மனோன்மனீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியைச் சார்ந்த பல்துறை மாணவியர், பல்கலைக்கழக தரவரிசையில் சிறப்பிடங்களைப் பெற்று சாதனை புரிந்துள்ளனர். இதுகுறித்து அக்கல்லூரியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் 2008-2011ஆம் ஆண்டில் பயின்ற மாணவியரில் 17 பேர் பல்கலைக் கழக அளவில் நடைபெற்ற தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தரவரிசையில் (UNIVERSITY RANK) பெற்றுள்ளனர்.
பகுதி - I தமிழ் பாடத்தில் கணிதவியல் துறையைச் சார்ந்த மாணவி எஸ்.முகம்மது நூகு ஜென்னா 20வது இடத்தைப் பெற்றுள்ளார்.
பகுதி - I அரபி மொழி பாடத்தில் கணிதவியல் துறையைச் சார்ந்த மாணவிகள் எஸ்.ஜே.கதீஜா ரிஷானா 1ஆவது இடத்தையும், எஸ்.டி.என். நூர் சுலைஹா 2ஆவது இடத்தையும், எம்.எஸ்.ஆமினா சித்தீக்கா 3ஆவது இடத்தையும், எஸ்.ஐ.செய்யித் ஃபாத்திமா சபீனா 4ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர்.
பகுதி - II ஆங்கில மொழி பாடத்தில் கணிதவியல் துறையைச் சார்ந்த மாணவி எஸ்.ஜே.கதீஜா ரிஸானா 10ஆவது இடத்தையும், ஆங்கிலத்துறை மாணவி எஸ்.அனீஸ் ஃபாத்திமா 11ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர்.
பகுதி - III ஆங்கில மொழி பாடத்தில் மாணவி எஸ்.அனீஸ் ஃபாத்திமா 7ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.
வணிகவியல் பாடத்தில் மாணவிகள் கே.எம்.எல்.ஃபாத்திமா ஷீரீன் பர்ஹத், எஸ்.எம்.ஃபாத்திமா ஃபர்ஹானா ஆகியோர் முறையே 3ஆம், 7ஆம் இடத்தை பெற்றுள்ளனர்.
வணிக நிர்வாகவியல் பாடத்தில் மாணவிகள் எம்.எஸ்.ஸூஃபீ ஃபஸீலா 14ஈவது இடத்தையும், ஆர்.எஸ்.எச்.ஃபாத்திமா 16ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர்.
கணிப்பொறியியல் பாடத்தில் மாணவிகள் கே.ராபியா ஸஃப்ரீன், எம்.எஸ்.மர்யம் முஜீபா ஆகியோர் முறையே 15ஆம், 20ஆம் இடத்தை பெற்றுள்ளனர்.
தகவல் தொழில் நுட்பம் பாடத்தில் மாணவியர் ராஷிதா சேக் 2ஆம் இடத்தையும், ஜே.கதீஜத் நூரிய்யா 14ஆம் இடத்தையும், எம்.இமாம் ரமீஸா 17ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
பல்கலைக்கழக தரவரிசை பெற்ற மாணவியர் அனைவரையும் கல்லூரியின் நிறுவனர் தலைவர் ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான், செயலர் வாவு மொகுதஸீம், துணைச் செயலர் வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக், முதல்வர் முனைவர் மெர்ஸி ஹென்றி மற்றும் பேராசிரியையர் பாராட்டினர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |