Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:54:52 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7377
#KOTW7377
Increase Font Size Decrease Font Size
சனி, அக்டோபர் 15, 2011
நகர்மன்ற தலைவர் பொறுப்பு வேட்பாளர் மிஸ்ரியாவுக்கு வாக்கு கோரி காக்கும் கரங்கள் பொதுக்கூட்டம் நடைபெற்றது!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3996 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (35) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையால் தேர்வுசெய்யப்பட்ட - நகர்மன்ற தலைமை பொறுப்பு வேட்பாளர் முத்து மைமூனத்துல் மிஸ்ரியாவுக்கு வாக்கு கோரி பொதுக்கூட்டம் ஒன்று நேற்று ( அக்டோபர் 14) நடைபெற்றது. அதற்க்கான ஏற்பாடுகளை காக்கும் கரங்கள் அமைப்பினர் செய்திருந்தனர்.

இரவு சுமார் 7 மணி அளவில் துவங்கிய இக்கூட்டத்திற்கு கே.ஏ. அஹ்மத் அப்துல் காதர் ஆலிம் தலைமை தாங்கினார். துவக்கமாக காக்கும் கரங்கள் அமைப்பின் தலைவர் எம்.ஏ.கே. ஜைனுலாப்தீன் வரவேற்புரை வழங்கினார்.



















இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளையின் (IFT) துணைத் தலைவர் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், தமிழ் நாடு கட்சியின் பொது செயலாளர் கே.ஏ.எம். அபூபக்கர், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், தமிழ் நாடு கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளர் காயல் மெஹபூப், காயல் எஸ்.ஈ. அமானுல்லாஹ், YUF அமைப்பின் செயலாளர் மொஹிதீன் அப்துல் காதர் ஆகியோர் ஆகியோர் உட்பட பலர் உரை நிகழ்த்தினர். ஐக்கிய சமாதான பேரவை தலைவர் என். ஹாமித் பக்ரி ஆலிமின் உரை கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.













காக்கும் கரங்கள் அமைப்பின் ஆலோசகர் எம். அப்துல் ரசாக் நன்றியுரை வழங்கினார்.

புகைப்படங்கள் உதவி:
காயல் எஸ்.ஈ. அமானுல்லாஹ்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ஒன்னையும் காணோம் ...
posted by M Sajith (DUBAI) [15 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10763

என்ன பேசினார்கள்? ஆடியோ விடியோ ஏதாவது உண்டா? அல்லது இதுவும் ஷரீயத்துக்கு கட்டுப்பட்டு வெளியிட மாட்டிங்களா?

அகமது அப்துல் காதர் ஆலிம் எங்கே? ஊரில் இல்லையா? விளம்பரம் பலமா இருந்தததே? அவர் செய்திய எழுதி கூட தரலையா?

மேடைக்கு பின்னால ஒரு டிராமா நடந்ததது இன்னும் வேற ஏதேதோ கேள்விபட்டோம்.. நீங்களா நடந்ததத சொன்னாத்தானே நல்ல இருக்கும் - கொஞ்சம் சொல்லுங்களேன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ...
posted by Mohideen - PS (Guangzhou) [15 October 2011]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 10764

அஸ்ஸலாமு அலைக்கும்

காக்கும் கரங்கள் , இப்படி ஒரு முயற்சி எடுத்ததற்கு என்னுடைய வாழ்த்துக்கள்....நீங்கள் இந்த முயற்சியை ஊரின் நலம் நாடி எடுத்துள்ளீர்கள்....அல்லாஹ், மென் மேலும் தங்கள் பணிகள் தொய்வின்றி நடக்க உதவி புரிவானாக......மீண்டும் வாழ்த்தி, வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ...
posted by mackie noohuthambi (kayalpatnam) [15 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10765

காக்கும் கரங்கள் ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு கூட்டத்துக்கு போயிருந்தேன். முஸ்லிம் லீக் பொதுசெயலாளர் அபூபக்கர், செயலாளர் காயல் மகபூப், கலா நிதி ஹபீப் முஹம்மது உரைகள் மிக அழுத்தமாக ஒன்றை சொன்னது. ஐக்கிய பேரவை எடுத்த முடிவு தவறு என்று நீங்கள் நினைத்தாலும் இப்போது பொது வேட்பாளரையே ஆதரியுங்கள். இந்த ஒற்றுமை உணர்வை மாற்று மதத்தினருக்கு வெளிப்படுத்துங்கள் என்ற அவர்களின் வேண்டுகோள்கள் விழலுக்கு இறைத்த நீராகி விடாது என்று நினைக்கிறேன்.

" யா மாஷற ஷபாப்" என்று இளைஞர்களைத்தான் அழைத்தார்கள் நபிகள் நாயகம். "இளையோர் கூட்டம் தலைமை தாங்கும் பூமியே புதிய பூமி" என்று ஒரு கவிஞர் இளைஞர்களை பார்த்து பாடினார். 100 இளைஞர்களை என்னிடம் தாருங்கள் அவர்களை இந்த இந்தியாவின் சிற்பிகளாக்கி காட்டுகிறேன் என்றார் விவேகானந்தர். உண்மைதான்.

ஐக்கிய பேரவை செயல்பாட்டில் குறைகள் தெரிகிறது. வாருங்கள் இளைஞர்களே, அதை சரி செய்வோம், வெளியே நின்றல்ல, மானுட வசந்தம் ஹபீப் முஹம்மது சொன்னதுபோல் உள்ளே செல்வோம், உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம், நீங்கள் எதிர்பார்க்கும் ஜனநாயகத்தை வென்றெடுப்போம்.

ஒரு இயக்கத்தின் நடவடிக்கைகளை முடக்கிவிடுவதா அல்லது அதை தீவிரமாக செயல்படும்படி முடுக்கிவிடுவதா? எதை நாம் தேர்நதடுப்பது. சிந்திப்போம்.

இப்போது ஊர் கூடி ஒரு தலைவரை தேர்ந்தெடுப்போம். நடந்தவற்றை மறப்போம். மன்னிப்போம். இனி ஒரு விதி செய்வோம்.

பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம், தீராத கோபம் யாருக்கு லாபம். வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது நமது ஊராக இருக்கட்டும். . விட்டுக்கொடுத்தவர்கள் கெட்டு போனதில்லை. நாளைய பொழுது நல்ல செய்தியை இந்த நாட்டு மக்களுக்கு சொல்லட்டும். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத காயல் என்று சங்கே முழங்கு, எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள காயலர்கள் ஒன்றாகக்கண்டார் என்ற புதிய கீதத்துடன் புதிய காயல், ஊழலற்ற நகராட்சி, தன்னலமற்ற சேவையால் நாம் எதிர்பார்க்கும் எல்லா நலத்திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு நாம் எல்லோரும் சுபீட்சமாக வாழ அல்லாஹ் அருள்புரிவானாக, ஆமீன், யா ரப்பல் ஆலமீன்.

மக்கி நூஹுதம்பி 9865263588


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. ப் பூ... கூட்டம் இவ்வளவுதானாக்கும்.
posted by Noordeen Prabu (Jeddah - Saudi Arabia) [15 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10767

ப் பூ... கூட்டம் இவ்வளவுதானாக்கும்.

என்ன பேசுனாங்கன்னு மேட்டரைப் போடுங்க சார். அப்பத்தான் கமெண்ட்ஸ் எழுத வசதியா இருக்கும். வெறும் போட்டோவை மட்டும் போட்டா எப்படி. ஏற்கனவே சென்னை வாசகர் ஒருவர் காத்துக்கொண்டு இருக்கிறார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ...
posted by mbsshaik (BANGKOK) [15 October 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 10768

இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா ? என்னப்பா கமெண்ட்ஸ் சுட சுட போடலையா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ...
posted by AbdulKader (Abu Dhabi) [15 October 2011]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10770

அஸ்ஸலாமு அழைக்கும்...

நம் ஊரின் ஒற்றுமையை நிலைநாட்ட இப்படியோர் சிறப்பான கண்ணியமிக்க கூட்டத்தை ஏற்பாடு செய்த காக்கும் கரங்கள் அமைப்பிற்கு, என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

அல்லாஹ் உங்கள் யாவருக்கும் நலருள் புரிவனாக ஆமீன்!

வஸ்ஸலாம்
அப்துல்காதர் (பாதுல்அஷ்ஹப்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ...
posted by mohamed abdul kader (dubai) [15 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10778

காக்கும் கரங்கள் ஊர் மக்கள் அனைவர்களுக்கும் பொதுவான அமைப்புதனா என்பதை நினைக்கும்போது சந்தேகத்தை ஏர்ப்படுதுகிறது.

அமைப்பு பொதுவானதாஹா இருப்பதை விட்டு விட்டு ஒருசாரார் பக்கம் சாய்வது நல்லதாக படவில்லை.தாங்கள் தங்களின் நிலைபாட்டை மாற்றி பொதுவான அமைப்பாக மாறினால் நன்றாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ...
posted by hylee (colombo) [15 October 2011]
IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 10785

உண்மையான செய்தி நூஹு தம்பி ஹாஜி,மொஹுதூம் பள்ளி விசயத்துல ஐக்கிய பேரவை நிலைப்பாடு எப்படி இருந்தது என்று விளக்கமா எழுதி,உண்மையை மக்களுக்கு அறிவித்தீர்கள்.மொஹுதூம் பள்ளி விசயத்தில் பேரவை பெட்ஷீட் போர்த்தி தூங்கி கொண்டா இருந்தது.எது எல்லாம் பேரவைகு உட்பட்டது தயு கூர்ந்து விளக்கம் தரும் படி அன்புடன் கேட்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ...
posted by Seyed Mohamed Sayna (Bangkok -Thailand ) [15 October 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 10788

அஸ்ஸலாமு அழைக்கும்

mb sheik மச்சான் இதோ வருகிறேன் , நான் நினைச்சது சரியாகிவிட்டது காக்கும் கரங்கள் மீடிங்கில் ஒருத்தரை பார்க்கும் போதே சந்தேகம் வந்தது இபோ வெளி வந்து விட்டது

பயம் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் , வேற யன்ன அமைப்பு எல்லாம் இருக்கிறது , தேடி பிடித்து ஒன்று செய்றது ஒட்டு கேளுங்க , அபோ தான் தேபோசிட் இல்லாம இருக்கும அபிதா லதா வின் ஆதரவாளர்கள் தானாக சேர்தவர்கள் ஆகவே வெற்றி அபிதா லதாவுக்கு நிச்சயம்

Seyed Mohamed Seyna
Bangkok


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ...
posted by Prabu Jailani (Jeddah) [15 October 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10789

திரு நூர்தீன் அவர்களே, உங்கள் கமெண்ட்ஸ் ஒரே குழப்பமாக இருக்கிறதே. ஏற்கனவே இந்த கமெண்ட்ஸ்களை எல்லாம் படித்துவிட்டு அரைபைத்தியமாகி விட்டாச்சு. அது போதாது என்று உங்கள் கமெண்ட்ஸ் எங்களை முழு பைத்தியமாக ஆக்கிவிடும் போலிருக்கிறதே. என்னதான் சொல்ல வருகிறீர்கள். ஆபிதாவுக்கு ஓட்டு போடனுமா அல்லது மிஸ்ரியாவுக்கு போடனுமா. கொஞ்சம் என் போன்றவர்களை குழப்பாமல் சொல்லவும். இந்த எலெக்சன் முடிந்தால் தான் குழம்புவர்களும் குழப்புவர்களும் நிதானத்துக்கு வரமுடியும் என்று நினைக்கிறேன். போதுமடா சாமி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. தவறு செய்பவனே மனிதன். ஆனால் தவறு மட்டுமே செய்பவன் மனிதனல்ல.
posted by Noordeen Prabu (Jeddah-Saudi Arabia) [15 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10790

"""அகமது அப்துல் காதர் ஆலிம் எங்கே? ஊரில் இல்லையா? விளம்பரம் பலமா இருந்தததே? அவர் செய்திய எழுதி கூட தரலையா?"" ----- இது நமது வாசகர் ஒருவரின் ஆதங்கம்.

அதுதான் யார் எழுதுன (பேசுன) செய்தியும் இங்கே இல்லையே? ஆனாலும் Photo நிறையா இருக்கிதேப்பா.

மேடையில் நடு நாயகமாக இருப்பவர்தான் கே.ஏ. அகமது அப்துல் காதர் ஆலிம் (NOT H.A). இவர்கள் சதுக்கை தெரு அஹ்மத் நெய்னார் பள்ளி ஜமாத்தை சார்ந்தவர்கள்.

நண்பர் ஏதோ உற்சாகத்தில் தெரியாத்தனமாக சொல்லி விட்டார் என்று நினைக்கிறேன். அதற்காக மற்ற வாசகர்கள் அவரை (அவர் ஐக்கிய ஜமாத்தை கேள்வி கேட்பது போல்) கேள்வி மேல் கேள்வி கேட்க வேண்டாம் என்று எங்களது வேலை வெட்டி இல்லாதோர் சங்கத்தின் சார்பாக அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.

தவறு என்பது எல்லோருக்கும் ஏற்படக் கூடியதுதானே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ...
posted by Shahul Hameed (Hong Kong) [15 October 2011]
IP: 180.*.*.* Hong Kong | Comment Reference Number: 10811

சகோதரர் MBS அவர்களே! கோசத்தை மாற்றி போடுங்கள். " இப்படை தோற்கின் எப்படை வெல்லும்"!

வாழ்த்துக்கள் MBS (தாய்லாந்த் மட்டை வீரர்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ...
posted by Younus (Bangkok ) [15 October 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 10812

நமது சின்னம் பஸ்
வெற்றின் சின்னம் பஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. எப்பு! வந்த ஆள்லாம் உங்காள்ன்னு ஆரு சொன்னாவ?
posted by M.N.L.முஹம்மது ரஃபீக்,ஹிஜாஸ் மைந்தன். (புனித மக்கா.) [15 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10815

எப்பு! வந்த ஆள்லாம் உங்காள்ன்னு ஆரு சொன்னாவ? ஏ, என்ன கூத்து நடத்துறாங்கன்னு பாக்கல்லெ வந்திருப்பாவெ! ஏ, ஆளெ வெச்சு எட போடதிய்யும்,அப்புறம் அந்தாலெ மொடங்கி கிடக்கானுவல்லெ இதுக்கு மின்னாலெ ஆட்சி செஞ்சவங்க! அந்தக் கதய்யா ஆய்யிராம்மடே?

ஏ,நம்ப வடிவேலுக்கு வராத கூட்டமா?இவியலுக்கு வந்திருக்கு? சும்ம வாய்க்கு வந்த மாரியெல்லாம் பேசப்படாது வேய்! ஏ நாஞ்சொல்லுறது உம்ம காதுலெ விளுந்துச்சா என்னே? ஏ,இன்னுங்கொஞ்ச நாள்லெ ஆரு செயிப்பாவெ?ஆரு தோப்பாவன்னு தெரிஞ்சிடும்ள்ளா? பேசாமெ போயி உம்ம சோலியெப் பாரும்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ...
posted by ISMAIL(KTM) (Hong Kong) [15 October 2011]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 10819

Ya Allah what kind of ppl are they; now KVS Kabeeb talked unity (br Makkie comment).now he will be there hero. B4 they comment him with all the names and not allow there ppl to listen to his speech because he was stamp with………………….. , even they don’t allow him to attend wedding ceremony in there majlis

Now he talks abt unity, in the past what u says abt him regarding unity

“Shame on him and shame on u ppl “,

Stick to one thing don’t change colors (then we can call u pachchonthi)

If anyone talks in ur favor then u will praise otherwise will curse him, what kind character u ppl have.

Only Allah knows what kind pressure does Dr. Habeeb have to attend this meeting, may be from is relative ring leader. Allah knows the best.

Any how Insha Allah pls vote for Sister Abitha
Symbol is: BOOK


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. பொருள் : டாக்டர் வந்தார், பேரவை மீது குற்றபத்ரிகை வாசி த்தார் , சென்றார் !!
posted by ஹாஜா அரபி (Hong Kong) [15 October 2011]
IP: 218.*.*.* Hong Kong | Comment Reference Number: 10820

தேர்தல் தோல்வி ஜுரத்தில் பேரவையின் வியூகம் அமைப்போர் பெரும் குழப்பத்தில், செய்வதறியாது திகைப்பது கண்கூடாக தெரிகிறது. இறுதி கட்டத்தில் பேரவையின் வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க இப்போது பேரவைக்கு இருக்கும் ஒரே ஆயுதம் தங்களையே குறைகூறிக்கொள்ள பேச்சாளர்களுக்கு அனுமதி அளித்துள்ளதாக தெரிகிறது.

எல்லோரும் பேரவை குறைபாடி, குற்றப்பத்திரிகை வாசித்து , ஆமாம் ஆமாம் தப்பு நடந்து விட்டது. மானம் காக்க, ஐக்கியம் பேன தங்கள் வேட்பாளருக்கு வாக்களிக்க கேட்கின்றனர். இதுவே சகோ. ஆபிதாவின் நிலையை வலுப்படுத்துவதாக உள்ளது. அந்த சகோதரி நீதிகேட்டுத் தான் களத்தில் போரிடுகிறாள்.

இப்போது டாக்டர் ஹபீபின் முறை போலும் . நமதூரின் மாபெரும் அறிவு ஜீவி தான் டாக்டர் ஹபீப். அவரும் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் போல் இளைஞர்களை அழைத்து ஒன்றுபட கேட்டுள்ளார்.அவரும் அவர் பங்குக்கு பேரவை தலைமையை குறை கூற மறக்கவில்லை.

தேர்தலை எதிர்நோக்கிஉள்ள நமதூரில் , சர்ச்சைகள் பலவற்றால் குழம்பிய இந்த சூழலில், ஒற்றுமையை நிலைநிறுத்துவது இப்போது சாத்தியமா? சும்மா ஊருக்கு விரைந்து உணர்ச்சிப்பூர்வ உரைகள் நிகழ்த்தினால் ஒற்றுமை ஓடி வந்துவிடுமோ ?

ஒற்றுமையை நிலைநாட்டவென உண்மையான எண்ணம் இருப்பின், பிரச்சினையின் ஆழத்திற்குள் சென்று, ஒற்றுமை ஏன் சிதைத்துள்ளது என ஆய்வு செய்து, அனைத்து சாராரரையும் சந்தித்து ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வழியுறுத்தி அனைவருக்கும் வழியுறுத்தி, தவறுகள் களைந்திட வழிவகை கண்டிருக்க வேண்டும். அதற்கு களப்பணி அவசியமில்லியா ? ஒற்றுமை என்பது அறிவுஜீவிகளின் வார்த்தை ஜாலத்தால் வந்துவிடும் என்றால், டாக்டரின் அதிவேக பயணம் வெற்றியே! உண்மையோ வேறு! ஒற்றுமை குறைவுக்கான காரணிகள் இருக்கும் வரை ஒற்றுமை எட்டுவது கடினமே.

மக்களின் முடிவிற்கு அனைவரும் - டாக்டர் ஹபீப் உட்பட, காத்திருப்போம். மக்கள் பேரவையின் செயல்பாட்டை அங்கீகரித்து பெருவாரியாக சகோ. மிஸ்ரியாவிற்கு வாக்களித்து வெற்றியளித்தால், மீண்டும் இதே ஐக்கிய பேரவையின் தலைமையில் மக்கள் தொடர்வர்.

மாறாக மக்கள் வேட்பாளர் என தன்னை முன்னிறுத்தும் சகோ. ஆபிதா விற்கு மக்கள் பெருவாரியாக வாக்களித்து வெற்றி பெறவைத்தால், பேரவை புதிய பொலிவுடன் டாக்டர் ஹபீப் அழைத்த்தைபோன்று, துடிப்புள்ள இளைஞர்களும் பெரியவர்களோடு பங்கேற்கும் புதிய ஐக்கியம் காயலில் உருவாகும். அதில் அனைவரும் சம (சமூக) நீதியுடன் நடத்தப்படுவர். காயளர்கள் குறியீட்டு இன்றி, பிரிவினை இன்றி அழைக்கப்படுவர். அப்போது டாக்டர் ஹபீப் வந்து ஒற்றுமையாக இருப்பதன் அவசியத்தை நமக்கு எடுத்துரைக்கலாம்.

தற்போது ஒதுங்கி இருந்து மக்களின் விருப்பத்தை அறியுங்கள். பல நேரங்களில் மக்கள் நம்மை விட புத்திசாலிகள் என்பதை அறிவுஜீவிகள் என்போர் உணரவேண்டும். இது டாக்டருக்கும் பொருந்தும். வஸ்ஸலாம்!! இவண் : ஹாஜா அரபி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ...
posted by Abdullah PMS (Dubai) [15 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10830

முழுக்க நனைந்த பிறகு இனி என்ன ஒற்றுமை முக்காடு சகோதரர் அப்துல் காதர் அவர்களே! மேடைக்கு பின்னால் நடந்த நாடகம் அம்பலம் ஏறிய பிறகுமா இந்த முக்காடு. இது ஐக்கிய பேரவையின் குறுக்கு வழி எனபது உங்களுக்கு தெரிந்த பிறகுமா ஒற்றுமையை பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். தலைக்கு மேல் வெள்ளம் போகிறது, இனி ஜான் என்ன முழம் என்ன?

நீதிக்கு வெற்றியே நிச்சயம் இன்ஷா அல்லாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ...
posted by U NOOHU (Hong Kong) [15 October 2011]
IP: 168.*.*.* Hong Kong | Comment Reference Number: 10832

Dear Mr. M. Sajith ( Dubai )

Please stop critics the ELEDER,
even you donot know who is ALIM AHAMED ADUL KADER
seems you donot know anything about KAYAL,
about ur supporting MEGA,
Who is MEGA,
What they know about KAYAL,
What they did for KAYAL,
KAYAL is splitted , the reason is MEGA ( this is only thing they did for KAYAL )

Dear Admin,
Please approve my comment


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ...
posted by SALAI.S.L.KHAJA MUHYIDEEN (Dubai) [15 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10840

90% போட்டோ இமேஜஸ் எல்லாம் அழகாக இருக்கிறது .ஆனால் கருத்துக்கள் என்ன பேசினர்கள் என்பதை ஏன் வெளியிட முடியவில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ...
posted by MOHAMED ADAM SULTAN (KAYAL PATNAM) [15 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 10846

ஐய்கிய அமைப்பு என்ற போர்வையில் எல்லா காலங்களிலும் ஒற்றுமை என்றால் ஒருகிலோ என்ன விலை என்று கேட்பவர்கலாகதான் இருந்தார்கள். எங்களை அண்டி அரவணைக்காமல் செல்பவர்களையும்,ஆன்மிகம்,அரசியல் போன்ற விஷியதிலும் எங்கள் முடிவை ஏற்காதவர்கள்.எங்களை பொறுத்தவரை ஊர் துரோகிகள்தான்.

இந்த அநியாயத்தையும் ஐயோகியதனத்தையும் தட்டிகேட்கும் தருணம் தேர்தல் களம், அதன் தலமயைதேர்தேடுக்கும் சந்தர்ப்பம்.என்று களத்தில் குதித்தால். மக்களே பாருங்களேன் ஊர் ஒற்றுமையை கெடுக்கிரார்களே என்ற கதறல்

வெளி ஊரிலிருந்து வரும் vip க்கள் மேடையேறி நடததைஎல்லாம் மறந்து விடுங்கள் பிறகு உள்ளே உட்கார்து தேநீருடன் தீர்க்கமாக பேசலாம் இப்பொழுது இந்த சின்னத்திற்கு வோட்டு போட்டு விடுங்கள்.இல்லை என்றால் மேல்படியாள் வந்து விடுவாள் என்ற பூச்சாண்டியை தானே வழக்கமாக வாழ்நாள் கதையாக கேட்டுகொண்டிருகிறோம்.

ஒரு சாராருக்கு மேடை ஏறும் vip என்று அழைக்கப்படும் உங்களுக்கு மனசாட்சி எங்கே போனது.

நீங்கள் மேடையில் ஏறும் முன்னாள் இரு சாராரையும் ஒற்றுமையின் அடிப்படையில் வரவழைத்து பேசுவதுதானே உண்மையான ஒற்றுமை.உண்மையான இக்லாஸ்.அதையெல்லாம் புரம் தள்ளிவிட்டு ஒருசாரரின் மேடையேறி ஒரு வேட்பாளருக்கு மட்டும் ஓட்டு கேட்டால் உங்கள் உள்ளத்தில் உண்மை இல்லை.

மாற்றுமத சகோதரர் மேடையேறி மதநல்லிணக்க மாயாஜாலம் மந்திரம் ஓதும் நீங்கள் ஒற்றுமையை பற்றி மட்டும் பேசாதீர்கள். உங்களை அடயாளம் கண்டுகொண்டால் உங்கள் சாயம் வெளுத்து விடும்.

பாவம் நீங்கள் என்ன செய்வீர்கள், சென்னை ஆண்டவரின் அதட்டலுக்கு அடிபணியும் அணியில் இருந்து அவ்வளவு எளிதில் தப்ப முடயுமா என்ன ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ...
posted by Mohiadeen (Phoenix) [15 October 2011]
IP: 71.*.*.* United States | Comment Reference Number: 10848

பேரவைக்கு வாங்க வாங்க கஊட்டதை தேர்தல் சமயத்தில் மட்டும் குபிடதிர்கள், கொள்கைகள் வெளிபடையாருந்தால் கஊட்டம் தனா வரும்.

கடந்த கலாத்தில் பேரவையால் தேருந்தயடுத்தவரகளால் லஞ்சத்தை வூளிக்க முடிந்ததா ?

தயவு செயுது ஜனநாயாஹதுக்கு வழி விடுங்க.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ...
posted by ashik (Saudi Arabia) [15 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10861

நூருதீன் kaka assalamualaikum

நீங்க எழுதுன Comment Reference Number: 10645 எனக்கும் ஊருக்கும் ஏதோ மெசேஜ் சொல்ல வந்த மாதிரி தெரிஞ்சிது , ஆனா கம்மேண்டே முழுசா படிச்சா ஒன்னுமே புரியலே அடுத்த வந்த கம்மேன்ட்ச்களும் அதே மாதிரித்தான் ஜெய்லானி kaka சொன்னது மாதிரி நானும் ரொம்ப கொலம்பி போயிருக்கேன் ..

நீங்க காமெடி கீமடி ஒன்னும் பண்ணலயே ...ஏண்டா பாருங்க 17 oct படத்த முடிக்கணும் .. இப்போ கிளைமாக்ஸ் fight சீன் ஓடிகிட்டு இருக்கும் போது நீங்க இன்னும் இண்டர்வல்கு முன்னாடி உள்ள காமெடி சீனே பண்ணிக்கிட்டு இருந்த நாங்க eppo படத்த முடிச்சு, தியேட்டர்ல போட்டு eppo award எல்லாம் வாங்குறது ...

சோ உங்களுக்கும் பாராட்டுகள் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ...
posted by MAK.JAINULABDEEN.(president,kaakkum karangal narpani mandram) (kayalpatnam) [15 October 2011]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 10864

அஸ்ஸலாமு அலைக்கும்.காக்கும் கரங்கள் என்றுமே ஊரின் ஒற்றுமையை கருத்தில் கொண்டு செயல்படக்கூடிய ஒரு சுதந்திரமான அமைப்பு.

ஊரின் நல்ல காரியங்களில் ஊருடன் ஒத்து போகும் நாங்கள், எந்த ஒரு கொம்பனான் தனிப்பட்ட நபருக்கோ,தனிப்பட்ட அமைப்புக்கோ நல்லதல்லாத காரியங்களில் கண்டிப்பாக கட்டுப்படாது.

ஊரின் நல்ல விசயங்களில் எந்த அளவுக்கு நாங்கள் முன்னின்று ஈடுபடுகிறோமோ,அதைவிட அதிகமாக ஊரின் தீமைக்கெதிரே எதிர்த்து போராடுவோம்.

ஆகவே எங்களை யாரும் சந்தேகிக்க வேண்டாம்.எங்களுடைய பத்துமாத செயல்பாடுகளிலேயே நாங்கள் நல்ல பெயரை வாங்கிவிட்டோம்.அல்ஹம்துலில்லாஹ். வருகின்ற காலங்களில் ஊரின் நலன்கருதி அல்லாஹ்வின் உதவியால் மட்டும் நாங்கள் பல வேலைகள் செய்ய இருக்கின்றோம்.

குறிப்பாக நமதூரில் பெருகிவரும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கும் நமதூர் சகோதரர்களை அந்த பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்கும் முயற்ச்சியில் இருக்கிறோம்.இதைப்போல எங்களால் முடிந்த பல வேலைகள் செய்ய இருக்கிறோம்.

எங்களது இந்த அமைப்பின் மூலம் ஊரை எல்லா விதத்திலும்(அல்லாஹ் மிகப்பெரியவன்) காக்கக் கூடிய கரமாக எங்களுடைய காக்கும் கரங்கள் இருக்கும் என்று உறுதிகூறுகிறேன்.நன்றி.அஸ்ஸலாமு அலைக்கும்.

இவண்:
தலைவர்,
காக்கும் கரங்கள் நற்பணி மன்றம்.
காயல் பட்டணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ...
posted by Mohideen (Jeddah) [15 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10870

நம்ம ஊரில் யார் meeting போட்டாலும் கூட்டம் அலை மோதும் போல் தெரிகிறதே


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. மரியாதைக்குரிய DR ஹபீப்
posted by DR D MOHAMED KIZHAR (chennai) [15 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 10871

தவயு செய்து யாரும் , எந்த தரப்பினரும் டாக்டர் ஹபீப் அவர்களை விமர்சித்து எழுதாதீர்கள்,,, நானுன் அவரும் ஒரே துறையை அதவாவது மருத்துவ துறை, அதிலும் குழந்தை மருத்துவர்கள், அவர்களின் சமுதாயர்த்ரக்கான தியாகம் நான் அறிவேன், அவர் கிளினிக்கில் எப்போதும் கட்டு கடங்காத கூட்டம்.. அனால் அதிலும் வாரத்தில் பாதி நாள், சமுதாய நல நிகழ்ச்சிக்காக , தனது கிளினிக்கை மூடி விட்டு (தனது வருமானத்தை துறந்து விட்டு) செல்லும் துறவி..

உங்கள் ஆதங்ககளை அழகிய வடிவில் தெரிவிக்கலாம்.. மட்டறு கொள்கை உடையவர்களை கூட மனது நோகாமல் செயல் படும் மனிதர் டாக்டர் ஹபீப் ...

இந்த மருத்துவ துறையில் தனது practise யை பாதி நாள், துறந்து பொது நல நிகழ்வுக்கு செல்லும் எந்த மர்ர்துவரையும் , நான் அறிந்து இது வரை கண்டதில்லை..

இது வரை எந்த contraversy லும் சிக்காதவர்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ...
posted by MAK.JAINULABDEEN.(president,kaakkum karangal narpani mandram) (kayalpatnam) [15 October 2011]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 10872

அஸ்ஸலாமு அலைக்கும்.காக்கும் கரங்கள் ஒரு வெளிப்படையான அமைப்பு.அல்லாஹ்வை தவிர,யாருக்கும் பயப்படாத ஒரு அமைப்பு.ஊருக்கு நன்மைகள் செய்து கொண்டிருக்கும்,இன்னும் பல நன்மைகள் செய்யத் துடிக்கும் மாணவர்களையும்,இளைஞ்சர்களையும் கொண்ட ஒரு அமைப்பு.

மனதிருந்தால் எங்களை வாழ்த்துங்கள்,நாங்கள் உற்சாகத்துடன் இருப்போம்.தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.கண்டிப்பாக திருந்துவோம்.தயவு செய்து குறை மட்டும் சொல்லாதீர்கள்."எல்லாம் விளங்கக் கூடியவன் அல்லாஹ் ஒருவனே".நன்றி.அஸ்ஸலாமு அலைக்கும்.

இவண்:
தலைவர்,
காக்கும் கரங்கள் நற்பணி மன்றம்.
காயல் பட்டணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ...
posted by sholukku.aj (kayalpatnam) [15 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 10885

அஸ்ஸலாமு அலைக்கும்!

அன்பின் காக்கும் கரங்களின் பொருப்பாளர்களே இந்த காயல் மாநகரின் கட்டுக்கோப்பை சீர்குலைக்கும் குறை காண்போரின் வசை மொழியாளர்களுக்கு இரும்புக் கரம் கொண்டு அடக்குவதை போல் இருந்ததது. DR .இன் மானுட வசந்தத்தை கேட்டு ,பார்த்து பிற சமுதாய சகோதரர்கள் மெய்சிலிர்த்து போனார்கள் .ஆனால் இங்கு பலர் ஒற்றுமையின் அவசியத்தை தெளிவாக புரிந்து கொண்டார்கள். ஒரு சிலர் பேதலித்து போனார்கள்.

பந்தல் போட்டு கூடும் கூட்டம் அல்ல. இது ஐக்கிய பேரவையின் கூட்டம் .கவினர் SAK .MUHIYADEEN அவர்கள் குறைவாக நேரம் கிடைத்ததால் வருத்தபட்டார். நல்ல நேரம் FULL TIME பேச வாய்ப்பு கிடைத்து இருந்தால் தம்பி சாஜித் போன்றவர்கள் இந்த மாதிரி விபரமில்லாத கருத்துக்களை பதிவு செய்ய மாட்டார்.

ஐக்கிய பேரவையின் முடிவுக்கு தூண் ஆக துணை நிற்கிறார் கவினர் SAK .இதில் இருவேறு கருத்தில்லை. எத்தனை வேட்பாளர்கள் கலத்தில் நின்றாலும் பஸ்சின் வெற்றிப்பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

"உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்து ஆக முடியாது"
VOTE FOR BUS
THANKS


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. குழப்பம் மிச்ச குழப்பம்
posted by Noordeen Prabu (Jeddah - Saudi Arabia) [15 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10886

ஜெய்லானி காக்கா!

நீங்களும் ஜித்தாவில் தான் இருக்கிறீர்கள். நானும் ஜித்தாவில் தான் இருக்கிறேன். நீங்க பேசாம எனக்கு ஒரு Phone அடிச்சு கேட்டிருக்கலாம். அல்லது நேரில் சந்திக்கும்போது கேட்கலாம். அதை விட்டுட்டு இந்த Comments பகுதியில் கேள்வி கேட்கணுமா?

நானும் உங்களை மாதிரி குழம்பி போய்தான் இருந்தேன். ஆனால் இப்போ தெளிவா இருக்கேன். ஏன்னா என் Comments ஐ பார்த்து உங்களை மாதிரி ஆட்கள் குழம்பினதால். யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.

நான் ஐக்கிய பேரவையை கண் மூடித்தனமாக ஆதரிப்பவனும் இல்லை. அதே நேரத்தில் ஊரின் - பெரியவர்களின் கண்ணியத்தை சீர் குலைப்பவனும் இல்லை. நம்முடைய திட்டம் நிறைவேறவில்லை என்பதற்காக உள்குத்து வேலை பார்ப்பவனும் இல்லை. ஜனநாயகத்தின் மேல், மக்கள் சக்தியின் மேல் முழு நம்பிக்கை வைத்துள்ளேன்.

அப்புறம் ஓட்டு யாருக்கு போடம்னு கேட்டிருக்கீங்க? பேசாம ருத்ரம்மாளுக்கு போட சொல்லுங்க. அல்லது போட்டியே போடாத வஹீதா ராத்தாவிற்கு போட சொல்லுங்க. இதெல்லாம் ஒரு தமாசுக்கு சொன்னேன். உங்க மன சாட்சி படி யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்க. என் ஆதரவு யாருக்கு என்பதை நாளைக்கு டூட்டி முடிந்து Bus இல் போகும்போது நேரில் பேசிக்கொள்ளலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. மாற்றம் வேண்டும்
posted by shahul hameed sak (malaysia) [15 October 2011]
IP: 60.*.*.* Malaysia | Comment Reference Number: 10887

உறைவீச்சுக்கள் இல்லாமல் வெறும் ஆடுபோம்மை படங்கள் மட்டும்தானா வேட்பாளர் அறிமுக கூட்ட உரைவீச்சுகளினால் எழுந்த விமர்சனங்களை கண்டு அச்சமோ.

நியாயம் கேட்டால் ஒற்றுமையை கெடுக்கிறார்கள் என்று ஒப்பாரி வைத்தவர்கள் இரண்டு வாரம் அவகாசம் இருந்தும் தவறை திருத்திக்கொள்ளாமல் இன்று தவறு நடந்து விட்டது என்று ஒப்புதல் வாக்குமூலம் தோல்வி பயம் சேர்ந்து ஓலமிட அல்லக்கை நொல்லக்கை எடுபிடிகள் மக்கள் மனங்களை அறியாதவர்கள் மேடையேறினால் மானம் போவதுதான் மிச்சமாகும்.

மாறவேண்டும் அல்லது மாற்றப்படும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ...
posted by CNash (Makkah) [15 October 2011]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10888

அஸ்ஸலாமு அலைக்கும்!

சமீபத்தில் நான் கேட்ட ஒரு "மானுட வசந்தம்" பாண்டிச்சேரியில் நடந்தது ஒற்றுமை பற்றி மாற்று மத நண்பரில் கேள்விக்கு Dr . அவர்களில் பதில் அந்த நண்பரை மற்றும் இன்றி எங்களையும் கவர்ந்தது!!

அதில் ஒற்றுமை இல்லாமல் போவதற்கான முக்கிய காரணம் " அடுத்தவர் உரிமைக்கும் உணர்வுக்கும் மதிப்பு கொடுக்க மறுக்கும் சில தலைமை மற்றும் மனிதர்கள். தனி நபர் உரிமைகளை பறித்தால் ஒற்றுமை ஒருபோதும் வராது என்று சொல்லி EQUAL RIGHT AND EQUAL OPPERTUNITY என்று இன்று வரை மனதில் பதிய வைத்து இருக்கிறீர்கள்.

அது பாண்டிச்சேரி மாற்று மத நண்பருக்கு மட்டும் தானா இல்லை பேரவைக்கும் பொருந்துமா!! உரத்து சொல்லி உடைத்து இருக்கலாமே!! ஒற்றுமையை அல்ல உண்மையை !!! இந்த தேர்வு முறை சரி இல்லை என்பதை உங்கள் உள்மனசு ஒப்புகொண்டாலும்!!! ஒற்றுமைக்காக பொது வேட்பாளரை ஆதரிக்கனும் என்றால் மற்ற வேட்பாளர்களில் உரிமை இங்கே சிலரால் பறிக்க படவில்லையா?

KNOWLEDGE IS A VACCINE AGAINST VIOLENCE..என்று சொன்னீர்கள் ....அந்த Knowdledge தான் ஒரு DEMOCRATIC VIOLENCE எதிராகவும் பேச சொல்லுது!!!

எங்கேயோ கேட்ட ஒரு பொன்மொழி இங்கே பொருந்தும் என்று நினைக்கிறன்

"Unity without verity is no better than conspiracy "

உண்மை இல்லாத ஒற்றுமை சதியை விட கொடியது....இந்த வேற்று ஒற்றுமைக்காக தான் அன்று பல மூளைகளை தட்டி எழுப்பிய குரல் என்று ஒரு மூலையில் மட்டும் ஒலித்து ஓய்ந்து இருக்கிறது!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. விட மாட்டேங்குறாங்களே..
posted by Shaik Dawood (Hong Kong) [16 October 2011]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 10895

ஐயா.... நானும் கம்மென்ட் எழுத வேணாம்னு பாக்குறேன்... ஒரு சிலர் விட மாட்டேங்குறாங்களே... என்னய்யா பண்றது...ச்சே... ஏன் வீட்ல என்னாண்டா எவன் கமென்ட் அடிச்சா ஒங்களுக்கு என்ன வந்துருச்சு.... அடிச்சா அடிச்சிட்டு போறாங்களேன்னு???... இருந்தாலும் ஒரு சில கமெண்ட்டை பாத்த்ட்டு சும்மா இருக்க மனசு வரலீங்க... அதான்...ம்ம்ம்ம் என்ன பண்றது...

எப்பா... ஹபீப் டாக்டர் ஒங்க கூட்டத்துக்கு வந்தா / ஒங்க வேட்பாளரை ஆதரிச்சி பேசுனா அவர் நல்லவரு வல்லவரு நாலும் தெரிஞ்சவரு... ன்டு புகழ்ந்து தள்ளுவீங்க.... இல்லென்ன சாயம் வெளுத்துரும் பழுத்துரும்... ன்னு சொல்லி கிழி கிழின்னு கிழிப்பீங்க... என்னையா நியாயம் இது.... ஒரு பொத்தாம் பொதுவா பேசுனா யாரையும் புடிக்காதே....

MEGA நடுநிலையா யாருக்காவது பாத்து போடுங்கன்னா MEGA தன் அதிகாரத்தை இழந்து விட்டது என்பீர்கள்.... ஆபிதா லாத்தாவை வைத்து ஒட்டு கேட்டதும் MEGA மெகாதான்டு... நிறுபித்து விட்டது என்பீர்கள்... எல்லாத்தையும் அல்லாஹ் பாத்துக்குட்டுதான் இருக்கான்...

கே எ அஹ்மது ஆலிமுக்கும் ஹெச் ஏ அஹ்மது ஆலிமுக்கும் வித்தியாசம் தெரியாமே கண்ணை மூடிக்கிட்டு கை போற போக்குல அடிச்சிர்றதா??? கொஞ்சம் ஊரை பத்தியும் ஊர்ல உள்ளவங்கள பத்தியும் தெரிஞ்சிகிட்டு அப்புறம் டைப் பாண்ணுங்க... நீங்க சதுக்கை தெருவாமே? அஹ்மது ஆலிமிசாவை ஒங்களுக்கு தெரியாதோ... பாவம் ஊரை பத்தி தெரிஞ்சாதானே... நீங்க என்ன பான்னுவீங்க...? பாவம்....

ஆல உடுங்கப்பா
தாவூது பின் ஷாபிஈ
ஹாங்காங்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ...
posted by Salai. Mohamed Mohideen (USA) [16 October 2011]
IP: 68.*.*.* United States | Comment Reference Number: 10899

கடைசியிலே காக்கும் கரங்களும் பேரவையை காக்க கிளம்பிட்டாங்க போல இருக்கு. என்னமோ போங்க எல்லோரும் ஒரு "நல்ல" (so called ஊர் ஒற்றுமை can be achieved only through supporting peravai's candidate??) ஒரு காரணம் வச்சு இருக்காங்க... நாங்க ஏன் சப்போர்ட் பண்ணுறோம் என்பதற்கு. என்ன நடந்து இருந்தாலும் மீசையில் மண் ஒட்டாமல் இருப்பதற்காக...நாம் (ஒரு சிலர்??) தேர்வு செய்த பொது வேட்பாளார் வெற்றி பெறுவதற்காக நடக்கின்ற கூத்தில் இதுவும் ஒன்று போல் தெரிகிறது. இன்னும் என்ன கூத்துகள் ஊரில் நடை பெற்றதோ. போட்டி வேட்பாளர்கள் எவ்வளவோ பாத்துட்டாங்க (அநேகமா தெரிதல் முடிஞ்சதுக்கு அப்புறம் அது கூட வெளிய வரலாம்...யாரு அறிவார்??). இதுலாம் ஜுஜுபி.

கடைசியில் எல்லோரும் ஒத்து கொள்கிறார்கள் ...பேரவையின் தேர்தல் கூத்தில் தவறு இருக்கிறது என்று. போட்டி வேட்பாளர்களுக்கு (வகிதா அவரலையும் சேர்த்து) அநீதி இளைக்க பட்டு இருக்கிறது என்று தெரிந்தும் எப்படி நம்மால் இப்படி? மனம் இதை ஏத்துக்கொள்ள வரமாட்டேன்குது.

யாரை வச்சு கூட்டம் போட்டாலும்...நியாயம் வென்றே தீரும் அநியாயம் ஒரு போதும் (நிரந்தரமாக) வெற்றி பெற்றதாக சரித்திரம் கிடையாது. அது தோல்வியை சந்திச்சே ஆகா வேண்டும்....விடிகின்ற விடியல் வெகுதுரத்தில் இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ...
posted by mohmedyounus (Chennai) [16 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 10953

இன்ஷா அல்லாஹ் ஒருவேளை, சகோதரி மிஸ்ரியா அவர்கள் வெற்றி பெற்று நன்றி அறிவிப்பு கூட்டம் மகளர அல்லது ஜலாளியாவில் வைத்து நடக்கபெற்று, அங்கும் டாக்டர் கே.வி.எஸ் ஹபீப் அழைத்தால், நாம் அனைவரும் எதிர்பார்க்கும் ஒற்றுமை பிறக்கும்.

இன்ஷா அல்லாஹ் எதிர்போர்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ...
posted by K S MUHAMED SHUAIB (KAYALPATINAM) [16 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 11043

சகோ. காஜாஅரபியின் கருத்து சிந்திக்கத்தக்கது, புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது கவிழ்ந்து படுத்துக்கொள்ளுங்கள் என்பதை போல ஒரு இக்கட்டான நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் அந்த அமைப்பு இதுவரை தான் மதிக்காத மதிக்க விரும்பாத கேவலம் ஒரு நிக்காஹ் மஜ்லிஸில் கூட மேடை ஏற்ற விரும்பாத மரியாதைக்குரிய டாக்டரை தனது சொந்த சுய நலனுக்காக இன்று நடுநாயகமாக மேடையில் ஏற்றி அழகு பார்த்தது.

யாரோ ஒருவர் சந்தா கட்டி இவர்கள் மஜ்ளிசுக்கு வரும் "சமரசம்"இதழை கூட அதன் கவரை கூட பிரிக்காமல் அப்படியே தூக்கி தூரவீசும் இவர்களின் மேடையில் டாக்டர் அவர்கள் ஏறியது என் போன்றவர்களுக்கு வேப்பங்காயாக கசக்கத்தான் செய்தது.

அதற்க்கு டாக்டர் அவர்கள் என் போன்றவர்களிடம் சொன்ன சமாதானத்தை வேறு வழியில்லாமல் நாங்கள் ஏற்க வேண்டியதாயிற்று. டாக்டர் போன்றவர்களின் மனோதர்மத்திற்கு அவர்கள் நடந்து கொண்டது சரிதான். அவர்களை நாம் வேறு வழியில் கட்டாயப்படுத்த முடியாது. டாக்டரை தனது வலையில் வீழ்த்திய அந்த சூழ்ச்சி காரர்களைத்தான் சொல்லவேண்டும். (தொடரும்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ...
posted by K S MUHAMED SHUAIB (KAYALPATINAM) [16 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 11050

(முந்திய கருத்தின் தொடர்ச்சி.....)ஆக தங்களுக்கு தெளிவில்லாத போது ஒரு நெருக்கடியின் மும்முனை சந்திப்பில் சிக்கித்தவிக்கும் போது இவர்களுக்கு இவர்களின் எதிரி கூட ஆபத்பாந்தவனாய் திகழ்வான். இவர்களை டாக்டர் போன்றவர்கள் புரியாததுதான் என் போன்றவர்களின் வேதனை.

டாக்டர் போன்று எந்த விஷயத்தையும் உயரத்தில் நின்று தூரநோக்கில் பார்பவர்களுக்கு இது சாதாரண விஷயமே ஆனால் தினம் தினம் களத்தில் நின்று துவேசத்தையும் வெறுப்பையும் சந்திகிறவர்களால் அந்த மனோநிலையுடன்தான் எதையு பார்க்கமுடிகிறது.

டாக்டரை மேடை ஏற்றியது வேண்டுமானால் அவர்களின் வெற்றியாக இருக்கலாம். ஆனால் அவர்களின் வெறுப்பையும் துவேஷத்தையும் அந்த சிறிது நேரமாவது அடக்கிக்கொள்ள நேர்ந்ததே அது டாக்டருக்குத்தான் வெற்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved