காக்கும் கரங்கள் அமைப்பின் மாதாந்திர கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இது குறித்து - அவ்வமைப்பின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),
அளவற்ற அருளானும், நிகரில்லா அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறோம். எமது காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்தின் மாதாந்திர கூட்டம் 09.10.2011 ஞாயிறு பின்னேரம் 8 மணியளவில் அதன் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
இதற்கு காயல்பட்டணம் நகர சமூக ஆர்வலர் ஜனாப் S.E. அமானுல்லாஹ் அவர்கள் தலைமை வகித்தார்கள். அல்ஹாஜ் N.S.E. மஹ்மூது M.H.M. சதக்கத்துல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆரம்பமாக அல்ஹாபிழ் சுல்தான் அவர்கள் கிராஅத் ஓதி கூட்டத்தை துவக்கி வைத்தார். காக்கும் கரங்கள் தலைவர் M.A.K. ஜெய்னுல்ஆப்தீன் வரவேற்று பேசினார். இந்த மாத கூட்டத்தின் நோக்கம் பற்றி காக்கும் கரங்கள் அமைப்பின் ஆலோசகர் ஆசிரியர் அப்துர்ரஜாக் மற்றும் காக்கும் கரங்கள் செயலாளர் ஹசன் ஆகியோர் பேசினர்.
அதன்பின் கலந்தாய்வு செய்யப்பட்டு கீழ்க்காணும் முடிவுகள் ஒருமித்த கருத்துடன் எடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:-
1. புறநகர் பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரை மட்டும் அடையாளங்காட்டி அந்த வார்டுகளில் நமது அமைப்பின் சார்பாக களப்பணி செய்து வெற்றி பெறச் செய்வது
2. காக்கும் கரங்களின் செயல்திட்டங்களில் ஒன்றான ஊருடன் ஒத்துபோதல் என்ற கொள்கையின்படி, ஊரில் உள்ள ஜமாஅத்துகளும், பொதுநல அமைப்புகளும் சேர்ந்து தேர்வு செய்த தலைவர் வேட்பாளர் ஹாஜ்ஜா L.S.M. முத்து மைமூனத்துல் மிஸ்ரியா B.Com. அவர்களை ஆதரித்து களப்பணி செய்வது.
பின்னர் காயல் அமானுல்லாஹ் அவர்கள் காக்கும் கரங்களின் செயல்பாடுகள் குறித்து பாராட்டிப் பேசினார்.
நமதூரில் நடைபெற்ற 15வது இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் எமது அமைப்பின் சகோதரர்கள் செய்த வாலன்டியர் பணியை இலங்கை அமைச்சர் இலங்கை சென்றதும் பாராட்டியதாகச் சொன்னார்கள். இளைய தலைமுறை வழி தவறி செல்லாமல் இருப்பதற்கு இந்த அமைப்பு எடுத்துவரும் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.
மேலும் நமதூரில் இதற்கு முன்பு வரை தலைவரை எப்படி தேர்வு செய்தார்கள் என்பதனை விரிவாக சொன்னார்கள். பாவலர் அப்பா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் வாவு செய்யது அப்துர்ரஹ்மான் ஹாஜி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது வரை அழகாக கூறினார்.
வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து ஜமாஅத்துக்கள் மற்றும் பொதுநல அமைப்புகளால் தேர்வு செய்யப்பட்ட தலைவர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒத்துழைக்குமாறும் கூறி விடைபெற்றார்.
இறுதியாக ஆசிரியர் அப்துர்ரஜாக் அவர்கள் நன்றி கூற துஆ ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
இப்படிக்கு,
தலைவர், காக்கும் கரங்கள் நற்பணி மன்றம்.
1. நடப்பவைகள் நன்மையாக இருக்கட்டும். posted byசாளை S.I.ஜியாவுதீன் (காயல்பட்டினம் )[13 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 10562
என்னங்க.. காக்கும் கரங்கள் சார்பாக நாளை வெள்ளிக்கிழமை மரியாதைக்குரிய Dr. K.V.S.Habeeb Muhammed அவர்களை வைத்து ஒரு பொதுக்கூட்டம், சகோதரி மிஸ்ரியா அவர்களை ஆதரித்து நடக்கப்போகிறதாக பிரச்சார வண்டியில் அறிவித்து வருகிறார்களே, அதைப்பற்றி ஒரு செய்தியையும் காணவில்லையே.
ஐக்கிய பேரவை உங்களுக்கும் ஒரு ஓட்டு கொடுத்தாங்க தானே, ஜலாலியாவில்.
3. Re:காக்கும் கரங்கள் அமைப்பின... posted byAbdulKader (Abu Dhabi)[14 October 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10589
அஸ்ஸலாமு அழைக்கும்...
இன்றைய கால சூழ்நிலையில்... காக்கும் கரங்கள் உண்மையில் நம் ஊரை காக்கும் கரங்கள் என்று உங்களின் இன்றைய இரண்டு தீர்மானம் மூலம் நிருபித்துவிட்டீர்கள்.
அல்லாஹ் உங்கள் எல்லோருக்கும் நல் வழி காட்டி ரஹ்மத்து செய்வானாக. வல்லரஹ்மான் நம்முடைய்ய நேரான முயற்சிகளில் வெற்றியைதர போதுமானவன். ஒற்றுமையின் பக்கம் அல்லாஹ் அவனுடைய தீர்ப்பை அளித்து நமக்கு அருள்புரிவானாக. ஆமீன்.
4. யாருக்கும் ஆதரவு வேண்டாம் posted byசொளுக்கு M.A.C.முஹம்மது நூகு (சென்னை)[14 October 2011] IP: 113.*.*.* India | Comment Reference Number: 10607
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) காக்கௌம் கரங்கள் கரங்களை காப்பதற்காக மட்டும் இருக்கட்டுமே ஏன் பிறர் கரங்களுக்கு ஆதரவு தெரிக்க வேண்டும். வேண்டாம் அரசியல். சமுதாயப்பணி மட்டுமே செய்யுங்கள். பெரியவர்களே தயவு செய்து இளசுகளை உசுப்பேத்தி விடாதீர்கள்.
5. Re:காக்கும் கரங்கள் அமைப்பின... posted byVAWOO MOHIADEEN THAMBY (rajamundry.ap)[14 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10616
அஸ்ஸலாமு அழைக்கும் ( வரஹ் ). அன்பு சகோதர்கல நீகள் சய்துவரும் பணிகள் மகத்தானது. ஆனால் அரசியலில் ஈடுபட வேண்டாம் எந்த பெரியவர்கள் உசுப்பேத்தளுக்கும் பணியவாண்டம்.சமுதாயபனிகளில் பெரியவர்களின் ஆலோசனையும் அனுவபமும் பெற்று ஊரின் நன்மைக்கு பாடுபடுங்கள். அல்லாஹ் உங்கள் எல்லோருக்கும் நல் வழி காட்டி ரஹ்மத்து செய்வானாக.அமீன்.
6. Re:காக்கும் கரங்கள் அமைப்பின... posted byfathimaahmed (kayal)[14 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10676
காக்கும் கரங்கள் பெரியவர்ஹளுக்கு கட்டுப்பட்ட கரங்களாக இருக்கட்டும்.ஊர் ஒற்றுமையை காக்கும் கரங்களாக இருக்கட்டும் உங்கள் கரங்கள் ஓங்கட்டும் என் வாழ்த்துக்கள் துஆ களுடன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross