தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் 17 மற்றும் 19ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து, வாக்குப்பதிவு நடைபெறும் மேற்கண்ட இரு நாட்களும் அரசு அலுவலகங்களுக்கு பொது விடுமுறை விடுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் 17ஆம் தேதி அன்று அனைத்து அரசு அலுவலகங்களும், அரசு கல்வி நிறுவனங்களும், அரசு சார்ந்த நிறுவனங்களும் மூடி இருக்கும்.
இதேபோல், 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் 19ஆம் தேதி அன்று அனைத்து அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு இருக்கும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி அறிவித்து உள்ளார்.
தகவல்:
www.chennaionline.com |