காயல் நற்பணிமன்றம் ரியாத் அமைப்பின் 26-வது செயற்குழு கூட்டம் கடந்த வெள்ளிகிழமை (அக்டோபர் 7) அன்று நடைபெற்றது. அது குறித்து மன்றம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:
அருளாளன் அன்புடையோன் அல்லாஹ்வின் திருபெயரால்,எமது காயல் நற்பணிமன்றம் ரியாத் அமைப்பின் 26-வது செயற்குழு கூட்டம் கடந்த
07.10.2001 வெள்ளிகிழமை ஜும்மா தொழுகைக்கு பின் ஹாஃபிழ் ஷைக் தாவூத் இத்ரீஸ் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.
மன்றத்தின் மூத்த உறுப்பினர் ஹாஜி S.L. சுலைமான் லெப்பை அவர்கள் தலைமை தாங்கினார்கள். அமைப்பின் செயற்குழு உறுப்பினர்
ஹாஜி S.M.B. சாலிஹ் அவர்களால் இறைமறை துணை கொண்டு துவங்கியது.
உறுப்பினர்களின் நமதூர் நகர் நலன் குறித்து பல்வேறு விசயங்கள் ஆலோசிக்கபட்டு கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் 1: இரங்கல் தீர்மானம்:
எம் மன்றத்தின் முன்னாள் துணைத்தலைவரும் எம் சங்க வளர்ச்சியில் ஆரம்ப கால முதலே பணியாற்றிய ஹாஜி N.T. ஷைக் அப்துல் காதர் அவர்களின் திடீர் மறைவு எம் நற்பணி மன்றத்திற்கு பேரிழப்பாகும். அன்னாரின் மக்ஃபிர்துக்காக துவா செய்யப்பட்டது. அன்னாரை இழந்து வாடும் குடும் பத்தினர் யாவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கிறது.
தீர்மானம் 2: நோன்புகால ஊக்கத்தொகை:
நமதூரிலுள்ள அனைத்துப்பள்ளிகளின் இமாம், பிலால்களுக்கு நோன்புகால ஊக்கத்தொகை வழங்கல் தொடர்பாக, தாய்லாந்த் நல மன்றம் (THAKWA) மூலம் பெறப்பட்ட கடிதத்துக்கு ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு நல்கி இணைத்து செயல்பட எம் மன்றம் தீர்மானிக்கிறது. மற்ற சகோதர இயக்கத்தையும் இணைந்து செயல்பட வரவேற்கிறது.
தீர்மானம் 3: நல திட்ட உதவிகள்:
நமதூர் ஏழை மக்களிடம் இருந்து வந்திருந்த கடிதங்களை பரிவுடன் பரிசீலித்து கீழ் கண்டவாறு நிதி உதவிகள் செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்று தாராளமாக உதவிய அன்பு சகோதரர்களுக்கு இம்மன்றம் நன்றி தெரிவிக்கிறது.
(அ) இருதய ஆபரேசன் வகைக்கு ஒரு சகோதரிக்கு ரூபாய் 10,000 வழங்க தீர்மானிக்கப்பட்டது
(ஆ) 2 வயது குழந்தையின் நிமோனியா மருத்துவ சிகிச்சைக்கு ரூபாய் 20,000 வழங்க தீர்மானிக்கப்பட்டது
(இ) இரத்த புற்று நோயால் அவதியுறும் 15 வயது சிறுவனின் தொடர் மருத்துவ சிகிச்சைக்கு ரூபாய் 30,000 வழங்க தீர்மானிக்கப்பட்டது
(ஈ) சிறுவன் ஒருவனின் கை முறிவு ஆபரேசன் வகைக்கு ரூபாய் 7,000 வழங்க தீர்மானிக்கப்பட்டது
(உ) சகோதரர் ஒருவரின் இருதய ஆபரேசன் வகைக்கு ரூபாய் 15,000 வழங்க தீர்மானிக்கப்பட்டது
(ஊ) நுரையீரல் கேன்சரால் அவதியுறும் பெரியவர் ஒருவரின் தொடர் மருத்துவ சிகிச்சைக்கு ரூபாய் 15,000 வழங்க தீர்மானிக்கப்பட்டது
(ஏ) ஆசிரியை படிப்புக்கு (B.ED ) படிக்க சகோதரி ஒருவருக்கு ரூபாய் 20,000 வழங்க தீர்மானிக்கப்பட்டது
(ஏ) குடிசை வீடு இடிந்து தவிக்கும் சகோதரி ஒருவருக்கு ரூபாய் 60,000 வழங்க தீர்மானிக்கப்பட்டது. தற்சமயம் இது போன்ற வீடு கட்டும் / பழுது பார்க்கும் வகைக்கு மன்றம் நிதி ஒதுக்குவதில்லை என்ற நிலையிலும், மிகுந்த ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டும், மிகவும் ஆதரவற்ற நிலையை கருத்தில் கொண்டும், மன்றத்தின் நேரடி கணக்கில் பணம் எடுக்காமல், மன்ற உறுப்பினர்களின் நன்கொடைகளின் மூலம் உதவி செய்யப்பட்டது
(ஐ) மூன்று சகோதரர்களுக்கு, இன்ஜினியரிங் படிப்பு வகைக்கு தொடர்ந்து (மூன்றாம் ஆண்டு வகைக்கு) கடனுதவியாக தலா ரூ 25,000 ஆக மொத்தம் ரூ 75,000 வழங்க தீர்மானிக்கப்பட்டது
மேற் கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நன்றிவுரைக்கு பின் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்துகள் கூற வல்ல நயனின் நல்லருளால் நனி சிறப்புடன் நிறைவு பெற்றது அல்ஹம்து லில்லாஹ்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ்.எம். லெப்பை,
ரியாத்.
|