Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:19:44 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7381
#KOTW7381
Increase Font Size Decrease Font Size
சனி, அக்டோபர் 15, 2011
ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம்: புதுப்பள்ளி செயலாளர், துணை செயலாளர், பொருளாளர் பங்கேற்பு!
செய்திமாஸ்டர் கம்ப்யூட்டர்
இந்த பக்கம் 5778 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (44) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 5)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டணம் நகராட்சி மன்ற தலைவர் பொறுப்பிற்கு போட்டியிடும் வேட்பாளர் ஆபிதா அவர்கள் புத்தகம் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க நேற்று 14-10-2011 மாலை 5 மணிக்கு காயல்பட்டணம் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இப்பிரச்சாரத்திற்கு புதுப்பள்ளி ஜமாத் செயலாளர் ஜனாப் ஏ.எஸ்.அஹ்ரப், துணை செயலாளர் அப்துல் காதர் நெய்னா, பொருளாளர் ஹாரூன் ரசீத் மற்றும் புதுப்பள்ளி ஜமாத்தினர்கள் பெரும் திரளாக அழைத்து சென்று வாக்கு சேகரித்தனர்.





தகவல்:
ஏ.எஸ்.அஸ்ரப்,
செயலாளர், புதுப்பள்ளி.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம...
posted by Eassa Zakkariya (Jeddah) [15 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10791

வாழ்த்துக்கள்

இளைஞர் "வேற்படை" முன்னிலையில்? காட்சிகள் மாறுகிறது - எல்லாம் அவன் செயல்

நாளைய நிகழ்வை யார் அறிவார் அவனன்றி

"மனிதன் மிகவும் பலகினமானவன்"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம...
posted by ahamed (colombo) [15 October 2011]
IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 10793

அருமையான முடிவு, வெற்றி பெற வாழ்த்துக்கள்! இதை போல் கோபி காகாக்கும் ஆதரவு தெரிவித்து வெற்றி பெற உழையுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம...
posted by hylee (colombo) [15 October 2011]
IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 10794

வாழ்த்துக்கள்.தக்க நேரத்தில் எடுத்த தங்கமான முடிவு.கோபி காகாவின் வெற்றிக்கும் பாடுபடுங்கள்.அல்லாஹ் வெற்றி தருவான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. புது பள்ளி நிர்வாகியின் ஆதரவு பெற்ற வேட்பாளர் திருமதி மிசிரியா அவர்கள்... என்று சொல்லி பிரச்சாரம் செய்வது தான் சரியானது...! !
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [15 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10797

இதில் இருந்து என்ன உண்மை விளங்குகிறது...? புது பள்ளி ஜமாஅத்தார்கள் யாரும் பேரவை நடத்திய பொது வேட்பாளர் தேர்வில் உடன்பாடு இல்லை.. அது புது பள்ளி மற்றும் சங்கங்களின் நிர்வாகியின் தனிப்பட்ட முடிவே தவிர ஜமாஅத்தார்கள் முடிவு அல்ல...! பேரவையே... ! தயவு செய்து இனி ஊர் மக்களை ஏமாற்றும் முகமாக ஜமாஅத்தார்கள் ஆதரவு பெற்ற வேட்பாளர் என்று சொல்லி பொய் கூட்டங்கள், பொய் பிரச்சாரங்கள் செய்யாதீர்கள்...

புது பள்ளி நிர்வாகியின் ஆதரவு பெற்ற வேட்பாளர் திருமதி மிசிரியா அவர்கள்... என்று சொல்லி பிரச்சாரம் செய்வது தான் சரியானது...

புது கடை தெரு, மொகுதூம் தெரு, தைக்கா தெரு மற்றும் மருத்துவர் தெரு மக்கள் ரெம்ப தெளிவா இருக்காங்க..

நகர மக்களுக்கு உண்மை செய்தியை வெளிட்ட உண்மையை மக்களுக்கு தெரிய படுத்திய (அம்பல படுத்திய) நடுநிலை வாதிகளுக்கு - மிக்க நன்றி.. நன்றி.. உண்மையே வெல்லும்... நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (வி.சி.க)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம...
posted by Shahul Hameed VT (Jeddah) [15 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10801

சலம்

முந்தய கமெண்ட் பகுதியில் தமிழர் முத்து இஸ்மாயில் சரியாக சொன்னார்.

Comment Reference Number: 10662


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. உண்மைக்காக குரல் ..
posted by முத்துவாப்பா (அல்-கோபர்) [15 October 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10806

இந்த செய்தியை காணும் பொழுது மிகவும் சந்தோசமாக உள்ளது . உண்மைக்காக குரல் கொடுக்க புறப்பட்ட உங்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை .

ஏ.எஸ்.அஹ்ரப் காக்கா, அப்துல் காதர் நெய்னா காக்கா ,ஹாரூன் பாய் மற்றும் உண்மைக்காக களமிறங்கியுள்ள மேடை குரூப்ஸ் மற்றும் மனசாட்சி உள்ள அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

ஐக்கியம் , ஒற்றுமை என்று சொல்லிவிட்டு இன்று பணநாயகத்தால் ஜனநாயகத்தை வென்றுவிடலாம் என்று குறுகிய சிந்தனை கொண்டவர்கள் மத்தியில் நீதிக்காக ,உண்மைக்காக , மனசாட்சிக்காக புறப்பட்ட உங்களது பயணம் வெற்றியுடன் முடியட்டும் ( இன்ஷா அல்லாஹ் ).


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம...
posted by Mohideen(Durai) (Abu Dhabi ) [15 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10817

வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம...
posted by ISMAIL(KTM) (Hong Kong) [15 October 2011]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 10821

ALL THE BEST SISTER, INSHA ALLAH U WILL BE THE WINNER, DO'NT WORRY PPL R WITH U, INSHA ALLAH U WILL WIN WITH HUGE MARGIN.

MA SALAM
ISMAIL (KTM ST)
HONG KONG


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. அடுத்தாத்து ஆபிதாவெப் பார்த்தேளா?
posted by M.N.L.முஹம்மது ரஃபீக்,ஹிஜாஸ் மைந்தன். (புனித மக்கா.) [15 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10823

இது என்ன புதுக் கூத்து? புதுப்பள்ளி ஜமாஅத் ஐக்கியப்பேரவையிலிருந்து அவுட்டா? ஆகா!!! ட்ரெண்டு மாறுதே? “அடிச்சாலும்,புடிச்சாலும் அவா ஒன்னா சேந்துக்கறா!அடிச்சதுகொன்ணு,புடிச்சதுக்கொன்ணு சேலையெ வாங்கிக்கறா!பட்டு... சேலையெ வாங்கிக்கறா?”-இந்த பாட்டுதான் நினைவுக்கு வற்றது!அட்மின் மாமா கத்திரி போட்றாதேள்! சமத்து மாமான்னோ! சட்ணி,சாம்பார்ல்லாம் நன்னா சூடா இருக்கு! ஒரு வாய் சாப்பிட்டு போரேளா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம...
posted by Samu.A.B (Dubai) [15 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10829

Thanks to VD.sadak tamby ( Comment ID # 10709) for clarifying us what is unity in “THEIR” perspective. Recent example to this type of unity is the one advocated by modi to Gujarathi Muslims. In our vocabulary that is totalitarianism or hegemony. If that is the unity you are talking all the way then that unity deserves to be defeated at any cost.

Sister Abida’s victory will ensure the fall of self anointed CAESARS of kayal and the pseudo unity they are advocating. Most of the kayaltys are eagerly expecting to put a full stop to this menace. They don’t want kayalpatnam to be ruled by remote control. Those who wish to do that must get the brunt of peoples.

Unity comes through trust, mutual respect and justice. If these basics of unity are compromised, then that shall be called as surrender or slavery. Fortunately we know how to differentiate both.

Sister Abida deserves to be elected.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம...
posted by Ahamed Larif (Dubai) [15 October 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10836

அஸ்ஸலாமு அழைக்கும்.. காயல் பதியில் வெற்றிக்கலம் காணும் ஆபிதா லாதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. இன்ஷாஅல்லாஹ்..

எங்களின் துஆக்களில் என்றென்றும்...

காயல் ஹவுஸ் - துபாய் லரீப் , நிஜாம் , சதகதுல்லாஹ் , முத்து அஹ்மத் , ஷிஹாப்தீன் K.P


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. இந்த தேர்தலில் - ஏமாந்தது யார்..? சாதித்தது யார்?
posted by M Sajith (DUBAI) [15 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10837

Dear Admin,

Please post this comment instead of my earlier post - spell mistakes and language corrected - appologies..

___________________________________________________________________

சிலரின் அரசியல் ஆதாயத்துக்காக இந்த தேர்தலில் காயல்மாநரம் காவு கொடுத்த வரிசை..

முதலில், பேரவையின் பெரியவர்கள்
பின்னர் ஜமாத்தின் தலமைகள்

ஊருக்கு வெளியில் இருந்து நகருக்கு ஏதாவது நன்மை செய்திட துடிக்கும் நல்ல உள்ளங்கள் ஏற்படுத்திய நல மன்றங்கள்

ஊரில் தனி மனித ராணுவமாக செயல்பட்ட நல்ல இதயங்கள்

தன்னால் இயன்றதைவிடவும் அதிகம் செய்து வந்த நல்ல கரங்கள்

விடுபட்டாலும் விட்டுக்கொடுக்காத ஊரின் அக்கரையில் ஊரிப்போனவர்கள்

மானுட வசந்தங்களையும் இஸ்லாம் சொல்லித்தந்த நீதியையும் நியாய தர்மங்களை மட்டுமே போதனை செய்யுதுவந்த மார்க்க அறிஞர்கள்

இவர்கள் எல்லோரையும் அரசியல் சாக்கடையில் கால் நனைய செய்ததுடன்.. இலவச இனைப்பாக அத்துனை கலர் துண்டுகளும் சேர்ந்து, 20 ஜமாத்துக்கள் மற்றும் 15 பொதுநல அமைப்புகள் முன்னிலையில் 'கொம்புத்துறைக்கும்' 'சிங்கித்துறைக்கும்' அங்கீகாரமும் வாங்கிக்கொடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான களப்பனியையும் துவங்கிவிட்டார்கள்.

ஊர் ஒற்றுமை, ஊர் பெருமை என்னும் ஆசைவார்த்தைகளால் ஏமாந்தது யார்..? சாதித்தது யார்?

---------------------------------------------

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்.: குறள்

(அறிவு அழிவு வராமல் காக்கும் ஆயுதம், பகைவராலும் அழிக்க முடியாத உட்கோட்டை)

இருப்பவர்கள் புரிந்து கொள்ளட்டும், இல்லாதவர்கள் நம்பி ஏமாறட்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம...
posted by Ukkasha Syed Ibrahim (Dubai) [15 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10842

நகராட்சி மன்ற ஊர் தலைவிக்கு போட்டியிடும் வேட்பாளர் S.I.ஆயிஷா பர்வீனின் தேர்தல் அறிக்கை இதுவரை வெளியிடாதது ஏன்? kayalpatnam.com க்கு மிரட்டலா? விளக்கம் தேவை.

Ukkasha Syed Ibrahim.
Duabi.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம...
posted by Shaik (Kayalpatnam) [15 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 10847

என்னங்க அப்போ முதலில் வந்த அறிக்கைகள் எல்லாம் புதுப்பள்ளி ஜமாத்தினரின் அறிக்கை இல்லையோ? செயலாளர் துணை செயலாளர் பொருளாளர் போன்றவர்களே ஆபிதவிற்காக களத்தில் நின்று வேலை செய்யும்போது, பெரியவர்கள் தங்கள் தனிப்பட்ட கருத்துக்களை ஜமாஅத் பெயரால் வெளி இடுகிறார்கள்.

ஐக்கிய பேரவை பொறுப்பில் இருப்பவர்கள் அதன் சார்பிலேயே வெளி இட்டிருக்கலாமே ஆபிதாவிற்கு தன் சொந்த ஜமாத்தில் கூட ஆதரவில்லை என்ற மாயை உருவாக்க போட்ட தந்திரம் இதோ சுக்கு நூறாக உடைந்து விட்டதே.

தந்திரங்களின் கூடாரம் தான் ஐக்கிய பேரவையோ? மூன்றாவது பொய் அறிக்கை தயார் செய்து கொண்டு இருக்கேன்களோ ? வாய்மையே வெல்லும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம...
posted by D.SEYED ISMAIL (HONGKONG) [15 October 2011]
IP: 119.*.*.* Hong Kong | Comment Reference Number: 10853

dear admin,

We really appreciate your tedious task of scrutinizing soooooooo many comments. i tried to send comments many times, but failed. not sure if got thru or technical problem

I request your editorial team to share your burden so that this webiste can serve the community much better in disclosing the truth.

i do seek allah's guidance & support for your good efforts.

அஸ்ஸலாமு அலைக்கும்

மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்.

ஐக்கியப் பேரவையின் நகரமன்ற வேட்பாளர் ஆதரவு & 16வது வார்டு வேட்பாளர் தேர்வில் புதுப்பள்ளி தலைமையின் முடிவு பற்றி நான் முன்பு சொன்னது போல (Comment Reference Number: 10270

புதுப்பள்ளி செயற்குழு மற்றும் நிர்வாக குழுவிலுள்ள பலர் சென்ற முறை போல இந்த தேர்தலிலும் வேட்பாளர் தேர்ந்தெடுப்பில் பள்ளி நிர்வாகம் தலயிட வேண்டாம் என்ற கருத்துக்கு மாற்றமாக நிர்வாகம் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்

இது 100% உண்மை என்று ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.

இன்ஷா அல்லாஹ் நம் ஜமாதிலுள்ள அனைவரும் கொள்கை வேறுபாடுகளை கடந்து நல்ல காரியங்களில் எப்போதும் இனைந்து செயல்பட அல்லாஹ நல்லருள் புரிவான்.

நண்பர் அப்துல் காதர் நெய்னா அடுத்த முறை நகரமன்ற தலைவராக வரவேண்டும் என்று advance துஆ மற்றும் வாழ்த்துக்கள், இன்ஷா அல்லாஹ் ............


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம...
posted by kudack buhari (doha-qatar) [15 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 10859

சகோதரி ஆபிதாவின் இறுதி (இதுதான் முதலும் கடைசியும்) பிரச்சாரம், இனிமேல் சகோதரி குழந்தைகளுக்கு அ,ஆ ,இ,ஈ என்று சொல்லி கொடுபதிலேயே கவனம் செலுத்தட்டும், தேவை இல்லாமல் சஹோதரி அவருக்கு தெரிந்தோ தெரியாமலோ ஊர் பிளேவுபட காரணமாகிவிட்டார்கள், அல்லா அவரின் பாவங்களை மன்னிப்பானாக,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம...
posted by Mohideen (Jeddah) [15 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10863

யார் சொல்லுவது உண்மை, யார் சொல்லுவது பொய் என்று தெரியமாட்டிக்கிது பேசாம இதுக்கு ஒரு மன்றம் ஆரம்பிக்கப்பா.

தலைய சுத்துது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம...
posted by CNash (Makkah) [15 October 2011]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10880

1 , 2 , 3 என்று எத்தனை அறிக்கைகள் வரிந்து கட்டி கொண்டு வந்தன !!! இங்கேயும் பல கருத்து குயில்கள் கூவி முடித்து விட்டன ..தன் சொந்த ஜமாத்தில் ஆதரவு இல்லை என்று!!! எத்தனை நாள் தான் உண்மையை உலையில் வேக வைக்க முடியும்!! வெந்த பின்னாவது வெளி வந்து தானே ஆக வேண்டும்!!! இனியாவது சம்பந்தப்பட்டவர்கள் வாய் திறந்து...பேரவையை ஆட்டிபடைப்பவர்களை விட பேரண்டத்தை படைத்தது ஆட்டுவித்து கொண்டிருக்கும் அவன் ஒருவனக்கு பயந்து நடக்கட்டும்!!!

சத்தியத்திற்க்காக போலி ஒற்றுமை என்ற வலையை அறுத்து வெளி வந்த உங்கள் அனைவரையும் பார்த்து இந்த ஊரே நாளை நிமிர்த்து நிற்கிறது!! இன்னும் இரண்டு நாள் பொறுத்திருங்கள் ....உங்கள் வெற்று ஒற்றுமை கோசத்திற்கும் வேஷதிர்ககும் உங்கள் மக்களே முடிஉரை எழுதுவார்கள்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம...
posted by Salai. Mohamed Mohideen (USA) [16 October 2011]
IP: 68.*.*.* United States | Comment Reference Number: 10900

ஊர் ஒற்றுமை என்பது தர்மத்தை நிலை நிறுத்துவது. அநீதிகள்/தவறுகள் தட்டி கேட்க படவேண்டும். தர்மம் நிலைக்க வேண்டும்.

நல்லதொரு மக்கள் பணி செய்ய தகுதி படைத்தவரை தேர்வு செய்வதன் மூலம் உள்ளது. யாருடைய puppet / ரப்பர் ஸ்டாம்ப் - ம் நமக்கு வேண்டாம். சிந்திச்சு செயல்படுங்கள். அல்லாஹ் நமக்கு நேர்வழியை காட்டுவான்....வெற்றியையும் தருவான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம...
posted by Mohiadeen (Phoenix) [16 October 2011]
IP: 71.*.*.* United States | Comment Reference Number: 10901

Congratulation Abitha Madam! You already won it!!!

Yes. You are the one who initiate the steps to break this monarchy and given way to democracy.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. சபாஷ் சரியான முடிவு !!
posted by Salai.Mohamed Mohideen (USA) [16 October 2011]
IP: 68.*.*.* United States | Comment Reference Number: 10904

என்னுடைய முந்தைய பதிப்பில் ஒரு சிலர் கருத்துகளை விட்டு விட்டேன்...

புதுப்பள்ளி ஜமாத் செயலாளர் ஜனாப் ஏ.எஸ்.அஹ்ரப், துணை செயலாளர் அப்துல் காதர் நெய்னா, பொருளாளர் ஹாரூன் ரசீத் (காக்கா மார்கள்) மற்றும் புதுப்பள்ளி ஜமாத்தினர்கள் சுயமான முடிவு பாராட்ட பட வேண்டியது. ஜமாஅத் சத்தியத்துக்கு மட்டும்தான் கட்டு படவேண்டும். யாருடைய நிர்பந்தமும் எந்த சூழ்நிலையிலும் நமக்கு தேவை இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம...
posted by A.R.Refaye (Abudahbi) [16 October 2011]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10905

ஹலோ குசும்பு ரபீக் (M.N.L.முஹம்மது ரஃபீக்,ஹிஜாஸ் மைந்தன்)

எனக்கும் ஒரு பாட்டு நினைவுக்கு வருது மாமு "ஓடுகிற வண்டி ஓட ஒற்றுமையா இரண்டு மாடு ....."காயல் மர்ஹூம் ஷேக் முஹம்மது அவர்கள் பாடியது நீயும் கொஞ்சம் பாடேன்.

தம்பி!!!! சட்ணி சூட இருந்தால் தானே சாப்பிட சுவையாக இருக்கும் அட இது கூடவா அபிஸ்த்து நோக்கு தெரியாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம...
posted by sholukku.aj (kayalpatnam) [16 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 10909

salaam 2 all.

காயலின் சிந்தனையாளர்களே, புதுப் பள்ளியின் நிலைப்பாடு இருவருக்கும் ஆதரவு ,எதிப்பு , என்பது தான் முஹல்லாவின் முடிவா அல்லது தனிப்பட்ட தலைவர்களின் முடிவா? அன்பின் சகோதரி ஆபிதா அவர்களே உங்களின் வெற்றிப்பயணம் ஸ்கூலில் முடியும் .அதக்காகத்தான் BOOK சின்னம் வழங்கி உள்ளார்கள்.

அன்பின் சகோதரி மிஸ்ரிய்யா அவர்களே உங்களின் வெற்றிப்பயணம் நகராட்சியை நோக்கி நடைபெறும்.அதக்காகத்தான் BUS சின்னம் வழங்கி உள்ளார்கள்.

ELECTSION COMMISSIONER அவர்களே உங்களுக்கு இந்த ஊரின் ஒற்றுமையில் பங்கு உண்டு என்பதின் அடையாலமாஹத்தான் இந்த சின்னங்களை வழங்கி உள்ளீர்களா? கோடி நன்றிகள் உரித்தாஹுக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம...
posted by Palayam MAC (kayalpatnam) [16 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 10913

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்...

ஊர் ஒற்றுமை என்ற போர்வையில் தங்களது வேட்பாளரை ஆதரிக்கச் சொல்லும் ஐக்கிய பேரவையிடம் எங்கள் மனதில் தோன்றிய சில கேள்விகள்...

கடந்த 26-09-2011 அன்று ஜலாலியாவில் நடைபெற்ற அனைத்து ஜமாத்கள். சங்கங்கள் கலந்து கொண்ட நகராட்சி மன்ற தலைவர் தேர்வுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட ஜமாத் பிரதிநிதிகள் அனைவரும் அவர்களது ஜமாத் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டவர்களா?

இந்த கூட்டத்தில் முச்சரிக்கை கையெழுத்திட்ட நான்கு வேட்பாளர்களின் பெயரையும் முற்கூட்டியே எல்லா ஜமாத்களுக்கும் அனுப்பி அவரவர் ஜமாத் பொதுக்குழுவில் விவாதித்து பின்பு ஐக்கிய பேரவை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள அவகாசம் வழங்காதது ஏன்?

முச்சரிக்கை கையெழுத்திட்டவர்களை மட்டும் வாக்கெடுப்பில் தேர்ந்தெடுப்பதா அல்லது விருப்ப மனு கொடுத்த அனைவரையும் கருத்தில் கொண்டு விவாதித்து வாக்கெடுப்பு மூலமாக தேர்ந்தெடுப்பதா என்று கூட்டத்தில் தான் முடிவு செய்யப்பட்டது எனில் முற்கூட்டியே நான்கு வேட்பாளர்களின் பெயர்கள் மட்டும் அச்சடிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகள் கொண்டுவரப்பட்டு ஓட்டெடுப்பு நடந்தது எப்படி?

பொது வேட்பாளரின் தாயார் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ததன் மர்மம் என்ன? உங்கள் கூற்றுப்படி அவர்கள் டம்மி வேட்பாளர் என்றால் பேரவை வேட்பாளருடன் சேர்ந்து அல்லவா மனு தாக்கல் செய்திருக்கவேண்டும். அதை விடுத்து வேட்புமனு தாக்கல் முடிவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் அவசர கோலத்தில் மனுச் செய்ய வைத்தது ஏன்? அப்படி என்றால் ஒருவேலை பேரவை வேட்பாளர் இரட்டை வாக்குமுறை குற்றச்சாட்டினால் நிராகரிக்கப்பட்டால் அவர்கள் தாயாரை பேரவை வேட்பாளராக அறிவிக்க திட்டமா? இது என்ன நியாயம்?

மற்ற மூன்று வேட்பாளர்களும் முச்சரிக்கையில் கையெழுத்திடவில்லை என்றும் அதனால் தான் ஐக்கிய ஜமாத் தேர்வுக்குழுவால் நிராகரிக்கப்பட்டார்கள் என்று கூறும் நீங்கள் பேரவை வேட்பாளரின் தாயார் ஐக்கிய பேரவைக்கு விருப்ப மனு கொடுத்தார்களா? முச்சரிக்கையில் கையெழுத்திட்டார்களா? ஓட்டெடுப்பில் அவர் பெயர் பரிசீலிக்கப்பட்டதா? பிறகு எப்படி அவர்களை மனு செய்ய வைத்தீர்கள்?

ஆமீனா பள்ளி ஜமாத்தில் நடந்த வேட்பாளர் தேர்வில் மூன்று பேர் போட்டியிட்டதில் 11 வாக்குகள் மட்டுமே பெற்று மூன்றாம் இடத்தில் வந்த சகோதரியை எந்த அடிப்படையில் ஐக்கிய பேரவையின் பொது வேட்பாளராக அங்கீகாரம் செய்தீர்கள்.

கடந்த 10-10-2011 அன்று நடந்த ஐக்கிய பேரவை வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய பேச்சாளர் ஒருவர் கள்ள ஓட்டு போட்டே ஜெயித்து விடுவோம் என்பது போல் அறைகூவல் விடுத்தார். மேடையில் இருந்த ஐக்கிய பேரவை பெரியவர்கள் அவரின் அந்த பேச்சை ஆட்சேபிக்காமல் கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள். அப்படி எனில் கள்ள ஓட்டு போடுவதை ஐக்கிய பேரவை ஊக்குவிக்கிறதா? ஆதரிக்கிறதா? கள்ள ஓட்டு போட்டுத்தான் உங்கள் வேட்பாளரை ஜெயிக்க வைக்க வேண்டிய அவசியம் என்ன?

அதே கூட்டத்தில் பேசிய ஐக்கிய பேரவையின் அதிகாரப்பூர்வ பேச்சாளர் ஏதோ பாதுகாக்கப்பட்ட ஒரு பரம ரகசியத்தை வெளியிடுவது போல் ஒரு கடிதத்தை குறிப்பிட்டு பேசினார்கள். அது என்னவெனில் பேரவை வேட்பாளர் சகோதரி மிஸ்ரிய்யா அவர்கள் ஏற்கனவே கடந்த 2001ம் ஆண்டு தலைவர் பதவிக்கு போட்டியிட பேரவைக்கு விருப்ப மனு அளித்ததாகவும் ஐக்கிய பேரவையின் வேண்டுகோளை ஏற்று சகோதரி வஹிதா அவர்களுக்கு விட்டுகொடுத்து போட்டியில் இருந்து விலகிக் கொண்டதாகவும் தெரிவித்தார்கள்.

இந்த கடிதம் / செய்தி உண்மையெனில் இது பற்றி ஏன் அனைத்து ஜமாத்கள் தேர்வுக்குழுக் கூட்டத்தில் தெரியப்படுத்தவில்லை?

ஐக்கிய பேரவை வெளியிட்ட அறிக்கையில் இதுபற்றி ஏன் குறிப்பிடப்படவில்லை.

அந்த கடிதத்தின் நகலை சகோதரி மிஸ்ரிய்யா அவர்கள் அனைத்து ஜமாத்தார்களுக்கும் கொடுத்த விருப்ப மனுவோடு ஏன் இணைத்து அனுப்பவில்லை.

அந்த கடிதம் உண்மையெனில் அது குறித்து பேசிய பேச்சாளரும் அதனை ஆமோதித்த ஐக்கிய பேரவை நிர்வாகிகளும் அல்லாஹ் மீது சத்தியமிட்டு இது உண்மை என உறுதி கூறுவார்களா?

அதே கூட்டத்தில் பேசிய மற்றொரு பேச்சாளர் இது புறநகர் மக்களுக்கு வேட்பாளரை அறிவித்து அறிமுகம் செய்யும் கூட்டம் என்றார். அப்படியெனில் ஏறத்தாள ஏழாயிரம் வாக்குகள் கொண்ட புறநகர் சகோதர சமுதாய பிரதிநிதிகளோடு வேட்பாளர் தேர்வு சம்பந்தமாக ஏதேனும் கலந்து ஆலோசித்தீர்களா? எல்லா சகோதர சமுதாய மக்களின் ஆதரவோடுதான் ஐக்கிய பேரவை வேட்பாளரை அறிவித்தீர்களா?

அதே கூட்டத்தில் புறநகர் சகோதர சமுதாயத்தில் இருந்து இரண்டு பேர் மட்டும் தான் கலந்து கொண்டு பேசினார்கள். அப்படியென்றால் மற்ற சமுதாய மக்களின் பிரதிநிதிகளை அழைக்கவில்லையா? உங்களுக்கு ஆதரவு கொடுத்தவர்களை மட்டும்தான் மேடை ஏற்றினீர்களா?

மெகா என்ற தன்னார்வ அமைப்பு நடத்திய வேட்பாளர்கள்- வாக்காளர்கள் நேர்காணலுக்கு உங்கள் பேரவை வேட்பாளரை பங்கு கொள்ளச் செய்யாதது ஏன்? மக்களின் நியாயமான கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இல்லை என்ற காரணத்தினால் தான் அதை தவிர்த்தீர்களா?

கடந்த 12-10-2011 அன்று ஜலாலியாவில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு பெண் வாக்காளர்களை வாகனங்களில் கூட்டிச் சென்றதும், அங்கு தேனீர் மற்றும் திண்பண்டங்கள் வழங்கப்பட்டதும் தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பானது அல்லவா?

அங்கு பேசிய பேச்சாளர் ஒருவர் மற்ற வேட்பாளர்களின் பொது சேவை குறித்து குறை கூறி பேசியது ஏன்? தங்களது வேட்பாளரை பற்றி பெருமையாகக் கூறிக்கொள்ள சேவைகள் ஏதும் இல்லை என்ற காரணத்தினாலா?

அதே பேச்சாளர் தான் பேசும்பொழுது நகராட்சி தலைவிக்கு திறமையானவர்கள் தேவையில்லை என்ற கருத்தை கூறியிருக்கிறார். அதனால் தான் திறமையானவர்களை நீங்கள் நிராகரித்தீர்களா? அந்த கூட்டத்தில் பொதுமக்கள் வேட்பாளரிடத்தில் கேள்விகள் கேட்க அனுமதிக்காதது ஏன்? மக்களின் நியாயமான சந்தேகங்களுக்கு உங்களிடம் பதில் இல்லையா?

தேர்தல் களத்தில் உண்மைகள் வெற்றி பெற்றால்தான் நாம் எதிர்பார்க்கும் நேர்மையான நகராட்சி அமையும். பொதுமக்களே! சிந்திப்பீர்! சிந்தித்து வாக்களிப்பீர்!

இவண்,
ஊர் நலன் விரும்பும்...
தைக்கா தெரு, மொகுதூம் தெரு, புதுக்கடை தெரு இளைஞர்கள்.

அப்துல் காதர் நெய்னா, ஹாரூன் ரசீத், ஹிட்லர் சதக், ஏ.எஸ்.மெய்தீன், ஏ.எஸ்.புகாரி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம...
posted by sathick (ksa) [16 October 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10917

எப்பா, செயலாளர், துணை செயலாளர், பொருளாளர் பங்கேற்றால் ஜமாஅத் எல்லோரும் ஆதரவு கொடுப்பதா அருத்தம் இல்லை. அவர்கள் குடும்ப சொந்தம் இருப்பதால் கொடுப்பார்கள். அவர்கள் தனிப்பட்ட உரிமை.

இந்த ஜமாத்தில், தலைவர் துணை தலைவர், அதிகமான செயற்குழு உறுப்பினர்கள் ஐக்கிய பேரவை ஆதரவாளர்கள். என் நண்பர்கள் இந்த ஜமாஅத் உற்பட்டவர்கள், ஜமாஅத் முடிவுக்கு கட்டுப்பட்டு ஒட்டு போடுவதாக சொல்லுகிறார்கள் இன்ஷா அல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம...
posted by sathick (ksa) [16 October 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10924

ஊர் நலன் விரும்பும்...தைக்கா தெரு, மொகுதூம் தெரு, புதுக்கடை தெரு இளைஞர்கள். what is this? its enough to put ur name. don't say "தைக்கா தெரு, மொகுதூம் தெரு, புதுக்கடை தெரு இளைஞர்கள்".


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம...
posted by Palayam MAC (Kayalpatnam) [16 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 10930

Dear Admin

We request you to publish our comment as a news item in your site.

It has been already issued as a fullscale notice/flyer and distributed all over kayal door to door. It is just the general questions and doubts in the hearts of kayalites about Ikiya Peravai . we hope kayalites abroad can also read the same if it is published as a news item.

It is for the public to decide, who to vote.

Let them decide, select & elect their own Chairman.

May Allah guide us all in the right path. Aameen.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம...
posted by zainab (kayalpatnam) [16 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 10934

அஸ்ஸலாமு அழைக்கும்

அட இது தாங்க ஜமாஅத் ... ஜமாஅத் னா கூட்டம்ங்க ... யாரோ கை காட்டுற ரெண்டு பேர் மட்டும் இல்லைங்க ... ஜமாஅத் மக்கள் தாங்க ஜமாஅத் ... ஜமாஅத் தலைவரின் ஆதரவு பெற்றநு வேணா சொல்லுங்க ...

இப்ப சொல்லுங்க யாரு அணைத்து ஜமாஅத் மக்களின் ஆதரவு பெற்ற வேட்பாளர் என்று !!!

தங்கள் ஜாமத்தை சாரந்த வேட்பாளர் விருப்ப மனு கொடுத்தவுடன் .... தகுதி இருக்கு ஆனா சிறு வயது என்று (தங்கள் வீட்டு பிள்ளை ஆக ninaithu akkaraiyudan ) யோசித்த ஜாமத் பெரியவர்கள் வயதில் மூத்த வஹீதா லாதவிர்க்கு ஏன் vote பண்ண சொல்லலே...???? மற்ற வேட்பாளரை தங்கள் வீட்டு பிள்ளையாக நினைக்கவில்லை போலும் அடுத்த அறிக்கை எப்போ ??

கமெண்ட் எண்:25 ஆதரவு கொடுப்பவர்கள் மட்டும் அல்ல நீகள் kuripidum எல்லாரும் சொந்தம் தான் ...... நன்றாக விசாரித்து விட்டு type பன்னுகோ ....

கமெண்ட் எண் :23 sholluku kaka சொல்வது சரிதான் election commision சரியாக தான் symbols கொடுத்து irukirarkal ...

ஒன்னும் அறிய மழலைகளுக்கு மட்டும் அல்ல நீ உன் "புக்" வைத்து ஊருக்கும் படித்து கொடு அந்த மக்களை பாஸ் பண்ணி விடு என்று !!!!!!!!

"பஸ்" வண்டிய கெளப்பிட்டு திருச்சிக்கே ஓடுமா என்று !!!

கமெண்ட் எண் :16 சிலர் தெரிந்தோ தெரியாமலோ பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு poiyana வததிகளை பரப்பி islathil இருந்து தூரமாகி விட்ட அனைவரையும் யா அல்லா நீ மன்னித்து விடு எல்லாருக்கும் நல்ல ஹிதாயத்தை கொடு ... ஒன்மையான ஒற்றுமையை கொடு .... unmaikalai வெளிச்சம் போட்டு இந்த அறிய மக்களை உணரச் செய் .....

அல்லாஹ்வே நீயே யாவும் அறிந்தவன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. இனி வரும் காலங்களில் இது ஒரு பாடமாக அனுபவமாக உங்களுக்கு நினைத்து நீங்கள் திருந்தி கொள்ளுங்கள்....
posted by syed ahamed (KAYALPATNAM) [16 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10941

பேரவையே இந்த செய்திக்கு உங்கள் பதில் கருத்து என்ன ? சும்மா ஜமாஅத் ஆதரவு ஜமாஅத்தார்கள் ஆதரவு... ஆதரவு.. என்று புளுகிட்டு இருக்க கூடாது... தனி பட்ட நிர்வாகிகளின் ஆதரவே தவிர ஜமாஅத்தார்கள் ஆதரவு கிடையாது... உண்மையை சொல்லி ஊர் மக்களிடமும் புறநகர் மாற்று மத சகோதரர் இடமும் வாக்கு கெள்ளுங்கள்.... பேரவையே...! சும்மா பொய் புளுகி திரிய வேண்டாம்...!

பேரவை பொய் புளுகி அறிவித்த பொது வேட்பாளருக்கு எதிராக விழும் அத்தனை வோட்டும் பேரவையின் மேல் உள்ள அதிருப்தி வோட்டு (பேரவையின் மேல் உள்ள எதிர்ப்பு எண்ணிக்கை) தான்...! இதை உங்கள் மனதில் முதலில் நினைவு கொள்ளுங்கள்... இனி வரும் காலங்களில் இது ஒரு பாடமாக அனுபவமாக உங்களுக்கு நினைத்து நீங்கள் திருந்தி கொள்ளுங்கள்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. நாங்கள் வீழ்வோமென்று நினைத்தார்களோ ..
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [16 October 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10944

சகோதரர் சாதிக் அவர்களே அனைவரின் பெயரையும் வெளியட வேண்டும் என்றால் இந்த வலைதளம் நிரம்பி விடும் பரவா இல்லையா ...???

பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போல – நாங்கள்
வீழ்வோமென்று நினைத்தார்களோ ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம...
posted by sathick (ksa) [16 October 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10952

சகோதரர் சாதிக் அவர்களே அனைவரின் பெயரையும் வெளியட வேண்டும் என்றால் இந்த வலைதளம் நிரம்பி விடும் பரவா இல்லையா ...??? முத்துவாப்பா ரொம்ப புத்திசாலியான கேள்வி?

ஐக்கிய பேரவை பொது வேற்பாளர் என்றால் ஒரே கேள்வி மேல் கேள்வி? இவர்கள் நாலு பேரு ஒரு அறிக்கை விட்டால் அது நான்கு தெரு எல்லோரும் ஏற்ட்டுகொண்டதாகி விடுமா? கிண்டலான கேள்வி வேறு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. எந்த ஊரு நியாயம் சார் இது ... ???
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [16 October 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10957

நாற்பது பேர் சேர்ந்து நாங்க தான் ஊரு, நாங்க சொல்றது தான் சட்டம்ன்னு சொன்னா ஆஹா ஓஹோ... நம்ம எதாவது சொன்னா நாலு பேரு ஒரு அறிக்கை விட்டால் அது நான்கு தெரு எல்லோரும் ஏற்ட்டுகொண்டதாகி விடுமா?என்று கிண்டலான கேள்வி வேறு. எந்த ஊரு நியாயம் சார் இது ... ???


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. Re:ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம...
posted by CNash (Makkah) [16 October 2011]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10961

4 பேரா 4 தெருவா என்பது இன்னும் 4 நாளில் தெரிந்து விடும் ....எப்படி இருந்தாலும் ஜாமாத் பெயரால் ஆதரவு எங்களுக்கு தான் நான் தான் பொது வேட்பாளர் என்று பேரவையில் இருந்து ATTESTATION வங்கி நிற்கும் வேட்பாளருக்கு எதிராக விழும் ஒவ்வொரு வோட்டும் பேரவையின் நம்பக தன்மைக்கு எதிரானது தான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. !! பொறுத்திருப்போம்!! மக்களில் மௌன புரட்சிக்காக!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Re:ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம...
posted by Shahul Hameed (Hong Kong) [16 October 2011]
IP: 180.*.*.* Hong Kong | Comment Reference Number: 10963

முத்து வாப்பா அவர்களே! இங்கு பலர் பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள். நீங்களும் முயற்சி செய்து அணைத்து பெயர்களையும் எழுத முயற்சிக்கலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. Re:ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம...
posted by முஹம்மது அப்துல் காதர் (சென்னை) [16 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 10968

கமெண்ட்ஸ் refernce no: 10856 அது உண்மைதான் நீங்கள் சம்பந்தப்பட்டவர்களிடமே கேட்டுப்பாருங்கள். தயவு செய்து உண்மையான எனெது செய்தியை போடுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. Re:ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம...
posted by Abdulrahman (kayalpatnam) [16 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10970

பொய்யர்களின் உண்மை முகம் தெரிந்துவிட்டது ,ஊர் பெரியவர்களின் யோக்கியதையும் புரிந்துவிட்டது .அரசியல் வாதிகளை வைத்து கபடநாடகம் நடத்தும் ஐகியபேரவைஇன் தில்லுமுல்லுகளை ஜாமத்தின் நிர்வஹிகளே அறிந்துகொள்ளுங்கள் .தைக்க தெரு ,மொகுதூம் தெரு , புதுக்கடை தெரு இளைஞர்கள் கேட்ட ஒரு கேள்விக்காவது பதில் ??? உங்கள் கடையை மூடிவிடுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. Re:ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம...
posted by Mohideen(Durai) (Abu Dhabi) [16 October 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10980

This is not a time to talk about issues , so please elect & select Mrs Abida Sheik (Nilofer Complex Sheik's Wife - Sheik is My best & dear friend) Our Chaiwoman Is MRS. ABIDA SHEIK OUR SYMBOL IS BOOK

By Mohideen ( Durai)
+971502587101
+97125055571
+97126289083


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. Re:ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம...
posted by sathick (ksa) [16 October 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10982

முத்துவாப்பா, முதலில் கிண்டலா கேள்வி கேட்டதே நீ தானப்பா? எல்லோ பேரையும் போடவா முடியும்னு?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
39. Re:ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம...
posted by peena abdul rasheed (Riyadh) [16 October 2011]
IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10996

ஐக்கியம் என்பது உர்றருக்கு ஐக்கியம இருபதற்கு ஊர் ஐக்கிய ஜமாஅத் என்று சொளுவர்கள் முதலில் ஐக்கியம இருங்கள் பிறகு ஐகிமா இருந்து ஓட் முழுவதையும் தங்கை ஆபிதாகு போடுங்கள்.

நன்றியுடன் ஊருக்கு உழைப்பார்கள்.

ஓட்ட புக்கில் பதயுங்கள்

பீனா அப்துல்ரஷீத்
பதாஹ் ரியாத்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
40. Re:ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம...
posted by ISMAIL(KTM ST) (HONG KONG) [16 October 2011]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 11001

அன்பு நெஞ்சங்களே,

கமென்ட் பகுதிகளில் புதிய புதிய கண்டுபிடிப்புகள் தற்போது வளம் வந்து கொண்டிருப்பதாகவே தெரிகிறது.

ஒற்றுமை ஒற்றுமை என போர்முழக்கம் கூறுபவர்கள் முதலில் தத்தமது குடும்பத்திலும் அக்கம்பக்கத்து வீட்டாருடனும் அது எப்படி உள்ளது என்பதை முதலில் கவனித்தால் ஊர் ஒற்றுமை தானாக வரும்.

முடுக்கு பிரச்னையிலிருந்து நிலத்துப் பிரச்னை வரை அருகில் உள்ள நீதிமன்றங்களை அலங்கரிப்பது நமதூர் வழக்குகள் தானே.

ஒற்றுமை பற்றி பக்கம் பக்கமாய் எழுதுவதையும் பேசுவதையும் விட அதை நாமே நம் வாழ்விலும் குடும்பத்திலும் நிலைநாட்டிவிட்டு பேச வேண்டும். இல்லையேல் இத்தகைய முழக்கங்கள் வெறும் சந்தர்ப்பவாத வார்த்தைகளாகவே கருதவேண்டி வரும்.

ஒரு பெண்ணை வேட்பாளர் என்ற அடிப்படையில் தெருவில் நிறுத்தி வாக்கு சேகரிப்பதும் மேடை ஏற்றிப் பேச வைப்பதும் தான் கலாச்சார சீரழிவு என மார்தட்டுபவர்கள்,

அவர்கள் ஆதரிக்கும் வேறொரு பெண் வெற்றி பெற்று யாரை எல்லாம் சந்திக்க வேண்டி இருக்கும்; எங்கெல்லாம் போக வேண்டி வரும் என்பதை முதலில் நினைவில் நிறுத்திக் கொண்டு பேச வேண்டும்.

மெகா செய்தால் தவறாகத் தெரியும் கலாச்சாரச் சீரழிவு ஐக்கியப் பேரவை செய்தால் மட்டும் கலாச்சார பேரெழுச்சி ஆகிவிடுமா என்ன.

சகோதரி ஆபிதா அவர்கள் தம் சொந்த தேர்தல் அறிக்கையை தன்னம்பிக்கை யோடும் துணிவாகவும் எடுத்துக் கூறி பிரச்சாரம் செய்து வரும் அதே வேளை சகோதரி மிஸ்ரிய்யா அவர்களோ ஐக்கியப் பேரவை எழுதிக் கொடுத்ததை கடம் அடித்தது போல படித்துக்காட்டி உள்ளார்.

ஆபிதாவின் தேர்தல் அறிக்கையை அப்படி இப்படி எனக் கூறிய வாய்கள் மிஸ்ரிய்யாவின் எழுதி வாசித்த அறிக்கையை மட்டும் ஆஹா ஓஹோ எனப்புகழ்கிறது.

ஆமா, சுனாமி பிரச்னை குறித்து ஏதும் வாயே திறக்கவில்லையே, ஐக்கியப் பேரவையின் ஆதரவாளர்கள் அதை அவர்களிடம் கேட்பார்களா.

அரசியல் தலையீடுகள் ஏதும் இத்தேர்தலில் இருக்காது என அறுதியிட்டு உறுதி கூறிய ஐ.பே. அதன் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் மட்டும் அரசியல் வாதிகளை அரங்கேற்றியது ஏன். உங்களின் சொல்லோடு செயல்கள் என்றைக்குமே ஒத்துப்போகாதா.

முன்னாள் தலைவரை அக்கூட்டத்தில் காணோம்.

யாரோ ஒருவர், அதான், ஒரு பணமுதலை, ( ஹூம்..........., பெயரைக்கூட சொல்லி விடலாம் என நினைக்கிறேன், ஆனால் அட்மின் கத்தரி போட்டு விடுகிறாரே) முழுக்காயலையும் தனது அதிகார வலைக்குள் வைத்திருக்கும் ரிங் லீடராக இருந்து கொண்டு,

பணத்தைக் கொடுத்து பணியாட்கள் மூலமாக வேலை வாங்கி காயலை ஒரு தாயக்கட்டமாகவே பார்த்து வருகிறார்.

அ.தி.மு.க. வின் அன்வர் காக்கா அவர்களே,

சென்ற முறை நடந்த சட்ட மன்ற தேர்தலில் ஐக்கியப் பேரவை தி.மு.க. வை ஆதரித்த போது, ஒற்றமையை வலியுறுத்திய நீங்கள் மட்டும் அ.தி.மு.க. விற்கு வாக்கு சேகரித்தீர்களே. உங்கள் அகராதியில் ஒற்றுமை என்பது இதுதானா.

கள்ள ஒட்டு என எச்சரிக்கையில், பலர் குய்யோ முறையோ என கூச்சலிடுகின்றனர்.

அஃ தில்லாமல் சிலருக்கு என்றேனும் எலெக்ஷனில் இருந்துள்ளதோ மஜா.

சென்ற முறை நடந்த தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., கத்தை கத்தையாக பணத்தை இறக்கி அதன் மூலம் வாக்கு சேகரித்ததே அது உங்களுக்கு ஞாபகம் இல்லையா. வாழ்க தேர்தல் கமிஷன். அது மட்டும் இல்லாவிடில் நம்மூர் படும் பாடு சொல்லி மாளாது.

இதற்கு மாறாக நம்மூர் பொது நலவாதிகள் (?) நம்மூர் அரசு ஆஸ்பத்திரிக்கு ஒரு CT SCAN, MRI SCAN எனக் கேட்டிருக்கலாமே. நமது மக்கள் நலத்திற்கு ஆக்கப் பூர்வமான வழியை ஏற்படுத்தி இருந்தால் ஐக்கியப் பேரவையை அனைவரும் பாராட்டி இருப்பர்.

சகோதரி மிஸ்ரிய்யா சொல்லும் போது என் சகோதரருக்கு சிதம்பரத்தையும் அவர் மனைவி நளினியையும் தெரியும் என்றார். ஆனால் மாநிலத்தில் ஆட்சி வகிக்கும் அம்மாவுக்கு இவர்களைப் பிடிக்காதே.

சரி இப்போது தேர்தலுக்காக இவ்வாக்குகளைக் கொடுக்கும் சகோதரிக்கும் அவர் சகோதரருக்கும் ஏற்கனவே பல காலம் அவர்களை எல்லாம் தெரியத்தானே செய்யும். அப்போதெல்லாம் அவர்களின் இத்தொடர்பை பயன் படுத்தி இவ்வூருக்கு எதையாவது செய்ததுண்டா.

நுஸ்கி காக்கா அவர்களுக்கு அன்பான வேண்டுகோள்.

வலைதளத்தில்

சிலரது வார்த்தைப் பிரயோகங்கள் நன்றாக இல்லை என்பதை நீங்கள் பதித்ததைத் தொடர்ந்து அடுத்த கமெண்டிலேயே அதை மாற்றிக் கொண்டார்கள்.

ஆனால் சகோதரி ஆபிதாவைப் பற்றி எதிரணியினர் இப்போதும் தவறாக பேசி வருகிறார்கள். அவர்களிடமும் தாங்கள் சொல்லி திருத்துங்களேன்.

ஐக்கியப் பேரவையில் ஒரு வெளிப்படையான செயல்பாடு இல்லை. மிகவும் சந்தேகத்திற் குட்பட்ட நிலையிலேயே அவர்கள் ஒவ்வொரு நகர்வுகளும் அன்றிலிருந்து இன்றுவரை அமைந்திருக்கின்றன. ஜோசப் சாச்சா அவர்களை ஏற்றிய மேடையில் ஐ.பே. க்கு எத்தனையோ மாற்று மத நண்பர்களைத் தெரியாமல் போனது எதனால்.

சமீபத்தில் காக்கும் கரங்கள் என்ற அமைப்பு பெயரால் நடத்தப்பட்ட கூட்டமும் ஏற்கனவே கூறிய அந்த பண முதலையின் ஏற்பாடுதான் என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகப் போய்விட்டது.

காலங் காலமாக பற்பல நன்மைகளைச் செய்து வரும் Y.U.F. சங்கத்திலிருந்து அதே அளவு சமூக சேவை புரிந்து வரக்கூடிய சகோதரர் முஹ்யித்தீன் அவர்களை அவமானப்படுத்தி பேசமுடியாமல் அனுப்பிய அவர்களின் செயல் கண்டனத்திற்குரியது.

காக்கும் கரங்கள் எப்போது முதல் அந்த தனி நபர் கரங்களால் காக்கப்பட்டு வருகிறது என்பதையும் ஊர்மக்களுக்கு தெரிவித்தால் நலமாக இருக்கும்.

கடைசியாக, சகோதரி ஆபிதா அவர்கள் ஒரு செயலாற்றும் திறன் கொண்ட, அறிவாற்றல் மிக்க, சுயமாகவே சிந்தித்து முடிவெடுக்கும் திறமையான பெண்மணி.

ஒரு தலை சிறந்த நிர்வாகியும் கூட.

தயவு செய்து அவருக்கு ஒரு வாய்ப்பைக் கொடுங்கள்.

அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை நன்கு அறிந்தே களத்தில் நிற்கிறார்.

இந்த நல்ல சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி ஊர்மக்கள் அனைவரும் அவரையே தேர்ந்தெடுப்பீர்.

தண்ணீரை நமக்கு வழங்கி கண்ணீரைத் துடைப்பார். அறிவை வழங்கி அறியாமையை ஒழிப்பார். சுற்றுச்சூழலில் மிகுந்த கவனம் செலுத்தி கட்டுப்பாட்டினை விதிப்பார். இன்னும் பல நல்லவற்றை இடர்களின்றி செய்வார்.

அவரையே தேர்ந்தெடுப்பீர். ஊர் நலம் காப்பீர்.

உங்கள் ஓட்டு சகோதரி ஆபிதாவுக்கே.

அன்புடன்,

இஸ்மாயில் (KTM ST.,), ஹாங்காங்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
41. Re:ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம...
posted by Habib Shakeel (Hong Kong) [16 October 2011]
IP: 218.*.*.* Hong Kong | Comment Reference Number: 11005

இதுவரை வந்த புதுப்பள்ளி ஜமாத் அறிக்கைகளின் படி, ஜமாத் ஐக்கிய பேரவையை ஆதரிப்பதாகவே நாம் அறிந்தோம். இப்படி இருக்கும் பட்சத்தில் ஆபிதாவின் இறுதிகட்ட பிரச்சாரத்தில் புதுப்பள்ளி செயலாளர், துணை செயலாளர், பொருளாளர் பங்கேற்றார்கள் என்ற செய்தி மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இதைப் பார்த்தால் ஜமாத்தில் ஒரு சுமூகமான, ஒற்றுமையான நிலைமை இல்லை என்றே தெரிகிறது.

புதுப்பள்ளி ஜமாத், ஐக்கிய பேரவையின் பொது வேட்பாளரை ஆதரிப்பதாக வந்த செய்தி ஜமாத் நிர்வாக குழுவின் ஒருமனதான முடிவாக தெரியவில்லை. இப்படி இருக்கும பட்சத்தில், ஏன் ஜமாத் தலைவர் அவர்கள் ஐக்கிய பேரவை ஆதரவு அறிக்கையை வெளிட்டார்கள்?

ஜமாத் நிர்வாகத்தில் இருப்பவர்களின் இந்த குழப்பமும், ஒற்றுமையின்மையும் புதுப்பள்ளி வாசிகளான நமக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது. சென்ற நகரசபை தேர்தலை போன்று இந்த முறையும் ஜமாத் சார்பாக யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல், நடுநிலை வகித்திருந்தால் இந்த பிரச்சனையே வந்து இருக்காது. ஜமாத் நிர்வாகத்தில் இருந்து விளக்கங்கள் தேவை.

வஸ்ஸலாம்.
Habib Shakeel


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
42. Re:ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம...
posted by Mohideen (Jeddah) [16 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11013

பேரவைக்கு எதிராக விழும் வாக்கு பேரவையின் நம்பகத்தன்மைக்கு விழும் வாக்கு

பேரவைக்கு ஆதரவாக விழும் வாக்கு எதிரணியின் நம்பகத்தன்மைக்கு விழும் வாக்கு

தேர்தல் செய்தி கடைசியில் காமடி பீசா போய் விட்டது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
43. Re:ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம...
posted by Shahul Hameed (Hong Kong) [16 October 2011]
IP: 180.*.*.* Hong Kong | Comment Reference Number: 11030

சகோதரர் இஸ்மாயில் அவர்களே! ஒற்றுமை என்ற வார்தையை யாரவது உபயோகித்தால் டான் என்று உங்களுடைய பதிவு வந்து இறங்கி விடுகிறது. தாங்கள் சொல்வதை போல் ஒற்றுமை ஒவ்வறு வீட்டில் இருந்து தான் வர வேண்டும். ஆனால் அந்த ஒற்றுமை இல்லாததால் ஐகிய பேரவை என்பது அவசியம் ஆகிறது.

உங்களை போல் பல பேர் ஐகிய பேரவை சென்று அங்கு நடக்கும் நீகழ்வுகளை அறிய வேண்டும். உங்கள் ஆலோசனைகளை அவர்களுக்கு வழங்க வேண்டும். நீங்கள் இங்கு உங்களின் கருத்தை பதிவதை விட ஐகிய பேரவை சென்று பதியுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
44. Re:ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம...
posted by SULTHAN (Deira, duabi) [17 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11099

அஸ்ஸலாமு அலைக்கும்

இங்கு நடக்கும் கூத்தை பார்த்தால் ஊரு பல பிரிவுகளாக பிரிந்து விடும் போல தெரிகிறது. பேசாமல் நமது ஓட்டை ஆய்ஷா பர்வீனுக்கு போடுங்கள்.

வாழ்க ஜனநாயகம் வளர்க தமிழ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved