காயல்பட்டின நகர்மன்றத் தலைவர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கிய அரசாணைக்கு எதிராக, MEGA வின் பிரதிநிதியும், மக்கள் சேவாக்கரங்கள் நிறுவனருமான பாலப்பா ஜலாலி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அது நேற்று (அக்டோபர் 11) விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் கே.என். பாஷா மற்றும் எம்.வேணுகோபால் ஆகியோர் முன் MEGA சார்பாக வழக்கறிஞர்கள் ஏ. ஹாஜா முஹியத்தீன் மற்றும் எம். முஹம்மது செர்புதீன் ஆகியோர் வாதிட்டனர். காயல்பட்டின நகர்மன்றம் குறித்த வழக்குடன் ௦பிற ஊர்களின் வழக்கும் இணைந்து விசாரிக்கப்படுகிறது. ஆகவே இன்றும் (அக்டோபர் 12) வழக்கு விசாரணை தொடரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மூத்த வழக்கறிஞர் ஒருவர் காலமானதால் - இன்று நீதிபதிகள் - நீதிமன்றத்திற்கு வரவில்லை. ஆகவே - இவ்வழக்கு மீண்டும் நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1. பதவி பிரமாணம் ஏற்று பின்பு அடுத்த மாதம் தீர்ப்பு வரலாம்.. posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[12 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10419
மெகாவின் இந்த ஜனநாயக உரிமை வழக்கு தொடர்ந்த நல்ல முயற்சிக்கு பாராட்டுக்கள்..
சந்தேகமில்லை தேர்தல் முடிந்து வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவர்களும் பதவி பிரமாணம் ஏற்று பின்பு அடுத்த மாதம் தீர்ப்பு வரலாம்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross