காயல்பட்டின நகர்மன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இது குறித்து காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
அஸ்ஸலாமு அலைக்கும்.
அருளாளன் அன்புடையோன் அல்லாஹ்வின் திருப் பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
நடைப் பெற்று முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் காயல்பட்டணம் நகராட்சியின் தலைவியாக பெரும்பான்மை ஓட்டு வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப் பட்ட சகோதரி ஆபிதாஷேக் அவர்களின் பணி சிறக்க காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் சார்பாக வாழ்த்துகிறேன்.
நகராட்சி மூலம் செய்யக் கூடிய ஊரின் போது விஷயங்களுக்கு எல்லா விதமான ஒத்துழைப்பும், ஆதரவும் தருவோம் என்பதை தெரியப் படுத்திக் கொள்கிறேன். நகர்மன்ற தலைவியாக சிறப்பாக பணி செய்வதற்கு வல்ல நாயன் அல்லாஹ் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை
தந்தருள்வானாக. ஆமீன். அஸ்ஸலாமு அலைக்கும்.
இவண்,
MAK ஜெயினுல் ஆப்தீன்,
தலைவர், காக்கும் கரங்கள் நற்பணி மன்றம்,
காயல்பட்டணம்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
MAK ஜெயினுல் ஆப்தீன்,
தலைவர், காக்கும் கரங்கள் நற்பணி மன்றம்.
|