புதுப்பள்ளி ஜமாத் சார்பாக அதன் செயலர் ஏ.எஸ்.அஸ்ரப் வெளியிட்டுள்ள அறிக்கையில் நமது நகர்மன்றத்திற்கு தலைவியாக தேர்வு செய்யப்பட்ட ஆபிதா ஷேக் மற்றும் 18 வார்டு உறுப்பினர்களுக்கும் பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நகர்மன்ற தலைவி தலைமையில் 18 வார்டு உறுப்பினர்களும் ஒரே அணியாக செயல்பட்டு நமதூர் தேவைகளை முழுமையாக அரசிடம் இருந்து பெற்று தமிழகத்திலேயே காயல்பட்டணம் ஒர் முன்மாதிரி நகராட்சியாக செயல்பட்டு லஞ்சத்தை அடியோடு விரட்டி மக்களுக்காக சேவையாற்றிட உங்களை அன்போடு வேண்டுகிறேன் என்று ஏ.ஏஸ்.அஷ்ரப் கேட்டுக்கொண்டார்.
புதுப்பள்ளி ஜமாத் துணை செயலாளர் அப்துல் காதர் நெய்னா. பொருளாளர் ஹாரூன் ரசீத் மற்றும் புதுப்பள்ளி ஜமாத் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
1. Re:புதுப்பள்ளி செயலர் நகர்மன... posted byமுத்துவாப்பா... (அல்-கோபர்)[22 October 2011] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11741
எம் ஜமாத்தினரும் விலை போய் விட்டார்களோ என்று எண்ணி காயம் அடைந்த எங்கள் மனதிற்கு மருந்திட்ட எமது ஜமாத்தின் செயலர் மற்றும் இளைய தலைமுறையினருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள் பாராட்டுக்கள்.
மேலும் இந்த சுதந்திர போரில் கலந்து கொண்ட அணைத்து தியாகிகளுக்கும் என்னுடைய நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து கொள்கிறேன் .
2. புது பள்ளி ஜமாஅத்தார்களுக்கு தெரியாமலேயே புது பள்ளி ஜமாஅத்தார்களை ஐக்கிய பேரவைக்கு அடகு...! posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[22 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 11753
முதல் - வாழ்த்து புது பள்ளி நிர்வாகிகளுக்கு...!
இரண்டாவது - வாழ்த்து மக்களின் சக்தி வேட்பாளர் ஆபிதாவிற்க்கு...!
முதலாவதாக புது பள்ளி நிர்வாகிகளுக்கு தான் வாழ்த்து சொல்ல வேண்டும்...! திருமதி ஆபிதா வெற்றி பெறுவதற்கும் ஐக்கிய பேரவை வேட்பாளரை தோல்வி பெற வழி செய்ததும் இந்த புது பள்ளி நிர்வாகிகள்தான்...!
காரணம் வேண்டுமோ இதோ:-
புது பள்ளியில் ஜமாஅத் கூட்டம் போடாமலேயே புது பள்ளி ஜமாஅத்தார்கள் ஆதரவு என்று ஐக்கிய பேரவை நடத்திய பொது வேட்பாளர் தேர்வில் பங்கெடுத்து புது பள்ளி ஜமாஅத்தார்களுக்கு தெரியாமலேயே புது பள்ளி ஜமாஅத்தார்களை ஐக்கிய பேரவைக்கு அடகு வைத்தது...!
அந்த செய்தி ஜமாஅத்தார்களுக்கு பின்பு அது வெளிச்சத்திற்கு வந்ததின் விளைவுதான் புது பள்ளி நிர்வாகிகளுக்கு எதிராவகவும் சமூக சேவகி திருமதி ஆபிதா அவர்களுக்கு ஆதரவாகவும் அமைந்தது..! ஆபிதாவின் அமோக 4,500 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிக்கு பாடுபட புது பள்ளி ஜமாஅத்தார்களை தூண்டியது.. சூறாவளி பிரச்சாரத்தை வேகமுடன் செயல் படவும் ஆக்கியது...
ஆகையால் திருவாளர் ஜனாப் அசரப் அவர்கள்..! முதல் முதலில் புது பள்ளி நிர்வாகிகளுக்கு போர்வை போர்த்தி தனது நன்றியையும் வாழ்த்துக்களையும் ஜமாஅத்தார்கள் சார்பாகவும் நன்றி தெரிவித்து இருக்க வேண்டும்...
இரண்டாவதாகதான் நீங்கள் வெற்றி வேட்பாளர், மக்கள் சக்தி வேட்பாளர் திருமதி ஆபிதா அவர்களுக்கு வாழ்த்துக்களை சொல்லி இருக்க வேண்டும்...!
அது தான் நியாயமான, நடுநிலையான செயல்...!
நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (வி.சி.கட்சி)
- புது பள்ளி ஜமாஅத்தின் ஒருவன் -
3. Re:புதுப்பள்ளி செயலர் நகர்மன... posted byA.R.Refaye (Abudahbi)[22 October 2011] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11755
அஸ்ஸலாமு அலைக்கும..
நான் படித்தத்தில் பிடித்ததை என் அன்பு ஜமாதர்க்ளுடன் பகிர்த்து கொள்வதில் பெருமை அடைகிறேன். அமையப்போகும் புதிய நகராச்சியின் தலைவியும் ,உறுப்பினர்களும் சற்று இதை படித்து மனதில் வைக்க அடியேனின் தாழ்மையான வேண்டுகோள்.
என்ன அருமையான கட்டுரை. ஜஸாகல்லாஹ். நமக்காகவென்றே தற்போதைய நிலைமைக்காக எழுதப்பட்டதை போலுள்ளது
எதிர்மறைச் சூழலிலும்… நேர்மையாய் இருப்போம்
எதிர்மறைச் சூழலை மிக நுட்பமாய் முறியடிக்கும் வழி நாம் நேர்மறையாய் (positive) நடந்துகொள்வதுதான்.
எல்லா நேரங்களிலும் நம்முடைய சூழல் நாம் விரும்புவது போல் அமைந்துவிடுவதில்லை. பல நேரங்களில் எதிர்பாராமலே நாம் எதிர்மறைச் சூழலில் சிக்கிக் கொள்கிறோம்.
- நம்மைப் பற்றி பிறர் மாறுபாடாய் பேசும் போதும்,
-நியாயமான தேவைகளுக்கும் மறுப்புகளைச் சந்திக்கும்போதும்,
- நடந்துவிடும் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் நேரத்தில் ஏமாற்றம் ஏற்படும் போதும்,
- அவசரமான நேரத்தில் அவசியமில்லாமல் நம் நேரத்தை பிறர் வீணடிக்கும் போதும்,
- நாம் காரணமாய் இல்லாத நிலையில் நம்மீது குற்றமோ, பழியோ சுமத்தப்படும்போதும்,
- நம்முடைய உழைப்பும், ஆற்றலும், பணமும், நேரமும் மற்றவர்களால் அல்லது புறச் சூழல்களால் விரயமாகும்போதும்,
-அநியாயங்களைக் கண்டும் வாய்மூடி மௌனியாய்ச் செல்ல நேரிடும்போதும் என இன்னும் பல்வேறு நேரங்களில் நாம் எதிர்மறையான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம்.
இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இயல்பாய் இருப்பதென்பதும், இயல்புநிலை மாறாமல் நடந்துகொள்வதென்பதும் கடினமானதுதான்.
ஒவ்வொரு சூழலுக்கும் முடியும் என்றால் அதேயளவு எதிர்வினை காட்டக் கூடியவர்களாகத் தான் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள். ஆனால் எதிர்மறைச்சூழலில் நாமும் எதிர்மறையாகவே நடந்து கொண்டால் நிலைமை இன்னும் மோசமாவதோடு சம்பந்தப்பட்டவர்கள் நம்மோடு பகையாகி விடுவதற்கான வாய்ப்பும், நம்மிடமோ, நமக்கு செய்யவேண்டிய பணிகளிலோ மேலும் மோசமாய் நடந்துகொள்ளவும் நேரிடலாம்.
எதிர்மறையாய் நாம் நடந்துகொண்ட நாள் முழுவதுமே சினத்தாலும், அதிருப்தியாலும் நிரம்பி நாம் துன்புற வேண்டியுள்ளது.
பின்பற்றுவதற்குச் சற்று கடினம்தான் என்றாலும் எதிர்மறைச் சூழல்களிலும் நாம் நிலை மாறாமல் இருப்பது பெரிதும் அவசியமானதாகும். குறைந்த பட்சம் கோபம், வெறுப்பு, அலட்சியம் போன்றவற்றை வெளிப்படுத்தாமல், தேவைப்படும் நிலையில் வருத்தத்தை வெளிப்படுத்தி நம் கருத்தைத் தெரிவிக்கலாம். எதிர்மறைச் சூழலை மிக நுட்பமாய் முறியடிக்கும் வழி நாம் நேர் மறையாய் நடந்துகொள்வதுதான்.
நேர்மறையாய் நடந்துகொள்ளும் வழி முறைகளைப் பார்ப்போம்.
- அமைதியிழந்து காணப்படும் நேரத்தில் பதிலளிப்பதை தவிர்க்கலாம். நாம் ஏதோ சலனத்தில் இருக்கிறோம் என்பதை மென்மையாய் தெரிவிக்கலாம்.
- குரலை உயர்த்திப் பேசுபவர்களிடம் நாம் அதே தொனியில் பேச வேண்டுமென்பதில்லை. அப்படிப் பேசினால் நிலைமை விபரீதமாகுமேயன்றி, இரு சாரார்க்குமே நன்மை ஏற்படாது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நாம் மென்மையான குரலில் பேசுவதே உகந்ததாகும்.
- “எதிர்த்தரப்பார் அப்படி ஆவேசப்படும் போது நான் மட்டும் ஏன் அடங்கிப் பேச வேண்டும்?” என்ற கேள்வி நம் மனத்தில் எழக்கூடும். இது அடங்கிப் போவதல்ல. நிலைமையை அடக்குவதாகும்.
- பிரச்னைகள் தீர்ந்த பின் யோசித்துப் பார்த்தால் நாம்தான் உயர்வாக, கண்ணியமாக நடந்து கொண்டோம் எனும்போது பாராட்டும், பெருமிதமும் கிடைப்பதை உணரலாம்.
-பாராட்டிற்காகவோ, பெருமிதத்திற்காகவோ இல்லையென்றாலும் கடைப்பிடிக்க வேண்டிய சிறந்த அணுகுமுறை மென்மைதான்.
- எதிர்மறைச்சூழலில் நமக்குப் பலரும் ஆலோசனைகள் சொல்வார்கள். “எனக்குத் தெரியாததையா சொல்லிவிட்டார்கள்?” என்று முற்றிலும் புறந்தள்ளிவிடாமல் நாம் இயல்பாய் இருக்கவும், நேர்மறையாய் செயல்படவும் எது சிறந்த ஆலோசனையோ அதனை ஏற்றுக் கொள்ளலாம்.
- சில நேரங்களில் நம் குழப்பத்தை அதிகரிப்பது போல் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைக் கூறுவார்கள். சூழலின் கடுமையை அதிகரிப்பது போல் யார் பேசினாலும் அவரை மதிக்கவேண்டிய நிலையிலிருப்பதைப் பற்றி கவலைப்படாமல் தவிர்த்துவிடலாம்.
- மற்றவர்களின் கருத்துக்களில், செயல்பாடு (நடத்தை- Attitude) களில் நமக்கு உடன்பாடில்லை என்றாலும் அவைகளுக்காக அவர்களை உள்ளுக்குள் நாம் வெறுப்பதாயிருந்தாலும் எதிரில் எதனையும் வெளிப்படுத்துதல் கூடாது. அதற்கும் மேலாக அவர்களிடமும் இயல்பாகவே நடந்து கொள்ளுதல் நல்லது.
- நம்முடைய எதிர்மறையான சிந்தனைகளோ, செயல்பாடுகளோ மற்றவரைக் காட்டிலும் நமக்குத்தான் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நினைவில் நிறுத்துதல் அவசியம்.
- “ஒவ்வொரு இடர்ப்பாட்டிலும் ஒரு வாய்ப்பு மறைந்துள்ளது” என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறுகிறார். எதிர்மறைச் சூழலிலும் நமக்கான வாய்ப்பு எதுவென பார்க்கலாம்.
- நம்மால்தான் தவறு நிகழ்ந்தது எனும்போது நேர்மையாய் அதனை ஒப்புக்கொள்ளுதல் வேண்டும்.
-அறிந்தோ அல்லது அறியாமலோ நாம் தவறு செய்துவிடும்போது மனத்தளர்ச்சி அடைய வேண்டியதில்லை. “வாழ்வில் தவறுகள் செய்வதால் கழியும் நேரமாவது ஏதும் செய்யாமல் சும்மாவே கழித்த நேரத்தைவிட மதிப்பு வாய்ந்தது” (எல்லாத் தவறுகளும் இதில் அடங்கிவிடாது என்பதில் கவனம் இருக்கட்டும்)
தவறு நேரும்போதுதான் சரி எது என்பதில் தெளிவு பிறக்கிறது.
அனுபவங்கள் கிடைக்கின்றன. அனுபவங்கள்தான் நம்மைச் சரியாக வழிநடத்துகின்றன.
- எதிர்மறைச்சூழலில் நாமிருக்கும்போது நம்முடைய நலம்விரும்பும் நண்பர்களை அழைத்து நம் எண்ணங்களை பகிர்ந்துகொள்ளலாம். சரியான ஆலோசனைகளைக் கேட்கலாம்.
நமக்குப் பிடித்த புத்தகங்களை எடுத்துப் புரட்டிப் பார்க்கலாம்.
-ஆழ்ந்து மூச்சுவிடுதல். கண்களை மூடியபடி சிறிதுநேரம் அமைதியைக் கடைப்பிடித்தல். தியானம் பழக்கமுள்ளவர்கள் சிறிதுநேரம் தியானம் செய்தல். குளிர்ந்த நீரைப் பருகுதல் போன்றவை நம்மை உடல், மன ரீதியாக ஆசுவாசப்படுத்தும்.
- நாம் எல்லோரையும் எல்லா நேரத்திலும் திருப்தியுறச் செய்ய இயலாது. நாமென்பதில்லை. யாராலுமே அது முடியாது. எனவே சில சமயங்களில் வேண்டிய மனிதர்களையோ, பொருள் பணத்தையோ, ஏன் நட்பையோ கூட இழக்கவேண்டி வரலாம். அதற்காக இடிந்துபோய் விடுவதோ, வாட்டமாகவே காணப்படுவதோ தவிர்க்கப்பட வேண்டும்.
- சில இழப்புகள் பெரும் நிம்மதியைக் கூட கொண்டுவந்து சேர்க்கலாம். எப்போதும் நமக்கு இன்னலை ஏற்படுத்துபவர்கள் என்னதான் தேவைப்படுபவர்களாக இருந்தாலும் அவர்களை இழப்பதற்கு நாம் நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
- அதற்குப் பின்னர் நேர்மறையான மனிதர்களை நோக்கி நம்முடைய கவனத்தை திசை திருப்பலாம்.
இன்பமும் துன்பமும் கலந்துதான் வாழ்க்கை என்பது எல்லோரும் அறிந்திருப்பதுதான். இன்பத்தை மகிழ்வோடு கொண்டாடுகின்ற நாம் துன்பத்தைக் கொண்டாட இயலாது. ஆனால் எப்படிப்பட்ட சிக்கலான சூழ்நிலைகளையும் எதிர் கொள்கின்ற பக்குவம் பெற்று விட்டோமெனில் துன்பம் என்பது ஏது?
4. Re:புதுப்பள்ளி செயலர் நகர்மன... posted byM.A. MOHAMED THAMBY B.Sc., (CHENNAI)[22 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 11768
புதுப்பள்ளி ஜமாஅத்தின் வாழ்த்து செய்தியை வரவேற்கிறோம்.
நம் ஊர் மக்கள் நமது புதுப்பள்ளி ஜமாஅத்தை சேர்ந்த பெண்மணி ஆபிதா அவர்களை ஊர் தலைவியாக தேர்வு செய்து உள்ளார்கள்.
எனவே நாம் ஆபிதா அவர்களின் அனைத்து சமுதாய நலப்பணி முயற்சிகளுக்கும் ஒன்றிணைந்து செயல் படுவதே நம் புதுப்பள்ளி ஜமாஅத் இந்த ஊர் மக்களுக்கு செய்யும் மிக பெரிய கடமையாகும்.
எனவே, இந்த ஊர் மக்கள் போற்றும் வண்ணமாக ஒன்றிணைந்து செயல் பட வல்ல அல்லாஹ் உதவி புரிவனாக ஆமீன்.
5:8. முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.
4:135. முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்; (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்); ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்; எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்; மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.
2:256. (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.
3:103. இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.
You have done justice to the post of secretary. All know well how your co-member did in this whole election matter. you ,my friends ABDUL CADER NAINA ,HAROON, SADAK, BUHARI, MOHIDEEN, MALIK, CS, KOMAIDAR AND ALL OUR MEDDAI GROUPS Did good job n justice to our street Without falling in to any trap r pressure.
We all created new history to kayal.If we are in real IQLAS we can do more than this.ALLAH will help us more.
7. Re:புதுப்பள்ளி செயலர் நகர்மன... posted byMS MOHAMMED LEBBAI (dxb)[22 October 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11784
அன்புடையீர் அஸ்ஸலாமுஅலைக்கும், இங்கே கருத்து பதிவு செய்யும் முன் சற்று நிதானித்து பதியவும்,
ஜாமத்தில் உள்ள பெரியவங்க எல்லாம் விளை போகிட்டாங்களோ என்று எழுதுவது தப்பில்லையா,,, தவறு நடந்து இருக்கலாம்,,, இப்ப நடந்தது ஊர் ஒற்றுமை என்கிற அடிப்படையில் நடந்த கருதுவேருபாடுகளே தவிர யாரும் யாருக்கும் விலைபோக மாட்டார்கள் என்று நம்புவோம்,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அன்பின் சகோதரி ஆபிதா அவர்களுக்கு இறை அருளால் தாங்கள் வெற்றிபெற்றுவிட்டீர்கள். தாங்கள் தேர்தலுக்கு முன் நடந்த சில கசப்பான அனுபவங்களை மனதில் ஏற்றாமல்,, பதவிகாலங்களில் எடுக்கும் எல்லா முயற்சியனையும் முஹல்லா பெரியவர்கள்,,,,, ஊர்பெரியவர்கள் அனைவரின் ஆலோசனையுடன் செய்துகொள்ளும்படி அன்புடன் கேட்டுகொள்கிறேன்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
துவக்கத்தில் புதுப்பள்ளி ஜமாஅத் ஐக்கிய பேரவை பொது வேட்பாளருக்கு ஆதரவு என்ற செய்தி சிறு வருத்தத்தை தந்தாலும்...
“ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம்: புதுப்பள்ளி செயலாளர், துணை செயலாளர், பொருளாளர் பங்கேற்பு!” (News ID# 7381) என்கின்ற செய்தி மனதிற்கு மகிழ்ச்சியை தந்தது.
“தைக்கா தெரு, மொகுதூம் தெரு, புதுக்கடை தெரு இளைஞர்கள் பெயரில் ஐக்கியப்பேரவைக்கு கேள்விகள்!” (News ID# 7378) என்ற செய்தி மேலும் புத்துணர்ச்சி ஊட்டியது.
ஆபிதா லத்தா அவர்களின் இறுதி கட்ட பிரச்சாரத்தில், புதுப்பள்ளி ஜமாத் செயலாளர் ஜனாப் ஏ.எஸ்.அஹ்ரப் காகா, துணை செயலாளர் அப்துல் காதர் நெய்னா காகா, பொருளாளர் ஹாரூன் பாய் மற்றும் புதுப்பள்ளி ஜமாத்தினர்கள் திரளாக கலந்து கொண்டது மிக்க மகிழ்ச்சியை தந்தது.
அபிதா லத்தவிர்க்கு அவர்களுடைய ஜமாத்திலேயே ஆதரவு இல்லை என்கின்ற செய்தியை இது பொய்ப்பிக்க செய்தது.
புதுப்பள்ளி ஜமாஅத் மட்டும் அல்ல, மற்ற அனைத்து ஜமாத்தினரும், புறநகர் சகோதர சகோதரிகளும் அபிதா லாத்தவிர்க்கு தங்கள் ஆதரவை தெரிவித்து அவர்களை வெற்றி பெற செய்துள்ளனர்.
இந்த ஒற்றுமைக்கு வெற்றி தேடித்தந்த வல்ல நாயனுக்கே எல்லா புகழும்.
பாரபட்சமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் சேவை செய்யுங்கள் தலைவி அவர்களே.
10. Re:புதுப்பள்ளி செயலர் நகர்மன... posted byhylee (colombo)[22 October 2011] IP: 220.*.*.* Sri Lanka | Comment Reference Number: 11857
அஷ்ரப் காகா மற்றும் குரூப் முடிவு நல்ல தீர்மானம். புதிய சிந்தனை நல்ல மாற்றங்களை கொண்டு வரட்டும். ஜமாத்தில் ஒற்றுமை உண்டு பண்ணி நல்ல பணிகளை ஆரம்பியுங்கள். அல்லாஹ் வெற்றி தருவான்.
11. நல்லதை நாடுவோம் posted byShaik Dawood (Hong Kong)[23 October 2011] IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 11889
இவ்வாறு வேறாக (செயலர், துணை செயலர்) என்று குறிப்பிட்டு செய்தியை வெளியிடுவதை விட... மீண்டும் ஜமாத்தை கூட்டி அனைவரும் சேர்ந்து வாழ்த்து தெரிவிப்பதே சாலச்சிறந்தது... புதுப்பள்ளி தலைவர் உட்பட... ஜமாத்தினரும் ஐக்கிய பேரவையும் இறைவனின் முடிவை ஏற்று தலைவிக்கும் மற்ற உறுப்பினர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து உங்களின் ஆக்கப்பூர்வமான நல்லாலோசனைகளை வழங்கி அவர்களுடன் எல்லா ஒத்துழைப்பையும் நல்கி ஊருக்கு உதவிட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.... ஜஜாகுமுல்லாஹு கைரன்... வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross