காயல்பட்டினம் ஜாவியத்துல் ஃபாஸிய்யத்துஷ் ஷாதுலிய்யா நிறுவனத்தில், ஷாதுலிய்யா தரீக்கா ஷெய்குமார்களின் 146ஆவது நினைவு தின நிகழ்ச்சிகள் 13.10.2011 அன்று துவங்கி, 19.10.2011 வரை நடைபெறுகிறது.
இந்நாட்களில் தினமும் இரவு 08.15 மணி முதல் 09.15 மணி வரை, மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகள் நடைபெற்றன.
13.10.2011 அன்று, மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எம்.அப்துல் காதிர் முத்துவாப்பா ஃபாஸீ, ஷாதுலிய்யா தரீக்காவின் மகிமை என்ற தலைப்பிலும்,
ஜாவியா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ கே.சுல்தான் ஸலாஹுத்தீன் மளாஹிரீ ஃபாழில் தேவ்பந்தீ, ‘அல்லாஹ்வின் படைப்புகளை சிந்திப்பதும் வணக்கமே!‘ என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.
14.10.2011 அன்று, காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, ‘இறைவழி நடந்த ஷெய்குமார்கள்‘ என்ற தலைப்பில் உரையாற்றினார்.
15.10.2010 இன்று, ஜாவியா அரபிக்கல்லூரியின் துணை முதல்வர் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ, ‘தஃப்ஸீர் செய்வதற்குத் தகுதிகள்‘ என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளார்.
தினமும் இரவில் நடைபெறும் மார்க்க சொற்பொழிவுகள் அனைத்தும் ஜாவியா வலைதளத்தின் நேரலை பக்கத்தில் கேட்க அந்நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
www.kayal.tv வலைதளத்தில், ஜாவியாவின் சிறப்பு பக்கத்திலும் இந்நேரலையைக் கேட்கலாம். |