Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:41:07 AM
ஞாயிறு | 24 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1942, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:50
மறைவு17:55மறைவு13:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:6005:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7384
#KOTW7384
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, அக்டோபர் 16, 2011
புதுப்பித்து கட்டப்பட்ட மகுதூம் பள்ளியில் நவ.11 முதல் ஜும்ஆ தொழுகை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 6876 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (56) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 21)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் மகுதூம் தெரு, குத்துக்கல் தெரு, புதுக்கடைத் தெரு, குறுக்கத்தெருவை இணைத்தாற்போல் அமைந்துள்ளது மகுதூம் பள்ளி.

இப்பள்ளியில் தொழ வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததைக் கருத்திற்கொண்டு, இட நெருக்கடியுடன் குறுகலாக இருந்த அப்பள்ளியை இடித்துக் கட்ட பள்ளி நிர்வாகம் முடிவு செய்து, அதனடிப்படையில் கட்டுமானப் பணிகள் முடிவுக்கு வரும் நிலையிலுள்ளது.

இந்நிலையில், புதுப்பித்துக் கட்டப்பட்ட மகுதூம் பள்ளியில் வரும் நவம்பர் மாதம் 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் ஜும்ஆ தொழுகை நடத்தப்படவுள்ளதாக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:புதுப்பித்து கட்டப்பட்ட ம...
posted by ahamed (colombo) [16 October 2011]
IP: 220.*.*.* Sri Lanka | Comment Reference Number: 10911

ஆரம்பம் ஆகும் நான்காவது ஜும்மாகு வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:புதுப்பித்து கட்டப்பட்ட ம...
posted by Vilack SMA (kangxi) [16 October 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 10918

நல்ல ஒரு விஷயம் . ஊர் பரப்பளவில் பெரியதாகி விட்டது . மக்கள் தொகையும் கூடி விட்டது . அவசியமான ஒன்றுதான் . மேலும் தெற்கு காயல் பகுதி மக்களுக்காக குருவித்துறை பள்ளி , நல்ல ஒரு வசதியான இடம் . இவர்களின் வசதிக்காக இங்கும் ஜும்மா வைக்கலாம் .

பெரியபள்ளிக்கும் , இங்கும் சற்று இடைவெளியான நேரத்தில் தொழுகை நடத்தினால் , பயனுள்ளதாக இருக்கும்.

( வெவ்வேறு நேரங்களில் தொழுகை நடத்தும்போது , தெருவில் எப்போதும் நம் ஆட்கள் நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கும் , வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும் என்பது என் கருத்து . )

Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. புதுப்பித்து கட்டப்பட்ட ம...
posted by Solukku M.I. Seyed Mohamed Sahib (SMI) (Jeddah, KSA.) [16 October 2011]
IP: 168.*.*.* United States | Comment Reference Number: 10919

இறைவனின் இல்லத்தை புனர்நிர்மானிக்க உழைத்த அத்துணை உயிர்களுக்கும் அல்லாஹ் மேன்மையான பதவியை தந்தருள்வானாக ஆமீன். ஒரு சந்தேகம் முன்பிருந்ததுபோல் மற்ற பள்ளிகல்போல் தொடருமா?, திறப்பு நாள் அன்று மட்டும்தான் ஜுமா தொழுகையை தோழா வைத்து துவங்குகிரார்களா? அல்லது இனி ஜுமா பள்ளியாக அறிவிதிருக்கிரார்களா?. எல்லாம் வல்ல அல்லாஹ் எல்லோரையும் நல்ல பாதையில் நடதிடுவானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:புதுப்பித்து கட்டப்பட்ட ம...
posted by Pallak AC Naina (Kayalpatnam) [16 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 10921

அல்ஹம்துலில்லாஹ். எல்லாம் வல்ல இறைவன் இந்த இறை இல்லத்தை சிறப்பாக்கி வைப்பானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. வரவேற்க வேண்டிய ஓன்று மகுதூம் பள்ளி ஜும்ஆ தொழுகை...
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [16 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10928

வரவேற்க வேண்டிய ஓன்று மகுதூம் பள்ளி ஜும்ஆ தொழுகை...

மக்களின் கூட்டத்தை சமாளிக்கவும் தொலைவில் இருந்து வரும் மக்களின் நீண்ட தூர நடையை குறைக்கவும் சாத்தியமானது.... சுற்று வட்டார எல்லா மக்களும் ஒற்றுமையாக இருந்து கருத்து வேறுபாடு பார்க்காமல் சகோதர மனபான்மையுடன் நாளையை இளைய சமுதாய மக்களுக்கு நல் வழி காட்டும் முகமாக சிறந்து விளங்க நாம் அனைவர்களும் துவா செய்வோமாக... ஆமின்...

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. இந்த இறை இல்லத்தை அடுத்தடுத்து வரக்கூடிய எல்லா தலைமுறைக்கும் சிறப்பாக்கி வைப்பானாக. ஆமீன்...
posted by STAR TEXTILES - MAIN ROAD (காயல்பட்டினம்) [16 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10932

அல்ஹம்துலில்லாஹ். எல்லாம் வல்ல இறைவன் இந்த இறை இல்லத்தை அடுத்தடுத்து வரக்கூடிய எல்லா தலைமுறைக்கும் சிறப்பாக்கி வைப்பானாக. ஆமீன்...

இறைவனின் இல்லத்தை புனர்நிர்மானிக்க உழைத்த அத்துணை பெரியவர்கள், செல்வந்தர்கள், அனைவர்களுக்கும் அல்லாஹ் நோய்யற்ற வாழ்வும், அதிக பரகத்தும், மண அமைதியும், அவர்களின் ஹலாலான வியாபாரத்தில் லாபத்தையும் கொடுத்தருள்வானாக.. ஆமின்...

ஸ்டார் டெக்ஸ்டைல்ஸ் & ரெடிமேட்ஸ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:புதுப்பித்து கட்டப்பட்ட ம...
posted by Abdul Wahid Saifudeen (Kayalpatnam) [16 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 10936

இறை இல்லங்கலேல்லாம் அல்லாஹுவிற்க்கே சொந்தமானது என்ற இறை வசனத்தை மனதில் வைத்துகொண்டு உங்களுடையே நிவாகத்தை தொடருங்கள் அல்லாஹ் உங்களுக்கு அதற்க்கான் நற்கூலியை தருவானாக!

அரை நூற்ற்றாண்டுகளுக்கு முன்னால் அல்-ஜாமிவுல் அஸ்ஹர் ஜூம்மா மஸ்ஜித் துவங்கப்பட்டபோது, அதை ஒரு பாவமான் காரியம் போல் சித்தரிதிருக்கிறார்கள் பலர். ஒரு ஊரிலே இரண்டு ஜூம்மா வா? இங்கென்ன ஆறா ஓடுகிறது இரண்டு ஜூம்மா நடைபெறுவதற்கு ?, இது "மஸ்ஜிதுல் விரார்" என்று சொன்னவர்கள் கூட உண்டாம்.

பல எதிர்ப்புக்கிடையில் இப்பள்ளி கட்டப்பட்டு அல்லாஹ் உதவிகொண்டு இன்று வரை ஒரு வக்த்து ஜமாஅத் தொழுகை கூட தவறாமல் நடைபெற்றுவருகிறது. இங்கு தன்னை ஒரு முஸ்லிம் என்று நம்புகிறவர் யார் வேண்டுமாலும் தொழலாம். இது அல்லாஹ்வுடைய பள்ளி. அதுபோல உங்களது பள்ளியிலும் தொய்வின்றி ஜமாஅத் நடைபெறுவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி செய்வானாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:புதுப்பித்து கட்டப்பட்ட ம...
posted by S.T.Labeeb (Kuthukkal st., Kayalpatnam) [16 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10938

Alhamdulillah Mashalillah. Subuhanalillah.
Labeeb Family


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:புதுப்பித்து கட்டப்பட்ட ம...
posted by sulaiman (manama) [16 October 2011]
IP: 89.*.*.* Bahrain | Comment Reference Number: 10942

TOTALLY AGREED WITH Comment Reference Number: ௧௦௯௧௮

மூன்று பள்ளிகளிலும் TIME DIFFERENCE இருந்தால் இன்ஷா அல்லாஹ் அனைவர்க்கும் ஜமாஅத் தவற விடக்கூடிய வாய்ப்பு இல்லாமல் போகும்,,

இதற்கு உதாரணமாக பாம்பே இல் உள்ள மஸ்ஜித் களில் அனைத்து மஸ்ஜித் களின் ஜமாஅத் நேரம் குறிப்பிடப்பட்ட நோட்டீஸ் போர்டு இருக்கும்,. SO IF U MISS JAMAATH IN ONE MASJID, U CAN KNOW WHERE WILL BE THE NEXT JAMAATH,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:புதுப்பித்து கட்டப்பட்ட ம...
posted by D.SEYED ISMAIL (HONGKONG) [16 October 2011]
IP: 112.*.*.* Hong Kong | Comment Reference Number: 10943

அஸ்ஸலாமு அலைக்கும்

நமதூரின் பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப இன்னொரு ஜும்ஆ அவசியம் தான். சத்தியத்தை எடுத்துச்சொல்லும் மேடையாக அமைய அல்லாஹ அருள் புரிவான்

த.செய்யது இஸ்மாயில் (மகுதூம் தெரு)
ஹாங்காங்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:புதுப்பித்து கட்டப்பட்ட ம...
posted by Ishak Ibnu nahvi (abudhabi) [16 October 2011]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10949

விளக்கு SMA அவர்ளுக்கு ஒரு ஊரில் பல ஜும்மா நடத்த படுவது நல்லது இல்லை அதனால் குருவித்துறை பள்ளி ஜும்மா நடத்த முடியாத ஒன்று.

நஹ்வி இப்னு நஹ்வி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:புதுப்பித்து கட்டப்பட்ட ம...
posted by A.R.Refaye (Abudahbi) [16 October 2011]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10950

சிறப்பு மிகு இப்பள்ளியின் வரலாற்று வரிகளில் மீண்டும் ஒரு மணி மகுடம் 11-11-2011 அன்று அரங்கேற போகிறது,உங்கள் விரல் மூலம் தேதி 11 காட்டும் போது உங்கள் விரல் விக்டரியையும் ஒற்றுமையையும் பறைசாட்டும்,

இறை இல்லத்தை எல்லோர்களும் பயன்படுத்தும் முகமாக குறை மதி உடையோர் செயல் பாடு அறவே இல்லாமல் மிகச்சிறந்த கூடாரமாக,தப்பி தவறி கூட தவறுகள் நடந்திடாமல் தனியோனே காத்தருள்வாய்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Like it
posted by Mohamed Hussain (Chennai) [16 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10954

+1


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:புதுப்பித்து கட்டப்பட்ட ம...
posted by ahmed meera thamby (makkah) [16 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10955

அல்ஹம்து லில்லாஹ் இந்த புனித இல்லத்தை கட்டிமுடிக்க எல்லா வகையுளும் உதவிய நல்ல உள்ளம் படைத்த மக்களுக்கு வல்ல நாயன் எல்லா வளமும் குடுதருள் வானாஹா ஆமீன் எல்லோரும் எந்த ஒரு கருத்து வேறுபாடும் இல்லாமல் ஒற்றுமையாஹா வல்ல அல்லாஹ்வை தொழுது வணங்க அருள் புரிவானாக ஆமீன் வஸ்ஸலாம்

அஹ்மத் மீரா தம்பி(தமிழன் முத்துவின் காக்கா)
புனித மக்காஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:புதுப்பித்து கட்டப்பட்ட ம...
posted by Vilack SMA (kangxi) [16 October 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 10959

அஸ்ஸலாமு அழைக்கும் Ishak Ibnu nahvi காக்கா , தென் பகுதி மக்களுக்காக இன்னொரு ஜும்மா பள்ளி தேவையான ஒன்றுதான் . குருவித்துறை பள்ளி வசதியான ஒன்று என்று Suggestion தான் சொன்னேன். நீங்களும் அருகில் வேறு ஏதாவது வசதியாக இருக்கும் பள்ளியை suggestion சொல்லுங்கள் . வேண்டாம் என்று மட்டும் சொல்லாதீர்கள் .

இன்று நீங்கள் இதை மறுத்தாலும் , உங்களின் பேரன் , பூட்டன்மார்கள் வந்து இதை ஆமோதிப்பார்கள் . அல்லாஹ் உங்கள் ஆயுளை நீடித்து , உங்கள் காலத்திலேயே இதை காண்பீர்கள் . இன்ஷா அல்லாஹ் ..... வஸ்ஸலாம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:புதுப்பித்து கட்டப்பட்ட ம...
posted by imranuzair (Singapore) [16 October 2011]
IP: 203.*.*.* Singapore | Comment Reference Number: 10960

ஆமீன்,,,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:புதுப்பித்து கட்டப்பட்ட ம...
posted by Aarif O.L.M (Lanka) [16 October 2011]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 10965

அல்ஹம்து லில்லாஹ் :

பொறுமைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. இதற்க்காக உழைத்த அனைத்து நபர்களுக்கும் அல்லாஹ் மேலான கூலியும், சரீர சுகமும், சகல சவ்பாக்கியமும் கிடைக்கட்டும் என மனதார வாழ்த்துகிறேன்

முக்கியமாக : இந்த மஸ்ஜிதை இந்நிலைக்கு கொண்டுவர அயராது உழைத்த ( பொறுமையின் சிகரம் ) இக்பால் ஹாஜி அவர்களுக்கும் சகல விதத்திலும் ஒத்துழைத்த அவர்களது குடும்பத்தார்களுக்கும் இந்நேரத்தில் அணைத்து கயலர்களும் மிகவும் கடமைப்பட்டுள்ளோம் .

இது சாதாரண காரியம் இல்லை ......

எல்லா புகழும் அல்லாவுக்கே


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:புதுப்பித்து கட்டப்பட்ட ம...
posted by Noordeen Prabu (Jeddah-Saudi Arabia) [16 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10969

அல்ஹம்து லில்லாஹ்.

நாங்கள் நீண்ட காலமாக ஆவலுடன் எதிர்பார்த்தது இப்போது நிறைவேறி உள்ளது. எல்லா புகழும் இறைவனுக்கே.

அப்படியே நம்மிடம் இருக்கிற கதீபில் ஒருவரையும் நமக்குள் Share பண்ணிக்கொண்டால் நம்மிடம் மேலும் ஒற்றுமை வளரும். நம்முடைய பெருந்தன்மையும் எல்லோருக்கும் புரியும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. அவசியம் தேவை இன்னும் தேவை
posted by DR D MOHAMED KIZHAR (chennai) [16 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 10971

அஸ்ஸலாமு அலைக்கும்.... ஊரின் மக்கள் தொகை பெருக்கர்த்திர்க்கு இது அவசியம்.. நேரத்தை சற்று மாற்றி வைத்தால் நல்லது.. தயவு தாட்சண்யம் இல்லாமல் குரான் ஹதீதை ,எடுத்து சொல்ல கூடியதாக இருக்க என் துஅக்கள்... மேலும் விரைவில் , தௌஹீத் ஜாமத்துக்கு சொந்தமான ஜும்மா, அலியார் தெரு வில் வர இருக்கிறது. சற்று பொருளாதார சிக்கலால் சுணங்குகிறது.. அது விரைவில் வர பிரார்த்திப்போம்.. உதவுவோம்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:புதுப்பித்து கட்டப்பட்ட ம...
posted by Salai Sheikh Saleem (Dubai) [16 October 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10972

வரலாற்று சிறப்பு மிக்க எங்களின் மகுதூம் பள்ளியில் புனித ஜும்ஆ தொழுகை நடைபெறுவது இன்னும் ஒரு வரலாற்று சிறப்புதான். இப்போது பெருகிவரும் ஊர் ஜனப்பெருக்கதிற்கு இந்த முடிவு காலத்திர்க்கேற்றதே. எத்தனையோ தடைகளை தாண்டி இந்த இறையில்லம் புதுப்பொழிவுடன் திகழ்வதற்கு உறுதுணையாய் இருந்த எல்லோருக்கும் அல்லாஹ் அருள் பாளிப்பானகவும். ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:புதுப்பித்து கட்டப்பட்ட ம...
posted by N.M MOHAMED ISMAIL ( K.T.M STREET ) (DUBAI) [16 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10978

புகழ் அனைத்தும் அல்லாஹுக்கே. அல்லாஹுவை வணங்க அரபு நாடுகள் எடுத்து கொள்ளும் முயற்சி போல எல்லோரும் தொழுக வசதி தேவை அதன் அடிபடையில் பார்க்கும் போது மக்கள் தொகை ஏற்ப ஊருக்கு மேலும் ஒரு ஜும்மா மஸ்ஜித் இருப்பது நல்லதுதானே. எல்லோரும் ஒற்று மையாக அல்லாஹுவை தொழுது பயன் அடைய வல்ல அல்லாஹ் கிருபை செய்ய வேண்டுவோமாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. MAASHA ALLAH
posted by ABU MARYAM (NOOHU 48) (HONG KONG) [16 October 2011]
IP: 61.*.*.* Hong Kong | Comment Reference Number: 10992

BISMILLAH...ASSALAMUALAIKUM WRWB.ALHAMDULILLAH NICE TO C THE GOOD NEWS."MAY ALMIGHTY ALLAH SHOWERS HIS BLESSINGS UPON THOSE WHO INVOLVED IN THIS NOBLE CAUSE"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:புதுப்பித்து கட்டப்பட்ட ம...
posted by V D SADAK THAMBY (Guangzhou (China)) [16 October 2011]
IP: 69.*.*.* United States | Comment Reference Number: 10997

அல்ஹம்துலில்லாஹ் .

காலத்திற்கேற்ப புது ஜும்மா பள்ளி அவசியமான ஒன்றுதான்.

அது சிறப்பாக தொடர்ந்து நடைபெற நாம் துவா செய்வோமாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. அல் ஹம்துலில்லாஹ் ..
posted by M Sajith (DUBAI) [16 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11019

தடைகள் பல தாண்டி புதுப்பொலிவுடன் காட்சி தரும் இறை இல்லத்தை ஜும்ஆவுக்கு தயார் செய்த அனைவருக்கும் இறைவன் துணை செய்யட்டும்.

வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:புதுப்பித்து கட்டப்பட்ட ம...
posted by K S MUHAMED SHUAIB (KAYALPATINAM) [16 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 11021

நகரின் மக்கள் பெருக்கத்தை அடுத்து கூடுதலாக இன்னொரு ஜும்மா பள்ளியின் அவசியம் வெகுநாட்களுக்கு முன்பே உணரப்பட்டது. அது மொகுதூம் பள்ளியாக அமைந்து விட்டதில் உள்ளபடியே மிக மகிழ்ச்சி. ஏனென்றால் அந்த மேற்கு பகுதியில் இருந்துவருபவர்கள்தான் இன்றய இரண்டு ஜும்மா பள்ளிகளுக்குமே கிட்டத்தட்ட சம தூரத்தில் இருந்து வருகிறார்கள். எனவே அவர்கள் ஆசுவாசிக்கும் பொருட்டு அவர்களுக்கும் பக்கத்திலேயே ஒரு ஜும்மா பள்ளி அவசியம்தான். எனது இந்த சுட்டிக்காட்டல் கோமான்தெரு இன்னும் புதிதாக வளர்ந்து வரும் கடற்க்கரையோர குடியிருப்புகள் இவைகளுக்கும் பொருந்தும். மொகுதூம் பள்ளி நிர்வாகத்தாருக்கு நமது நல்வாழ்த்துக்கள்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:புதுப்பித்து கட்டப்பட்ட ம...
posted by TAM UMER (HONG KONG) [16 October 2011]
IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 11028

அஸ்ஸலாமு அலைக்கும்....

ஏக இறைவனருளால் நம் மக்தூம் பள்ளியில் ஜும்ஆ ஆரம்பநாள் அறிந்து மிக்கமகிச்சி... அல்ல்ஹம்துலில்லாஹ்.

நம் பள்ளிக்காக எல்லாவகையிலும் உறுதுணையாக கம்பீரமான தோற்றமடைவதர்க்காக அயராதுலைத்த அனைவர்களுக்கும் அல்லாஹு அருள்பாளிப்பானகவும். ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:புதுப்பித்து கட்டப்பட்ட ம...
posted by Ishak Ibnu nahvi (abudhabi) [16 October 2011]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11032

விளக்கு sma அவர்களுக்கு இன்சா அல்லாஹ் எவ்வளோ காலம் போனாலும் எங்கள் முஹள்லா வில் ஜும்ம்மா நடத்த முடியாது எங்களுக்கு மக்கள் வந்தாலும் ஜும்மா பல வராமல் அல்லாஹ் பாதுகாப்பான் ஆமீன்

நஹ்வி இப்னு நஹ்வி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:புதுப்பித்து கட்டப்பட்ட ம...
posted by PIRABU MUJEEB (RIYADH-KSA) [16 October 2011]
IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11044

அல்ஹம்துல்லாஹ்!எத்தைனையோ தடைகள் தாண்டி கட்ட பட்ட இந்த பள்ளிஇல் கயவர்களும் இங்கு தொழுவதற்கு நான் அல்லா விடம் துவ கேக்கிறேன்.ஆமீன் ஜூம்மா நேரத்தை மார்டி வைத்தால் மக்களுக்கு பயன் உடையதாக இருக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:புதுப்பித்து கட்டப்பட்ட ம...
posted by V D SADAK THAMBY (Guangzhou (China)) [16 October 2011]
IP: 69.*.*.* United States | Comment Reference Number: 11045

Ref : Comment Reference Number: 11032

சகோதரர் நஹ்வி இபுனு நஹ்வி அவர்களின் துவா கபூல் ஆக நாங்களும் இறைவனிடம் துவா செய்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:புதுப்பித்து கட்டப்பட்ட ம...
posted by Mohamed Abdul Kader (Al Khobar) [16 October 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11053

மாஷா அல்லாஹ்

பிரிண்டிங் Presss க்கு இனி அமோக விற்பனைதான்.

4வது ஜும்மா வேற வரபோது என்று சொல்றங்கயா.

இனி எல்லா ஜும்மாவிற்கும் நோட்டீஸ் கொடுத்தாகணும் ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:புதுப்பித்து கட்டப்பட்ட ம...
posted by Vilack SMA (Hetang) [16 October 2011]
IP: 59.*.*.* China | Comment Reference Number: 11058

அஸ்ஸலாமு அழைக்கும் Ishak Ibnu nahvi காக்கா , ஒற்றுமையை விரும்பும் உங்கள் மன உறுதியை நிச்சயம் பாராட்டுகிறேன் . ஆனால் எனக்கு கிடைத்த தகவல்படி உங்கள் முஹல்லாவை சார்ந்த ஒரு சிலர் , உங்கள் முஹல்லாவில் ஒரு ஜும்மா பள்ளி இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் என்னுடைய கருத்து பதிவு .

வஸ்ஸலாம் .
Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Re:புதுப்பித்து கட்டப்பட்ட ம...
posted by shaik abbul cader (kayalpatnam ( http// shaikacader.blog.com )a) [16 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 11070

அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி

வபரகாதுஹு.அல்ஹம்து லில்லாஹ் அல்லாஹ்வின் கிருபையால் குறிப்பிட்டபடி ஜும் ஆ தொழுகை ஆரம்பிக்க எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்ஜு கிறேன். இதன் மூலம் ஜும் ஆ பள்ளிகளில் ஓரளவு இடனெருக்கடி தீரலாம். இந்த முயெற்ச்சியெய் எடுத்துக்கொண்டவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் நற்கிருபை ரஹ்மத்து செய்வானாக ஆமீன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. Re:புதுப்பித்து கட்டப்பட்ட ம...
posted by hylee (colombo) [16 October 2011]
IP: 220.*.*.* Sri Lanka | Comment Reference Number: 11077

வாழ்த்துக்கள்.அல்ஹம்துலில்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Re:புதுப்பித்து கட்டப்பட்ட ம...
posted by kaleel (madina) [17 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11091

நமது ஊரின் 3 வது ஜிம்மா பள்ளி மற்ற ஜிம்மா பள்ளி ஹாலில் இட நெருகடியை போக்க உதவும் ......... கிழக்கு பகுதியிலும் ஒன்று அமைன்தல் இன்னும் நமது ஊருக்கு இன்னும் சிறப்பு .........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. பொருள் : ஜூம்மா பள்ளி அல்லாத பள்ளி எனும் கொள்கை பிற்காலத்தவையே !!
posted by ஹாஜா அரபி (Hong Kong) [17 October 2011]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 11096

அல்லாஹ்விற்காக வக்ப் செய்யப்படும் மச்ஜீத்கள் அனைத்திலும் ஜூம்மா தொழுகை உட்பட எல்லா வேளை தொழுகையும் நடாத்தப்படவேண்டும் என்பதே சுன்னத். ஜூம்மா பள்ளி அது அல்லாத பள்ளி எனும் கொள்கை பிற்காலத்தில் ஏற்ப்பட்டதகவே தெரிகிறது.

ஏராளமான பள்ளிகள் உருவானதால் ஏற்பட்ட நடைமுறையாகவே இவை தெரிகிறது. எனவே ஒரு பள்ளியில் ஜூம்மா நடத்த போவது ஒன்றும் சரித்திர குறியீடாக கொண்டாடுவது ஏற்புடையதா என்பது விவாதத்திற்குரியது.

நமதூர் மொஹுதூம் பள்ளியில் ஜூம்மா நடத்த தீர்மானித்திருப்பதற்கு வருவோம். அதுவும் எண் இலக்கம் (11 /11 /11 )என்பது பள்ளிவாசலுக்கும் செண்டிமெண்ட் வந்தது துரதிஷ்டமே. நமதூருக்குதான் இவையெல்லாம் சரித்திரம் போலும். எல்லாவற்றிலும் தனித்துவம் நமக்கு!!

இதற்கு கடந்த கால சரித்திரம் காரணமாக இருக்ககூடும் என நினைக்கிறேன் . இரண்டாவது ஜூம்மா வாக சிறிய ஜும்மா பள்ளி (சிறிய நைனாரால்) போட்டியாக கட்டப்பட்டதும், அது தவறு (?) என்று அன்று தடுக்க முயற்சித்த அப்பகுதி முன்னோர்கள், வுருவாக்கப்பட்ட நிலையில் சமரசத்திற்காக பெரிய மற்றும் சிறிய ஜூம்மா பள்ளிகளில் [edited] (வாரம் இங்கு வாரம் அங்கு என ) மாற்றப்பட்டது.

பின்னர், மூன்றாவது ஜூம்மா உருவாகக்கூடிய சரித்திர கட்டாயம் ஏற்பட்டது கடந்த நூற்றாண்டின் மத்தியில்.

அல்ஜாமிஉல் அஸ்கர் மஜ்ஜித் உருவாக்கத்தை முறியடிக்க பெரும் இயக்கமே நடைபெற்றது. பாத்வாக்கள், தந்திகள் என ஊர் அல்லோலகல்லோல பட்டது. அல்ஜாமிஉல் அஸ்கர் மஜ்ஜித் கட்டப்பட்டதில்தான் கொண்டாட்டமும், போராட்டமும், எதிர்ப்பும் ஆதரவும் என்ற மாச்சரியங்கள் அன்று ஊரை கலங்கடித்தன. அவை அனைத்தும் வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்க்கப்பட்டன. காரணம் மச்ஜிட்களின் தேவை பல்வேறு காரணங்களால் உருவானதே.

இந்த மனோ நிலையில் மஹுடோம் பள்ளியை எடுக்க முடியாது. காரணம் இப்பள்ளி கட்ட படும் நிலையில் சிலரால் எதிர்ப்பு கிளம்பியது. அல்லாஹ் உதவியால், நீதி மன்ற படிகளிலும் அவை முறியடிக்கப்பட்டன. அல்ஹம்டுளில்லாஹ்.

ஆனால் அது கட்ட படும் நிலையில் என்ன காரணத்திற்காகவோ அது ஜூம்மா தொழும் பள்ளியாக பிரகடனப்படுத்த படாமலேயே, வேலைகளெல்லாம் முடிந்து தொழுகையும் நடக்கும் நிலையில் 11 /11 /11 அன்று ஜூம்மாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல சகோதரர்கள் தங்கள் சந்தோஷத்தை இந்த பகுதியில் பதிவு செய்துள்ளனர். என்னை பொறுத்த வரை இது ஒரு சாதாரண நிகழ்வாகவே கருதுகிறேன் . இஸ்லாத்தின் பார்வையும் இதுவாகவே இருக்கக்கூடும் என கருதுகிறேன். அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

பள்ளிக்கு ஒரே இலக்கணம் தான் உண்டு. அங்கு அல்லாஹ்வை தவிர வேறு யாரையும் (கூவி உதவிக்கு) அழைப்பதை இஸ்லாமிய அகீதா (அடிப்படை கொள்கை) ஏற்பதில்லை. அடுத்து அல்லாஹ்வை வணங்க வருவோரை (போர்டு அறிவிப்பின் மூலம்) தடுப்பதும், அச்சத்தை ஏற்படுத்துவதும் அக்கிரமம். இவை இரண்டும் நடக்காத வரை இந்த மச்ஜிடை அல்லாஹ் பாதுகாப்பான்.

வஸ்ஸலாம்
ஹாஜா அரபி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. KOMAN JAMATH
posted by ansari (abu dhabi) [17 October 2011]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11097

அன்பு K.S MOHAMED SUHAIB KAKA சகோதர்களுக்கு கோமான் ஜமாத்தார்கள் தற்போது ஜும்மா நடைபெறும் இரண்டு ஜும்மா பள்ளியும் தங்களுக்கு தூரம் என்று ஒரு போதும் சொன்னது இல்லை.அவர்களுக்கு மொஹ்தூம் பள்ளியை விட சின்ன PARIA ஜும்மா பள்ளி தூரம் குறைவே.தய உ செய்து புது குழப்பத்தை கோமான் ஜமாத்தில் உண்டாக்க முயல வேண்டாம் .

அல்லாஹ்வின் பள்ளிக்கி அவனை வணங்க எடுத்து வைக்கும் ஒவ்வரு அடிக்கும் நன்மை என்பதை MARAKKA வேண்டாம்.நபிகள் صلي عليه وسلم அவர்கள் எதுன்னியோ சஹாபிகளுக்கு رضوان الله عليهم எவ்வலு தூரம் இருந்தாலும் நடந்து வந்து தொழுது போங்கள் என்று சொன்னதும்.மறக்க வேண்டாம்.தவறாக சொல்லி இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள்.

PLS DT COMMENT AGAIN ABT THAT ISSUE(KOMAN JAMATH ISSUE)جزاكم الله خيرا


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. Re:புதுப்பித்து கட்டப்பட்ட ம...
posted by Ashika (kayalpatnam) [17 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 11098

அஸ்ஸலாமு அழைக்கும். உண்மைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி நம் மக்தூம் பள்ளி . அல்ஹம்துலில்லாஹ். எந்த ஒருவர் ஆதிக்கம் இல்லாத பொதுவான இறை இல்லமாக இருக்க வேண்டும் என்பது அவா. நன்மையான இந்த பள்ளி பணிக்காக அயராது உழைத்த நல்ல உள்ளங்கள், நன்கொடைகள் கொடுத்த ஒவ்வருவருக்கும் இறைவனின் அருள் அளிப்பானாக ஆமீன். ஜூம்மா பள்ளியாக நம் பள்ளியை செய்தி அறிந்ததும் பேரானந்தம்.சுக்ரியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. Re:புதுப்பித்து கட்டப்பட்ட ம...
posted by MAC.Mujahith (MUMBAI) [17 October 2011]
IP: 114.*.*.* India | Comment Reference Number: 11113

மாஷா அல்லாஹ்...இந்த செய்தியை அறிந்து எனக்கும் இங்குள்ள காயல் நண்பர்களுக்கும் மிகுந்த இன்ப அதிர்ச்சி... இந்த நல்ல தருணத்தை தான் இவ்வளவு நாட்கள் காயல் மக்கள் காத்திருந்தார்கள். நிச்சமாக அல்லாஹ் பொருமையளர்களுடன் இருகின்றான். (இன்னல்லாஹ மஅ ஸ்சாபிரீன்).அல்ஹம்து லில்லாஹி அலா குல்லி ஹால்.."

நம் பள்ளி மென் மேலும் சிறக்க & வளர நாம் அனைவரும் பிராத்தனை புரிவோமாக.."வல்ல அல்லாஹ் நம் அனைவரின் நல்ல நாட்ட தேட்டங்களை கபூல் செய்வானாக.."ஆமீன்..."


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
39. Re:புதுப்பித்து கட்டப்பட்ட ம...
posted by N.A. Thymiah (chennai) [17 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 11114

ஒவ்வொரு பள்ளியும் ஜும்மா பள்ளியாக மாற வேண்டும்.

Adminisistrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
40. Re:புதுப்பித்து கட்டப்பட்ட ம...
posted by nahvi ibnu nahvi (abudhabi) [17 October 2011]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11141

அல்லாஹ்விற்காக வக்ப் செய்யப்படும் மச்ஜீத்கள் அனைத்திலும் ஜூம்மா தொழுகை உட்பட எல்லா வேளை தொழுகையும் நடாத்தப்படவேண்டும் என்பதே சுன்னத். காஜா அவர்களுக்கு இந்த ஹதீது எங்க இருக்கிறது. கொஞ்சம் எடுத்து கூறிநாள் அறிந்து கொள்ளலாம்.

நஹ்வி இப்னு நஹ்வி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
41. Re:புதுப்பித்து கட்டப்பட்ட ம...
posted by Mohamed Abdul Kader (AL Khobar) [17 October 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11150

கலப்படம் கரை ஒதுங்கியது. அல்ஹம்துலில்லாஹ்.

மீலாது கூடும் ஆனால் மௌலிது கூடாது.

கந்துரி கூடும் ஆனால் ஜியாரத் கூடாது.

நான் Al Khobar இல் 17 வருடங்களா இருக்கிறேன். என் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் பள்ளியில் ஜும்மா கிடையாது. ஆனால் 5வேலை தொழுகைவுண்டு.

அரப் நாட்டில் எல்லா பள்ளிகளிலும் ஜும்மாவுண்டு என்று ஒருவர் குர்பிட்டு இருக்கிறார்.

நான் இங்கு சிக்கென் கப்ஸா சப்ப்டிருக்கிறேன். இந்த செய்தி என்னாண்ட வெலாங்கு மீன் கப்ஸா.

அவரவர் (குழப்பவாதிகள்) வீட்டில் ஜும்மா தொழுதால் பித்னா வெளியில் வராது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
42. Re:புதுப்பித்து கட்டப்பட்ட ம...
posted by K S MUHAMED SHUAIB (KAYALPATNAM) [17 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 11156

நான் சொன்னதை சகோ. அன்சாரி (கடித் எண் 36 ) தவறாக புரிந்து கொண்டு விட்டார். இன்றைக்கு மக்தூம் பள்ளி ஜும்மா பள்ளி ஆகி இருக்கிறது எனில் அது வேறு எந்த பள்ளியையும் எதிர்த்தோ அல்லது வேறு எந்த அமைப்பையும் எதிர்த்தோ அது ஜும்மா பள்ளி ஆகவில்லை. தங்கள் வசதிக்கு அவர்கள் கட்டிக்கொண்டார்கள். யாரும் அதை எதிர்க்கவும் இல்லை. ஆட்சேபிக்கவும் இல்லை. அவர்களின் முடிவு சரியென்றே இங்கு அனைவரும் எழுதி உள்ளார்கள்.
இன்று மக்களின் வசதியே பிரதானம். அதை கருத்தில் கொண்டுதான் எனது கருத்து இங்கு முன் வைக்கப்பட்டது. தங்கள் எதையோ நினைத்துக்கொண்டு எதையோ எழுதுகிறீர்கள். ஏன் மனதில் எந்த கல்மிஷமும் இல்லாமல்தான் இதை எழுதினேன். தவறாக இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
43. Re:புதுப்பித்து கட்டப்பட்ட ம...
posted by kaamil hafij (hongkong) [17 October 2011]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 11173

அஸ்ஸலாமு அழைக்கும்.அடுத்த மாதம் நம் பள்ளியில் ஜும்மா தொழுஹை நடத்த இருப்பதை கேட்டு ரெம்ப மகிழ்ச்சி யாஹா இருக்கிறது.யா அல்லாஹ் யாரெல்லாம் பள்ளியை kattuwatharuk உளைத்தார்ஹலோ அல்லாஹ் அவர்ஹளுக்கும் அவர்ஹல் குடும்பதார் ஹாலுக்கும் ஹயாத்தை நீள்ளலாமாகி அல்லாஹ் சுகமோடு வாழ கிருபை செய்வான் ஆமீன்.சலாம் டூ ஆல் நம் முஹல்லாஹ் வாசி ஹாலுக்கு .வஸ்ஸலாம் .காமில் haafij .கிராஸ் ஸ்ட்ரீட் /

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
44. Re:புதுப்பித்து கட்டப்பட்ட ம...
posted by syed omer kalami (colombo) [17 October 2011]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 11174

Most welcoming decision and mostly wanted in present scenario. Allow to people of any ideology to pray ALLAH freely without fear.We have unpleasant incidents in past in this mosque.See that it does not repeat again. Be iqlas, ALLAH will give success in all ways.Afraid to ALLAH alone.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
45. பொருள் : ஷரீஅத்தில் தடைக்குதான் ஆதாரம் தரப்படவேண்டும்!! மஸ்ஜித்களில் எல்லா வேளையும் (ஜூம்மா உட்பட ) நடகவேண்டுமேன்பதுவே பொது விதி !!
posted by ஹாஜா அரபி (Hong Kong) [17 October 2011]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 11177

சகோ. நஹ்வி இப்பகுதியில் தன் கருத்தை பதிவுசெய்யும் வேளையில், 'எல்லா பள்ளிகளும் ஜூம்மா பள்ளிகளாகவே கருதப்பட வேண்டும், காரணம் அனைத்து வேளை தொழுகையும் எல்லா பள்ளியிகளிலும் நடக்கவேண்டும் என்பது பொது விதி' என்ற எனது கருத்தில் மாறுபட்டு, அதற்கான ஹதீத் ஆதாரத்தை கோருகிறார்.

அந்த சகோதரர்க்கு, 'ஷரீஅத்தில் தடைக்குதான் ஆதாரம் தரப்படவேண்டும்!! ஏனனில் தடையை மீறினால், பாவம், பின்னர் அதற்க்கு பரிகாரம் என சொல்லப்பட்டிருக்கும்.'

மஸ்ஜித்களில் எல்லா வேளையும் (ஜூம்மா உட்பட ) நடகவேண்டுமேன்பதுவே பொது விதி!! அவை நடக்கவில்லையெனில் அது குறைபாடாகவே இருக்கும்.

இங்கே ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மரியாதைக்குரிய சொற்செல்வர் மறைந்த எஸ். எம். ஐதுரூஸ் ஆலிம் அவர்கள், 'காயல்பட்டினத்தில் சிறப்பிற்குரிய மஸ்ஜித், அல் ஜாமிஉல் ஆச்கர் மாத்திரமே. ஏன் தெரியுமா ?, நமதூரில் இங்கு மாத்திரம்தான், அது கட்டப்பட்ட காலத்திலிருந்து ஒரு வேளை தொழுகையும் விடுபடாமல் நடைபெற்று வருகிறது. மற்ற எல்லா பள்ளிகளிலும் வாரம் ஒரு வேளை (லுஹர்) தொழுகை விடுபட்டு விடும்' என சொல்ல நான் கேட்டிருக்கிறேன், (மற்ற இரு ஜூம்மா பள்ளிகளில் வாரம் விட்டு வாரம் என தவறி விடும் என்பது நமதூரின் தனி சிறப்பு). 'அந்த வகையில் சிறப்பு மிக்க மஸ்ஜித் இது ' என அடிக்கடி கூறுவார்கள்.

இதை ஆதாரமாக ஏற்பதற்காக இங்கு குறிப்பிடவில்லை. மாறாக அவர்களின் கருத்து பொது விதியாக ஒரு முக்கிய செய்தியை உணர்த்துகிறது. அதாவது இயற்கையாகவே மஸ்ஜித்கள என்றால்,அவற்றில் எல்லா வேளை தொழுகையும் நிறைவேற்றப்படவேண்டும். அதில் வெள்ளிக்கிழமைகளில் ஜூம்மா தொழ்க்கையும் அடக்கம். அந்த பள்ளிகளில் ஜூம்மா தொழுகை நடந்தால்தான் இது சாத்தியம். இதற்க்கு விதிவிலக்கு எந்த பள்ளிக்கும் இருக்கிறதா என்பதற்கும் சகோ. நஹ்வி அவர்களே ஆதாரத்தை காட்ட வேண்டும்.

இதில் நண்பர் நஹ்வி அவர்களுக்கு மாற்று கருது உண்டா ? உண்டெனில் ஆதாரம் கொண்டுவாருங்கள். அது குர்ஆன், ஹதீத் அடிப்படையில் இருந்தால் ஏற்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

மத்கபுகளில் சில பல விதிகள் என பிற்காலத்தில் தோன்றின. அதாவது, ஷாபிஈ மத்ஹாப் படி நாற்பது பேர் - அதுவும் உள்ளூர்காரர்களாக இருக்க வேண்டும். இல்லையெனில் ஜூம்மா (செல்லாது) விற்குப் பிறகு அனைவரும் ஜமாத்தாக லுஹர் தொழுவது கடமை. (திருசெந்தூர் பஸ் ஸ்டாண்ட் பள்ளியில் இதுதான் முன்னர் நடந்தது. இப்போது ஜும்மா மாத்திரமே தொழப்படுகிறது)

ஹனபியில் இந்த விதிகள் இல்லை. இமாம் ஒருவரும், பின்தொடர மஃமூம் ஒருவரும் இருந்தாலே போதும் என விதி உள்ளது நாம் அறிந்ததே. ஹதீத் ஒளியிலும் இதுவே விதி என நான் அறிகிறேன். அல்லாஹ்வே அறிந்தவன்.

இந்த சர்சைக்குள் செல்ல நான் விரும்ப வில்லை. சகொததற்கு சில கேள்விகள் இதோ.

1 . ஏன் ஒரு பள்ளி மட்டும் ஜூம்மா பள்ளியாக மட்டும் இருக்க, மற்ற பள்ளிகள் வெறும் (?) - நமதூரில் முஹல்லா- பள்ளிகளாகவே தொடர வேண்டும் ?

2 ஜூம்மா பள்ளிக்கான தராதரங்கள், இருக்க வேண்டிய தகுதிகள் என்ன ? இருக்கக் கூடாதவை என்னன்ன ? பட்டியலிடவும்.

3 வெறும் பள்ளியில் தொழுதால் குறைவான நன்மைகளும், ஜூம்மா பள்ளியில் தொழுதால் நிறைவான நன்மைகளும் உண்டா ? ஆதாரம் ? (இங்கே ஒன்று கூற ஆசை படுகிறேன். இஹ்திகாப் இருப்பதற்கு ஜூம்மா பள்ளியே சிறந்தது. ஏன் எனில் மற்றைய பள்ளிகளில் இருந்தால், இஹ்திகாப் இருப்போர் ஜூம்மா தொழ வெளியில் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும் என்பதாலேயே. ) இது இன்று நம்மில் உள்ள சூழ்நிலைக்கு பரிகாரமே)

அல்லாஹ்வே எல்லோர்க்கும் வழிகாட்ட போதுமானவன். வஸ்ஸலாம்.

இவண் :
ஹாஜா அரபி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
46. Re:புதுப்பித்து கட்டப்பட்ட ம...
posted by nahvi ibnu nahvi (abu dhabi) [17 October 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11189

அல்லாஹ்விற்காக வக்ப் செய்யப்படும் மச்ஜீத்கள் அனைத்திலும் ஜூம்மா தொழுகை உட்பட எல்லா வேளை தொழுகையும் நடாத்தப்படவேண்டும் என்பதே சுன்னத்.காஜா அவர்களுக்கு சுன்னத்து என்று சொன்னீர்களா அதற்கு ஹதீது உள்ளதா என்று தெரிந்தால் சொன்னால் ஏற்றுகொள்ளலாம என்று சொன்னனே தவிர கூடுமா கூடாதா என்ற விவாததிற்க்கு வர வில்லை

நஹ்வி இப்னு நஹ்வி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
47. Re:புதுப்பித்து கட்டப்பட்ட ம...
posted by Mohideen (Jeddah) [17 October 2011]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11196

ஜும்மா நடக்கும் date எதார்த்தமாக கூட இருக்கலாம்.

அது எப்படிங்க எந்த news போட்டாலும் குத்தம் கண்டுபிடிக்க ஒரு சில பேர் இருக்கிறார்கள்.

எங்கேயும் டியூசன் எடுப்பார்களோ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
48. Re:புதுப்பித்து கட்டப்பட்ட ம...
posted by maackie noohuthambi (kayalpatnam) [18 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 11220

மொகுதூம் பள்ளி திறப்புவிழா அழைப்பிதழை இனைய தலத்தில் பார்த்து மிக்க மகிழ்ச்சி.

இந்த பள்ளிவாசல் ஆயிரக்கணக்கான இறை நேசசெல்வர்கள் தங்கள் நெற்றியை தரையில் வைத்து அல்லாஹ்வை சுஜூது செய்த பள்ளி.அவர்களின் மண்ணறைகளை அல்லாஹ் வெளிச்சமாக்கி வைத்து அவர்கள் பாவங்களை மன்னித்து மேலான சுவர்க்கபதியில் வாழசெய்வானாக.

இணையதளத்திலே சர்ச்சை செய்பவர்கள், இது அல்லாஹ்வின் இல்லம் பற்றிய பொது அழைப்பு என்று ஏற்றுக்கொள்ளுங்கள். கருத்து வேறுபாடுகள், விளக்கங்கள் தேவைப்படுவோர்கள் நிர்வாகத்தை அணுகி தெளிவு பெற்றுக்கொள்ளுங்கள். 11 .11 .11 என்ற செய்தியை, தினத்தை பற்றிய சர்ச்சை வேண்டாம். துல் ஹஜ் மாதம் அய்யாமு தஷ்ரீக் முடிந்த அடுத்த நாள் இந்த பள்ளியில் ஜும்மா தொழுகை நடைபெறவிருக்கிறது என்ற கண்ணோட்டத்துடன் அதை பாருங்கள்.

இந்த பள்ளி இவ்வளவு சிறப்பாக கட்டப்படுவதற்கு அல்லாஹ்வின் அருள் நிறையவே இருந்தது. எல்லா தடைகளையும் தாண்டி வெற்றிபெற உடலால் உழைத்தவர்கள் உள்ளத்தால் இரவு பகல் துஆ செய்தவர்கள் பொருளாதரத்தை அள்ளிதந்தவர்கள், சிறிய சம்பளத்தில் இருப்பவர்கள் முதல் பெரும் தனவந்தவர்கள் வரை அவரவர் தகுதிக்கு இந்த பள்ளி கட்டப்படுவதற்கு உதவியிருக்கிறாகள்

எல்லோருக்கும் இந்த இனைய தளம் மூலமாக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

எல்லோரும் வாருங்கள் அல்லாஹ்வுடைய பள்ளியை எவ்வளவு பெரிதாக கட்டினோம் எனபது பெருமை இல்லை, எவ்வளவு பேர் தொழுகிறோம் எவ்வளவு நல அமல்கள் அங்கே நடை பெறுகிறது என்பதைத்தான் அல்லாஹ் எதிர்பார்க்கிறான். நிறைகளை பிறரிடம் சொல்லுங்கள், குறைகளை எங்கள் நிர்வாகத்திடம் சொல்லுங்கள். இது அல்லாஹ்வின் வீடு உங்கள் தலைகளும் அல்லாஹ்வுக்கு சுஜூது செய்யும் தளமாக இது அமையட்டும். அல்லாஹ் இங்கே வந்து தொழுபவர்களுக்கு இம்மை மறுமை பேற்றை நிறைவாக தந்தருள் பிரார்த்திக்கிறோம். வஸ்ஸலாம்.

மக்கி நூஹுதம்பி 9865263588

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
49. ஒரு குடையின் கீழிருந்து சுபிட்சமாக வாழ
posted by N.S.E. மஹ்மூது (KAYALPATNAM) [18 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 11238

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

அல்லாஹ்வின் இந்த இல்லத்தை புதுப்பித்து கட்ட நிர்வாகத்தினர் பட்ட சிரமங்கள் ஏராளம் , ஏராளம் , அனைத்து சிரமங்களும் நீக்கப்பட்டு கட்டி முடித்து , இன்று புதுப்பொழிவுடனே காட்சியளிப்பதற்கு உதவிய அல்லாஹுவுக்கே எல்லாப் புகழும்.

இன்ஷா அல்லாஹ்! வரும் நவம்பர் மாதம் 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் ஜும்ஆ தொழுகை நமது பள்ளியில் நடத்தப்படவுள்ளதாக பள்ளியின் நிர்வாகத்தின் சார்பில் தெரிவித்திருக்கிறார்கள் - இது ஒரு நல்ல செய்திதான் என்றாலும் நெருடுதலான செய்தி - அல்லாஹ் நன்மையாக்கித் தருவானாக ஆமீன்.

---------------------------------------------

இரண்டாவது ஜும்ஆ பள்ளி :

மார்க்கத்தின் வழிகாட்டுதலிலும் , நான்கு மத்ஹபுகளின் வழிகாட்டுதலிலும் இரண்டுக்கு மேல் ஜும்ஆ பள்ளிகளை அமைக்க தடை இல்லை என்றாலும் கூட இந்த மூன்றாவது ஜும்ஆ பள்ளி அமைவது என்பது ஒரு சிறு நெருடலையே ஏற்படுத்துகிறது.

நமது முன்னோர்கள் சொல்வார்கள் ஒற்றுமையுள்ள ஊருக்கு ஒரு ஜும்ஆ என்று , அப்படி ஒற்றுமையாக இருந்த நமது ஊரில் ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக ஒரே ஜும்ஆ' வாகத்தான் இருந்தது - எல்லோரும் ஒரே குடையின் கீழ் நின்று - ஒற்றுமை என்னும் கைற்றை பற்றிப் பிடித்தவர்களாகவே ஒற்றுமையுடன்தான் வாழ்ந்து வந்தார்கள்.

கிட்டத்தட்ட ஐம்பது வருடத்திற்கு முன்பு ஒற்றுமைக் குறைவின் காரணமாக இரண்டாவது ஜும்ஆ பள்ளிவாசல் நமது ஊரிலே தொடங்கப்பட்டது - அதனால் ஒற்றுமை என்னும் கைற்றில் சிறு விரிசல் ஏற்பட்டது - அதன் பின் மார்க்க கொள்கைகளில் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் விரிசல் சற்று கூடி நிற்கின்றது - இருந்த போதிலும் அல்லாஹ்வின் அருளால் ஏதோ ஒரு விதத்தில் நம் ஊர் மக்கள் அனைவரும் ஒற்றுமை என்னும் கைற்றை பற்றிப் பிடித்துக் கொண்டுதான் இருக்கின்றோம் அல்ஹம்துலில்லாஹ்.

என்னதான் எந்த வகையிலும்தான் நமக்குள்ளே கருத்து வேறுபாடுகள் வந்தாலும் ஒற்றுமை என்னும் கைற்றில் விரிசல் ஏற்படுவதும் - இறுகுவதுமாகத்தான் இருக்கின்றதே தவிர நமது ஒற்றுமை அறுந்துவிடவில்லை - அல்லாஹ் நம்மை காப்பாற்றியே வருகிறான் - அந்த வல்ல ரஹ்மானுக்கே எல்லாப் புகழும் , புகழ்ச்சியும் உண்டாவதாக.

-----------------------------------------------

மனதுக்கு நெருடல் :

ஜும்ஆ பள்ளியாக மாற்றியமைப்பதற்கான அவசியத்தை பற்றிய விளக்கம் எமக்கு தெரியவில்லை என்ற போதிலும் மூன்றாவதாக ஒரு ஜும்ஆ பள்ளி தொடங்க இருப்பது மனதுக்கு ஒரு நெருடலாகவே இருக்கிறது.

சிலர் கூறுவது போல் இடம் நெருக்கடி என்பது பொருந்தாத காரணம் - நெருக்கடி என்றால் ஏற்கனவே இருக்கின்ற ஜும்ஆ பள்ளியை விரிவுப் படுத்தலாமே!.

ஊர் விரிவடைந்து கொண்டிருப்பதால் தேவை என்பதும் சரியல்லவே! பெரிய வித்தியாசமான தூரம் இல்லையே!!. மேலும் "ஜும்ஆ உடைய பலனை" அதிகம் விரும்புகிறவர்கள் இந்த சிறிய வித்தியாசமான தூரத்தை பொருட்படுத்த மாட்டார்கள்.

" எவர் ஜும்ஆவுடைய நாளில் குளித்து , அதிகாலையிலேயே விரைவாக, வாகனத்தில் ஏறாது நடந்து சென்று , இமாமை அண்மித்து உரையை செவிமடுப்பாரானால் அவர் வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு வருடம் நோன்பிருந்த , ஒரு வருடம் நின்று வணங்கிய நன்மையை அடைந்துக் கொள்வார் " என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்கள் : அபூதாவுத் , திர்மிதி ).

ஆகையால் மேற்கூறப்பட்ட ஹதீதின் படி நன்மையை நாடுவோருக்கு இந்த தூரம் ஒரு பொருட்டல்ல.

------------------------------------------------

சுபிட்சமாக வாழ :

இன்று இருக்கும் இரண்டு ஜும்ஆ பள்ளிகளில் நாம் தொழப் போகும்போது மக்களுக்கு ஏற்படுகின்ற ஒரு பரவசம் அதாவது பெருநாள் போன்ற ஒரு தோற்றம், கலிப்பு - மேலும் பயபக்திகள் என்பவைகள் எல்லாம் மூன்று , நான்கு என பல ஜும்ஆ பள்ளிகள் வந்தால் இருக்குமா? என்பதும்.

இப்போது மார்க்க கொள்கைகளிலே பிரிந்திருப்பது போல் வேறு எந்தவிதமான கொள்கை பிரச்சனைகளும் புகுந்து நம் ஒற்றுமை என்னும் கைற்றில் மேலும் விரிசலை ஏற்படுத்திவிடக்கூடாதே என்ற ஆதங்கமும் இருக்கிறது அதன் காரணமே இந்த நெருடல்.

யாராலும் , எந்த சூழ்ச்சியாலும் நமக்குள் பிரிவினைகள் , கொள்கை வேறுபாடுகள் எதுவும் வராமல் எந்நாளும் ஒற்றுமை என்னும் கைற்றைப் பற்றிப் பிடித்து ஒரு குடையின் கீழிருந்து சுபிட்சமாக வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்! கிருபை செய்வானாக ஆமீன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
50. Re:புதுப்பித்து கட்டப்பட்ட ம...
posted by h m ahamed(sellavappa) (kpm) [18 October 2011]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 11278

அஸ்ஸலாமு அழைக்கும் (varahmathullaahi barakaathuhu)...nam பள்ளி சிறப்பாக திறந்து அனைவரும் பயனடைய எல்லாம் வல்ல அல்லா தௌபீக் செய்வானாக ஆமீன்..உங்கள் thuvaவில் எங்களையும் சேர்த்து kollungal..இன்ஷா அல்லா வரும் 11 ;11 ;2011 அன்று தொழுகையில் santhippom.wassalam.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
51. Re:புதுப்பித்து கட்டப்பட்ட ம...
posted by mackie noohuthambi (kayalpatnam) [18 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 11281

Dear Kayal.com Moderator,

I request you to kindly stop receiving and publishing comments about the Jumma Prayer Information of this Mogudoom Masjid. This is not like other topics. It is spiritual and connected with Islamic shariat laws. Comments coming in support and against this Jummah is hurting, whatever the case may be. Let our brothers get explanation from the Mogudoom Palli Administration about the start of Jumma on Dhul Haj 14th immediately after Ayyaamuthu thashreek.

Please do not make this an arguable topic in the public. It is like washing dirtly ugly linen in the public.

Allah is Great.
Mackie Noohuthambi


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
52. Re:புதுப்பித்து கட்டப்பட்ட ம...
posted by Administrator (Chennai) [18 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 11285

இச்செய்தி குறித்த விமர்சனங்களை வெளியிடவேண்டாம் என மக்தூம் பள்ளி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. செய்தியின் தன்மையை கருத்தில் கொண்டு - இச்செய்தி குறித்து புதிதாக பதியப்படும் கருத்துக்கள் பிரசுரிக்கப்படாது என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
53. Re:புதுப்பித்து கட்டப்பட்ட ம...
posted by Eassa Zakkariya (Jeddah) [18 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11288

அன்பின் அருமை தம்பி நஹ்வி இப்னு நஹ்வி அஸ்ஸலாமு அழைக்கும்

இந்த விவாதத்தை இத்தோடு விட்டுவிடுகளேன் ; வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
54. Re:புதுப்பித்து கட்டப்பட்ட ம...
posted by jamal (kayalpatnam) [23 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 11988

'புதுப்பித்து கட்டப்பட்ட மகுதூம் பள்ளியில் நவ.11 முதல் ஜும்ஆ தொழுகை!' என்ற தலைப்பில் நான் எழுதிய கருத்தை தாங்கள் பதிய மறுத்துள்ளீர்கள். ஏன் என்று தெரியவில்லை. ஆனால் நான் ஏதும் தவறாக எழுதவில்லை.

மிகவும் மோசமாக கயவர்களும் தொழுகைக்கு வரவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் என்றும், தடைகளை மீறி கட்டப்பட்டது என்று பலமுறை செய்தியிலும், கருத்துக்களிலும் பதிவு செய்துள்ளீர்கள்.

ஐக்கிய பேரவை பற்றி தாறுமாறான கருத்துக்கள், செய்திகளை மட்டும் வெளியிட்டுள்ளீர்கள். ஐக்கியப் பேரவை பற்றி கருத்துக்கள் வந்தபோது அதை ஐக்கியப் பேரவைக்கு சொல்லுங்கள் என்று சொல்லியிருக்கலாமே! ஏன் எனக்கு மட்டும் பாரபட்சம்?

அந்தந்த கருத்துக்களை அந்த நிர்வாகத்திடம் சொல்லுங்கள் என்று சொன்னால் கருத்துப்பகுதி எதற்கு? ஒரு தலைபட்சமாக செய்தி, கருத்து வெளியிடவேண்டும் என்று முடிவு எடுத்திருக்கிறீர்களா? அவ்வாறு என்றால் சொல்லி விடுங்கள். நான் கருத்து எழுதுவதை தவிர்த்து விடுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
55. HOW TO VALIDATE / BELIEVE ON THIS NEWS???
posted by Muhammad Abubacker (Chennai) [24 October 2011]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 12069

LETTER FROM MAGDOOM PALLI WITH THIS NEWS UPLOADED HERE REGARDING THE NEW JUMMAH AT MAGDOOM PALLI IS NOT EVEN SIGNED BY THE AUTHORISED SIGNATORY & UNDATED. WE ARE IN THE CONFUSION TO VALIDATE THIS NEWS. COULD MR.MACKIE NOOHU THAMBY REPLYING ON BEHALF OF MAGDOOM PALLI CAN HELP ON THIS ISSUE??? I MEAN HOW TO VALIDATE THIS INFORMATION WHICH IS NOT SIGNED BY THE AUTHORISED PERSON AND UNDATED??? HOPE YOU BETTER KNOWS THAT THE ABOVE IS THE BASIC FOR ANY FORMAL COMMUNICATION.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
56. TO THE ADMIN @ KAYALPTNAM.COM
posted by Muhammad Abubacker (Chennai) [24 October 2011]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 12070

We are believing on this site to update the happenings in our kayal. But the letter attached here make the belief questionable in the ground that the letter attached here is not even signed by the authorised person & undated.

Err is human but it can be corrected if its shown. Could be please attach a valid letter (With authorised seal & signature, dated and in the Magdoom palli letterhead) supporting this news or can you please remove this news fully as its not supported by proper document???

Kindly take this in sportive mood but not as advice. May Allah accept your sacrifices for the welfare of kayal by the Barakath of Sallallahu alaihiwasallam & Auliya allah raliyallahuanhum.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved