தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் 17.10.2011 அன்று நடைபெறுகிறது. இத்தேர்தலில் காயல்பட்டினத்தின் நகர்மன்றத் தலைவர் பொறுப்பிற்கு 6 பெண்களும், 18 வார்டு உறுப்பினர்கள் பொறுப்பிற்கு 86 பேரும் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் நெருங்குவதையொட்டி பரப்புரைகள் முழு வீச்சில் நடைபெற்றது. பரப்புரை செய்ய இறுதி நாளான நேற்று நகர்மன்றத் தலைவர் பொறுப்பிற்குப் போட்டியிடும் பேருந்து சின்னத்தில் போட்டியிடும் முத்து மைமூனத்துல் மிஸ்ரிய்யாவுக்கு ஆதரவு கோரியும், புத்தகம் சின்னத்தில் போட்டியிடும் ஆபிதாவுக்கு ஆதரவு கோரியும் நகர் முழுக்க பரப்புரை வாகனங்கள் ஊர்வலமாக சென்றன. இதர வேட்பாளர்களுக்கும் ஆதரவு கோரி வாகனங்களில் பரப்புரை செய்யப்பட்டது.
அதுபோல காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 18 வார்டுகளுக்கான உறுப்பினர்கள் பொறுப்பிற்குப் போட்டியிடும் 86 வேட்பாளர்களும் அவரவர் வார்டுக்குட்பட்ட பகுதிகளில் வாகனங்கள் மூலமும், கால்நடையாகவும் தீவிர பரப்புரை செய்தனர். பொதுமக்கள் தமது ஆதரவுகளை தம் இல்லங்களிலிருந்தவாறு கையசைத்து தெரிவித்தனர்.
1. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted bysholukku.aj (kayalpatnam)[16 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 10920
SALAAM 2 ALL.
அன்பின் காயல் மாநகரின் மதிப்புக்குரியோர்களே பல கருத்து பரிமாற்றங்கள் , கற்பனை செய்திகள் , நாடகங்கள் நடந்தாலும் எந்த சூல்நிலையளும் எந்த இடத்திலும் சண்டை , சச்சரவுகள் ,காண முடியாததை கண்டு மிக்க மகிழ்ச்சி .இந்நிலை என்றும் தொடர ரப்புல் ஆலமீனிடம் DUA கேட்போமாக ஆமீன் நன்றி
2. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byKader Sulaiman (Kayalpatnam.)[16 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10939
அரசாங்க விதிகளின் படி பிரச்சாரம் ஓய்ந்தது. ஆனால் காயல் பாதுஷாக்களின் பணவேட்டை புறநகர் பகுதிகளில் இப்பொழுதுதான் ஆரம்பமாகி இருக்கிறது. புறநகர் மக்களுக்கு இன்று இரவுதான் பௌர்ணமி.
சுலைமான் அவர்களே... தோல்வி பயம் உள்ளவன் இதை செய்தாதானே அவன் சாதிக்க நினைப்பதை சாதிக்க முடியும்..! ஆரம்பத்திலேயே ஜனநாயகத்தை இவர்கள் படுகொலை செய்து விட்டார்களே... இனி இவர்கள் பணம் கொடுத்தால் என்னே... சரக்கு கொடுத்தால் என்னே...!
பேரவையின் ஊர் பொது வேட்பாளர் என்று எப்போது அறிவித்தார்களோ அன்றே நமதூரில் ஜனநாயக படுகொலை நடந்தேறி விட்டது...!
5. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byRilwan (Kowloon)[16 October 2011] IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 11008
6426. உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.
ஒருநாள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து இறந்தவர்களுக்காகத் தொழுகை நடத்துவதைப் போன்று உஹுதுப் போர் உயிர்த் தியாகிகளுக்காகத் தொழவைத்தார்கள். பிறகு சொற்பொழிவு (மிம்பர்) மேடைக்குத் திரும்பிவந்து 'உங்களுக்காக நிச்சயம் நான் (மறுமையில்) காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் ஆவேன். மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இப்போது ('அல்கவ்ஸர்' எனும்) என்னுடைய தடாகத்தைக் காண்கிறேன். எனக்கு 'பூமியின் கருவூலத் திறவுகோல்கள்' அல்லது 'பூமியின் திறவுகோல்கள்' வழங்கப்பட்டுள்ளன. அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குப் பின்னால் நீங்கள் (இறைவனுக்கு) இணை வைப்போராக மாறிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. ஆனால், உலகத்திற்காக நீங்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு (மோதி)க்கொள்வீர்களோ என்றே அஞ்சுகிறேன்' என்றார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross