காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையால் தேர்வுசெய்யப்பட்ட - நகர்மன்ற தலைமை பொறுப்பு வேட்பாளர் முத்து மைமூனத்துல் மிஸ்ரியா தனக்கு வாக்கு கோரி புது அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
2. Re:வாக்கு கோரி நகர்மன்ற தலை... posted byM Sajith (DUBAI)[15 October 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10756
தமிழன் முத்து இஸ்மாயில் காக்கா அவர்களுக்கு,
10 ஆண்டுகளுக்கு முன் இவர் வேட்புமனு கொடுத்ததாக ஒரு பொய்யை எத்துனை தடவை சொல்ல (எழுதி கொடுத்து) வைத்துள்ளார்கள்.. ராஜ தந்திரிகள் - கொயபல்சுவின் பாடம் படித்த இவர்கள்..
இதுதான் கடைசி அஸ்திரம், முறையான வழியில் - மாற்று ஏற்படடுக்களும் பட்டுவாடாக்களும் பலமாக நடக்கிறது ஒருபுறம்..
3. Re:வாக்கு கோரி நகர்மன்ற தலை... posted byMohideen - PS (Guangzhou)[15 October 2011] IP: 14.*.*.* China | Comment Reference Number: 10758
அஸ்ஸலாமு அலைக்கும்
சகோதரி மிஸ்ரியா அவர்களே,
தங்களுடைய தாழ்மையான வேண்டுகோளும், அறிக்கையையும் பார்த்தாலே புரிகிறது ...நீங்கள் ஒரு சிறந்த தலைவியாக நகராட்சியை நடத்த முடியும் என்று....இன்ஷா அல்லாஹ், வெற்றி வெகு தூரத்தில் இல்லை..
எங்கள் நகராட்சி தலைவி....மிஸ்ரிய்யா ....
எங்கள் சின்னம் .....Bus ....
4. Re:வாக்கு கோரி நகர்மன்ற தலை... posted bysarah (calicut)[15 October 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 10759
அஸ்ஸலாமுஅலைக்கும்.
லாத்தா மிஸ்ரியா அவர்களே...... அல்லாஹ் உங்களுக்கு வெற்றியை தர போதுமானவன். இத்தருணத்தில் நீங்கள் உங்களின் வெற்றிக்காக உழையுங்கள்.
யார் சொல்லுக்கும், எவர் கேள்விக்கும் நீங்கள் பதில் தரவேண்டிய அவசியமில்லை. கதீஜா அவர்களின் commentsக்கு பதிலடி கொடுக்கும் படியாக கட்டாயமாக அல்லாஹ் நிச்சயமாக உங்களுக்கு வெற்றியை கொடுப்பான். வெற்றி பெற வாழ்த்துக்கள்
6. Re:வாக்கு கோரி நகர்மன்ற தலை... posted byMohamed Rafeek (DUBAI)[15 October 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10774
அஸ்ஸலாமு அலைக்கும்
சகோதரி மிஸ்ரியவுக்கு நீங்கள் உண்மையிலேயே ௧௦ ஆண்டுக்கு முன்னால் மனு கொடுத்து இருந்தால் கண்டிப்பாக இறைவன் உங்களை வெற்றிபெற செய்வான். அப்படி இல்லை என்றால் இறைவன் உங்களை கண்டிப்பாக தோற்கடிப்பான். எண்களின் பிரார்த்தனையும் அதுதான் உங்களின் வார்த்தையில் உண்மை இருந்தால் உங்கள்ளு வெற்றிதான்
அன்பு ஊர் சகோதரர்களே..... ஊர் ஒற்றுமை பலப்படுத்த, சகோதரத்துவம் தளைத்தோங்க, மித வாதம் நிலைத்து நிற்க ஆதரிப்பீர்.......... பஸ் சின்னத்தில் முத்திரை இட்டு ஹாஜி மைமுனதுல் மிஸ்ரியா அவர்களை வெற்றிபெற செய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன். வஸ்ஸலாம்.
8. Re:வாக்கு கோரி நகர்மன்ற தலை... posted byNafeela (Kayalpatnam)[15 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 10805
சகோதரர் சாஜித் அவர்களே! தயவு செய்து இது போன்று கமெண்ட்ஸ் கொடுப்பதை நிறுத்துங்கள்
(பொய்யை உண்மையாக்கும் முயற்சியின் பின்னணியில் உள்ளவர்கள் நரகில் ஓலமிட்டவர்கலாக வருவதை காண காத்திருப்போம்)
அல்லாஹ் பாதுகாப்பானாக! எது உண்மை பொய் என்பதை அறிய அல்லாஹ்வே போதுமானவன்
இந்த பத்தாண்டு தத்துவம் மட்டும்தான் என் புத்திக்கு எட்டமாட்டேன்கிறது! சகோதிரி பெருந்தன்மையா சொன்ன மாதிரி “வேறு யாரையாவது தேர்ந்தெடுத்திருந்தால் நிச்சயமா போட்டியிட மாட்டேன்!விலகியிருப்பேன்.” இப்படி சொல்லுற நீங்க ஊர்லெ ஒரு பெண்(ஆபிதா) மனு கொடுத்திருக்காங்க,சரி நல்லதை யார் செஞ்சா என்ன?மக்கள் நலன் கருதி நான் விட்டுக்கொடுத்து விலகிக் கொள்கிறேன்னு சொல்லியிருக்கலாமே?
சகோதரியே! இந்த தேர்தல் பொம்மலாட்டத்தில் தலைவி எனும் கதாபாத்திரத்தின் ஒரு பாவைதான் நீங்கள்! உங்களை ஆட்டிவைக்கும் நூல்கள் வேறு சிலரது விரல் இடுக்கில் சிக்கிக் கொண்டிருக்கிறது! நீங்கள் வென்றாலும்,தோற்றாலும்,உங்களுக்கு எதிராக விழும் அனைத்து வாக்குகளும் ஐக்கியப்பேரவையின் நம்பகத்தன்மைக்கு எதிரானவையே!!!
குசும்பு:
ஆமா! நீங்க புறநகர் வலம் போனதாத் தெரியல்லியே?அப்புறம் என்ன புறநகர்வாசிகளுக்கு தேங்க்ஸ் வேண்டிக்கிடக்கு?ஓகோ...!!! சிங்கித்துறை,,,ஊர், கொம்புத்துறை...ஊர்த் தலைவர்கள் பாரட்டி பேசினாங்களே? அதற்காகவா? ஆஹா!ஓஹோ! பேஷ்,பேஷ்!!!
லாத்தா வெற்றி பெரும் முன்ன லைய பதவி ஆசை உங்களுக்கு, லெட்டர்பெய்டு எல்லாம் அடிச்சி திங்க போல
பரவ இல்லை லாத யாராவது பொது நல வழக்கு போட்டுற போறாங்க ,
உங்க லெட்டர் பெய்டுல தலைவர் நகராட்சி பொது வேட்பாளர் டூ போட்டு இருக்குது , சிகிரமா எடுங்க ,
ஆபித லாத பார்த்துர போறாங்க , அப்புறம் பதவிக்கு வரும் முன்னால இப்படி லெட்டர் ஹெட் அடித்தது தவறுடூ பொது நல வழக்கு போட்டுற போறாங்க ,
இதுக்கு தான் சொல்லுவான் சுயமா யோசிக்கணும் , அடுத்தவங்க சொல்லி செய்ய குடா துண்டு ,
பாவம் நீங்க உங்களை வைத்து பலி கட அகுரங்க ,
பொருது இருந்து பார்க்கலாம்
12. Re:வாக்கு கோரி நகர்மன்ற தலை... posted bysulaiman (abudhabi)[15 October 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10814
அஸ்ஸலாமு அலைக்கும்,
உங்களின் (சகோதரி மிஸ்ரிய ) வெற்றியை உங்களை விட மிக மிக ஆர்வத்துடன் நமது ஊரின் மீது அக்கறை கொண்ட நானும் ,என்னைபோன்ற ஆயிரம்,ஆயிரம் நமது ஊரு மக்களும் எதிர்நோக்கி இருக்கிறோம்.ஏன் என்றல் இப்போது ஊரை எதிர்த்து நிற்கும் குறைமதியாலர்களை வளர விட்டால் வரும் காலங்களில் ஒரு கட்டுப்பாடு இல்லாமல் தெருவுக்கு ஒரு வேட்பாளர் நகர்மன்ற தலைமை பதவிக்கு போட்டி இட்டு நம்முடிய வாக்குகள் எல்லாம் சிதைந்து பாரம்பரியம் மிக்க நமது காயல்பட்டினம் நகரமன்ற தலைமைத்துவம் நமது (முஸ்லிம் ) கையைவிட்டு நழுவி மற்றவர்களிடம் போய்விடும் அல்லாஹ்பாதுகாப்பனாக.
சகோதரி மிஸ்ரிய அவர்களின் வெற்றி காயலின் வெற்றி.அனைத்து காயல் மக்களும் பஸ் சின்னத்தில் வாக்களித்து சகோதரி மிஸ்ரிய அவர்களை பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வழிவகை செய்யவேண்டும்.இன்ஷாஅல்லாஹ்.
13. யா அல்லாஹ்! எங்களை நரகத்தை விட்டும் பாதுகாப்பாயாக. posted byNoordeen Prabu (Jeddah-Saudi Arabia)[15 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10816
""""10 ஆண்டுகளுக்கு முன் இவர் வேட்புமனு கொடுத்ததாக ஒரு பொய்யை எத்துனை தடவை சொல்ல (எழுதி கொடுத்து) வைத்துள்ளார்கள்.. ராஜ தந்திரிகள் - கொயபல்சுவின் பாடம் படித்த இவர்கள்.. """"" இப்படி ஒரு கமெண்ட்.
---------- அவங்க கொடுத்தாங்களா அல்லது கொடுக்கலையா என்பது இங்கே கமெண்ட்ஸ் எழுதுற யாருக்கும் தெரியாது. முஸ்லிமாகிய நாம் இன்னொரு முஸ்லிமின் மீது நல்லெண்ணம் வைக்க வேண்டும். அதுதான் ஒரு உண்மையான முஸ்லிமுக்கு அழகு.
சகோதரி மிஸ்ரியா அவர்கள் அப்படி வேட்பு மனு கொடுக்காமல் பொய்யாக கொடுத்தேன் என்று சொல்லியிருந்தால் நாளை மறுமையில் படைத்த ரப்பிடத்தில் அவர்கள் பதில் சொல்லிக்கொள்வார்கள். அதைப்பற்றி நமக்கு என்ன கவலை. ஒரு வேளை அவர்கள் கொடுத்திருந்தால் கமெண்ட்ஸ் எழுதும் (அதை ரசிக்கும்) உண்மையை பொய்யாக்கும் நம்முடைய நிலை? --------
சகோதரரின் மீதி கமெண்ட்ஸ்:
"""பொய்யை உண்மையாக்கும் முயற்சியின் பின்னணியில் உள்ளவர்கள் நரகில் ஓலமிட்டவர்கலாக (வருவதை) காண காத்திருப்போம்.."""
-------- வருவதை காண காத்திருப்போம் என்றால் ------ நாம் அவர்களுக்கு முன்பே நரகத்தில்தான் இருப்போமா? அவர்களை வரவேற்கக் காத்திருப்போமா?
யா அல்லாஹ்! நீ எங்களையும் எங்களைச் சார்ந்தவர்களையும் மற்றுமுள்ள அனைத்து முஸ்லிம்களையும் உன்னுடைய பெருங்கருணையால் (எங்களுடைய ஆருயிர்த் தலைவர் அண்ணலாரின் ஷபாஅத்தைக் கொண்டு) மன்னித்து நரகத்தை விட்டும் ஈடேற்றம் பெறச் செய்வாயாக. ஆமீன்!
14. Re:வாக்கு கோரி நகர்மன்ற தலை... posted byVilack SMA (Hetang)[15 October 2011] IP: 113.*.*.* China | Comment Reference Number: 10824
சகோதரி மிஸ்ரியா வெற்றிபெற வாழ்த்துக்கள் .
பொதுவாக comments எழுதும்போது " நாகரீகம் " வேண்டும். அதிகம் படித்திருக்கிறேன் , Respnsible position இல் இருக்கிறேன் என்பதற்காக தலைக்கனம் பிடித்தால் அது ஆணவம் . ஆணவக்காரன் விரைவில் அழிந்துவிடுவான் என்பது முன்னோர்களின் வாக்கு . இதை நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை . பொதுவானது.
15. விட்டமின் ப பாதாளம் வரை பாயுமோ? posted byமுஹம்மது அப்துல் காதர் (சென்னை)[15 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 10855
பாவம் உங்களை உங்களுக்கே தெரியாமல் பலி கொடுத்து விட்டார்கள் இப்போது விழி பதுங்கி நிற்கிறார்கள் என்ன செய்வதென்று ஏதேதோ செய்து பார்க்கிறார்கள் ஒன்னும் எடுபடவில்லை. கடைசியாக பல இன்னோவா கார்கள் புற நகரத்தை சுற்றி பட்டுவாடா வேலைகளில் ஈடுபட்டு இருப்பதை பார்த்தால் திருமங்களமும், திருச்செந்தூரும் ஏன் திருச்சி மேற்கும் தோற்று விடும் போல தெரிகிறதே.
வேட்பாளரே பார்த்து நடந்து கொள்ளுங்கள் ஏற்கனவே சமோசாவும், கேக்கும் உங்கள் கனக்கில் உள்ளது இன்னும் பல ல.. க்களையும் உங்கள் கணக்கில் சேர்த்து விட போகிறார்களோ.
முஹம்மது அப்துல் காதர்,
சமுதாயத்தின் விழுதுகள். சென்னை.
16. Re:வாக்கு கோரி நகர்மன்ற தலை... posted bysholukku.aj (kayalpatnam)[15 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 10860
அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பின் சகோதரியே, உன்னிடம் பணிவு, தன்னடக்கம், பெரியவர்களிடம் மரியாதை, உண்மையை மட்டுமே பேசுதல்,
சிந்தனையாளர்களிடம் ஆலோசனை பெறுவது, நாகரிகம்
சாதிக்க துடிக்கும் ஆற்றல் இவைகளை காண முடிந்தது.
ஆசிரியர்கலே உங்களிடம் மன்டீட்டு பாடம் படிக்கவேண்டும்.
உங்களை தலைவியாக அடைய இந்த ஊர் பெருமையுடன் தலை நிமிர்த்து நிற்பது உறுதி. எதிரி இல்லாத வாழ்க்கை இனிப்பு இல்லாத தேன் மாதிரி . பஸ்சின் வெற்றிப் பயணம் 21 .10 2011 அன்று காயல் நகராட்சியை நோக்கி நடை பெறுவது இறைவன் அருளால் உறுதி. உறுதி உறுதி நன்றி!
17. Re:வாக்கு கோரி நகர்மன்ற தலை... posted byDR D MOHAMED KIZHAR (chennai)[15 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 10866
அஸ்ஸலாமு அலைக்கும்.. இந்த உலக அற்ப பதவிக்காக, நம்மில் பலரும் கமெண்ட்ஸ் மூலமும், அறிக்கை மூலமும், எத்தனை முறை அல்லாஹ்,மறுமை, சொர்க்கம், நரகம் இழுதிருப்போம்..
வெற்றி தொல்வோயோடு இந்த தேர்தல் முடிந்து விட போகிறது...வெற்றி பெற்றவர்கள் அதிக பட்சம் ஐந்து ஆண்டுகளில்,பதவி காலம் முடிய போகிறது.. இந்த குறுகிய கால பதவி மற்றும் ஆட்சிக்க, இத்தனை அலட்டல்..
தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும் சரி, அதை தேர்வானவர்கள் பார்துகொள்ளட்டும்.. இனி நாம் நம் ஊரின் ஒட்ட்ருமையை, அதன் பாரம்பரியத்தை காக்க, சில மாறுதல் கொண்டு வர முயற்சிப்போம் ஒற்றுமையுடன் ,,
கம்மேண்டில் அதிக பட்சம்.. அல்லாஹுக்கு பாய்ந்து மனசாட்சி படி என்று கேளுங்கள்.. அதற்க்கு மேல் செல்ல வேண்டாம்..
18. கருத்து கணிப்பு posted bykudack buhari (doha-qatar)[15 October 2011] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 10873
சகோதரி மிஸ்ரியா வெற்றிபெற வாழ்த்துக்கள் .
முத்து முத்தான வாக்குகள் மொத்தமாக உங்களுக்கே
மூத்த குடிமக்களின் வாக்குகள் அத்தனையும் உங்களுக்கே
இளைஞர் பட்டாளம் இருமாய்பாய் சொல்கிறது நாங்களும் உங்களுக்கே என்று,
இனிமேல் நமக்கு இல்லை தயக்கம்,இனிமேல் தான் நாங்கள் கேட்கபோகிறோம் உங்கள் வெற்றி முழக்கம்,
19. ஒரு விளக்கம் .. posted byM Sajith (DUBAI)[15 October 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10882
கோவத்தின் வெளிப்பாடாக நான் பிறயோகித்த வார்த்தைகளை எண்ணி வருந்துகிறேன்..
எனினும், இது உண்மையில்லை என்பதை உறுதியாக நம்புகிறேன்..
பேரவையின் அறிக்கையிலோ, இன்னபிற வெளியீடுகளிலோ இது சொல்லப்படவில்லை. எனக்கு தெரிந்தவரையில் அன்று யாரும் சகோதரி வஹிதா லாத்தா உட்பட யாரும் விருப்பமனு தரவில்லை - மனுவும் இல்லை முச்சரிக்கையுமில்லை (நாளை இதை உறுதி செய்து இன்னும் தெளிவாக பதிவு செய்கிறேன் இன்ஷா அல்லாஹ்)
ஆபிதாவை கட்டுப்படாதவள் என சித்தரிக்கும் முயற்சியில் ஒரு பொய்யை, அநியாயமாக சகோதரியின் பெயரில் மீண்டும் மீண்டும் வெளியிட்டு தங்கள் முகங்களை காக்கத்துக்கொள்வதற்காக நரகிலும் தள்ள துணிந்தவர்களைத்தான் நான் குறிப்பிட்டேன் என்பது மீண்டும் அதை படித்தால் புரியும்.
அட்மின்: அந்த பதிவை நீக்க வேண்டாம்.. இந்த விளக்கத்துடன் படிக்க ஏதுவாக இருக்கும்.
நான் நம்புவது தவறாக இருந்தால், அதற்கும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுகவும் தயங்க மாட்டேன்.
-------------
Dear Admin, pls ignore my earlier posts on and publish this instead. Statements corrected to avoid contraversy
20. Re:வாக்கு கோரி நகர்மன்ற தலை... posted bySalai.Mohamed Mohideen (USA)[16 October 2011] IP: 68.*.*.* United States | Comment Reference Number: 10902
என்னமோ போங்க...நீங்கள் ஒரு puppet ஆகாமல் இருந்தால் சரி. நீங்கள் ஜெயிச்சு வந்தா ஊர்லே இன்னும் என்ன கூத்துகளை பார்க்கவேண்டியுள்ளதோ. ஏற்கனவே ஊர் ரெண்டு பட்டு போயிருச்சு...பொது வேட்பாளர் தேர்தல் கூத்துகள் மூலம். உங்களை வச்சு ஊர் மக்கள் வாழ்ந்தா சரிதான்..ஒரு அமைப்பு/கொள்கையினர்/மதத்தினர் அல்ல!!
22. Re:வாக்கு கோரி நகர்மன்ற தலை... posted byKudack Mohudoom Mohamed (Kuwait)[16 October 2011] IP: 213.*.*.* Kuwait | Comment Reference Number: 10908
Assalamualaikkum அட்மின் சார், தயவு செய்து தேர்தல் முடியும் வரை தேர்தல் சம்பந்தமான எந்த செய்தியும் போடாதீர்கள், இங்கு நம் சகோதரர்கள் போடும் சண்டையை பார்த்து மிகவும் சங்கடமாக இருக்குது, மற்ற ஊர் நண்பர்கள் கூட நமது ஊரில் நடக்கும் தேர்தல் கூத்தை பார்த்து சிரிக்கிறார்கள், இதே நண்பர்கள் ஒரு கட்டத்தில் நமது ஊரை பெருமையாக பேசினார்கள், ஆகையால் சகோதரர்களே கருத்து சொல்லும்போது நாகரிகம் கருதி நமது ஊரின் நலன் கருதி கருத்து சொல்லுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.
முத்து முத்தான வாக்குகள் மொத்தமாக உங்களுக்கே மூத்த குடிமக்களின் வாக்குகள் அத்தனையும் உங்களுக்கே இளைஞர் பட்டாளம் இருமாய்பாய் சொல்கிறது நாங்களும் உங்களுக்கே என்று,
இனிமேல் நமக்கு இல்லை தயக்கம்,இனிமேல் தான் நாங்கள் கேட்கபோகிறோம் உங்கள் வெற்றி முழக்கம்,
25. Re:வாக்கு கோரி நகர்மன்ற தலை... posted byS.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A)[16 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10981
"கோவத்தின் வெளிப்பாடாக நான் பிறயோகித்த வார்த்தைகளை எண்ணி வருந்துகிறேன்"..
வருத்தம் தெரிவித்த பின் விமர்சிப்பது முறையன்று. ஒன்று மற்றும் குறிப்பிட விரும்புகிறேன்
இதை தான் முன்பிருந்தே அனைவரும் பதிவு செய்கிறார்கள் அறிவும் வேகமும் இருக்கலாம்... அனுபவம் தேவை.
சகோதரி ஆபிதா சகோதரருக்கு சொந்தமாக கூட இருக்கலாம், நமக்கென்ன எதிரியா? இல்லையே, ஒற்றுமை எனும் விசயத்தில் ஒன்று பட்டிருந்தால் விவேகமுள்ளவர்களும் ஆதரிப்பார்கள்.
இறைவன் நமக்கும் எதிரணியில் இருப்பவருக்கும் இன்னும் முமினான, முஸ்லிமான அனைவருக்கும் நரகத்தை ஹராமாக்கி சுவன பதியை தந்தருள்வானாக. ஆமீன்.
நாளை தங்கள் வாக்குகளை பதிய வேண்டிய சின்னம் பேருந்து (BUS)
அன்புள்ள M.N.L.முஹம்மது ரஃபீக்,ஹிஜாஸ் மைந்தன்.
காகா அவர்களுக்கு தம்பி எழுதுவது ,
அவர்கள் வெற்றி பெரும் முன்ன மே லெட்டர்பெய்டு அடித்து விட்டார்கள் , கருது கணிப்பு தருவித்து விட்டார்கள் , இது எல்லாம் இங்க தானே காகா செய்ய முடியும் ,
வெற்றி அபிதா லதாவுக்கு எழுது கொடுத்து விட்டார்கள் காயல் கண்மணிகள் ,
ஆபிதா லத்தா வெற்றி பெற்ற உடனே இப்படி லெட்டர்பெய்டு அடிக்க விடுவார்களா ,
பாவம் காகா இதுலையவது கருது கணிப்பு சொல்லி சந்தோஷ பட டும் ,
பாவம் மிஸ்ரிய லதா உங்கள பலி குடுத்துட்டாங்க
காகா நாம பாகத்து ஊருக்கு நிறைய கார் போகுதாம்
காரு புள்ள என்னமோ இருக்காம்
28. Re:வாக்கு கோரி நகர்மன்ற தலை... posted byShahul Hameed (Hong Kong)[16 October 2011] IP: 180.*.*.* Hong Kong | Comment Reference Number: 11022
சகோதரர் ரபீக் அவர்களே! நீங்கள் சகோதரர் குடாக் புஹாரி அவர்களின் பதிவை உல்டா செய்து போட்டு இருக்குறீர்கள்.
அதனால் உங்களுக்கு சந்தோசம். நீங்கள் தற்போது உங்கள்
பெயரை மாற்றியுள்ளிர்கள். அதனால் எங்களுக்கு சந்தோசம்.
30. Re:வாக்கு கோரி நகர்மன்ற தலை... posted byஅப்துல்காதர் தைக்காஸாஹிப் (Riyadh, KSA)[16 October 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11024
சகோதரர் சொளுக்கு அவர்களே “மண்டியிட்டு” என்ற வார்த்தை “மன்டீட்டு” என்று அட்ச்சு பிழையில் பாதித்திருந்தால், தயவுசெய்து அந்த வார்த்தையை திரும்ப பெற்றுகொள்ளுங்கள் .
நாங்கள் அல்லாஹ்வை தவிர எவருக்கும் “மண்டியிடுவதில்லை”.
அஞ்சுவதும் அடிப்பனிவதும் படைத்தவன் ஒருவனுக்கே.
ஒற்றுமை பற்றி பேசுபவர்கள், தங்களின் கூட்டத்தில், காயல்பட்டினம் “கொம்புதுரை” “சிங்கிதுரை” என்று ஏலம் போனதே?
31. Re:வாக்கு கோரி நகர்மன்ற தலை... posted bykudack buhari (doha-qatar)[16 October 2011] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 11029
சகோதரர் M.N.L.முஹம்மது ரஃபீக்,ஹிஜாஸ் மந்தன்.(sorry மைந்தன்)என்னுடைய கருத்தை மிக மோசமாகவே எடிட் செய்திருக்கிறார் ,என் கருத்திற்கு பதில் அளிக்க திரானியற்றவர்,
, புனித மக்கமா நகரில் வாழ்த்து வரும் இவர் என் கருத்தை திருட எப்படி மனசு வந்ததோ ? சேம் சேம் பப்பி சேம் ,
33. கருத்துக் கணிப்பு காலை வாரிடாமெ..! கவனம்,,,!!! posted byM.N.L.முஹம்மது ரஃபீக்,ஹிஜாஸ் மைந்தன். (புனித மக்கா.)[16 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11075
கொடாக் பூக்காரி ஸாரி...புஹாரி அவர்களே! உங்க கருத்தை திருடித் தான் நாங்க பொழப்பு நடத்துனும்னு அவசியமில்லை! தேர்தல் கணிப்புன்னு ஒரு கனவு கண்டு அதை கருத்தா பதிவு செஞ்சீங்களே? அதெப் பார்த்ததும் எனக்கு சிரிப்புதான் வந்தது!அது உங்க கருத்து இல்லையே? செய்தியும்,அர்த்தமும் வேறயாத் தானே இருந்திச்சு! ஆபிதாவுக்குதானே? அதிக வாக்குகிடைக்க வாய்ப்புன்னு கணிப்புலெ தெரிவிச்சிருந்தேன்!
உங்க கருத்து இப்படியா இருந்திச்சு? இன்னும் ஒரு முறை நல்லாப் படிச்சுப் பாருங்க! வெள்ளெழுத்து ப்ராப்ளம் ஒன்னுமில்லையே? கடைசி வரியிலெ
It is the truth...!!! நீங்க இப்படி போடல்லையே? அப்புறம் திருடன்னு வேற என்னை சொல்லிட்டீங்க! பதிலுக்கு நான் உங்களைக் குருடன்னு சொல்லமாட்டேன்!
34. விளக்கம் - நேரடி விளக்கம் posted byNoordeen Prabu (Jeddah-Saudi Arabia)[17 October 2011] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11126
Comment Ref.: 10882
"""கோவத்தின் வெளிப்பாடாக நான் பிறயோகித்த வார்த்தைகளை எண்ணி வருந்துகிறேன்.. """
------ (இறைவன் மீது பயபக்தியுடையோர்) தங்களின் கோபத்தை மென்று விழுங்கி விடுவார்கள். மனிதர்களின் குற்றங்களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் இத்தகைய நல்லோர்களை நேசிக்கின்றான். (அல்குர்ஆன் 3:134).
உலகில் ஏற்படும், அத்தனை பிரச்சனைகளுக்கும் அடித்தளம் என்னவென்று நாம் யோசித்துப் பார்த்தால், சகிப்புத் தன்மை இல்லாததுதான் முக்கிய காரணம் என்பதை நாம் உணரலாம். எனவேதான், மேற்கண்ட இறைவசனத்தின் மூலம் இஸ்லாம் சகிப்புத் தன்மையை இறை நம்பிக்கையாளனின் பண்புகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறது. கோபம் கூடாது என்று கூறவில்லை மாறாக கோபத்தை மென்று விழுங்கி விடுமாறு வலியுறுத்துகிறது.
"""எனினும், இது உண்மையில்லை என்பதை உறுதியாக நம்புகிறேன்.."""
------- கொடுத்தவர் உறுதியாக கொடுத்தேன் என்கிறார். வாங்கியவர்களும் உறுதியாக வாங்கினோம் என்கிறார்கள். ஆனால் சம்பந்தப்படாத நாமோ இது உறுதியாக உண்மையில்லை என்கிறோம். ஒரு உண்மையான முஅமினுக்கு அடையாளம் மற்ற முஅமீன்கள் மீது நல்லெண்ணம் வைப்பதுதான். சகோதரி மிஸ்ரியா உடைய கணவர் அஹமது சலாஹுத்தீன் (Mobile No. +91-9443002259)அவர்களை நான் நேரடியாக தொடர்பு கொண்டு கேட்டதில் அவர் பத்து வருடங்களுக்கு முன்பு தானே நேரில் சென்று மனு கொடுத்ததாக சொல்கிறார். இதற்கு பின்பும் யாரை நம்புவது என்று நடுநிலையாளர்கள் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
"""பேரவையின் அறிக்கையிலோ, இன்னபிற வெளியீடுகளிலோ இது சொல்லப்படவில்லை. எனக்கு தெரிந்தவரையில் அன்று யாரும் சகோதரி வஹிதா லாத்தா உட்பட யாரும் விருப்பமனு தரவில்லை - மனுவும் இல்லை முச்சரிக்கையுமில்லை (நாளை இதை உறுதி செய்து இன்னும் தெளிவாக பதிவு செய்கிறேன் இன்ஷா அல்லாஹ்)"""
------ ஒரு விஷயம் சொல்லப்படவில்லை என்பதற்காக அந்த விஷயமே நடைபெறவில்லை என்று எந்த ஒரு சராசரி அறிவுள்ள மனிதனும் விளங்க மாட்டான்.
மேலே ""உறுதியாக நம்புகிறேன்"" - ஆனால் இங்கே ""எனக்கு தெரிந்தவரையில் - நாளை இதை உறுதி செய்து"". இதற்கு பெயர்தான் முரண்பாடு.
"""ஆபிதாவை கட்டுப்படாதவள் என சித்தரிக்கும் முயற்சியில் ஒரு பொய்யை, அநியாயமாக சகோதரியின் பெயரில் மீண்டும் மீண்டும் வெளியிட்டு தங்கள் முகங்களை காக்கத்துக்கொள்வதற்காக நரகிலும் தள்ள துணிந்தவர்களைத்தான் நான் குறிப்பிட்டேன் என்பது மீண்டும் அதை படித்தால் புரியும். """
-------- ஒரு வேளை அவர்கள் உண்மையாளர்களாக இருந்து நாம் அவர்களை பொய்யாக்கி இருந்தால் - நம்முடைய நிலை என்ன? நாமும் அதே நரகிற்கு சொந்தக்காரர்கள்தானே.
எனவே எழுதும் முன்பு எதிலும் ஒரு நிதானம், நடு நிலைமை, நேர்மை இருக்க வேண்டும்.
"""நான் நம்புவது தவறாக இருந்தால், அதற்கும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுகவும் தயங்க மாட்டேன்."""
------- நீங்கள் உங்கள் கூற்றுப்படி இந்நேரம் உறுதி செய்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். மனு கொடுத்தவரின் மொபைல் நம்பரையும் தெரிவித்துள்ளேன். நீங்கள் மூன்றாவது நபரிடம் விசாரிப்பதைக் காட்டிலும் சம்பந்தப்பட்டவரிடம் நேரடியாக கேளுங்கள். அவரது வாக்கில் நம்பிக்கை இருந்தால் உங்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்காவிட்டாலும் பரவாயில்லை. உங்கள் வருத்தத்தையாவது தெரிவியுங்கள். அவரை நம்பவில்லை என்றால் மீண்டும் உங்கள் கருத்துக்களை வழமை போல் தெரிவியுங்கள்.
35. வாக்கு கோரி நகர்மன்ற தலை... posted bySolukku M.I. Seyed Mohamed Sahib (SMI) (Jeddha, KSA)[17 October 2011] IP: 168.*.*.* United States | Comment Reference Number: 11159
எதுக்குப்பா மாறிமாறி கேட்டுக்கொண்டே இருக்கணும், குறைந்தபட்சம், ஒரு கேள்விக்காவது பதில் கிடைக்கட்டுமே.
"10 ஆண்டுகளுக்கு முன் இவர் வேட்புமனு கொடுத்ததாக ஒரு பொய்யை எத்துனை தடவை சொல்ல (எழுதி கொடுத்து) வைத்துள்ளார்கள்.. ராஜ தந்திரிகள் - கொயபல்சுவின் பாடம் படித்த இவர்கள்..".....சாஜித், துபாய்.
---------------சகோதரி மிஸ்ரியா உடைய கணவர் அஹமது சலாஹுத்தீன் (Mobile No. +91-9443002259)அவர்களை நான் நேரடியாக தொடர்பு கொண்டு கேட்டதில் அவர் பத்து வருடங்களுக்கு முன்பு தானே நேரில் சென்று மனு கொடுத்ததாக சொல்கிறார். ------நூருத்தீன், ஜெத்தா
போன் நம்பர்தான் இருக்கே நேரடியாகவே கேட்டுட்டு தகவல் சொல்லுப்பா, ஒன்றுக்காவது விடை தெரியட்டுமே....
ஊரில் யார் யாரோ சொல்லும் தகவலை வைத்துக்கொண்டுதான் நாம் எழுதிக்கொண்டிருக்கிறோம் அதில் எது உண்மை எது பொய் என்பது நிச்சயமில்லை, அதனால் குறைந்த பட்சம் மற்றவின் தவறை (உண்மையில் குற்றம் புரிதவரா என்பது இறைவனுக்குத்தான் தெரியும்) சுட்டிக்காட்டும் போது நமது வாய்க்கும் கைகளுக்கும் கட்டுப்பாடு வைத்துக்கொண்டால் நல்லது...இறைவன் அனைவரது சிந்தனையையும் ஆரோக்கியமாக்கி தருவானாக.
36. Re:வாக்கு கோரி நகர்மன்ற தலை... posted byMohideen (Jeddah)[17 October 2011] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11169
Comment Reference Number: 11126
நூர்தீன் காக்கா,
"""பேரவையின் அறிக்கையிலோ, இன்னபிற வெளியீடுகளிலோ இது சொல்லப்படவில்லை. எனக்கு தெரிந்தவரையில் அன்று யாரும் சகோதரி வஹிதா லாத்தா உட்பட யாரும் விருப்பமனு தரவில்லை - மனுவும் இல்லை முச்சரிக்கையுமில்லை (நாளை இதை உறுதி செய்து இன்னும் தெளிவாக பதிவு செய்கிறேன் இன்ஷா அல்லாஹ்)"""
இதுக்கு இன்னும் சம்பத்தபட்டவர்களிடம் இருந்து பதில் வரவில்லை. ஒரு வேலை நேரமின்மை காரணமாக இன்னும் உறுதி செய்ய வில்லையோ என்னோவோ. பொருத்து இருந்து பார்போம்...................................
இங்கு கருத்து எழுதும் பல (90%) பேர் முரண்பாடுடன் தான் எழுதுகிறார்கள். கேவலம் ஒரு அற்ப பதவிக்காக எதெற்கெடுத்தாலும் அல்லாஹ்வின் மீது சத்தியம்... சத்தியம் என்பது மளிகை கடையில் விற்பது போல் ரம்பவும் cheap ஆஹ போய் விட்டது.
ஒரு சில பேர் பெரியவர்களை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க சொல்லுகிறார்கள் ( தவரே செய்திருப்பினும் ) அதில் அவர்களுக்கு என்ன அப்படி ஒரு அற்ப சந்தௌசம் என்று தெரியவில்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross