கோவில்பட்டியில் நடைபெற்ற கல்லூரிகளுக்கிடையிலான பல்வேறு போட்டிகளில் காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி மாணவியர் சாதனை புரிந்துள்ளனர். இதுகுறித்து, அக்கல்லூரியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
கோவில்பட்டி துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் 08.10.2011 அன்று நடைபெற்ற கல்லூரிகளுக்கிடையேயான கணினித்துறை மற்றும் தகவல் தொழிற்நுட்பத்துறை சார்ந்த போட்டிகளில் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.
தொழில்நுட்பம் சார்ந்த மென்பொருள் சந்தைப்படுத்தல் (software marketing) போட்டியில் மூன்றாமாண்டு தகவல் தொழிற்நுட்பத்துறை மாணவியர்கள் என்.யு.ஃபாத்திமா நாஃபிஆ, எஸ்.ஹலீமா மஸ்ஊதா, எம்.எம்.கதீஜா பீவி ஆகியோர் முதலிடமும் மற்றும் இரண்டாமாண்டு கணினித்துறை மாணவியர் எஸ்.ஹவ்வா நஸாஹா நவுஸின், ஏ.ஆர்.முகைதீன் பாத்திமா, என்.ஏ.ஜின்னத் பாத்திமா முகர்ரமா ஆகியோர் இரண்டாம் இடமும் பெற்றனர்.
சொல் தேடல் (word hunt) போட்டியில் இரண்டாமாண்டு தகவல் தொழில்நுட்பத்துறை மாணவியர் ஏ.நுஸ்ரத் சுல்தானா, எஸ்.எஸ்.மர்யம் சுஹைனா ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
கணினியியல் கட்டுரை அளிக்கை (paper presentation) போட்டியில் இரண்டாமாண்டு கணினித்துறை மாணவியர் எஸ்.ஐ.பீவி ஃபாத்திமா, எம்.எஸ்.ஃபாத்திமா நிதா மூஷா சாஹிப் ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
இணையதள உருவாக்கப் (web designing) போட்டியில் மூன்றாமாண்டு கணினித்துறை மாணவியர் எஸ்.தங்க கிருஷ்ணவேணி, எஸ்.மகேஸ்வரி ஆகியோர் மூன்றாம் இடம் பெற்றனர்.
வெற்றி பெற்றவர்களை கல்லூரியின் நிறுவனர் தலைவர் ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான், செயலர் வாவு மொகுதஸீம், துணைச் செயலர் வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக், முதல்வர் முனைவர் மெர்ஸி ஹென்றி மற்றும் பேராசிரியையர் பாராட்டினர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |