்லோரும் என்ன வேண்டும் எள்அளவும் ஏனைய ஊரார்கள் நம் இறையாண்மையை எள்ளி நகையாடும்படி விடக்கூடாது.
என்ன தைரியம் இருந்தால் சாராயத்திற்கு சலாம் போடும் சஞ்சலமுடயவர்கள் என்று கூறுவார்கள், சரியான பேடிகளின் பிதற்றல்.
கண்டுகொள்ளவேண்டாம் கண்ணியமிகு காயல் கண்மணிகளே
மேடையில் பேசும் "மே தாவிகளே" கொஞ்சம் அடக்கி வாசியுங்கள்.ஆள் இல்லாவிட்டாலும் ஓட்டுப்பெட்டி நிறையும் என்ற வீர வசனங்களை உங்கள் வீட்டில் பேசுங்கள் கைதட்டல் கிடைக்கும் ஆதாரமின்றி வெளியில் பேசினால் கை விலங்கு தான் கிடைக்கும்
22. Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்... posted bymohamed abdul kader (dubai)[12 October 2011] IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10486
சகோதரர் சதக் தம்பி அவர்களே,
நண்பர் சாஜித் எழுதிய கட்டுரைகள் அந்த அளவுக்கு பயத்தை ஏர்ப்படுத்தி விட்டதோ !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
23. Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்... posted byRayyan's Dad!! (USA)[12 October 2011] IP: 63.*.*.* United States | Comment Reference Number: 10487
இது யாருடைய சதியோ புரளியோ என்று தெரிய வில்லை. தேர்தல் முடிகின்ற வரைக்கும் சூச்சிகளுக்கும், சதிகளுக்கும், வதந்திகள், விமர்சனகளுக்கும் மற்றும் அறிக்கைகளுக்கும் பஞ்சமே இருக்காது போல் தெரிகிறது. கீழ் உள்ள ஒரு கமெண்டை படித்தால்..சந்தடி சாக்குலே, நம் பேரவையின் அன்பர்கள் பேரவைக்கு (peravai supporters ) ஆள் சேர்க்க கிளம்பி விட்டார்கள் போல் தெரிகிறது. இதை செய்வதற்க்கு பதிலாக பேரவையை சீர்திருத்துற வழியை பார்க்கலாம். ஆட்கள் தானாகவே வருவார்கள். எல்லாரும் தானாகவே வந்து சேரனும்....நாமாகவே கூவி சேர்க்க கூடாது.
கமெண்ட் போர்டில் ஆட்களை சேர்ப்பதை விட....முதலில் பேரவையில் எல்லா ஜமாத்தினருக்கும் & கொள்கைகாரரர்களுக்கும் உரிய முக்கியத்துவத்தையும் & உரிமையை கொடுக்க சொல்லுங்கள். என்னமோ அது ஒரு சில கொள்கை மற்றும் தெரு/முஹல்லாவாசிகளோட கூடாரமா தெரியுது. தேவையான மாற்றங்களை செய்தால் எல்லாம் தானாகவே நடக்கும்.
24. Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்... posted byD.SEYED ISMAIL (HONG KONG)[13 October 2011] IP: 112.*.*.* Hong Kong | Comment Reference Number: 10495
அஸ்ஸலாமு அலைக்கும்
நண்பர் பஷீரின் கருத்து ஊரறிந்த உண்மை
வாக்குரிமையை விற்று ஜனநாயக அடிப்படையிலான தட்டிக்கேட்டும் உரிமையை இழந்த மோசமான முன்னுதாரனத்தை மறக்கவில்லை.
பணம் வாங்காமல் இருந்தால் உரிமையுடன் குரல் கொடுக்கலாம்.
பணம் வாங்க மறுத்த பலரும் நம்மில் உண்டு.
முறைகேடான நடத்தையின் மூலம் பெற்ற பணத்தை நல்ல காரியத்திற்கு செலவு செய்த ஒரு பெண்ணின் செயலை நபியவர்கள் ஏற்கவில்லை. அதனால் பணம் பெற்று அதை பிறருக்கு கொடுக்கலாம் என்ற விளக்கம் ஏற்றுக்கொள்ள முடியாதது.
இப்போது அடையாள அட்டை முறை உள்ளதால் கள்ள வோட்டு போடும வாய்ப்பு முன்னைவிட குறைவு.
துணை தலைவர் பதவிக்கு HORSE TRADING நடக்காமல் எல்லா உறுப்பினர்களுக்கும் முன்மாதிரியாக உறுதிமொழி அளித்த கோமான் தெரு வேட்பாளர் சகோதரர் லுக்மான் அவர்கள் வெற்றிபெற்று ஊரில் அனைவரும் ஒருமித்த கருத்தோடு (ATLEAST UNITY IN THIS) அவர்களை துணைத்தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டுமென்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறேன். இன்ஷா அல்லாஹ.
27. நியூ Thread posted byNoohu T (Maana Paana)[13 October 2011] IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 10506
I sincerely request the site's boss to open a separate thread, or alike , purely to discuss this issue so that the readers/bloggers, read/stamp their valuable views in one place without spilling here and there. Or just no need for a matter for 3 or 4 days(Election day) to go?
28. என் காயலும் எங்கள் இந்திய மண்ணின் பெருமைக்குரிய பகுதியே ... posted byசட்னி.எஸ்.எ.கே.செய்யது மீரான் (காயல்பட்டினம்.)[13 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10513
அஸ்ஸலாமு அலைக்கும்..
என் அன்பினும் இனிய அட்மின் அவர்களுக்கு
இதில் இதற்க்கு முன் நான் பதிவு செய்த கருத்து
Comment Reference Number: 10472
ஒரு எழுத்து,வார்த்தை கூட நீக்காது,தணிக்கை செய்யாது , உள்ளதை உள்ளபடி வெளியிடு செய்த
உங்கள் ஊடக தர்மத்தை ,ஜனநாயகத்தை
பாராட்டி நன்றி செலுத்துகின்றேன் .ஜசக்கல்லாஹ் ஹைரா.
கள்ளவோட்டுகள் போட திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.எனும் இந்த செய்திக்கு
இது ஊர்ஜிதம் செய்ய முடியாத செய்தியாக இருந்தாலும் இது தரம் ஒன்றை மட்டும்,
இந்திய இறையாண்மையை பாதுகாக்கும் பொது ஜன ஊடகங்களின் உன்னத தன்மை உங்களது கருத்து படி
சட்டத்திற்கு விரோதமான செயல்கள் நகரில் அரங்கேற்ற திட்டம் தீட்டப்படுவதாக புகார்கள் எழும்போது, அதனை மக்களுக்கு எடுத்து செல்வதும் ஊடகங்களின் கடமை.
இதனை இரண்டு கருத்துகளுக்கு இடம் இல்லாது ஏற்று கொள்கின்றோம்.நன்றிகள்
மேலும் வாக்காளர்களுக்கு பணம், சாராயம் போன்றவை விநியோகிக்க திட்டம் தீட்டப்பட்டிருப்பதாகவும் மேலும் புகார்கள் எழுந்துள்ளன. வழிப்பாட்டு தலங்களையும் பிரசாரத்திற்கு பயன்படுத்த திட்டம் தீட்டப்பட்டிருப்பதாகவும் புகார்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன.
புகார்கள் சமர்ப்பித்த நபர் யார்????
அவர் நம்மை சார்ந்த நபரும், மேலும்
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எந்தவித பிசிறும்,பிளவும் இல்லாது பின்பற்றுபவரா????
தனி நபரா????அமைப்பின் சார்பாக கொடுத்தவர???இல்லை புறநகரை சார்ந்த நம் சகோதர சமுதயதவரா???
இதன் விளக்கம் மட்டும் வேண்டும்...
இவைகளை நீங்கள் தெரியபடுத்த அஞ்சினால்,தயக்கம் காட்டினால் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாகனும்.
பல பெருமைகளை உடைய
இந்திய ஜனநயகம் இது போன்ற சம்பவங்களை
பொது நலன் வழக்கு அல்லது சிறப்புக்குரிய
தகவல் அறியும் சட்டம் வழியாகவோ
ஒவ்வொரு குடிமகனும் விளங்கும் வண்ணம்
இப்பொழுது வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளது,
வாழ்க எங்கள் பாரதம்,வளம் பெருக எங்கள் தேசம்...
நீங்களும் இதனை முழுமையாக அறிவதோடு
சிறப்புக்குரிய வக்கீல் குடும்பத்தை சார்ந்தவர்
மட்டும் அல்ல இந்த சட்டங்களின் மூலம்
பல விளக்கம் பெற்று பல நல்ல காரியங்களை
செய்துள்ளிர்கள்.
நாங்கள் கருத்து பதிவு செய்யும் பொழுது
(2) ஊர்ஜிதம் செய்யமுடியாத தகவல்
என ஒரு கட்டுப்பாடு நீங்கள் வைத்து அதனை
கருத்துக்கள் தணிக்கை/தள்ளுபடி செய்யப்படலாம் எனபதனையும் தெரிவித்து
அதன் படி செய்து வரும் நீங்கள்
செய்தியாக அதுவும் ஒட்டு மொத்த காயலையும்,காயலர்களைய்ம்
உலக அளவில் மனதை காயப்படுத்தும் ,
கண்ணியத்தை கேவலபடுத்தும் இந்த செய்திக்கு என்ன அளவுகோல் வைத்தீர்கள்.காக்கா????
மரியாதைக்குரிய முஹம்மது ஆதம் சுல்தான் காக்கா அவர்கள் அழகான முறையில் காயல் மேல் கொண்ட பாசத்தை பிரபலிதுள்ளர்கள் மிக்க நன்றி.
அன்பு காக்கா மற்றும் அருமை நண்பர்
சாளை S.I.ஜியாவுதீன் மற்றும் அனைவருக்கும் அன்று மேடையில் பேசியது அவரது தனிப்பட்ட கருத்தாக இருந்தாலும், குறிப்பாக நான் பிறந்து வளர்ந்த காயலின்
தென்பகுதியை,மக்களை அவர்கள் பெருமையாக பேசியதாக எண்ணினாலும்
அது எங்களை பொறுத்தவரை மிக மிக கண்டனதிற்க்குரியது...
நமதூர் மேடைகளில் இருந்து அமெரிக்க அதிபருக்கே
சவால் விட்ட ஆந்திராவை கூட தாண்டாத அரசியல் பிரமுகர்கள் எல்லாம் உள்ளார்கள்.
மேடை பேச்சு மேடையோடு போச்சு எனும் பாணி....
இவைகள் அரசியலில் சகஜம்....
அனைவர்களுடைய கருத்துக்கும், நம் ஊரின் மேல் இருக்கும் பாசத்திற்கும் நன்றிகள்..ஜசக்கல்லாஹ் ஹைரா.
புதுக்கடை தெருவை சார்ந்த பாரம்பரிய மிக்க
சாளை குடும்பத்தை சார்ந்த அமெரிக்காவில் இருந்து கருத்துகளை ரய்யான் டாடி ((((((இது எங்கள் சவுதியில் உள்ள நடைமுறை,மணாளன்,இன்னார் டாடி என்பது புதியதாய் உள்ளது காயலுக்கு,
அடியானும் அல்லாஹ் அருளால் மூன்று பிள்ளைக்கு
டாடி தான்,...ஒரே ஒரு பாசமுள்ள மனைவியை மணந்த மணாளன் தான்,
என் போன்று ஆயிரம் ஆயிரம் காயலருக்கும் அல்லாஹ் இந்த தகுதி,தரத்தை கொடுத்துள்ளான்.எல்லா புகழும் வல்ல அல்லாஹ்விற்கே))))
என்ற புனை பெயரில் கருத்துகளை பேரவை
ஒன்றை மட்டுமே சாடி
பதிவு செய்து வரும் சாளை.எம்.எ.சி.முஹம்மது முஹியதீன்
அவர்களே இது பேரவையை நாம்
சாடும் செய்தியோ,நேரமோ இல்லை.
உங்களை போல் எங்களுக்கும் அதை விட அதிகமாக பேரவை மீது கோபங்களும்,தாபங்களும் உள்ளன ..
அதை நாம் பின்னர் பேசி தீர்த்து கொள்ளலாம்.அங்கு இருப்பவர்கள்
நம்மை சார்ந்த நல்லவர்கள் தான்..
அமெரிக்க,ஐரோப்பா ,இஸ்ராலிய அதிபர்களோ அல்லது அராபிய மன்னர்களோ இங்கு இல்லை....இல்லை....இல்லவே இல்லை ....தம்பி
இதில் வந்துள்ள செய்தி காயலானாக பிறந்து இருந்தால்
உண்மையில் காயலை மனதார நேசிப்பவனாக் இருந்தால்
அடி மனதை இடி போல் தாக்கும் செய்திமா..
சுவர் ((மானம் ))இருந்தால் தான் அழகான சித்திரமோ ???
அழகற்ற கிருக்களோ???
இதில் குறும்பு,குசும்பு,கேலி,கிண்டல்,பொய் ,பித்தலாட்டம்,
கற்பனை,கவிதை,தனி மனித வழிபாடு இது போன்ற இஸ்லாத்திற்கு புறம்பான எந்த செயலுக்கும் இடம் நாம் நம்மை
அரியாதுகொடுத்தால்
வினை விதைத்தவன் வினை அறுப்பான்,
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்,,
எனும் என் இனிய தமிழ் மொழியின் முதுமொழி நாம் அறிந்த பாலபாடம்.
நம்மில் சில பேர் இதற்க்கு ஆளாகி இன்று வரை
அனுபவித்து வருவதை நாமும் கண் கூடாக கண்டு வருகின்றோம்.. அல்லாஹ் நம் அனைவரையும்
பாதுகாப்பானகா ஆமீன்
புகைபடத்தோடு கூடிய வாக்காளர் சிலிப்புகள் அரசு அதிகாரிகளால்
தேர்தல் கமிசன் மேற்பார்வையோடு வீடு வீடாக விநியோகித்து
வருகின்றார்கள் எங்களுக்கும் கிடைத்துவிட்டது..
பேரவை நடத்தும் தேர்வு முறையிலோ,
அல்லது அரசு நடத்தும் எந்த வித தேர்தலிலோ
கள்ள ஓட்டுகள் போடா முடியாது.
என் காயலும் எங்கள் இந்திய மண்ணின் பெருமைக்குரிய பகுதியே ...
கவலை கொண்ட கனத்த நெஞ்சத்துடன் .....
சட்னி.எஸ்.எ.கே.செய்யது மீரான்
ஸ்டார் ஹவுஸ்,மொஹ்தூம் தெரு
காயல்பட்டினம்.
29. Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்... posted bySolukku M.I. Seyed Mohamed Sahib (SMI) (Jeddah, KSA.)[13 October 2011] IP: 84.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10514
முறைப்படி புகார் தரப்பட்டிருந்தால் அந்த புகாரை யார் பதிவு செய்துள்ளார் என்ற விபரத்தை அறியலாமா. ஓட்டு போடுவதில் விறுவிறுப்பு காட்டுவார்கள் என்று அர்த்தம் கொள்ளாமே அதை விட்டு விட்டு ஏன் கற்பனைக்கு ஏற்ற படி கருத்து தரவேண்டும்?. ஒரு பொது இயக்கத்தை விமர்சிக்கும் தருணத்தில் மட்டும் குற்றம் தேடும் கண்ணாடியை அணிந்துகொண்டு பார்த்தால் பார்ப்பதெல்லாம் தப்பாகத்தான் தெரியும். எல்லோரும் மேர்மையாக வாக்களித்து அமைதி காப்போமாக.
30. Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்... posted byAbu Misbah (Jeddah - Saudi Arabia)[13 October 2011] IP: 93.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10515
அழகிய கற்பனை, தம்பி ஜியாஉதீன் மத்திய காயல் மக்கள் ஜனநாயக கடமை ஆற்றுவதிலே மிகுந்த ஆர்வம் உடையவர்கள். அவர்கள் பின்னாடி பார்த்துக்கொள்ளலாம் என்று சோம்பேறித்தனமாக இருப்பவர்கள் அல்ல. மிக வேகமாக வோட்டு போட்டுவிடுவார்கள் என்று பொருள்பட சொன்ன வார்த்தையை நீ எதற்கோ கற்பனை செய்கிறாய் தம்பி.
இந்த செய்தியே ஒரு உள்நோக்கத்துடன் வந்த செய்தியே. இதுவும் அழ(ழூ)கிய கற்பனையே. எங்கள் சட்னி காக்கா சொல்வது மிகச்சரியே.
31. அது என்ன posted byஹைத்ரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா)[13 October 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 10517
எனது மாணவ பருவத்திலுள்ள அன்பு நண்பன் சாளை பஷீர் உண்மையை தானே சொல்லியுள்ளார். (உண்மை ரொம்பவும் கசக்கும்)
செய்திலுள்ள சாராயம் விஷயத்தை தான் ஏற்க்க முடியவில்லை. அதற்க்கு அட்மின் விளக்கம் கொடுத்துள்ளார்.
ஊரின் மீதுள்ள அளவற்ற பாசம் சட்னி மீரான் அவர்களின் கருத்தில் மிகைத்து இருக்கிறது. கடந்த இடை தேர்தலில் அவர்கள் ஊரில் இருந்திருக்க மாட்டார்கள்.
சாளை ஜியாவுதீன் அவர்களின் கருத்திலுள்ள:-
""அதில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த சகோதரர் ஷாஜகான் அவர்கள், சகோதரி மிஸ்ரியா அவர்களுக்கு வாக்கு கேட்டுவிட்டு, மத்திய காயலைப்பற்றி தெரியுமா? அவர்கள் ஓட்டு போட்ட மாதிரி இருக்காது, ஆனால் 95 சதவீதம் ஓட்டு பதிவாகி இருக்கும்.""
இது என்ன வித்தையோ?
உண்மையா காமடி தாங்கோ:- பூனை கண்ணை மூடிவிட்டது. இனி அதற்க்கு உலகம்...
32. Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்... posted byKudack Mohudoom Mohamed (Kuwait)[13 October 2011] IP: 213.*.*.* Kuwait | Comment Reference Number: 10522
அட்மின் சார், பொதுவாக ஒரு செய்தி போடும்போது இறுதியாக செய்தி தந்தவன் பெயரையும் போடுவீர்கள், இந்த செய்தி கொடுத்த அந்த கள்ளன், நவீன செய்தான் யார் என்று தெரிந்து கொள்ளலாமா, நீங்களும் ஊர்ஜிதம் செய்யாமல் இந்த செய்திய போட்டுரிக்கீங்கே, நமதூர் மக்கள் சரயதுக்காகவா ஓட்டு போடுகிறார்கள், இதையும் கருத்து சொன்ன முதல் நபர் சரி என்று சொல்கிறார், தயவு செய்து செய்தி கொடுத்த அந்த கருப்பு ஆடு, அந்த கயவனின் பெயரை சொல்லுங்கள்.
33. Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்... posted byAdministrator (Chennai)[13 October 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 10526
கள்ள ஒட்டு திட்டங்கள் குறித்த செய்தி வெளியீடு பற்றி சில விமர்சனங்கள் வந்துள்ளன. இச்செய்தி ஊர்ஜிதம் செய்யப்பட்டப் பின்னரே வெளியிடப்பட்டுள்ளது என்பதனை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறோம்.
1. கள்ள ஒட்டு குறித்த புகார் நேராடியாக வழங்கப்பட்டுள்ளதாக இணையதளம் அறிகிறது
2. மேலும் அதே புகார்கள் - Fax மூலமும் அனுப்பப்பட்டுள்ளதாக இணையதளம் அறிகிறது
இணையதளம் நேரடியாக பெறும் செய்திகளுக்கு தகவல் வழங்குவோர் பெயர் வெளியிடப்படுவதில்லை.
34. புரிந்தும் புரியாதவர்கள் posted byNoordeen Prabu (Jeddah-Saudi Arabia)[13 October 2011] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10531
சட்னி செய்து மீரான் அவர்களே! உங்கள் கருத்து மிகவும் அருமை. நீங்கள் ஆதங்கப்படுவதில் நியாயம் உள்ளது. ஆனால் அதில் சில இடங்களில் தனி நபர் சாடல் உள்ளது. சம்பந்தப்பட்டவர் மனது புண்படும். அதை நீங்கள் தவிர்த்து இருக்கலாம்.
அடுத்து இந்த comments பகுதியில் ஒரு குறிப்பிட்ட சில பேர் மட்டும் (மிக மிக ஒற்றுமையாக) எதற்கெடுத்தாலும் ஐ.பேரவையை குறை சொல்வதிலேயே குறியாக உள்ளனர். அவர்களின் நாட்டம் ஒன்று. நடந்தது வேறு. பொறியில் சிக்கிய எலி கதை. ஐ.பேரவையையும் 100 % சரி காண்பதற்கில்லை. அதற்காக எதற்கெடுத்தாலும் குற்றம் குறையா?
இப்போது வேறு சிலர் - பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டிக்கொண்டு இருக்கிறார்கள். ஏனெனில்
அது அவர்களின் ஜனநாயகக் கடமையல்லவா?
இதெல்லாம் புரிபவர்களுக்கு புரியும். சில பேர் புரிந்தும் புரியாதது மாதிரி நடிப்பார்கள்.
35. Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்... posted bykatheeja (kayalpatnam)[13 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 10532
அஸ்ஸலாமு அழைக்கும்
சொல்லுற விஷயம் நல்லதா இருந்த அதை எடுத்துக்க வேண்டியது தானே அவங்க பேர் தெரிஞ்சு என்ன ஆக பொது...நானும் நினைத்தேன் சில ஏறியாக்களில் கள்ள வோட்டு போடா மக்களை ரெடி பண்ணிட்டு தான் இருக்காங்க....வெற்றியோ தோல்வியோ அது வீரனுக்கு அழகு..அதுக்காக கள்ள வோட்டு போடு தான் வின் பண்ணநும் நா அதுக்கு பேரு வேற
36. கள்ள ஒட்டு கை வந்த கலை..ஆனால் காசுக்காக அல்ல posted byDR DMOHAMED KIZHAR (chennai)[13 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 10535
அஸ்ஸலாமு அலைக்கும்...
கள்ள ஊடு போடுவது நமக்கு ஒன்று புதிது அல்ல..நமக்கு கை வந்த கலை.. ஆனால் போட்ட முறை தான் , சற்று வித்தியாசம்.. பத்து பதினைந்து வருதர்த்திர்க்கு முன், நமதூர் காரர்கள், ஒட்டு மற்றும் கள்ள ஒட்டு போட , சொந்த வேலைகள், தோழிகளை விட்டு விட்டு, சொந்த செலவில் வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து வந்து உள்ள நிகழ்வுகள் உள்ளன..காரணம், அன்று DMK மீது உள்ள அளவு கடந்த பாசமும், DMK க்கு ஒட்டு போடுவது, நம்மீது உள்ள ஆறாவது கடமை போலவும் எண்ணி , நமது பணம், பலம் செலவழித்து போட்டோம்..சிலர் கலைஞரே DMK வீடு விலகினாலும், தங்கள் என்றுமே DMK தான் என்ற நிலையில் உள்ளனர்.....1999 நாடாளு மன்ற தேர்தலில், DMK ,பிஜேபி உடன் கைகோர்த்தபோது,dmk மீது உள்ள கள்ளகாதளால், நம்மில் dmk ஒட்டு போட்டவர்கள் எத்தனையோ பேர் உள்ளனர்..admk க்கு ஒட்டு போடவேண்டும் என்று முடிவெடுத்து, தெரியாமல் கை உதயசூரியனில், குத்திய நடப்பும் உண்டு..
ஆனால் இந்த நிலை எல்லாம், கடந்த இடைதேர்தலோடு மாறி விட்டது.. பணம் மற்றும் போர்வை பெற்று கொண்டு ஒட்டு போட்டதன் மூலம், அன்றே நமதூர் தரம் தாழ்தி போனது..அதனால் பணத்துக்கு ஒட்டு என்பது புதியது அல்ல. அனால் கயலின் மைந்தர்கள், என்றும் சாரயதிர்க்கு ஒட்டு போட மாட்டார்கள்... அதற்காக இனைய தளைத்தை குறை கூறுவதை ஏற்கமுடியாது..அவர்களுக்கு வந்த நியூஸ் அப்படியே CONFIRM செய்து போடுகிறார்கள்..KAYALPATNAM . COM , நமதூர் நகரமன்ற தேர்தலில், செய்திகளை தருவதில்,எல்லா தரப்பினர்க்கும் வாய்ப்பு அளித்து வந்து உள்ளது..நடுநிலை தவறி, ஒரு சாரார்க்கு சாதகமாக முடிவு எடுக்க, முகாந்திரம் இருந்தும், நடுநிலையுடன் தான் நடந்து உள்ளது..செய்தி தளத்தை குறை கூறாமல், செய்தி யை குறை கூறுங்கள்..
உங்கள் ஓட்டை ஜனநாயக முறையில் நீங்கள் விரும்பும் வேட்பளர்க்கு அளிவுங்கள்..கள்ள ஒட்டு போட முடிவெடுத்தவர்கள், போடும் முன் சற்று ஒரு கணம், ஓசித்து, மார்க்க அடிப்படையில் தாம் செய்யும் காரியம் சரியாய் என்று முடிவெடுங்கள்.. இந்த கருத்து உதங்கள்,இந்த தேர்தலுடன் முடிந்து , நாம் பழைய நிலைக்கு திரும்புவோம்..ஆரோக்கியமான சகோதர உதமாகவாய் இந்தால் தேர்தல் களம் அமையட்டும்.. தேர்தலுக்கு பின், தேர்ந்து எடுக்க பட்டவர்களுக்கு, அவர் ஏறானாலும் அவருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்..
37. Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்... posted byMohideen (Jeddah)[13 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10536
அட்மின் அவர்களே,
பணம் படைத்தவர்கள் பதவிக்காக பணம் கொடுக்கத்தான் செய்வார்கள், கடைசியில் இங்கு உள்ள சண்டைக்காக அவர்களை police வந்து அள்ளிவிட்டு போக போகிறார்கள். என்னதான் இருந்தாலும் அவர்களும் நம்ம சொந்தகாரர்கலாகதான் இருக்க போகிறார்கள்.நாமளே நம்மை கெடுத்த மாதிரி இருக்கும்.
ஒரு சின்ன ஆலோசனை.
ஊரில் உள்ள எல்லா ஜமாத், peravai, etc.... எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு கூட்ட்ம் போட்டு பணம் கொடுத்தாலும் வாங்கக்கூடாது என்று கூறினால் நன்றாக இருக்கும். நாம் பணம் வாங்காவிட்டால் அவர்கள் யாரிடத்தில் கொண்டு போய் கொடுப்பார்கள்.
இந்த கருத்தின் copy ஜ எல்லோரிடமும் கொடுக்க வேண்டுகிறேன். இதிலாவது மாற்று கருத்து இல்லாமல் ஒற்றுமையாக இருக்கிறார்களா என்று பார்போம்.
38. Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்... posted byQMER ANAS. (DOHA QATAR)[13 October 2011] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 10537
மீரான் தூள் கிளப்பிட்ட போ. அம்பா இருக்கு ஒவ்வொரு வாக்கியமும்!!! இதெல்லாம் இரத்தத்தோடு ஊறியவர்களுக்கு மட்டுமே வரும்.
சென்னையில் இருந்து அட்மின் தந்த ஊர்ஜித விளக்கம், தகவல் தந்தவரிடமே ஊர்ஜிதமானவர் என்று கூறுவது போல் உள்ளது. தகவல் தந்த அந்த புண்ணியவான் பெயர் வேண்டாம். உர்ஜிதவாளியின் பெயரையாவது வெளியிடுங்கள். தெரிந்து கொள்கிறோம்.உத்தமரை!!!
ஊர் என்று வரும்போது கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி, எங்கள் செய்திகளை வெட்ட கத்தரி கோல் பயன்படுத்துவது போல் இதற்கும் பயன் படுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். மற்றவர்களுக்கு மீரான் கொடுத்ததே போதும்.
39. Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்... posted bySHAIK MMS (HONG KONG)[13 October 2011] IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 10538
கள்ள வோட்டு போடுவது யார் என்று மக்களுக்கு இன்னும் புரியவில்லை போலும். 14000 வோட்டு POLLLING ல் 6000 வோட்டு போட்டு தலைவி ஆகபோவது உறுதி. மீதமுள்ள 8000 VOTE நாம 6 சம பங்காக பங்குபோட்டு கொள்ளவேண்டியதுதான்!!!. மக்கள் புரிந்துக்கொண்டு புத்தியோடு VOTE போட்டால் நல்லது. நல்லதே நடக்கணும் என்று துவா செய்வோமாக!!
40. Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்... posted byShahul Hameed (Hong Kong)[13 October 2011] IP: 180.*.*.* Hong Kong | Comment Reference Number: 10541
முன்பு புயல் சின்னம் மொட்டை கடிதம் கலாச்சாரத்தில் இருந்ததது. இப்போது அது போட்டு கொடுக்கும் கலாச்சாரத்தில்
மையம் கொண்டுள்ளது. இது தீவீரம் கொண்டால் காயலை அல்லாஹு தான் காப்பாத்த வேண்டும்.
41. Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்... posted byhylee (colombo)[13 October 2011] IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 10542
இப்படி தவறான புகார் கொடுத்தது யார் என்று தெரியவில்லை.கள்ள ஓட்டூ போட இதுவரை நமதூரில் சாப்பாடு,மற்றும் இதர வகை ஏதும் கொடுக்கவில்லை.ஆனால் ஒரு நிறுவனத்தை கைப்பற்ற நடந்த வாக்களிப்புக்கு,பெயர் பதிய சாப்பாடு மற்றும் இதர வகை எல்லாம் கொடுக்க பட்டது உண்மை.
42. Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்... posted byK S MUHAMED SHUAIB (KAYALPATINAM)[13 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10545
"கள்ள ஒட்டு "குறித்து இங்கு நமது காயல் கண்மணிகளின் கொந்தளிப்பு என்னை பெரும் பரவச உணர்வில் ஆழ்த்தியது. (இதில் எழுதி இருக்கும் பலரும் கூட கள்ள ஓட்டுக்கு தப்பியவர்கள் யாரும் இருக்க முடியாது என்பதே என்அனுபவம்)சாராயம் எனபது போன்றவை வேண்டுமானால் சற்று அதிகப்படியாக இருக்கலாம்.
ஆனால் யாருமே இங்கு கள்ள ஓட்டுபோட மாட்டார்கள் என்பதெல்லாம் உண்மைக்கு புறம்பான கூற்று கள்ள ஒட்டு போடசென்னையில் இருந்தெல்லாம் நிபுணர்கள் வரவேண்டாம். அதில் பேர்பெற்ற உலகத்தர நிபுணர்கள் இங்கேயே உண்டு. தயவு செய்து இங்கு கருத்துக்களை பதிவு செய்யும் என் அன்பு உடன் பிறப்புகள் "போலி உணர்ச்சிகளுக்கு" ஆளாக வேண்டாம். உண்மையை உண்மையாக எதிர் கொள்ளுங்கள்.
43. Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்... posted byrecaz sulaiman (saudi arbia)[13 October 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10552
எனது அருமை சகோதரர் சுஐபு அவர்களே, கள்ள வோட்டு என்னமோ "உடன்பிறப்புகள்" மட்டும் தான் போடுவாத எழுதி உள்ளீர்களே, ஏன் "இரத்ததின் இரத்தங்கள்" எல்லோரும் மிக நேர்மையானவர்களா ? அவர்கள் என்ன மகாத்மா காந்தியின் பேரபிள்ளைகள ? அல்லது அறிசந்தரனின் அடுத்த வீட்டு பிள்ளைகளா? கொஞ்சம் உங்கள் நெஞ்சில் கை வைத்து சொல்ளுங்கள்.
கழுதையின் முன் வட்டை வேறு பின் வட்டை வேறா? அரசியலில் எல்லா கழுதையும் ஒண்ணுதான்.
அஸ்ஸலாமு அழைக்கும்
எனது காயல் அன்பு சகோதரர் , சகோதரி அனைவர்களுக்கும்
ஒரு வேண்டு கோல் ,
கள்ள ஒட்டு போடா நினைபவர்கள் , சற்று சிந்தித்து பாருங்கள் ,
ஒரு கள்ள ஒட்டு போட வேண்டும் என்பதற்காக உங்களை பெற்ற தந்தையை மாற்ற போகிறீர்கள, இல்லை நம்மளை பெற்ற உம்மா வின் கணவரை மாற்ற போகிறீர்களா
நான் இவ்வாறு எழுது இருகிரேன் என்று என்னை தப்பாக
நினைத்து விடாதீர் கள் ,
கள்ள ஒட்டு போடும் முன்பு சற்று சிந்தித்து பாருங்கள்
ஒரு ஒட்டு காக வேண்டி குடும்பத்தை அசிங்க படுத்தி விடாதீர்கள்
அட்மின் :
இந்த கமெண்ட்ஸ் கொஞ்சம் கட்டமாக தான் இருக்கும் என்று நினைகிறேன , எனக்கு வலி தேறிய வில்லை
கள்ள ஒட்டு போட நினைக்கும் ஓவருவருகும் இது பூஸ்ட் குடுக்கும் என நினைத்து இங்கு என்னுடைய கருத்தை பதிவு செய்கிறான் தவறுதலாக இருப்பின் மன்னித்து விடவும்
46. Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்... posted byK.D.N.MOHAMED LEBBAI (JEDDAH)[13 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10558
ஹெலோ .எந்த காலத்தில் நம் ஊரில் சாராயம் கொடுத்து கள்ள ஒட்டு போட சொன்னாங்க. தேவை இல்லாமல் ஊர் பேரை கலங்க படுத்தாதீங்க. அனாவசியமா வழிபாட்டு தளங்களை எல்லாம் இழுக்காதீங்க >>>>>
47. Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்... posted byAbbas (USA)[13 October 2011] IP: 209.*.*.* United States | Comment Reference Number: 10566
எல்லாத்துக்கும் அஸ்ஸலாமு அழைக்கும்
ஊர் விசயத்தை தெரிஞ்சிக்க daily இந்த சைட் க்கு விசிட் அடிக்கிற என்ன மாதிரி நண்பர்களுக்கு இந்த election நியூஸ் வந்து தலைய சுத்த வச்சிட்டுபா, யார் பக்கம் உண்மை இருக்குனு ஒரே குழம்பி போய் ஆளை விடுங்கப்பான்னு சொல்ல தோணுது. ஆனா முச்சரிக்கைன்னு ஒரு subject பத்தி
atleast நான் தெரிஞ்சிகிட்டேன்.
எப்படியாவது மக்களை under one umbrella கொண்டு வர எல்லாருமே நினைக்கிறாங்க ஆனா அதுக்கு ஒரு attempt நடந்தா அதுல என்ன mistake பிடிக்கலாம்னு கிளம்பிடுறாங்க, atleast they are trying to bell the cat . Friends with difference of opinions should come up with a solution instead of using someoneelse time (on the clock ) to citicize , argue and fight among ourselves
Ubaidullah கக்கா சொன்ன மாதிரி Please show us the directions not the diversions to our community .
Br . மீரான் அவங்கோலட கமெண்ட்ஸ் ல ஊரோட அக்கறை ரொம்ப clear ஆ தெரியுது. Please keep it up .
ஹசன் சார் கமெண்ட்ஸ் ளையும் ஊர் ஒற்றுமையா இருக்க என்ன பண்ணலாம்னு தெரிஞ்சிக்க முடியுது,
புதுசா இப்ப கள்ள சாராய மேட்டர் வந்திருக்கு. தயவு செஞ்சி இதையும் பெரிய issue ஆக்காமல் try to difuse it because we dont want to form another 2 groups to comment and fight over this .
Bottom line :
We are all the people of book (I mean the Holy Quran lol )
Please lets not apply the western policy of " Divide and rule '
48. நாங்கள் பிறந்த நேசிக்கும் காயலையும்,எங்களோடு பிறந்துள்ள அனைத்து காயலர்களின் சார்பாகவும் வேண்டுகின்றேன்... posted byசட்னி.எஸ்.எ.கே.செய்யது மீரான் (காயல்பட்டினம் )[13 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10568
அஸ்ஸலாமு அலைக்கும்...
ஓன்று ,,,,,,,,,,,
News ID # 7366
புதன், அக்டோபர் 12, 2011
நாகர்கோயிலில் நடந்த கராத்தே போட்டிகளில் காயலர்கள் பரிசுகள் வென்றனர்!
செய்தி: காயல்பட்டணம்.காம்
சென்செய் A. இர்ஃபான் (மூன்றாம் நிலை கருப்புப்பட்டை),
75/13G, சின்ன நெசவுத்தெரு.
மொபைல்: 99656 50008
ஈமெயில்: irfankarade@rediffmail.com
இரண்டு,,,,,,,,,,,,,
News ID # 7353
ஞாயிறு, அக்டோபர் 9, 2011
News ID # 7364
புதன், அக்டோபர் 12, 2011
உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர்மன்றத் தலைவர் தேர்தல் குறித்த மலபார் கா.ந.மன்ற செயற்குழு தீர்மானம் குறித்த விமர்சனங்களுக்கு, அவசர செயற்குழு விளக்கம்!
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
தகவல்: S.E.செய்யித் ஐதுரூஸ் (சீனா),
கோழிக்கோடு, கேரள மாநிலம்.
நான்கு,,,,,,,,,,,
News ID # 7361
செவ்வாய், அக்டோபர் 11, 2011
காயல்பட்டணம் - சென்னை வழிக்காட்டு குழு (KCGC) ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது!
செய்தி: காயல்பட்டணம்.காம்
தகவல்:முஹம்மது முக்தார்
ஐய்ந்து,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
News ID # 7342
வியாழன், அக்டோபர் 6, 2011
புதுப்பள்ளி நிர்வாகத்தின் உள்ளாட்சி தேர்தல் பற்றிய இரண்டாவது அறிக்கை!
செய்தி: காயல்பட்டணம்.காம்
தகவல்:S.A. முஸ்தபா (செயற்குழு உறுப்பினர்)
News ID # 7349
ஞாயிறு, அக்டோபர் 9, 2011
நகர்மன்ற தேர்தலில் தன நிலைப்பாடு குறித்து காயல்பட்டணம் நல அறக்கட்டளை அறிக்கை!
செய்தி: காயல்பட்டணம்.காம்
தகவல்:காயல்பட்டணம் நல அறக்கட்டளை//
ஏழு...................................................................
News ID # 7371
வியாழன், அக்டோபர் 13, 2011
காக்கும் கரங்கள் அமைப்பின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது!
செய்தி: காயல்பட்டணம்.காம்
தகவல்:
எம்.ஏ.கே. ஜைனுலாப்தீன்
அன்பு அட்மின் அவர்களே
இது போன்று ஏழு மட்டும் அல்ல ஆயிரம் கணக்கில் எத்தனையோ செய்திகள், தகவல் தந்த நபரின்
விபரம்,விலாசங்களுடன் அதுவும் உங்கள் ஆம் உங்கள் வலைதளத்தில் நிறைந்து கிடக்கின்றன..
ஆயினும் நீங்களோ??????????????
1. கள்ள ஒட்டு குறித்த புகார் நேராடியாக வழங்கப்பட்டுள்ளதாக இணையதளம் அறிகிறது
2. மேலும் அதே புகார்கள் - Fax மூலமும் அனுப்பப்பட்டுள்ளதாக இணையதளம் அறிகிறது
இணையதளம் நேரடியாக பெறும் செய்திகளுக்கு தகவல் வழங்குவோர் பெயர் வெளியிடப்படுவதில்லை.
எதற்காக காக்கா இந்த தயக்கம் அழித்து,ஒழித்து விடுவார்கள் என்றா???
ஆயினும் தெரிகிறது இது பேரவை சார்ந்தவர்கள்
கொடுத்து இருக்க மாட்டார்கள் ஏன் என்றால்??
நீங்கள் எந்த காரணம் கொண்டும் தயக்கமோ,தாமதமோ
இல்லாது வெளி இடுவிர்கள் என்று அறிவார்கள்
ஆறு அறிவு படைத்த சிறுவர்கள் கூட..
எந்த காரணம் கொண்டும் இது நாள் வரை நீங்கள்
கட்டி காத்து வந்த நம்பகத்தன்மை தனை இழந்து
விட வேண்டாம் என்று உங்களில் ஒருவனாக
உள்ள என் அன்பான வேண்டுகோள் ....காக்காமார்களே.
பேரவையை எல்லா வகை,வழியிலும் குற்றம்,குறை காணும் நவீன குறள்வாதி அன்பு சகோதரர் சாஜித்,
அண்ணா திமுக வின் ஆரம்ப கால அதி தீவிரவாத நேசர்
அன்பு காக்கா குளம் ,ஸுஐபு..
மரியாதைக்குரிய மக்கள் மருத்துவர் சகோதரர் ,கிஜார்அவர்களே
காயலர்கள் கள்ள ஒட்டு மட்டும் தான் போடுகின்றர்களா???
உங்களுக்கு தெரிந்து எந்த விதமான கள்ளத்தனமும்
பண்ணவில்லை என்று உங்கள் நெஞ்சைத்தொட்டு
சொல்ல முடியுமா?????அல்லாஹ்வை முன்னிறுத்தி ????
இப்பொழுது குத்துது ,குடையுது இல்லையா????
மனது பட படக்குது இல்லையா???? இப்படி இருந்தால் தான்
காயலான் சூடு,சுரணை கொஞ்சமாவது உள்ளவன் என்று அர்த்தம்..
எந்த கட்சிகரர்களோ,பகுதிகாரர்களோ, எவனோ செய்வதற்கு
ஒட்டு மொத்த காயலர்களையும் இதனால்உலக அளவில் கலங்கப்படுத்தனுமா??
புகார் கொடுத்த புண்ணியவான் அதோடு அவருக்கு மட்டும்
தெரியும் வண்ணம் இருந்து இருந்தால் நமக்கு பிரச்சினை இல்லை??அது அவரது இஷ்டம்,,,நாம் தலை இட முடியாது....
பொது ஜன ஊடகத்தில் நீங்கள் வெளியிட்டு எங்களை சிறுமை படுத்தியது கஷ்டமே..காக்கா
காயலில் காவல் நிலையம் வேண்டால் இல்லை என்று நாம் மார்த்தட்டலாம் ஆனால்??? எத்தனை உளவு பிரிவு அதிகாரிகள் நம்மை சுற்றி வந்து அணு அணுவாக
கண்கானிக்கின்றர்கள் தெரியுமா????அது அவர்களின் பணி...
நமக்கு தெரியாதது அவர்களுக்கு முழுமையாக தெரியும்...
ஏதும் சட்டம்,ஒழுங்கு பிரச்சினை,மற்றும் தேச விரோத செயலில் யாரும் ஈடுபடுவோர்,மற்றும் தீய செயலில் உள்ளோர்கள்
அனைத்தையும் கண்காணித்து அரசுக்கு தினம் தினம் அறிக்கை கொடுப்பார்கள்.. ஆளும் அரசு அவர்களுக்கு அளித்துள்ள பணி..
இதனால் இவர் புகார் கொடுத்து தான் அரசுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை...தேவையும் இல்லை .....
இது உலகில் உள்ள எல்லா அரசும் செய்யும் சீரிய பணி...
இப்படி இருந்தால் தான் நம்நாடு அமைதியும் ,வளர்ச்சியும் அடைவதோடு மக்கள் அச்சம் இன்றி வாழ அரசுகள் செய்யும் சேவை ஆகும்.வாழ்க ஜனநாயகம்
இன்றைய தினகரன் செய்தி தாளை பாருங்கள்
நம்மை சுற்றி உள்ள எத்தனையோ ஊர்களில்
தேர்தல் தில்லுமுல்லுகள் நடந்துள்ளன
இதற்காக அரசு அதிகாரிகள் எடுத்துள்ள
நடவடிக்கைகள் விபரமாக உள்ளன.
ஆனால் இது நாள் வரை வந்த செய்திகளில்
நம் ஊரில் ஒரு சிங்கிள் டீ யோ ,ஓமப்பொடி முறுக்கோ,சாலவடையோ ,
பரோட்டா செட் அல்லது பிரியாணி பொட்டலம் கொடுத்தார்கள்
என்ற செய்தியோ இல்லை இதற்காக நாம் எல்லோரும்
சந்தோசம் அடையணும்....
நாங்கள் பிறந்த மேலும் நேசிக்கும் காயலையும்,
எங்களோடு பிறந்துள்ள
அனைத்து காயலர்களின் சார்பாகவும்
மிக்க அன்புடன் வேண்டுகின்றேன்...
கவலை கொண்ட கனத்த நெஞ்சத்துடன் .....
சட்னி.எஸ்.எ.கே.செய்யது மீரான்
ஸ்டார் ஹவுஸ்,மொஹ்தூம் தெரு
காயல்பட்டினம்
49. Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்... posted byAdministrator (Chennai )[13 October 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 10571
சகோதரர் சட்னி மீரான் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்,
இச்செய்தி குறித்து தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்ட பின்னரும், தாங்கள் தொடர்ந்து சந்தேகங்களை எழுப்புவது வியப்பாக உள்ளது.
ஆதாரமற்ற செய்திகளை காயல்பட்டணம்.காம் என்றும் வெளியிட்டதில்லை - இந்த செய்தி உட்பட. இதனை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அதற்க்கான அவசியம் இந்த இணையதளத்திற்கு இல்லை. இந்த இணையதளத்தை எங்கள் பொழுது போக்கிற்காகவோ, லாபத்திற்காகவோ நாங்கள்
நடத்தவில்லை. இவ்விணையதளம் மூலம் - நல்லது செய்ய நாடியுல்லோமே தவிரே, தீமையை அல்ல.
ஊடகம் என்பதால் - எங்களிடம் பல செய்திகள் - பலரால் தரப்படுவது உண்டு. அவைகள் அனைத்தையும் நாங்கள் வெளியிடுவதில்லை. சில
சமயங்களில் - அச்செய்தி உண்மை என அறிந்தும் - அதற்கான நேரடி ஆதாரம் இல்லாத பட்சத்தில் நாங்கள் வெளியிட்டதில்லை. இது பலருக்கும்
தெரியும், உங்களையும் சேர்த்து.
கடந்த சில தினங்களுக்கு முன் - ஒரு செய்தி குறித்து தங்களை தொடர்பு கொண்டதும், அச்செய்தியில் உண்மை உள்ளது என்பதையும், ஆனால்
இதுவரை அச்செய்தியை நாங்கள் வெளியிடவில்லை என்பதும், வெளியிடாததற்கு காரணம் அதற்க்கான சாட்சிகள் பெயரை வெளியிட விரும்பாததே
என்பதும் தங்களுக்கு தெரியும். இது போன்ற பல செய்திகளை - உண்மை என அறிந்தும், ஆதாரங்கள் குறைவு என்பதால் நாங்கள்
வெளியிட்டதில்லை.
நீங்கள் கேள்வி எழுப்பும் நடப்பு செய்தியை பொறுத்த வரை பெறப்பட்ட வெவ்வேறு செய்திகளின் சாராம்சமே அது.
செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் மூன்றே :
(1) காயல்பட்டின தேர்தல்கள் குறித்து புகார்கள் சமர்பிக்கப்பட்டுள்ளது
(2) அப்புகார்களில் - கள்ள ஒட்டு, பணம் - சாராயம் பட்டுவாடா திட்டங்கள் தீட்டப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது
(3) புகார்களை நாம் யாரிடம் தெரிவிக்கவேண்டும்
இச்செய்தி வெளியிடும்முன் நாங்கள் ஊர்ஜிதம் செய்யவேண்டியது -
-- ஏதாவது புகார்கள் உண்மையாக சமர்பிக்கப்பட்டுள்ளதா,
-- அப்புகாரில் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது,
-- அதற்க்கு நகரில் சாத்தியம் உள்ளதா
இவைகளை ஊர்ஜிதம் செய்தோம். புகார் நேரடியாகவும், Fax மூலமும் கொடுக்கப்பட்டுள்ளது. அப்புகாரில் - சில அமைப்புகளும், சில நபர்கள்
பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் - நாங்கள் செய்தி வெளியிடும்போது, அமைப்பின் பெயரையோ, நபர்கள் பெயரையோ வெளியிடவில்லை.
தேர்தல் காலங்களில் இதுபோன்று நடைபெறுவதும், குற்றச்சாட்டுகள் எழுவதும் அனைவரும் அறிந்தது.
ஒரு விஷயம் நடந்தது என்றால் அதற்க்கு ஆதாரம் தேடலாம். ஒரு விஷயம் குறித்து திட்டம் தீட்டப்படுகிறது என்று வரும்போது, ஆதாரங்கள்
எளிதல்ல. எனவே - இச்செய்தியை பொறுத்தவரை, இது நகரில் நடக்க சாத்தியம் உள்ளதா என்பதை மட்டும் நாங்கள்
யோசிக்கவேண்டியிருந்தது.
இது போன்ற சம்பவங்கள் - பல முறை நகரில் நடந்துள்ளன என்பது ஓரளவு விபரம் அறிந்தவர்களுக்கு தெரியும். நாம் நகரம் என கூறும்பொழுது - அனைத்து பகுதியையும் குறிக்கும் என்பதனை மறந்து விடாதீர்கள்.
இவைகளை கணக்கில் கொண்டே - அமைப்புகள்/நபர்கள் பெயர்கள் நீக்கப்பட்டு, இச்செய்தியில் யாரையும் குறிப்பிட்டு குற்றம் சாட்டாமல், புகார்கள் எழுந்துள்ளது என்ற தகவல், அதில் எது குறித்து நாம் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்ற தகவல், புகார்களை நாம் யாரிடம் தெரிவிக்கவேண்டும் என்ற தகவல் ஆகியவற்றை மட்டும் வழங்கியிருந்தோம்.
மேலும் - தகவல்களை எமக்கு வழங்கியவர் ஒருவர் அல்ல, பலர். அவர்கள் பெயரை நாங்கள் குறிப்பிடவில்லை. காரணம் - அவர்கள் தந்த செய்தியில் நாங்கள் பயன்படுத்தியது, புகார்கள் சமர்பிக்கப்பட்டுள்ளது என்ற விபரம் மட்டுமே, வேறொன்றும் இல்லை.
இதில் நகருக்கு என்ன களங்கம் வந்துவிட்டது என்று தெரியவில்லை. மக்கள் கள்ள ஒட்டு போன்ற விசயங்களில் உஷாராக இருங்கள் என்று செய்தி வெளியிடுவது குற்றமா?
50. சும்மா ஏன் சார் டென்ஷன் ஆறீங்க...ka posted byM Sajith (DUBAI)[13 October 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10579
பொதுவான செய்தி, நாம கேள்வி படாத விஷயமுமில்லை..
உங்க பாஷைல சொன்ன ' நடமுறையில் உள்ளது தானே.. அதுவும் கால காலமா..!! (சாரய சமாச்சாரம் வேனும்னா புதுசா இருக்கலாம்)
இதுல ஏன் மீரான் காக்காவுக்கு மட்டும் குத்துது கொடையுதுன்னு இந்த வாழமட்டைகளுக்கு தெரியல..நீங்களாவது அந்த கற்பூரத்த கொளுத்தி போட கூடதா?
ஊர் நலனுன்னுதான் ஒரு பேரவையையும் 23 ஜமாத்து, 15 பொது நல அமைப்பையும் வச்சி கதை சொல்லுறீங்களே இதுல உங்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு கோவம்.
வேற தப்பே நடக்கலயான்னு ஒரு கேள்வி வேற கேட்டிருக்கீங்க, அது சம்பந்தமா செய்திவந்தா அத பேசியிருப்போம், எந்த தப்ப பேசனுமுன்னு வேனும்னா ஆரம்பிச்சி வைங்க.. பேசுவோம்.
எத சொன்னலும்தான் ஊர் ஒத்துமைய ஊறுகாய் போட்டதா சொல்லுவீங்களே புதுசா என்ன சொல்லிட போறீங்க
என்னை போல வாழைமட்டைகளுக்கு பேரவை பெர்மிசனெல்லாம் தேவையில்லை.. உடனே ஸ்டார்ட் பண்ணலாம்..
51. Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்... posted bySolukku M.I. Seyed Mohamed Sahib (SMI) (Jeddah, KSA.)[13 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10580
மதிப்புக்குரிய அட்மின் அவர்களே, உங்களுக்கு நேரடியாக புகார் தந்தவர்கள் யார் என்று நீங்கள் சொல்லவேண்டாம், ஆனால் பாக்ஸ் வழியாக புகார் யாரிடமிருந்து யாருக்கு சென்றுள்ளது என்பதை தெரிவிக்கலாமே? அல்லது யாரிடம் புகார் சென்றுள்ளது என்று தெரிவித்தாலாவது அப்படி புகார் செய்தது யார் என்று தகவல் அறியும் வழியாக நாங்கள் அறியலாமா, உங்களுக்கு தர விருப்பமில்லை என்றால் அதையாவது தெரிவியுங்களேன்.
ஒருவர் எழுத்து மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு புகார் தந்திருந்தால் அவர்களும் தகுந்த முகவரி இல்லாமல் ஏற்க மாட்டார்கள், அப்படி பொது நலனில் அக்கறையுள்ள(?) அந்த நபர் யார் என்பதை அறியத்தான் ஆவலாய் உள்ளோம்.
52. Transparency posted byNoordeen Prabu (Jeddah - Saudi Arabia)[14 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10584
மை டியர் அட்மின் அவர்களே.
நாங்கள் உங்கள் ஜனநாயக கடமை, பத்திரிகை தர்மம் எல்லாவற்றையும் மனதார பாராட்டுகிறோம்.
இந்த செய்தி உங்களுக்கு தகவலாக தெரிவிக்கப்படவில்லை என்பதையும் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அந்த புகாரை அளித்தவர் விவரம் உங்களுக்கு தெரியுமா? அப்படி தெரிந்திருக்கும் பட்சத்தில் புகார் அளித்தவர் பெயரை வெளியிடுவதில் என்ன தயக்கம். அப்படி அவர் அல்லது அந்த இயக்கத்தின் பெயரை வெளியிடக்கூடாது என்று பத்திரிக்கை தர்மத்தில் உள்ளதா?
நீங்கள் புகார் அளித்தவரின் பெயரை அறிவிக்காத பட்சத்தில், பொது மகா ஜனங்களுக்கு நீங்களே கூட புகார் அளித்திருக்கலாம் என்று உங்கள் மீதே சந்தேகம் எழலாம். ஏற்கனவே எதற்கெடுத்தாலும் குற்றம், குறை காண்பதற்கென்றே ஒரு கூட்டம் நமது வலை தளத்தில் உலாவிக்கொண்டு இருக்கிறது. அவர்கள் உங்களையும் குத்தி குதறி எடுத்து விடுவார்கள் (ஐக்கிய பேரவையை நாறடிப்பது போல). Transparency பற்றி எல்லாம் வாய் கிழிய பேசுவார்கள். இதற்கு மேல் உங்கள் விருப்பம்.
53. Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்... posted byM.சுல்தான் (சூடான்)[14 October 2011] IP: 41.*.*.* Sudan | Comment Reference Number: 10588
அப்பப்பா... எல்லோருடைய கருத்துகள் எல்லாம் சும்மா சரவெடியா இருக்கு....
கள்ள ஓட்டு கய்யாலாகாதவனின் செயல் இதை செய்ய மாட்டார்கள் எம் காயலர்கள்...
காசுக்காக உரிமையை விற்க்க மாட்டார்கள் எம் காயலர்கள்....
எல்லா எலெக்சன் நேரத்திலயும் கள்ள ஓட்டு போட்டு அங்கே மாட்டினார்கள்... இங்கே மாட்டினார்கள் என்று செய்திகளை பேப்பரில் படித்து இருப்போம் ஆனால் காயல்பட்டனத்தில் கள்ள ஓட்டு போட்டார்கள் என்ற செய்தி இதுவரை எனக்கு நினைவு தெரிஞ்சு நான் பார்த்தது இல்லை...
எல்லோரும் சொல்லுவது போல நம்ம ஊருல தான் சாராயம் இல்லை,
நீங்கள் எல்லாம் சொல்லும் காயல்பட்டினம் LK appa, VMS Hajee ,இது போன்ற நல்லவர்கள் இருக்கும் பொது இருந்தது
அதை கண்டிப்பாக நான் தலை சைகிறேன் ,
இன்றைய காயல்பட்டினம் , வேலை ஒன்றும் செய்யாமல் ஊரில் நடப்பதை போனில் சொல்லுவதுக்கு சம்பளம் குடுகிறார்கள் செல்வம் படைத்தவர்கள் , அந்த செல்வம் படைத்தவருக்கு இன்று காயல்பட்டினத்தில் வேலை செய்ய அரசியலில் பழுத்தவர்கள் கூட துணை இருகிறார்கள் ,
இப்படி நிறைய சொல்லி கொண்டு போகலாம் ,
என்னுடைய ஒரே வேண்டுகோள்
அன்றைய கயல்பட்டினத்தை கொண்டு வாருங்கள் ,
அன்றைய கயல்பட்டினதில 6pm ஆனா Quaran ஓதும் சத்தம் தான் விளங்கும் ,
இன்று என்ன நடக்கிறது என்று நான் சொல்லி தான் உங்களுக்கு தேறிய வேண்டியது இல்லை
மீரான் காக்கா... அஸ்ஸலாமு அலைக்கும். எப்படி இருக்குறீங்க. நாமளும் உங்க சவுதி நடை முறையே கொஞ்சம் காப்பி பண்ணலாமேன்னுதான்.... இப்னு ரய்யானுக்கு பதிலா. பேரவையின் தேர்தல் மற்றும் ஏனைய செயல்பாடுகளில் ஏற்பட்ட அதிருப்தி மற்றும் ஏற்கனவே பேரவை பெரும்பாலான மக்களின் செல்வாக்கை இழந்து விட்டது. இதே ரேஞ்சில் போச்சுனா...ஊர் ஒற்றுமைக்காக, நலனுக்காக எல்லாமக்களையும் அரவணைத்து செல்லவேண்டிய பேரவை எங்கே செயல் இழந்து புறக்கணிக்கபட்டு விடுமோ என்ற பயமேயன்றி வேற எதுவும் இல்லை. பேரவையின் மீதும் அங்கு இருக்கும் பெரியவர்களின் மீதும் எப்பொழுதும் மரியாதையும் அன்பும் உண்டு.
உங்களுக்கு எவ்வளவுதான் பேரவையின் செயல்பாட்டில் அதிருப்தி இருந்தாலும் அதற்க்கு இது நேரம் இல்லை என்று ஒவ்வொருமுறையும் இப்படியே இருந்து விடாமல்... செயல்படுங்கள் அப்பொழுதுதான் நல்லதொரு மாற்றம் வரும்... அதை நாம்தாம் கொண்டுவரணும். பேரவைக்கு இணையான அமைப்பை கொண்டுவருவது நடைமுறை சாத்தியமற்ற ஒன்று. ஆகையால்... இருக்கும் அமைப்பை சீர்படுத்தி.. எல்லா மக்களையும் அரவணைத்து செல்லும் பேரவையின் கீழ் நமதூர் மக்கள் என்றும் ஒற்றுமையாகவும் சந்தோசமாக இருக்கவேண்டும்...அதுதான் நம்முடைய ஆவல்!!
நான் ஒன்றும் இந்த செய்தியை உண்மை என்று நம்பவில்லை... அதனால் தான் புரளி என்ற வார்த்தையும் சேர்த்துக்கொண்டேன் என்னுடைய முந்திய பதிவில். கள்ள ஓட்டுகள் வேண்டுமென்றால் ஒரு சிலர் போடலாம். ஏன் பணத்துக்கும் கூட ஒருசிலர் இருக்கலாம். ஆனால் சாராயத்துக்காக என்பது என்னால் ஏற்றுகொள்ள/நம்ப முடியாதா ஒன்று.
சரி இதெல்லாம் விடுங்க. உங்களே கடைசியா உம்ரா பண்ண வந்த பொழுது KWA Jeddah meeting யில் சந்திச்சது. அதற்க்கு அப்புறம் பார்க்க வாய்ப்பு கிடைக்க வில்லை. இன்ஷா அல்லாஹ் திரும்பவும் அங்கே வருகிறோம் இன்னும் இரண்டு வாரத்தில். முடிந்தால் சந்திச்சு பேசுவோம்
57. Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்... posted byAbuMisbah (Jeddah)[14 October 2011] IP: 93.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10613
Dear Admin,
your transparency is in doubt. எனக்கு இந்த செய்தியில் மட்டுமல்ல இந்த செய்தியை வெளியிட்ட நேரத்தையும் வைத்து பார்க்கும் போது ஏதோ உள்நோக்கம் இருக்கும் போல் இருக்கிறது.உங்களுடைய மற்றைய செய்திகள் எல்லாம் உள்நோக்கம் அற்றதாக இருக்கிறது என்பதற்காக இந்த செய்தியும் அதுமாதிரிதான் என்று நம்ப முடியவில்லை. சகோதரி ஆபிதா அவர்களின் அறிமுக கூட்ட செய்தியை உடனே வெளியிட்ட நீங்கள் ஐக்கிய பேரவை நடத்திய சகோதரி மிஸ்ரியா அவர்களின் அறிமுக கூட்ட செய்தியை ஏன் உடனே வெளியிடவில்லை. அந்த செய்தியை வெளியிட்டவுடன் அந்த செய்தியை மறைக்கும்மாதிரி இந்த செய்தியை வெளியிட்டது என் மனதை உறுத்திக்கொண்டே இருக்கிறது.
58. Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்... posted bymohamed abdul kader (dubai)[14 October 2011] IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10625
Comment Reference Number: 10584
நண்பர் நூருதீன் பிரபு அவர்களே நீங்கள் எழுதிய
( நீங்கள் புகார் அளித்தவரின் பெயரை அறிவிக்காத பட்சத்தில், பொது மகா ஜனங்களுக்கு நீங்களே கூட புகார் அளித்திருக்கலாம் என்று உங்கள் மீதே சந்தேகம் எழலாம். ஏற்கனவே எதற்கெடுத்தாலும் குற்றம், குறை காண்பதற்கென்றே ஒரு கூட்டம்இருக்கிறது. அவர்கள் உங்களையும் குத்தி குதறி எடுத்து விடுவார்கள் (ஐக்கிய பேரவையை நாறடிப்பது போல). Transparency பற்றி எல்லாம் வாய் கிழிய பேசுவார்கள். இதற்கு மேல் உங்கள் விருப்பம். )
நமது வலை தளத்தில் உலாவிக்கொண்டு இருப்பது எல்லாம் நமது காயல் சொந்தகலே மற்றவர் அல்ல.ஒருவர்கொருவர் கேட்கும் கேல்விகளுக்கு மற்றவர்களின் கருத்து பரிமாற்றமே.
தாங்கள் எளுதும்போது வார்த்தைகளை கவனித்து எளுதினால் நன்றாக இருக்கும்
59. Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்... posted bySolukku M.I. Seyed Mohamed Sahib (SMI) (Jeddah, KSA.)[14 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10643
சிலருடைய இரட்டை நிலை புரிய வில்லை, ஒரு இயக்கம் எது செய்தாலும் திறந்த வெளிப்படையை வர்புற்றுத்தி எழுதும் சிலர் இதன் செய்தியில் அப்படியான வெளிப்பாட்டை மற்றவர் கேற்றால் தவறு போல் எழுதுகிறார். தான் நினைப்பது மட்டும் தான் சரி என்றிருந்தால் அதை யாராலும் மாற்ற முடியாதுதான், மற்றவர்களால்.
எதிலுமே தவறு கண்டுபிடிப்பதும், உண்டாக்கியதை உடைப்பதும் வெகு எளிது ஆனால் உருவாக்குவது என்பது கடினம் என்பதை நாம் புரிய வேண்டும். இப்படியெல்லாம் ஒரு இயக்கத்தை பற்றி அலுவலகத்திற்கு விடுமுறை போட்டுவிட்டு தவறுகளை கண்டுபிடிதுகொண்டிருக்கும் தம்பி தனது நேரத்தில் கொஞ்சமாவது செலவழித்து ஊரில் இருந்த சமயம் ஐக்கிய பெரவைக்கோ அல்லது மற்ற பொது நல அமைப்புகளுக்கோ நேரில் சென்று தனது பங்களிப்பை தந்திருக்கிறார்?
வெளிநாற்றிளிருந்து கொண்டு மடிக்கணணியில் கருது பதிவது போல் இலகுவல்ல களப்பணி. நல்லதை செய்வோம் தவறை கண்டால் சுட்டிகாட்டுவோம், சூறையாடாதிருப்போம். எல்லோருக்கும் நல்லதே நடக்கட்டும் என்று இறைவனை வேண்டுவோமாக.
60. Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்... posted byK S MUHAMED SHUAIB (KAYALPATNAM)[14 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10652
அன்பு நண்பர் சுலைமான் அவர்களே....நான் எங்காவது ரத்தத்தின் ரத்தங்கள் கள்ள ஒட்டு போடமாட்டார்கள் என்று சொன்னேனா...?எல்லோரும் போடுவார்கள்தான் .ஆன்னால் நமதூரைபொறுத்தவரை யார் அதில் கில்லாடிகள் எனபது ஊர் அறிந்த ரகசியம். இதில் ஒளிவு மறைவு இல்லை. எனவே நீங்களே உங்கள் மனசாட்சிப்படி நடந்துகொள்ளவேண்டியதுதான்.
62. Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்... posted byShaik (Kayalpatnam)[14 October 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 10666
புரிந்து கொள்ளுங்கள்.....
காயல் பட்டணம் என்றால் நீங்களும் நானும் மட்டும் இல்லை. அனைத்து தரப்பையும் சேர்த்துதான் காயல் பட்டணம். காயல் பட்டணத்தில் சாராயம் குடிக்காதவர்களே இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? புரிந்து கொள்ளுங்கள் கீழ்த்தரமான சுயநலவாதிகள் தங்களின் அரசியல் சுய லாபத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். குறிப்பிட்டு யாரையும் மனதில் வைத்து இதை பதிக்கவில்லை. வல்ல நாயன் சுயநலவாதிகளின் சூழ்ச்சிகளில் இருந்து நமதூரை காப்பானாக ஆமீன்.
63. தனி நபர் தாக்குதலைத் தவிர்க்கவும். posted byM.N.L.முஹம்மது ரஃபீக், ராபியா மணாளன். (புனித மக்கா.)[14 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10673
அன்பு நண்பர் சட்ணி,செய்யது மீரான் அவர்களே! தங்களின் கமெட்ண்ட்ஸ் எண்: 28. என் காயலும் எங்கள் இந்திய மண்ணின் பெருமைக்குரிய பகுதியே ... எனும் தலைப்பில் தங்கள் எழுதிய கருத்துப் பதிப்பை சற்று முன்னர் தான் படித்தேன்,அதில் தாங்கள் எழுதியுள்ள வாசகங்கள் கீழே,
“ ((((((இது எங்கள் சவுதியில் உள்ள நடைமுறை,மணாளன்,இன்னார் டாடி என்பது புதியதாய் உள்ளது காயலுக்கு,
அடியானும் அல்லாஹ் அருளால் மூன்று பிள்ளைக்கு டாடி தான்,...ஒரே ஒரு பாசமுள்ள மனைவியை மணந்த மணாளன் தான், என் போன்று ஆயிரம் ஆயிரம் காயலருக்கும் அல்லாஹ் இந்த தகுதி,தரத்தை கொடுத்துள்ளான்.எல்லா புகழும் வல்ல அல்லாஹ்விற்கே)))) என்ற புனை பெயரில் கருத்துகளை பேரவை ஒன்றை மட்டுமே சாடி பதிவு செய்து வரும்...” எனும் வாசகங்கள் உகந்ததாக இல்லை!
ரையான்ஸ் டாட்,ராபியா மணாளன் என்று அவரவர் பிரியமுள்ளவர்களின் பெயரை இனைத்து புனைப் பெயர் வைப்பதில் ஓர் இமாலயத் தவறு ஏதுமில்லை!இது உங்க பாஷைலெ சொன்னா ஹராமுமில்லை!தேவை எனில் தாங்களும் தங்களின் மூன்று பிள்ளைகள் அல்லது தங்களின் அந்த ஒரே ஒரு பாசமுள்ள மனிவியின் மணாளன் என்று புனைப் பெயரில் எழுதுங்கள்! இந்திய சட்டத்திற்கோ,இறைவைனின் மார்க்கத்திற்கோ இது எதிரானதல்ல!
என் தலையெழுத்து அல்லாஹ் எனக்கு இரு தாரம் என எழுதிவிட்டான்.அந்த சோதனையும்,வேதனையும் உங்களுக்கு வராமல் அல்லாஹ் பாதுகாப்பானாக! என்னை சீண்டும் விதத்தில் தாங்கள் பதித்த இந்த விஷக் கருத்து பாவம்! நம் அட்மினுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை!இருப்பினும் அந்த வாசகத்தைக் கீழேத் தருகின்றேன்,
“ஒரே ஒரு பாசமுள்ள மனைவியை மணந்த மணாளன் தான், என் போன்று ஆயிரம் ஆயிரம் காயலருக்கும் அல்லாஹ் இந்த தகுதி,தரத்தை கொடுத்துள்ளான்.” மீரான் காக்கா ஒரு பாசமுள்ள மனைவியை என்று எழுதியிருந்தால் தவறில்லை! ஆனால் ஒரே ஒரு மனைவியை என்று குத்திக் காட்டுவது தான் பெரும் மன உளைச்சலைத் தருகின்றது,தங்களின் இக் கொடூர வார்த்தைகள் என்னை மட்டுமல்ல என் நண்பர்களையும் பாதித்துள்ளது அதையும் கீழே தருகின்றேன்,Comment Reference Number: 10504
“.உன்னை நீ கருத்தில் அறிமுக படுத்தும் போது M.N.L.முஹம்மது ரஃபீக் என்றும் ராபியா மணாளன் என்றும் ஹிஜாஜ் மைந்தன்(தற்போது இதை நீ இடுவதில்லை )இப்படி எல்லாம் எழுதுவது அவசியமா அல்லது ரபீக் என்றும் மட்டும் போட்டால் போதும்தானே! உன்னை யாரும் குறைத்து மதிப்பிடும் பட்சத்தில் என் மனமும் ஏனோ கனக்கிறது,இது ஒரு வேதனையின் வெளிப்பாடு.நன்றி -A.R.Refaye-அபுதாபி.
மீரான் காக்கா ப்ளீஸ் வேண்டாம்! நீங்கள் சார்ந்த பேரவைக்கு நான் மாற்றுக் கருத்துடையவன் என்ற ஒரேக் குற்றத்திற்காக தனிப்பட்ட என் வாழ்க்கையின் கசப்பான நிகழ்வுகளை கமெண்ட்ஸ் எனும் பெயரில் சீண்டாதீர்கள்! இது உகந்ததல்ல! அல்லாஹ் போதுமானவன்.வஸ்ஸலாம்!!!
குறிப்பு:
மரியாதைக்குரிய அட்மின் அவர்களே! இது போன்ற தவறை இன்னும் பிறர் செய்யாதிருக்க என் ஆதங்கத்தின் வெளிப்பாடான இக் கருத்துக்களை சற்றும் தனிக்கை செய்யாமல் முழுவதுமாக வெளியிடும் படித் தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
-ராபியா மணாளனே தான்!!!
64. Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்... posted bySyed Ahmed Buhari (Riyadh)[14 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10699
அன்புள்ள நண்பர் ரபீக்,
புனை பெயரால் வந்த குழப்பங்கள் பிரச்சனைகள்..அதனால் மனகசப்புகள் இவற்றுக்கு வருந்துகிறோம். உங்களை குத்தி காட்டியவர் மீது கோபம் கொள்ளும் அதே வேளையில் உங்கள் மீதும் எனக்கு நண்பன் என்ற முறையில் உள்ள கோபத்தால் சுட்டி காட்டுகிறேன்.
மனைவி பெயரை சேர்த்தோ அல்லது அடைமொழியாகவோ வைப்பதில் என்ன இமாலய தவறு... அது இஸ்லாத்திற்கு எதிரானதா என்றும் கேட்டு இருக்கிறாய்? ஆம் இது இஸ்லாத்திற்கு எதிரானது தான்!! குரான் கூறுகிறது!!
நீங்கள் வளர்த்த பிள்ளைகளை அவர்கள் தந்தையின் பெயரை கூறியே அழையுங்கள் 33 :5
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் எவன் ஒருவன் தன்னை தானே தன் தந்தை பெயர் அல்லது மற்ற பெயர்களை கொண்டு அழைக்கிரானோ அவன் மீது அல்லாஹ்வின் சாபமும் மலக்குகளில் சாபமும் உண்டாகிறது- இப்னு மாஜா
தங்களுக்கு பெற்றோர் இட்ட பெயர் கொண்டு அழைப்பதும்..பிள்ளைகள் பெயர் கொண்டு அழைப்பதும் (அபு பக்ர்) , மேலும் தன் தந்தையரில் பெயர் கொண்டு அழைப்பதும் (இப்னு அப்பாஸ்) ..மட்டுமே இஸ்லாம் கட்டி தந்த வழிமுறை .இது போக இன்னாருடைய மனைவி என்று அழைப்பது இஸ்லாமிய நடை முறையன்று !!!
நபி அவர்களை விடவா நாம் நம் மனைவி மீது பாசம் காட்டி விட்டோம்!! அவர்கள் சொல்லி தராத தடுத்த வழி நமக்கு எதற்கு?
மேலும் இது போன்று பெண்கள் பெயரை இது போன்ற பொது இணையயத்தில் இணைப்பதை தடுக்கலாமே!!! முன்பு கூட ஒரு முறை நீங்கள் உங்களுக்கு பெண் தந்த உங்கள் மாமியாரை சிறந்தவர், வல்லவர் என்றெல்லாம் புகழ்ந்து அவரையே நகர் மன்ற தலைவிக்கு வீட்டு முகவரியோடு சிபாரிசும் செய்து இருந்தீர்கள் பின்னர் நீங்களே அதை நீக்கவும் சொன்னீர்கள். இது போன்ற தேவையற்ற அவசியம் இல்லா இடங்களில் பெண்ணின் பெயர்களை தவிர்ப்பதே இது போன்ற வீண் சச்சரவுகளுக்கு விடை கொடுக்கும். அழகிய முறையில் முஹம்மது ரபீக் அல்லது இப்னு நூஹு என்றோ போடலாமே.... இது தானே நிரந்தர உறவு... மாறாத பெயரும் கூட, மனைவியின் பெயர்களும் மற்ற பெயர்களும் மாறலாமே அல்லா நாடினால்!!
நண்பர் என்ற முறையில் உரிமையில் சொல்லுகிறேன் தவறு இருந்தால் மன்னிக்கவும் அல்லா மிக அறிந்தவன்.
65. Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்... posted byM Sajith (DUBAI)[15 October 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10719
என்னடா இவ்வளவு PERSONAL ஆ எடுத்துக்கிட்டு கோவப்படறாங்களே..., கள்ள வோட்டுன்னா என்னன்னே தெரியாத காயல்பட்ணம், பேப்பர்ல செய்தி வந்ததா சரித்திரம் இல்லை.. அப்படின்னு எல்லாம் ஆதங்க படுராங்களே..ன்னு யோசிக்கிற சொந்தங்களா..
யப்பா கருப்பு ஆடு, வெள்ளை பூனைய தேடுன நன்பர்களா..
நகர் வலம் வந்த நிருபர், தெளிவா எழுதி இருக்கார் அவர் வழமையா எழுதற தளத்தில், படிச்சிட்டு, அப்படியே ஆள் யாருன்ணு கேட்டு நிர்பந்தமும் செஞ்சிங்கன்னா போடோவும் போட்டுவிடுவார்..
67. பஸ் வழியில் பஞ்சர் ஆகாமல் போய் சேருமா..? posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[15 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10722
தோல்வி பயத்தில் ஓட்டுக்காக காசும் கொடுப்பார்கள்... அவசியப்பட்டால் சிலரை காவும் கொடுப்பார்கள்...
பேரவை போட்ட கூட்டத்திலே மேடையில் பேசியும் விட்டார்கள் மத்திய காயலில் 5 நிமிடத்தில் வாக்கு பெட்டி நிறைந்து விடுமாம்.. அதுவும் ஒரு வித தோரணை பேச்சு வேற... மத்திய காயலில் இருந்து புறப்படும் பஸ் புறநகர் போகும் வழியில் பஞ்சர் ஆகாமல் போய் சேருமா..? அந்த பயம் ஓன்று போதும் உங்களுக்கு...
கள்ள வோட்டும், வோட்டுக்கு காசு கொடுப்பதும் அயோக்கியத்தனம். ஈமானின் கடைசி பகுதியானாலும் வெறுக்கணும்.
யார் புகார் செஞ்சா என்ன? இப்ப வந்த செய்திய பார்த்துவிட்டு
நாங்களும் நிறைய கையெழுத்து, முகவரியோட இந்திய துதரகம் மூலம் அபிசியலா புகார் கொடுக்கலாமான்னு யோசிசிச்கிட்டு இருக்கோம் - சவூதி, சிங்கபுருக்கும் பேசிகிட்டு இருக்கோம் - இதுவரை செய்யல - தேவைப்பட்ட செய்வோம்)
என்ன பாவமான காரியமா? ஒழுங்கா இருக்குற ஓட்ட போடுங்க உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு போடுங்க.. அத விட்டு கள்ள வோட்டு போடுறவங்க தண்டிக்க படனும். - இதுல ஏதாவது பிரச்சினையா? - இல்ல பேரவை கட்டுப்பாடு குடி முழுகி போயிடுமா?
ஏன் சிலருக்கு மட்டும் குத்துது ? போட்ட பிளானும் கொடுத்த காசும் பாழாகுது என்றா?
நல்லதையும் கெட்டதையும் ஒரு சேர எழுதிய நண்பர்கள் எல்லோரையும், ஒற்றுமைக்கு களங்கம் கத்திரிக்காய் என்று வெறுப்பேத்தி எல்லா சனியனையும் எழுத வைத்து தொலைத்தாயிற்று.. இன்னமும் மிரட்டல் முடிந்தபாடில்லை, அத்துனை மொட்டை ஈமெயில்களும் போன் கால்களும்.
இதுதான் கயலின் கலாச்சாரம், பெருமை இதை காபத்த ஒரு கூட்டம் வரிஞ்சிகட்டிகிட்டு.
69. Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்... posted byShameemul Islam SKS (Chennai)[15 October 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 10741
மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக ஊரை விட்டு வெளியூரில் இருந்தாலே ஊரைத் தேடும்.
காரணம் நம்மை ஆரத்தழுவும் நம் குடும்பம், கொஞ்சிக்குலாவும் நட்புகள், சிரித்து முகமன் கூறும் ஊர்மக்கள்,
பள்ளிவாசல்கள், ஐங்காலத் தொழுகைக்கான அழைப்போசை, இயற்கை எழில் கொஞ்சும் நம் கடற்கரை, நம்முன்னோர் காத்து வைத்த நல்லதொரு பாரம்பரியம், என அடுக்கிக் கொண்டே போகலாம்.
காயல்பட்டணம்......... இது ஒரு சிறு மக்கம்.
ஆம் முன்னோர் வைத்த பெயர்தான் இது.
பெண்கள் ஆண்களுடன் கலக்கக் கூடாதென்பதற்காக வீடுகளுக்கு இடையில் முடுக்குகள்.
இவைகளோடு ஒழுக்க விழுமங்களில் நாம் காட்டும் அக்கறை,
தீமைகளை எதிர்த்து அதன் நெற்றியை உடைத்து,
நன்மைகளை ஏவியும் காத்தும் வருவதால் தான் நமதூர் மீது நமக்கு இவ்வளவு நேசம்.
ஊர் மீது கொண்ட நேசமும் பற்றும் அதில் உள்ள தீமைகளை மூடி மறைத்து தான் காக்கப்பட வேண்டும் என்றால் இப்போது வேண்டுமானால் நமக்கு அது சரியாகப் படலாம்,
ஆனால் நம் எதிர்கால சந்ததிகள் முகம் சுளிக்க நேரிடும். குர்ஆன் கூறும் உண்மை இது.
எத்தனையோ ஊர்களை இறைவன் அதன் தீமைகளால் அழித்திருக்கிறான் என்பது நமக்கு தெரியாத விஷயமல்ல.
அதே வேளையில் நாம் ஜாஃபர் இப்னு அபி தாலிபின் (அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக...) பரம்பரைகள்.
தாயகமாம் மக்காவிலிருந்து விரட்டப்பட்டு அனாதரவாய் அபிஸீனியாவில் 17 நபித் தோழர்கள் நஜ்ஜாஷி மன்னர் முன் நின்றபோதும் உண்மையை உரைத்தார்கள் அவர்கள்.
தாயகமாம் மக்காவை அறிமுகம் செய்து வைக்கையில் கடந்த கால கசப்பான வாழ்க்கை குறித்த நினைவுகளை முதலில் கூறி (ஊர் மீது கொண்ட நேசம் அவர்களை அத்தீய வாழ்க்கை குறித்து எடுத்துக் கூறுவதை விட்டும் தடுக்கவில்லை) பிறகு முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதராக அனுப்பப்பட்ட பிறகு தம் வாழ்க்கையில் உருவான மாற்றங்கள் குறித்துப் பட்டியலிட்டார்கள்.
இது தான் இஸ்லாம் நமக்கு காட்டித் தந்த வழி.
கடந்த காலங்களில் பணத்தையும் மற்ற பொருள்களையும் பெற்றுக்கொண்டு போதாத குறைக்கு மார்க்கத்தை வேறு வம்புக்கிழுத்து "அது நம் பணம் தானே, அதை இப்போது அவர்கள் தரும்போது பெற்றுக்கொள்வதில் என்ன தவறிருக்கிறது" என மார்க்கம் பேசி தவறுகள் தெளிவாக நடந்திருக்க ஏதோ தவறே நிகழாதது போலவும் விமர்சிப்பவர்கள் தவறானவர் போலவும் அவர்களுக்கு நம்மூர் மீது எவ்வித பற்றும் இல்லை என சித்தரிப்பதும் சரியல்ல.
அடுத்து பத்திரிகை வழக்கப்படி ஒரு செய்தி வெளியிடும் போது அச்செய்தியின் தன்மைக்கு ஏற்ப அதை வழங்கியவர் பெயர் வெளியிடப்படுகிறது. THE HINDU, INDIAN EXPRESS போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளில் அவ்வாறு அமைந்திருக்கும் சில பெயர்கள் இதோ :
செய்தியின் தன்மையை (SENSITIVITY) வைத்தே பெயர்கள் வெளியிடப்படுகின்றன.
அதற்குக் காரணம் செய்தியை வழங்கியவரை பொதுமக்கள் (சிறப்பாக) கவனித்து விடாமல் அதே வேளையில் தவறுகள் தட்டிக்கேட்கப்பட வேண்டும் என்றோ,
திருத்தப் பட வேண்டும் என்ற அடிப்படையிலோ தான் அவ்வாறு கையாளப்படுகின்றன.
எனவே ADMIN மற்றும் KAYALPATNAM.COM EDITORIAL BOARD ஆகியவர்கள் செய்தி ஆதாரம், உள்நோக்கமற்றதாக உள்ள செய்திதானா அது, தற்போது இச்செய்தியை பிரசுரிப்பதன் அவசியம் உள்ளிட்ட விஷயங்களை நன்கு ஆய்வு செய்து,
அதனால் அதிக நன்மைகள் விளையவும் தவறுகள் தடுக்கப்படவும் வாய்ப்புகள் இருந்தால் மட்டுமே இறை அச்சத்துடன் அச்செய்திகள் பிரசுரிக்கப்படுகின்றன.
யார் மனதையும் புண்படுத்தவோ அல்லது பிறர் மனதை வேதனைக்குள்ளாக்கி அதில் குளிர் காயும் என்னமோ கிஞ்சிற்றும் இவ்வலை தளத்திற்கு இல்லை.
எனவே கள்ள ஓட்டு பற்றிய இச்செய்தி அவ்வாறு நடைபெறாமல் நேர்மையான முறையில் நம் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்க விடுத்த ஒரு WHISTLE BLOW என்று நோக்கினால் மட்டுமே எதிர்மறை சிந்தனைகள் நமக்கு எழாமல் இருக்கும்.
அல்லாஹ் யாவற்றையும் சூழ்ந்தறிகிறவனாக இருக்கிறான்.
என் அன்பு நண்பர் செய்யதகமது புஹாரி அவர்களுக்கு,புனைப் பெயரால் வரும் வினைகளைக் குறித்து என் மேல் உள்ள பாசத்தின் வெளிப்பாடய்,சில ஆதாரங்களையும் முன்வைத்து எழுதியிருந்தீர்கள்.உணர்ந்து கொண்டேன்.
நான் என்றைக்கு ஐக்கியப் பேரவையை சாடத்துவங்கினேனோ? அன்றைக்கு வந்தது தான் புனைப்பெயர் புழுக்கம்!கருத்து கொஞ்சம் காரசாரமா இருந்ததாலெ சிலருக்கு நெஞ்செரிச்சல் வந்திருப்பது உண்மைதான்! ஊர்த்தலைவிக்கு ஒரு தலைமுறை அளவிற்கு யார்?யாரெல்லாமோ? கம்மாவிலிருந்து,கண்ணாப்பா வரைக்கும் சிபாரிசு செய்யும் போது,மகளும்,தாயாரும்,சேர்ந்தே மனுகொடுக்கும் போது, மாமியாரை சிபாரிசு செய்வது ஒன்னும் பெரிய கொலைக் குற்றமில்லை!அந்த கமெண்ட்ஸை மீண்டும் ஒரு முறை படிச்சு பாருங்க! மாமியாரைப் புகழ்ந்து அல்ல!எல்லோருக்கும் பரிச்சயமான நல்ல எழுத்தாளர் சுஐபு அவர்களின் மனைவி என்றுதான் குறிப்பிட்டுள்ளேன்! அதை நான் நீக்கச் சொல்லவுமில்லை!இதுவரை நீக்கவுமில்லை! உங்களுக்கு பிடித்தவர்களை சிபாரிசு செய்யலாம் என அட்மின் கேட்ட போது தயவு செய்து சொந்த,பந்தங்களைத் தவிர்த்துக் கொள்ளவும்.என்று எவ்வித அறிவிப்பும் செய்யவில்லை!தகுதி இருப்பின் இந்தியக் குடிமகனான நீங்களும் தாராளமா உங்க மாமியாரை ரெக்கமெண்ட் பண்ணுங்க!இதுலெ என்ன கேவலம் இருக்கு?
புனைப்பெயரால் சிலரது மனம் புழுங்கித்தொலையுது எனில் நான் அதைத் தவிர்துக் கொள்கிறேன்.நன்றி!!! வஸ்ஸலாம்!
குசும்பு:
காப்பி ரைட்ஸ் தந்த என் மனைவியே இதைக் கண்டுக்கல்லே...அப்புறம் ஏன்? [edited]
71. Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்... posted bySyed Ahmed Buhari (Riyadh)[15 October 2011] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10826
அட்மின் அவர்களே,
கீழே நான் மேல்கோள் காட்டிய ஹதீஸ் இல் எவன் ஒருவன் தன்னை தானே தன் தந்தை பெயர் அல்லது மற்ற பெயர்களை ......என்ற இடத்தில அல்லாது என்பதற்கு பதிலாக அல்லது என்று டய்பிங் பிழையாக போட்டு விட்டதால் முழு அர்த்தமே மாறி விட்டுது!! தயவு செய்து சரி செய்யவும்
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் எவன் ஒருவன் தன்னை தானே தன் தந்தை பெயர் அல்லாது மற்ற பெயர்களை கொண்டு அழைக்கிரானோ அவன் மீது அல்லாஹ்வின் சாபமும் மலக்குகளில் சாபமும் உண்டாகிறது- இப்னு மாஜா
தவறுக்கு வருத்தம் தேர்விக்கிறேன்... முதல் முறை இந்த பக்கத்தில் கமெண்ட் செய்ததால் கவனிக்கவில்லை .
73. Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்... posted byMohiadeen (Phoenix)[15 October 2011] IP: 71.*.*.* United States | Comment Reference Number: 10852
For those who oppose this article:
Media has all the rights to publish this article to keep public awareness to avoid wrong things during election and let public contact respective officials in such cases.
நண்பர் அஹமது புஹாரி அவர்களே! தாங்கள் பெருந்தன்மையோடு(உரிமையோடு) எனக்கு எடுத்துரைத்த போது அதை நான் கவத்தில் எடுத்துக் கொண்டதோடு குறிப்பிட்ட அந்த பெயரில் எழுதுவதைத் தவிர்த்தும் கொண்டேன்.
நான் உங்களுக்கு அனுப்பிய பதில் கருத்தில் முதல் மூன்று வரிகள் தான் உங்களுக்காக, உங்களின் அலோசனையை மதித்து மிக்க மரியாதையுடன் எழுதியிருந்தேன்.அடுத்த பாரா, என்னை அனாவசியமாக வம்புக்கிழுத்து கருத்து என்ற பெயரில் விஷக்குத்து குத்தியவருக்காக எழுதியது.
நண்பரே! இக் கருத்துப் பகுதிக்குத் தாங்கள் புதிதாக வந்தவர் என்பதை நீங்களே வெளிப்படுத்தியும் இருந்தீர்கள்.இனியாவது கருத்துக்கு,கருத்தெழுதும் போது கவனம் தேவை! அதிலும் பிறரைச் சாடும் போது அதிக கவனம் தேவை! உங்கள் யோசனையை நான் எடுத்துக் கொண்டதுடன் என்னைத் திருத்தியும் கொண்டேன்! நன்றி!!!வஸ்ஸலாம்.
75. விநியோகிக்க (சாராயம்) 2,800 மது பாட்டில் வாங்கிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.. posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[18 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 11223
கள்ள வோட்டு போட விநியோகிக்க (சாராயம்) 2,800 மது பாட்டில் வாங்கிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.. டாஸ் மார்க் கடையில் அதற்குண்டான பில்லை சேகரிக்கும் பணியில் நடுநிலைவாதிகள் இறங்கி இருப்பதாக தகவல்...!
கூடிய விரைவில் அந்த டாஸ் மார்க் கடையின் பில் ஊர் பெயருடன் (நகல்) இந்த இணைய தளத்தில்... வரலாம்...
எந்த வேட்பாளர் சார்பாக வாக்காளர்களுக்கு கொடுக்க மது வாங்கி இருக்கலாம்...? மக்கள் குழப்பத்தில் உள்ளார்கள் ?
கூடிய விரைவில் உண்மை வெளிவரும்... மதுவை வெறுக்கும் நம் சமுதாயத்தை அல்லாஹ் பாதுகாக்க நாம் அனைவர்களும் துவா செய்வோமாக.. ஆமின்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross