காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவிலுள்ள ஹாஃபிழ் அமீர் அப்பா பள்ளியில் அமைந்துள்ள மஹான் ஹாஃபிழ் அமீர் வலிய்யுல்லாஹ் அவர்களின் மண்ணறை. இங்கு ஆண்டுதோறும் மஹான் அவர்களின் பெயரில் நினைவு நாள் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழமை.
அந்த அடிப்படையில், 362ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சிகள் 28.09.2011 அன்று கொடியேற்றத்துடன் துவங்கி, 11.10.2011 தேதியில் கந்தூரியுடன் நிறைவுற்றது.
29.09.2011 முதல் தினமும் அதிகாலை 05.00 மணி முதல் 07.00 மணி வரை கத்முல் குர்ஆன் ஓதி மஹான் அவர்களின் பெயரில் ஈஸால் தவாப் செய்யப்பட்டதுடன், மஹான் அவர்களின் புகழ்மாலை மர்ழிய்யாவும் ஓதப்பட்டது.
11.10.2011 அன்று மாலை அஸ்ர் தொழுகைக்குப் பின் மவ்லித் மஜ்லிஸும், மஃரிப் தொழுகைக்குப் பின் ராத்திபத்துல் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸும் நடைபெற்றது.
இஷா தொழுகைக்குப் பின் மஹான் அவர்களின் வாழ்க்கைச் சரித உரையை, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ நிகழ்த்தினார்.
துஆ ஸலவாத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் நேர்ச்சை வினியோகம் செய்யப்பட்டது.
படங்கள்:
M.W.ஹாமித் ரிஃபாய்,
நெய்னார் தெரு, காயல்பட்டினம். |